புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
40 Posts - 63%
heezulia
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
232 Posts - 42%
heezulia
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_m10காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 18, 2012 11:39 am

நான் ரவி. பட்டாம்பூச்சி எப்படி உருவாகும்னு உங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அது போல தாங்க என் காதலும். அது உருவான விதம் அழகு. ஆனா அதே பட்டாம்பூச்சிக்கு ரெக்கை இல்லன்னா? அந்த நிலைமை தாங்க எனக்கு இப்போ.

பல பல ஹீரோயிசம் எல்லாம் காட்டி மடக்குன பொண்ணு தாங்க என் திவ்யா. ஆனா அவ இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்கல. அப்படி என்ன பண்ணுன்னா???!!!

இவள நான்தாங்க இண்டர்வி பண்ணி, கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவலே, கொஞ்சம் அழகா இருக்கா நம்ம பின்னாடி கரெக்ட் பண்ணிடலாம் என்ற ஒரு சுயநலத்தோடு தான் செலக்ட் பண்ணேன். இத தான் பெரியவங்க முன்னாடியே சொன்னாங்க .. "சொந்த காசுலேயே சூனியம் வச்சிகிறதுன்னு".

என்னோட மேனேஜர் அப்பவே சொன்னார்.. இந்த பொண்ணு பிரைட்டா இல்ல வேணாம்னு.. அதற்கு நான் மனதிற்குள்.. "யோவ் உனக்கு என்ன தெரியும்.. கோட் கூட உனக்கு ஒழுங்கா ரிவீவ் பண்ண தெரியாது.. அப்ப அப்ப ரவி இது கரெக்டா, அது கரெக்டானு என்ன உயிர்தான் வாங்குவே.. என்ன, நான் மேனேஜர் ஆகிருக்க வேண்டியது.. ரெண்டு வயசும், வருசமும் அதிகம் என்கிறதுக்காக, எங்கிருந்தோ வந்த நீ மேனேஜர் ஆகிட்ட நான் இன்னும் PL ஆகவே தான் இருக்கேன். "

இல்லேங்க சார், இந்த பொண்ணு கிட்ட ஒரு என்து (enthu ) இருக்கு கண்டிப்பா நல்லா வொர்க் பண்ணுவாங்கன்னு நெனைக்கிறேன்.. இல்லாத enthuவ இருக்குனு வேற பொய் சொல்லி..கடைசியா அந்த பொண்ண செலக்ட் பண்ண சொல்லிட்டேன்...

பல பல ஹீரோயிசம் பண்ணேன்னு சொன்னேனே... அதுல ஒன்னு "ரிமோட் டெஸ்க்டாப்" (சப்ப மேட்டர்).. என்னோட கம்ப்யூட்டர் மூலமா அவ கம்ப்யூட்டர் எடுத்துக்கு.. காப்பிடேரியாவுல தன்னோடோ நண்பிகள் கிட்ட .. "இந்த சாருக்கு நிறைய தெரியும் (He knows many things ).. இந்த ஒரு உதாரணம் போதும் உங்களுக்கு என் திவ்யா எவளு பெரிய மொக்கைன்னு.. இதை என் நண்பன் வழியா கேட்டவுடனே.. என்ன சுத்தி பட்டாம்பூச்சி கூடு கட்ட ஆரம்பிச்சிடுச்சி...முதல் படி... அவள் மேல் காதல் கொள்ள.மாதங்கள் பல உருண்டு ஓடின....நான் மட்டும் என் ஹீரோயிசத்த நிறுத்தவே இல்ல...

எப்பவுமே சாய்ந்திரம் டான்னு அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்புற அவ, மணி ஆறு ஆகியும், கம்ப்யூட்டர் முன்னாடி டொக்கு டொக்குன்னு தட்டிகிட்டு இருந்தா.. நான் சும்மா போகவேண்டியது தானே... "வேலியில போற ஓனான வேட்டிக்குள்ள விட்டுகிட்ட மாதிரி.." அவ கிட்ட போய்...

"என்ன திவ்யா மேடம் இன்னும் கிளம்பலையா.. மணி ஆறாக போகுது....? "

சார் நீங்க என்ன மேடம்ன்னு கூப்பிடறத கொஞ்சம் நிறுத்துறீங்களா...!!! நானே இந்த கோட் ஏன் கம்பைல் ஆகமாடேன்னு முழிச்சிகிட்டு நிக்கிறேன் .. நீங்க வேற.. குரலில் கொஞ்சம் அதிகாரம் தெரிந்தது...

நீங்க மட்டும் என்ன சார்னு கூப்பிடலாம், நாங்க உங்கள மேடம்னு கூப்பிட கூடாதா என்ன? ... (இதே சொல்லாமலே இருந்து இருக்கலாம்.. சுமா ஒரு வெட்டி பந்தாவுக்காக சொல்லி தொலச்சிட்டேன்.. அங்கேருந்து பதில் எப்படி தெரியுமா வந்துச்சி...!!!)

"சரி ரவி, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்... "(சற்றும் தாமதிக்காமல்)

என்னடா இது இப்படி பொசுக்குனு பெயர சொல்லிடாலே என்று ஒருபுறம் வருத்தமா இருந்தாலும் அந்த உதுடுகள் என் பெயரை உச்சரிக்கும் போது கொஞ்சம் கிறக்கமாய் தான் இருந்திச்சி...

"சிவ பூஜையில கரடி பூந்த மாதிரி".. என்ன திவ்யா நாளைக்கு ரிலீஸ் பண்ணிடலாமா? என்று கேட்டுகொண்டே மேனேஜர் வர... திவ்யா என்னை நோக்கினால்...

நான் அவரை நோக்கி, அதெல்லாம் பண்ணிடலாம் சார்.. என்று சொல்லி முடிபதற்குள்.. திவ்யா நீங்க சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க.. என்றார் ஒரே போடாக.. டேய் மங்குச்கி மண்டையா (இது நான் வைத்த பெயர், மேனேஜர்க்கு) நீ போடா முதல்ல.. வந்துடாங்க்யே...மனதிற்குள்.

பிராப்பளம் எங்கனு சில நிமிடத்துல கண்டுபிடிச்சிட்டேன்.. இருந்தாலும் அவள் அருகில் அமரும் போது எதோ ஒரு வாசம் என்ன அப்படியே கட்டி போட்டுச்சி...அதனால் என்னவோ... ஓவரா யோசிக்கிற மாதிரி கஷ்டப்பட்டு ஆக்டிங் கொடுத்துகிட்டு இருந்தேன்...

மணி ஏழாகியது, திவ்யாவின் கைபேசி முன்று முறை ஒலிக்கவே அதை கட் செய்துவிட்டு, என்னங்க ரவி பிராப்பளம் எங்கனு உங்களால கூட கண்டுபிடிக்க முடியலையா? .. சரி நான் கிளம்புறேன்.. இதுக்கு மேல பஸ்ல போறது கொஞ்சம் கஷ்டம் தான்... அவள் உதட்டோரம் சிந்திய அந்த சின்ன இச் என்ற வார்த்தையால் மேலும் உறைந்து போனேன்...

"நான் வேணும்னா உங்கள பைக்ல ட்ராப் பண்ணட்டுமா" .. இந்த வார்த்தைகள் வெறும் காற்றாகவே வந்தது...அதற்குள் திவ்யா கிளம்பிவிட்டாள்...

"ரவி நாளைக்கு பார்க்கலாம்..." என்றாள்..

ஐயோ இன்னும் பனிரெண்டு மணி நேரம் இருக்கேன்னு யோசிக்கும் போதே... "முடிஞ்சா பிராப்பளம் எங்கனு கொஞ்சம் கண்டுபிடிச்சி சால்வ் பண்ணுங்க ரவி ப்ளீஸ்... " அந்த ப்ளீஸ் என்ற வார்த்தையில் பீஸ் ஆகி போனேன்...

கதவு வரை செல்லும் அவள் நடையின் அழகை பார்த்து வானில் மிதப்பது போல் இருந்த நான், அந்த நடை மறைந்த பின்.. போத் என்று விழுந்தேன்... அடுத்த இரண்டு நிமிடங்களில் கோடில் உள்ள பிராபளத்தை பிக்ஸ் செய்து விட்டு நானும் கிளம்பினேன்.

பார்கிங் ஏரியாவில் என் பைக் எடுக்க போன நான், மங்குச்கி மண்டையன் வண்டி அங்கே இருக்க...இந்த மங்குச்கி மண்டையன் இன்னும் வீட்டுக்கு போகாம இங்க என்ன புடிங்கிகிட்டு இருக்கான்னு, என்று நினைத்து கொண்டே என் பைக்கின் கிக்கரை உதைத்தேன்...

சரியாக ஒன்பது மணிக்கு ரூமில் கால் வைக்கும் போதே .. என்னடா மாப்ளே.. கோடி ரூவா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேலே வேலை பார்க்க மாட்டேன்னு.. கௌண்டமணி மாதிரி பெரிய டயலாக் எல்லாம் பேசுவே இப்ப என்ன ஒன்பது மணிக்கு வர...யார் அந்த பொண்ணு ?"

மச்சி டேய் எப்படி டா இப்படி..

கல்யாணம் ஆகி ஒரு வருசத்துக்கு மேலே ஆகி இருந்தா, ஆறு மணிக்கு மேல வீட்டுக்கு போறதுக்கு யோசிச்சிகிட்டு கம்ப்யூட்டர்ர லொட்டு லொட்ட்னு தட்டிகிட்டு இருப்பான்.. அதுவே கல்யாணம் ஆகாதவனா இருந்தா.. எதோ ஒரு பிகருக்காக அவ செய்யிற வேளைக்கு பதிலா இவன் வேலை செஞ்சி அவளுக்கு சம்பளத வாங்கி தருவான்.. என்னைக்கும் சீக்கிரம் வர நீ இன்னைக்கு இவளுவு லேட்னுனா வேற என்ன காரணம் இருக்கும்.. சரி சரி யார் அந்த பூங்கோதை...

மச்சி அவ பேரு பூங்கோதை கிடையாதுடா... திவ்யா.

சரி சரி இதுக்கு மேல நீ பிளாஷ் பாக் எல்லாம் சொல்ல வேணாம், எப்போ பிரபோஸ் பண்ணி இரண்டு பெரும் ஜோடியா ஊர் சுத்த போறீங்க என்றான் அவன். கேட்கவே யாரோ காதில் தேன் ஊற்றியது போல இருந்தது...

சரியான டைம் பாத்துகிட்டு இருக்கேன் மச்சி.. டைம் வொர்க் அவுட் ஆகிடுச்சினா உடனே சொல்லிடுவேன்..

மச்சி காதலும் பீரும் ஒன்னு.. ரொம்ப நேரம் ஓபன் பண்ணி வச்சேனா, கூலிங் போகிடும்.. எதோ அவனுக்கு தெரிந்த பழமொழியில் அட்வைஸ் சொன்னான் பீர் பாட்டிலை திறந்து கொண்டே..

அவன் கூறியதில் அர்த்தம் இருந்ததோ இல்லையோ.. ஆனால் எதோ ஒன்று நெருடவே, மச்சி நாளைக்கே போய் அவ கிட்ட பிரபோஸ் பண்ணுறேன் டா. நான் சொன்னதை அவன் கேட்டானோ என்னவோ, அவன் பீர் அடிப்பதில் குறியாக இருந்தான்...

திவ்யாவிடம் எப்படி பிரபோஸ் பண்ணுறது என்று ஒத்திகை பார்த்தே பாதி இரவு கழிந்தது தூங்காமல்.. தண்ணி அடித்த என் நண்பன் அமைதியாக உறங்க.. தண்ணி அடிக்காத நான் புலம்பி கொண்டு இருந்தேன்...

மறுநாள், அதாங்க இன்னைக்கு.. ஆபீஸ்குள்ளே நுழையும் போதே மங்குச்கி மண்டையன் காபின் திறக்கபடாமல் இருக்க, சந்தோசமாக போய் அமர்தேன் என் சீட்டில்....

எப்போ வருவாள் என்று என் கண்கள் கதவோரம் அலைபாய, திவ்ய தரிசனம் தந்தாள் என் திவ்யா அதுவும் புடவையில்.. மச்சி டைம் வொர்க் அவுட் ஆயிடும் போல என்று நினைத்து கொண்டே அவள் வருதை கவனிக்காதவன் போல் கம்ப்யூட்டர் மூஞ்சியை பார்த்துக்கொண்டே கீபோர்டை தட்டி கொண்டு இருந்தேன்.. நேராக என்னிடம் வந்தவள், என்னங்க ரவி நேத்து அந்த பிராப்பளம் சால்வ் பண்ணிடீங்களா என்று கேட்டாள்...

ஆணுக்கே உரிய செறுக்கதில், ம்ம் என்று சொன்னேன்... தேங்க்ஸ் சொல்லுவாள் என்று எதிர்பார்த்த என் செவிக்கும் மனதிற்கும் அல்வா கொடுத்துவிட்டு சென்றாள் அவளது இருக்கைக்கு...

சரி இப்ப வருவா.. அப்ப வருவா என்று காத்துகிட்டு இருந்த நான், மதியம் மூன்று மணி அளவில் அவள் கிளம்ப ரெடியானால். இப்ப விட்ட சான்ஸ் கிடைக்காது என்று எண்ணி, அவளிடம் சென்ற நான் ..

என்னங்க திவ்யா, இன்னைக்கு ரிலீஸ் பண்ணிடலாமா னு கேட்டேன் ஏதோ பேசி ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக..

ரிலீஸ் சமந்தப்பட்ட டிடைல்ஸ் உங்க இமெய்லுக்கு அனுப்ப சொன்னார் மேனேஜர்..இப்ப தான் உங்களுக்கு அனுப்பினேன்.. அத கொஞ்சம் ரிவீவ் பண்ணிட்டு உங்கள கிளைன்ட்க்கு அனுப்ப சொன்னார்..

எனக்கு ஏதும் போன் பண்ணலியே.. என்று சொல்லி முடிபதற்குள்.. எனக்கு போன் பண்ணி சொன்னார்.. என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கிளம்பினாள்.. (டேய் மங்குச்கி மண்டையா.. லீவ் போட்டாலும் நம்மள நிம்மதியா இருக்க விடாம உயிர எடுக்குறானே.. என்று கரிச்சி கொட்டினேன் மனதிற்குள்)...

என்னோட பதிலை பற்றி கூட கேட்காமல் விரைந்தால் திவ்யா... கதவு வரை சென்ற அவள்.. அதே வேகத்தில் என்னிடம் வந்தால்.. ரவி உங்க கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. இன்னைக்கு எனக்கு நிச்சியதார்த்தம்.. நீங்க கண்டிப்பா வரணும் .. ஈவினிங் எங்க வீட்டுல.. மாப்புள்ள நம்ம மேனேஜர் தான்....

உறைந்து போனேன் நான்... சிறகே இல்லாத பட்டாம்பூச்சி போல்... பின்னாடி ஒரு குரல் "மச்சி காதலும் பீரும் ஒன்னு.. ரொம்ப நேரம் ஓபன் பண்ணி வச்சேனா, கூலிங் போகிடும்.. "

திரைக்கதைக்கு பின்னால்:

ரவி பிராப்பளம் எங்கனு ஓவரா யோசிக்கிற மாதிரி கஷ்டப்பட்டு ஆக்டிங் கொடுத்துகிட்டு இருந்த போது... திவ்யாவின் கைபேசியை அழைத்தது வேறு யாரும் இல்லை .. சாட்சாத் அந்த மங்குச்கி மண்டையன் தான்.

பார்கிங் ஏரியாவில் காரில் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தது வேற யாருக்கும் கிடையாது.. திவ்யாவுக்காகதான்...

ரவிக்கு பட்டாம்பூச்சி கூடு கட்டி முடிபதற்குள், திவ்யாவின் காதல் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்துவிட்டது.. மங்குச்கி மண்டையனை சாரி மேனேஜர் ஐ சுற்றி...
நன்றி TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதல் ஒரு பட்டாம்பூச்சி - சிறுகதை  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக