புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
53 Posts - 42%
heezulia
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
304 Posts - 50%
heezulia
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
21 Posts - 3%
prajai
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
3 Posts - 0%
Barushree
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_m10சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:53 am

சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Dickens

எழுத்தாளர்கள் உட்பட அனைத்த மனிதர்களின் ஆயுட்காலம் மிகமிக அதிகமாகப் போனால் நூறு ஆண்டுகள் மட்டுமே. ஆனால் எழுத்தாளர் படைத்த இலக்கியப் படைப்புகளுக்கு அழிவில்லை. அவ்விதம் மறையாத காவியங்களை உருவாக்கியவர்களில் ஒருவர் சார்ல்ஸ் ஜான் ஹ்ஃபாம் டிக்கன்ஸ். அவர் மறைந்து இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரின் எழுத்துகளின் தாக்கத்தை இன்றும் உணர முடியும். சார்ல்ஸ் டிக்கன்ஸின் தந்தை ஆங்கில அரசாங்கக் கடற்படையில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். அவரின் தாயாரோ நடனக் கலைஞர். மிகக் கடினமான உழைப்பாளி. இந்தத் தம்பதிகளுக்கு 1812ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி லான்ட் போர்ட் அடுத்துள்ள போர்ட் ஸீ எனும் இடத்தில் டிக்கன்ஸ் பிறந்தார். டிக்கன்ஸ் பிறந்த பிறகு அவரது தந்தையும் தாயும் லண்டன் மாநகரம் சென்றார்கள். ஆனால் குடும்பத்தில் வறுமை தலைவிரித்தாடியது. கடனில் சிக்கிக் கொண்ட அவரது தந்தை குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்பட்பட்டார். சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

அவரின் பாட்டி வழி வந்த சிறிய பணம், கடன்காரர்களிடம் இருந்துத் தப்பிக்க உதவியது. இருந்த போதிலும் டிக்கன்ஸின் தாயார், அவரை வேலைக்கு அனுப்பினார். காலையிலிருந்து மாலை வரை அவர் எலிகள் நிறைந்த தொழிற்சாலையில் விடாது வேலை செய்ய வேண்டி வந்தது.

அங்கு நடந்த பல நிகழ்வுகள் அவருக்குப் பல காயங்களை ஏற்படுத்தின. அந்த அனுபவங்கள் அவரைப் பட்டை தீட்டின எனலாம். சார்ல்ஸ் டிக்கன்ஸைப் போலக் கடினமாக உழைத்தவர் யாருமில்லை. கடினமான உடல் உழைப்பு டிக்கன்ஸஸ்க்கு வாழ்க்கையின் யதார்த்ததைக் காட்டியது.

குடும்ப ஏழ்மையின் காரணமாக, சிறுவயதில் குழந்தைத் தொழிலாளியாக மாறிய ஒரு சிறுவன் படும் இன்னல்களைச் சித்திரிக்கிறது அவரின் புகழ்பெற்ற புதினமான “ஆலிவர் டிவிஸ்ட்’. இந்தப் புதினம் அவரின் சொந்த அனுபவம் என்றே கூறலாம். அவர் சுட்டிக்காட்டிய குழந்தைத் தொழிலாளிகளின் தாள முடியாத துன்பங்களை நீக்குவதற்காக ஒரு தனி அமைச்சரே நியமிக்கப்பெற்றார். அதன் பிறகுதான் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தது. தனது எழுத்தின் மூலம் அரசாங்கக் கொள்கையையே மாற்றியது படைப்பாளியின் பெரும் வெற்றி.

சில மாதங்களுக்குப் பிறகு டிக்கன்ஸ் அந்தத் தொழிற்சாலையை விட்டு விட்டுப் பள்ளியில் சேர்ந்தார். அவர் படித்த “வெல்லிங்டன் ஹவுஸ் அகடமி’ மிக நல்ல பள்ளி என்று சொல்ல முடியாது. அங்கிருந்த மோசமான நிலைமை, சரியாகச் சொல்லித்தராத ஆசிரியர்கள், ஒழுக்கமின்மை இவையெல்லாம் டிக்கன்ஸை மிகவும் பாதித்தது.

கடின உழைப்பு அவரின் படிப்பார்வத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. உண்மையில் அவை டிக்கெஸின் எழுத்துக்கள் சீர்பட உதவின என்று சொல்லலாம். சிறிய வயதில் அவருக்குக் கதை எழுதுவதில் பெரும் நாட்டம் இருந்தது. அவர் எழுதிய கதைகளைத் தனது நண்பர்களிடம் காட்டுவார்.

தனது முதல் காதலி மரியாவை 1830ஆம் ஆண்டு டிக்கன்ஸ் சந்தித்தார். ஆனால் அதற்கு மரியாவின் பெற்றோர்கள் சம்மதிக்காததால் அது நிறைவேறவில்லை. அவரின் டேவிட்காப்பர் பீல்டில் வரும் டோரா பாத்திரம் இந்த மரியாதான்.

“பிக்விக் பேப்பர்ஸ்’ வெளிவந்த பிறகு டிக்கன்ஸ் தனது இபுருபத்து நாலாவது வயதில் கேத்தரின் தாம்ஸன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். டிக்கன்ஸ் கேத்தரின் போன்று வாழ்வை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை எனலாம். அவரது மனைவி மூலம் அவருக்குப் பத்து குழந்தைகள் பிறந்தன.

டிக்கன்ஸின் குடும்பம் அவரது சகோதரர் மற்றும் சகோதரி மேரியுடன் லண்டனில் வசித்து வந்தது. டிக்கன்ஸுக்கு அவரது சகோதரி மேரி மீது மிகுந்த அன்பு இருந்தது. 1837ஆம் ஆண்டு மேரி இறந்து போனார். அவரின் இழப்பு டிக்கன்ஸைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பாதிப்பை அவருடைய பல புதினங்களில் காணலாம்.

“மார்னிங் கிரானிக்கல்’, “மிர்ரர் ஆப் பார்லிமெண்ட்’, “ஜோ சன்’ போன்ற செய்தித் தாள்களில் அவர் நிருபராக வேலை பார்த்தார். “பிக்விக் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 1837 ஆம் ஆண்டிலிருந்து 1839ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவைதான் பின்னர் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன.

டிக்கன்ஸ்க்கு அவரின் மனைவி கேத்தரின் தவிர, நெல்லி என்பவருடன் தொடர்பு இருந்தது என்றும், அவரின் புதினங்கள் மிக அருமையாக அமைய இந்தத் தோழியின் தொடர்பே காரணம் என்றும் சொல்பவர்கள் உண்டு.

டோபிஸ் சோம்லெட் மற்றும் ஹென்றி பில்டிங் போன்றவர்களின் எழுத்துக்கள் அவரைச் சிறிய வயதில் மிகவும் கவர்ந்தன.

டிக்கன்ஸைப் போல வேகமாக எழுதுபவர் யாருமில்லை எனலாம். அவரது புத்தகங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும். பெரியவர்களுக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடிக்கும்படி எழுதுவது என்பது மிகக் கடினம். வெகு சில எழுத்தாளர்களே அனைவருக்கும் பிடிக்கும்படி எழுதுகிறார்கள். அதில் டிக்கன்ஸும் ஒருவர். அவரது புத்தகங்கள் இதுவரை அச்சில் இல்லை என்ற செய்தி வந்ததே இல்லை. அவரது புத்தகங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவரின் பல புதினங்கள் அந்தக் காலப் பத்திரிகைகளில் வெளி வந்தவை. அவர் முழுப் புதினத்தையும் எழுதிப் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை. பகுதி பகுதியாக எழுதியே பத்திரிகைகளுக்கு அனுப்புவாராம். இது ஒரு பகுதியைப் படித்ததும் அடுத்தப் பகுதியைப் படிக்கத் தூண்டியது.

அவரது வாழ்வு பற்றியும், அவரின் சொந்த வாழ்க்கை அவரது எழுத்துகளை எவ்விதம் பாதித்தது என்பதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. டிக்கன்ஸின் புதினங்களில் வரும் கதாபாத்திரங்கள் பலதும் அவரின் வாழ்வில் குறுக்கிட்டவர்கள் என்று சொல்லலாம். அவரின் மிக அருமையான புதினமான “ஆலிவர் டிவிஸ்ட்டில்’ வரும் பாத்திரங்கள் அவரின் வீட்டில் அருகே இருந்தவர்கள். அதுபோல பிக்விக் பேப்பர்ஸ் புதினத்தில் வரும் செருப்புத் தைக்கும் தொழிலாளி அவரின் எதிர் வீட்டில் இருந்தவர்.

இன்றும் அவரது புத்தகங்கள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவரது புதினங்களில் விறுவிறுப்பான கதையோட்டம் இருக்கும். நகைச்சுவை கலந்த பேச்சிருக்கும். தரமான வசனநடை இருக்கும். கதாபாத்திரங்கள் உயிரோட்டமாகப் பேசுவார்கள். ஏழை எளியவர்களின் - உழைக்கும் மக்களின் துயரங்களை அப்படியே எடுத்துக் கூறும் சக்தி அவருக்குண்டு.

ஒரு எழுத்தாளனின் வெற்றி அவன் வாழும் காலத்தைப் பொருத்திருக்கிறது என்பார்கள்.

டிக்கன்ஸ் வாழ்ந்த காலம் இங்கிலாந்து நாட்டின் பொற்காலம் எனலாம். அவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தில் செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. தொழிற்புரட்சி நடந்த காலம். எல்லாத் துறையிலும், அனைவரின் வாழ்விலும் முன்னேற்றம் இருந்த காலம். இந்தப் பொற்காலம் டிக்கன்ஸ் எழுத்துக்குப் பெரிதும் உதவியது.

முப்பத்தெட்டாவது வயதில் ஹவுஸ் ஹோல்ட் வோர்ட்ஸ் என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கி, அதன் ஆசிரியராகச் செயல்பட்டார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து “ஆல் இயர் ரவுன்ட்’ எனும் பத்திரிகையைத் தொடங்கி, இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார்.

தனது மனைவியுடன் 1842-ஆம் ஆண்டு டிக்கன்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் சென்றார். அனைத்துலகப் பதிப்புரிமைக்காகவும், அடிமைத் தனத்தை ஒழிப்பதற்காகவும் பாடுபட்டார்.

அவர் பாரிசுக்கு 1865ஆம் ஆண்டு சென்றார். திரும்பி வரும் பொழுது அவர் ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டார். அதனால் அவருக்கு உடல் வலிமை மிகவும் குறைந்து போனது. இருந்த போதிலும், மீண்டும் அவர் அமெரிக்கா சென்றார். அவரது புத்தகங்கள் மிக அதிக அளவில் விற்க அமெரிக்கப் பிரயாணம் துணை புரிந்தாலும், அவரத உடல் நிலை மிகவும் மோசமானது. இரண்டு புதினங்களை ஒரே நேரத்தில் எழுதி வெற்றி பெற்ற இந்த எழுத்தாளருக்கு மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இருந்தன. அவை அவரின் உடல் நிலையைப் பெரிதும் பாதித்தன. பெரும் காவியங்களை எழுதியவர் தனது ஐம்பத்திரண்டாவது வயதிலேயே இறந்து போனார்.

டிக்கன்ஸின் எழுத்துகளை ஜார்ஸ் கிஸ்ஸிங் செஸ்ட்டர்ட்டன் போன்றோர் ஆராய்ந்து அவர் எழுத்தின் அருமைகளைச் சொல்லியுள்ளனர். டிக்கன்ஸின் உரைநடைத்திறன் இதுவரை யாருக்கும் வாய்த்ததில்லை எனலாம். அவரின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களை உருவாக்கும் திறமை எனலாம். சமூகச் சீர்கேடுகளைக் களைய அவரைப் போல முயற்சி எடுத்தவர் யாருமில்லை எனலாம்.

அவரன் எழுத்துகள் நாட்டில் பரவியிருந்த அறக்கேட்டையும் குற்றப் பெருக்கையும் ஊழலையும் பெரும் சீற்றத்தோடு சாடின. ஆனால் நிலவுக்கும் களங்கம் உண்டு இல்லையா? அவரின் எழுத்துகளை விமரிசிப்பவர்களும் உண்டு. ஜார் ஹென்றி லூயிஸ் போன்றவர்கள் அவரின் புதினங்களில் வெளிப்படும் நம்ப முடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புகளுக்காக அவரைக் குறை கூறவும் செய்தார்கள்.

அவர் எழுத்துகளை நிறையோ குறையோ கூறினாலும் அதைப் படித்துப் பலன் பெற்றோர் பலர். சாதனைகளைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது அல்லவா? தனக்கு ஏற்பட்ட வலிகளையும் ரணங்களையும் எழுத்தாக மாற்றியவர். உலகமெங்கும் உள்ள பல நகரங்களில் சார்ல்ஸ் டிக்கன்ஸ் நினைவாக, அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் லண்டனில் வாழ்ந்தபோது இருந்த வீடு இன்று முக்கியமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்குதான் அவர் ஆலிவர் டிவிஸ்ட். பிக்விக் பேப்பர்ஸ் போன்ற புதினங்களை எழுதினார். அவர் பிறந்த இடமும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இல்லம் 1812ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்குமோ அதன்படியே மாற்றப்பட்டிருக்கிறத. விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய மூலப் பிரதிகள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

அவரின் தந்தையார் வேலை பார்த்த கடற்படை அலுவலகத்தின் அருகில் மிகப்பெரிய அளவில் டிக்கன்ஸ் உலகம் என்ற பெயரில் திரைப்பட அரங்கம். உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தைத் தவிர அமெரிக்கா மற்றும் உலக நாடுகளிலும் டிக்கன்ஸ்க்கு விழாக்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

டிக்கன்ஸ் எழுதிய பதினைந்து புதினங்களில் மிக முக்கியமான டேல் ஆப் டூ சிட்டிஸ் (இரு பெரும் நகரங்களின் கதை), கிறிஸ்துமஸ் கரோல் (கிறிஸ்துமஸ் பாட்டு) மற்றும் கிரேட் எக்ஸ்பட்டேஷன் (பெரும் எதிர்பார்ப்பு) எனும் புதினங்கள் மிகப் பிரபலமானவை.

* சார்ல்ஸ் டிக்கன்ஸ் தனது புதினமான இரு பெரு நகரங்களின் கதையில் பிரஞ்சுப் புரட்சியின் காரணங்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் காணலாம். அந்தக் காலக்கட்டத்தில் லண்டனில் நடந்த சம்பவங்களையும் இணைத்து மிக அரமையாக எழுதப்பட்ட புதினம். கதை சொல்லப்பட்ட விதமும், அதில் வரும் கதாபாத்திரங்களின் குணங்களை விவரித்த விதமும் மிகவும் அருமையாக இருந்ததால், இந்தப் புதினம் பலராலும் பாராட்டப்பட்டது.

* டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் கரோல் எனும் புதினம் பலரின் பாராட்டையும் பெற்றது. இதில் எபநேசர் என்பவருக்குக் கிறிஸ்துமஸ் நாளில் ஜேக்கப் என்பவரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் மிக நுணுக்கமாகச் சொல்லியுள்ளார்.

* பிப் எனும் அநாதைச் சிறுவன் படும் வேதனைகளையும் அவனின் கற்பனைகளையும் எதிர்பார்ப்புகளையும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் மிக அழகாகத் தனது புதினமான கிரேட் எக்ஸ்பட்டேஷனில் சொல்லியுள்ளார்.

* இதுதவிர பரனபி ரட்ஸ், டோம்பியும் மகனும், ஹார்ட் டைம்ஸ், பிளிக் ஹவுஸ், போன்ற அவரின் எண்ணற்ற புதினங்களும் மிகவும் புகழ் பெற்றவை.

- எல். கைலாசம்

சிறுவர் இலக்கியச் சிகரம் - சார்ல்ஸ் டிக்கன்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக