புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
டைட்டானிக் 100 I_vote_lcapடைட்டானிக் 100 I_voting_barடைட்டானிக் 100 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் 100


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 15, 2012 6:05 am

ஒரே இரவில், 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்த சோக வரலாற்றை சொந்தமாகக் கொண்ட டைடானிக் சொகுசு கப்பல் முழ்கி இன்றோடு (ஏப்-15) நூறு வருடமாகிறது.ஆனாலும் அந்த நினைவுகள் மூழ்கிவிடாமல் அனைவரது மனதிலும் நிழாலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், கடந்த 1997ல், உருவாக்கப்பட்டு வெளிவந்த டைடானிக் திரைப்படம், எல்லார் மனதிலும் மறக்க முடியாத சோகத்தை பதித்துள்ளது என்னவோ நிஜம்.

பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோகத்தை, அந்த படம் நேர்த்தியாகவும், கூடுமானவரையில் நிஜமாகவும் சொன்னதன் விளைவே, 11 ஆஸ்கர் விருதுகள் பெற்று, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.அந்த படத்தில் சொல்லப்பட்ட காதல் கதை மட்டும் கற்பனையே தவிர, மற்ற அனைத்தும் சம்பவத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதால், இன்றளவும் டைடானிக் தொடர்புடைய சம்பவங்கள் என்றால், மக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

டைடானிக் கப்பல், பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிட்டு, பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டதாகும். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது அடுக்குகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம், 882 அடி, உயரம் 175 அடி, எடை 46 ஆயிரத்து 328 டன்.மார்ச் 31, 1909ல், கட்டத் துவங்கி, மே 31, 1911ல், நிறைவடைந்தது. 3,000 ஆட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டது. பலரும் ஆர்வமாக பயணச் சீட்டை பெற்றனர். அப்போதே அனுமதி கட்டணம், 4,350 டாலர். இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர். தன் முதல் பயணமே, முடிவான பயணம் என்று அறியாத டைடானிக் கப்பல், 1,343பயணிகள் மற்றும் 885 கப்பல் சிப்பந்திகளுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டது.அயர்லாந்தில் இருந்து கிளம்பி, பிரான்ஸ் வழியாக நியூயார்க் போகும் பயண ஏற்பாட்டின்படி கப்பல், 1912ல் ஏப்., 10ம் தேதி கிளம்பியது. கடல் அலைகளை மிஞ்சும், பயணிகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளுடன் பயணித்த கப்பல், ஐந்து நாட்கள் கழித்து அதாவது, 15ம் தேதி இரவு, 220 அடி நீள பனிப் பாறையில் மோதி, மூழ்க தொடங்கியது. இரவு 11.40 மணிக்கு மூழ்க துவங்கிய கப்பல் பின்னிரவு, 2.20 மணிக்கு முழுமையாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம்.இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.இந்த கொடுமையான சம்பவம் நடந்து, 74 வருடங்களுக்கு பிறகு, 12ஆயிரத்து 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்த கப்பலின் என்ஜினின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. அதன் பின், டைடானிக் பற்றிஏற்பட்ட ஆர்வம்தான் சிறிதும் பெரிதுமான, 14 படங்களும், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும் வெளிவந்தன.

இந்த சோக சுவட்டின் நூற்றாண்டை முன்னிட்டு, டைடானிக் படம், முப்பரிமாண (3டி) திரைப்படமாக உருவாக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது. தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்.


தினமலர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 15, 2012 6:27 am

நவீன காவியங்களில் ஒன்றாக டைட்டானிக் கதை..........



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 4:01 pm

இன்று டைட்டானிக் கப்பல் சம்பவத்தின் நூற்றாண்டு
டைட்டானிக் கப்பல் கடலில் விபத்திற்குள்ளானதன் நூற்றாண்டு விழா ‌அணுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி லண்டனில் செளதம்டான் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் அண்டிகார்கா கடலின் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.


அந்த கோர விபத்து நடந்ததன் நூற்றாண்டு விழா இன்று அணுசரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 11-ம் தேதி எம்.எஸ். பால்மோரல் என்ற கப்பல் டைட்டானிக் கப்பல் அதே லண்டன் செளதம்டான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு டைட்டானிக் பயணித்த பாதையில் சென்றுள்ளது. நாளை அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த 1912-ம் ஆண்டு நடந்த டைட்டானிக் கப்பலி்ல் பயணித்தவர்களின் உறவினர்களும் சென்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=448513

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 15, 2012 6:39 pm

தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்

இதைவிட சிறந்த காதலை எந்தவொரு காதலனும் வெளிப்படுத்தவே முடியாது என்று எண்ண வைக்கும் அருமையான நிமிடங்கள் இவை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 10:25 pm

அண்ணீ கிளம்மர் பங்க் என்ற கன்னியாஸ்திரி இந்தியாவில் சத்திஸ்கர் உள்ள ஒரு குக்கிராமதில் அநாதை குழந்தைகளுக்கு பள்ளி நடதி கொண்டிருந்தார் அப்போது. அவர் தாய் உடல் நலமில்லாததால் அவரை பார்க்க அமெரிக்க செல்ல மும்பை யில் இருந்து கப்பலில் பயணம் செய்தார் போகும் வழியில் அவர் சென்ற கப்பல் ஒரு துறைமுகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் நின்று விட்டது ஆகவே கப்பல் நிர்வாகம் அவருக்கு டைட்டானிக் கப்பலில் ஒரு டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர் கப்பலில் தனது 38 வயது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் கப்பல் கவிலும் சமயம் அவருக்கு தப்பி செல்ல வாய்ப்பு கொடுக்க ஒரு உயிர் காப்பு படகில் ஒரு இடம் கொடுக்கப்பட்டது அது ஒருவரே அனுமதி என்பதால் கைகொழந்தையுடன் இருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு அந்த இடதை கொடுதுவிட்டு டைட்டான்னிகிலேயே இருந்து விட்டார். இந்த வகையில் இந்தியாவிர்க்கு டைட்டானிக்குடன் தொடர்பு உள்ளது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக