ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

3 posters

Go down

காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Empty காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

Post by சிவா Tue Apr 17, 2012 11:04 am

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தாக்குதல் 18 மணி நேர கடும் சண்டைக்குப்பின் முறியடிக்கப்பட்டு, 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பர்தா அணிந்த தற்கொலைப்படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா ஆதரவுடன் ஹமீது ஹர்சாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

காபூல் முற்றுகை

அவருடைய ஆட்சிக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மத்தியானம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை முற்றுகையிட்டு தலீபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மூன்று மாகாணங்களைச் சேர்ந்த நகரங்களிலும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் மீது தாக்குதல்

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள `காபூல் ஸ்டார்' என்ற 5 நட்சத்திர ஓட்டலை அதிரடியாக கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்து பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மீது ராக்கெட் வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கினார்கள்.

ஜலாலாபாத், லோகர் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாநிலங்களிலும் தாக்குதல் நடைபெற்றது. ஜலாலாபாத்தில் விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. காபூல் உள்பட தாக்குதல் நடந்த அனைத்து இடங்களிலும், நேட்டோ படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

18 மணி நேர தாக்குதல்

நேட்டோ படையினர் பாதுகாப்பு படையினருக்கு உதவியாக ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசித் தாக்கினார்கள். நேற்று இரவு முழுவதும் நடந்த இத்தாக்குதல், நேற்று காலையும் தொடர்ந்தது. வெடிச்சத்தத்துடன்தான் நேற்றைய பொழுது விடிந்ததாக, காபூல்வாசிகள் தெரிவித்தனர். ஏறத்தாழ 18 மணி நேரத்துக்குப்பின் நேற்று ஆப்கான் நேரப்படி நேற்று காலை 7.20 மணிக்கு முடிவுக்கு வந்தது.

3 இடங்களில் நடைபெற்ற தாக்குதலில், தலைநகர் காபூல் போர்க்களமாக மாறி இருந்தது. கடைசி தீவிரவாதி கொல்லப்பட்டதும், முற்றுகை நீங்கி அந்த பகுதியில் அச்சம் கலந்த அமைதி நிலவியது. இதேபோல் மேலும் 3 மாகாணங்களில் நடைபெற்ற தாக்குதலையும், நேட்டோ படையினரின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

36 தீவிரவாதிகளும் பலி

காபூலில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர் 36 பேரும் கொல்லப்பட்டு விட்டனர். மொத்தம் 47 பேர், இந்த சண்டையில் பலியானதாகவும், 65 பேர் காயம் அடைந்ததாகவும், ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி பிஸ்மில்லா மொகமதி தெரிவித்தார். பலியானவர்களில், ஆப்கன் பாதுகாப்பு படையினர் 8 பேர், பொது மக்கள் 3 பேர் என்றும் அவர் தெரிவித்தார்.

`பர்தா' அணிந்த தீவிரவாதிகள்

`வசந்தகால தாக்குதல்' என்ற பெயரில் தலீபான்கள் நடத்திய இந்த தாக்குதலில், தற்கொலை படை தீவிரவாதிகள் பங்கேற்றனர். அவர்களில் சிலர் பர்தா அணிந்து, தங்களுக்கு என இலக்கு நிர்ணயித்து ஒதுக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மலர்க்கொத்துடன் சென்றதாகவும், மந்திரி பிஸ்மில்லா கூறினார்.

முதன் முறையாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தலீபான் தாக்குதலை முறியடித்து விரட்டியடித்து இருப்பதாக நேட்டோ படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜாண் ஆலன், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ரியான் குரோக்கர் ஆகியோரும் பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அச்சம் அகன்றது

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்சி அகற்றப்பட்டு புதிய அரசு அமைந்தபிறகு, நேட்டோ படையினர் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகிறார்கள். அங்குள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்களும் 2014-ம் ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தலீபான் தீவிரவாதிகள் திடீரென நடத்திய அதிரடி தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதன் மூலம் அந்த அச்சம் அகன்று உள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் 2-வது துணை ஜனாதிபதி கரீம் கலிலியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய இரு தற்கொலைப்படை திவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினதந்தி


காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Empty Re: காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

Post by பிளேடு பக்கிரி Tue Apr 17, 2012 11:12 am


`வசந்தகால தாக்குதல்' நல்ல பெயர்... என்ன கொடுமை சார் இது

என்ன கொள்கையோ... எதுக்கு இவனுங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை .. கோபம்



காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Empty Re: காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

Post by ராஜா Tue Apr 17, 2012 11:17 am

பிளேடு பக்கிரி wrote:`வசந்தகால தாக்குதல்' நல்ல பெயர்... என்ன கொடுமை சார் இது
என்ன கொள்கையோ... எதுக்கு இவனுங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை .. கோபம்
என்ன கொடுமை சார் இது என்னத்த சொல்ல .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் Empty Re: காபூலில் நடந்த 18 மணி நேர தாக்குதல் முறியடிப்பு; 36 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum