Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயன்கள் வரலாறு
+6
ஹர்ஷித்
அதி
சிவா
றினா
அசுரன்
மாயன்2012
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாயன்கள் வரலாறு
First topic message reminder :
மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.
கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.
கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.
கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.
இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..
வாழ்ந்த பிரதேசம்
இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் .
நாகரிகத்தின் மைல்கற்கள்
கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .
கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .
கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .
கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.
கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இது கோயில்கள் ,மண்டபங்கள் நிறைந்த நகரமாகும்.
கி.பி 100 : பல உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பமாகின .மாயன் நாகரிகம் முதன்முதலாக சரிவுப் பாதையில் காலெடுத்து வைத்தது .
கி.பி 900 : மேற்குப் பகுதியில் நகரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன.மாயன் நாகரிகம் வீழ்ச்சியின் ஆரம்பம் .
கி.பி 1511 : கோன்ஷலோ குரேரோ (Gonzalo Gurrero) என்ற ஸ்பானியர் புயலில் சிக்கி மாயன் பகுதியில் இறங்கினார்.
கி.மு 1517 : ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மீது போர்தொடுத்து 90 % மாயன் மக்களைக் கொன்றொழித்தது .அதனால் மக்கள் மாத்திரமின்றி,அவர்களின் கலாச்சாரமும் மறைந்தது.
உணவும் உடையும்
மாயன் மக்களின் பிரதான உணவாக சோளமும் பிரதான பானமாக கொக்கோவும் இருந்தது .உணவில் உப்பும் முக்கியமாக சேர்க்கப்பட்டது .காய்கறி ,இறைச்சி போன்றவற்றை உப்பில் இட்டுப் பதப்படுத்தினார்கள் .பருத்தி ,கம்பளி ,சணல்,கற்றாழை நார் போன்றவற்றால் நெய்யப்பட்ட உடைகளை அணிந்தனர்.
மத வழிபாடுகள்
மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மாயன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகித்தன .மழை,காற்று,பிறப்பு ,இறப்பு ஆகாயம் ,கல்வி ,சூரியன் ,சந்திரன் ,அன்பு ,வியாபாரம் ,பாதாள உலகம் என 166 கடவுள்கள் இருந்தன .மிகப்பிரமாண்டமான கோயில்களை கட்டி அடிக்கடி திருவிழாக்களை நடத்தினர் .விலங்குகள் ,கைதிகள்,அடிமைகள் ,குழந்தைகள் என பலிகள் சாதாரணமாக நடந்தன.
கலைத்துறை
மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டன .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன .மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின .மாயன்கள் அற்புதம் நிறைந்த சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினார்கள் . விதவிதமான மட்பாண்டங்கள் செய்தார்கள். பீங்கான் ,பாத்திரங்கள் ,மரப்பட்டைகள் என்பனவற்றில் கடவுள்கள் ,இயற்கைக்காட்சிகள் ,மிருகங்கள் ,பறவைகள் ,என ஓவியங்களை தீட்டினார்கள் .தங்கத்தில் ஆலய மணிகளையும் கடவுள்களின் வடிவத்தில் முகமூடிகளையும் செய்தார்கள் .மாயன் மக்களின் எழுத்து சித்திர எழுத்தாகும்.இவற்றில் முந்நூறு குறியேடுகள் இருந்ததன .கல்வெட்டுக்கள்,மான்தோல் மற்றும் மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றில் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி,தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் .
வானியல் அறிவு
இம்மக்களின் வானியல் தொடர்பான அறிவு வியக்கத்தக்கது .சூரிய ,சந்திர இயக்கங்களைப் பதவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுகூடங்களை அமைத்திருந்தனர்.இவற்றில் தொலைநோக்குகள் போன்ற கருவிகளும் இருந்தன .1945க்குப் பின்னர்தான் விஞ்ஞானிகளால் "பால் வீதி "(Milkway )பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.ஆனால்,அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாயன் மக்கள் பால்வீதி பற்றி அறிந்திருந்தார்கள்.
நாட்காட்டிகள்
பல்வேறு நாட்காட்டிகள் பாவனையில் இருந்தன. அதில் ஒரு நாட்காட்டியானது,365 நாட்களைக் கொண்டது. ஆண்டுகளுக்கு 18 மாதங்கள் .ஒவ்வொரு மாதமும் 20 நாட்களை கொண்டிருந்தது.இதனை "ஹாப்" (Haab ) என அழைத்தனர் .இதன்படி,வருடத்தில் 360 நாட்கள் சாதாரண எஞ்சிய 5 நாட்களை அதிஷ்டம் இல்லாத நாட்கள் என்றும் கருதினர் .கி.மு 550 இல் இந்த நாட்காட்டி முறை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது .மற்றொரு வகை நாட்காட்டியில் மொத்தம் 260 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 மாதங்களைக் கொண்டது .மாதமொன்றில் 20 நாட்கள். இதற்கு "ஸோல்கின் "(Tsolkin ) என்று பெயர். இது "புனித நாட்காட்டி "என்று அழைக்கப்பட்டது .மாதமொன்றின் 20 நாட்களுக்கும் 20 கடவுள்களின் பெயரை வைத்திருந்தனர்.
நாகரிகத்தின் வீழ்ச்சி
இரு பிரதான காரணங்கள் மாயன் நாகரிகத்தின் மறைவுக்கு வித்திட்டன .மாயன் மக்கள் தமது இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை .காடுகள் நிறைந்த தமது பகுதிகளில் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள் இதனால் மலை குறைந்து வறட்சி ,பஞ்சம் ,பட்டினி ,நோய்கள் என்பன பெருகின .மாயன் சமுதாயம் இவற்றுக்குப் பலியாகின .
அடுத்த காரணம் .15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின .
மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
மாயன் வானியல்
மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
மாயன் நம்பிக்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.
இலக்கியம்/நூல்கள்
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
வீழ்ச்சி
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.

மாயன்2012- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012
Re: மாயன்கள் வரலாறு
கூண்டில் இருந்து கொண்டு சீட்டு எடுத்து போடும் கிளியிடம் ஜோதிடம் கேட்பவர்களை போல ! இருக்கிறீர்கள் நீங்கள் !மாயன்2012 wrote:கே. பாலா wrote:வை.பாலாஜி wrote:2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் ஏன் காடுகளை அழித்து விவசாயம் செய்தார்கள் . 2012 உலகம் அழியும் என்று சொன்னவர்கள் காடுகளை அழித்தால் நாம் இனம் அழியும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை .
உங்களால் நினைத்தால் பாவமாக இருக்கிறது ஜி , மாயன் கணிப்பு பற்றி நீங்கள் பதிவிடும் எதிர் கட்டுரை படிதால் சிரிப்பாக வருகிறது ஜி
(அந்த கிளிக்கு எதிர்காலம் தெரிந்து இருந்தால் ஏன் ஜோசியக்காரனிடம் மாட்டி இருக்க போகிறது
தான் இனம் அழிவதை கனிக்காதவர்கள் உலகம் அழிவதை கணித்துவிட்டார்களாம் ..நல்ல வேடிக்கை !)
அரைகுறை யான விஷயத்தை ...ஊதி பெருசாக்கி ..உலகம் அழியப்போகிறது போகிறது என்று கூச்சல் இடும் உங்களைபோன்றவர்களை பார்த்து ...எனக்குத்தான் சிரிப்பாக வருகிறது !
21.12.2012 கு பிறகு எங்கே வைத்துக் கொள்ளபோகிறீர்கள் உங்க முகத்தை
Re: மாயன்கள் வரலாறு
ஸ்பெயின் நாட்டினர் மிகவும் காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொண்டனர். கொலைகள் கொள்ளைகள் எல்லாமே கிறிஸ்துவ மதத்தின் பெயராலும், ஸ்பெயின் மன்னரின் பெயராலும் நடத்தப்பட்டன. ஒருவனைக் கொல்லும் முன்பு அவனை கிருஸ்துவனாக மதம் மாற்றி, கிருஸ்துவப் பெயரிட்டு பின்பு அவனை வெட்டிக் கொன்றார்கள். இதை ஒரு கிருஸ்துவப் பாதிரியே மனம் வெந்து தனது குறிப்பில் எழுதியுள்ளார். செவ்விந்தியப் பெண்களை எல்லாம் வலுக்கட்டாயமாகப் புணர்ந்து, அவர்கள் கர்ப்பம் ஆனவுடன் வெளியில் விட்டனர். ஆக ஒரு 100 /150 வருடங்களில் ஒரு கலப்பினத்தை உருவாக்கினார். நல்லவேளை இந்த ஸ்பேனிஷ் நாய்கள் நாம் இந்தியாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் நாமெல்லாம் இப்போது தமிழ் பேசிக்கொண்டும்/எழுதிக்கொண்டும் இருக்க மாட்டோம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மாயன்கள் வரலாறு
உலகம் அழியப்போகிறது !...உடனே என் மதத்தில் சேருங்கள் அப்போதுதான் நீங்கள் ரட்சிக்க படுவீர்கள் ! என்று ! இப்படி கிளம்பியவர்கள் சொன்ன அழிவு நாடகள் ..ஒன்றல்ல பல கடந்து போய்விட்டது !
அப்ப்டித்தான் கடந்து போகும் 21.12.2012 கூட
அப்ப்டித்தான் கடந்து போகும் 21.12.2012 கூட
Re: மாயன்கள் வரலாறு
புதிய தகவல் ! மிக்க நன்றி !...வி.பொ. பா!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஸ்பெயின் நாட்டினர் மிகவும் காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொண்டனர். கொலைகள் கொள்ளைகள் எல்லாமே கிறிஸ்துவ மதத்தின் பெயராலும், ஸ்பெயின் மன்னரின் பெயராலும் நடத்தப்பட்டன. ஒருவனைக் கொல்லும் முன்பு அவனை கிருஸ்துவனாக மதம் மாற்றி, கிருஸ்துவப் பெயரிட்டு பின்பு அவனை வெட்டிக் கொன்றார்கள். இதை ஒரு கிருஸ்துவப் பாதிரியே மனம் வெந்து தனது குறிப்பில் எழுதியுள்ளார். செவ்விந்தியப் பெண்களை எல்லாம் வலுக்கட்டாயமாகப் புணர்ந்து, அவர்கள் கர்ப்பம் ஆனவுடன் வெளியில் விட்டனர். ஆக ஒரு 100 /150 வருடங்களில் ஒரு கலப்பினத்தை உருவாக்கினார். நல்லவேளை இந்த ஸ்பேனிஷ் நாய்கள் நாம் இந்தியாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் நாமெல்லாம் இப்போது தமிழ் பேசிக்கொண்டும்/எழுதிக்கொண்டும் இருக்க மாட்டோம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மீண்டும் மாயன்கள்!
» முஸ்லிம் மாயன்கள்...
» மாயன்கள் பற்றி சில தகவல்கள்
» உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி
» ஒரு வரலாறு…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum