ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அக்காவுக்கு ..

+8
சிவா
யாழவன்
ரூபன்
சுடர் வீ
அபிராமிவேலூ
Manik
nandhtiha
மீனு
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty நந்திதா அக்காவுக்கு ..

Post by மீனு Mon 5 Oct 2009 - 0:49

மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by nandhtiha Thu 8 Oct 2009 - 10:33

அன்சுச் சகோதரி மீனு
வணக்கம்
இவை யார் எழுதிய கவிதைகள். தாங்களே எழுதினீர்களா? நல்ல கருத்துச் செறிவுள்ள பாடல்கள், குறட்பாக்களாக இருக்கின்றன. ஆனால் வெண்பா இலக்கணத்தின் படிதளை தட்டுகிறது. திருத்திப் பொருளுடன் அனுப்பட்டுமா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by மீனு Thu 8 Oct 2009 - 12:17

இதெல்லாம் மீனுவுக்கு எழுத தெரியாது அக்கா..ஒரு இடத்தில் படித்தேன்..பொருள் புரியலை..அதுதான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்..ஓகே அக்கா திருத்தி பொருளுடன் தாங்க..நன்றிகள் அக்கா...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by nandhtiha Fri 9 Oct 2009 - 18:28

வணக்கம்
இப்பொழுது தான் என்னால் ஈகரைக்குள் வர முடிந்தது, மேற்கண்ட கவிதைகளுக்குப் பொருளை இங்கேயே தரட்டுமா அல்லது தனிமின்னஞ்சலில் வேண்டுமா
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by Manik Fri 9 Oct 2009 - 18:29

நீங்க ஈகரைலயே பதிலைக் கொடுங்கள். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by அபிராமிவேலூ Fri 9 Oct 2009 - 18:37

நந்திதா அக்காவுக்கு .. 502589 நந்திதா அக்காவுக்கு .. 502589
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by nandhtiha Fri 9 Oct 2009 - 18:41

வணக்கம்
நான் கொடுத்துள்ள பொருள் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதா? அவ்வளவு கீழ்த்தரமாகவா இருக்கிறது?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by nandhtiha Fri 9 Oct 2009 - 18:53

வணக்கம்
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

நிலையில்லா மெய்யான உடலுக்குள் சென்று ஆங்குறையும் காணாப் பொருளான மனத்தில் உள்ள பொய்யினை அகற்றி நிலைபெற்றிருக்கும் சுத்த சத்துவமாகிய ஆத்மாவில் நிலை பெறுதலே சுகம் (தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே வள்ளலார்- தன்னையறியான் தலைவனை அறியான் என்ற பொருள்)

(உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்)


இந்த இரண்டு பாடல்களும் உடல் சார்ந்த காமத்தைக் காட்டுவன போல் தோன்றுகின்றன. ஆதலின் பொருள் எழுத மனம் ஒப்பவில்லை - மன்னிக்கவும்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு


அறியா மாந்தர் கல்லுக்கு முன்னால் மொணமொணவென்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆன்ம குருவோ சூக்கும பஞ்சாட்சரத்தை உன் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும் சிவத்தை அறிய கமுக்கமாக உரிய மந்திரத்தை உபதேசிப்பார் ( பொருள்- குரு உபதேசமில்லாமல் சிவலிங்க பூசை செய்வார் வீணே கல் முன்னால் நின்று பொருளறியா மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பர்- நீதி குருவருள் பெற்றுத் திருவருள் பெறவேண்டும்

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே (ஆங்கே என்றிருக்க
வேண்டும்)


மூலாதாரத்தில் ஓங்கா ரூபத்தில் அமர்ந்திருக்கும் கணபதியும் சடாச்சரமூர்த்தியான முருகனும் உள்ளே (இருப்பதைக் காணலாம்)
(குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே விநாயகர் அகவல்)

மூலாதரத்தில் அசபா (ப்ருஹத் தத்துவமான ஓங்கார தத்துவமும் அதன் அருகே வெளிப்படும் வாக்கிற்கு (தமிழுக்கு) இறைவனான முருகனும் அமந்திருப்பதைக் காணலாம்

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

உண்மையான கோயில் இருதயம் அதனுள்ளே அனைத்து உடல்களுக்குள்ளேயும் உயிராய் இருக்கும் சிவபெருமான் உறைகிறார்

(உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பே ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே -திருமந்திரம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
சிவபெருமானின் இடப்பக்கத்தில் உமையம்மை அமர்ந்திருக்க நடுவில் சோமாஸ்கந்தமூர்த்தியாக முருகன் அமர்ந்திருக்கிறான்


நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்


பொருள் 1. ஒருபாற் கோடாமை நின்று திருவருள் சுரக்க அருள் புரியும் குருவோடு அமர்ந்திருந்தால்
கொடுமையான் பிறவிப் பிணி முதலியன அனைத்தும் போய்விடும்


இரண்டாவது பொருள்; இடகலை பிங்கலை இவற்றின் இடையே உள்ள சுழுமுனையில் சிந்தையை நிறுத்தி அவரவர் தம்குருவை நினைத்திருந்தால் எல்லாப் பிணிகளும் போய் விடும்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

உலக மாந்தர் தத்தம் கொடும் செயலால் தாம் தேடிக் கொண்ட நரக வாயிலை அடைக்கும் குருவின் மந்திரோபதேசம் பெற்று துறக்கத்தின் வாயிலை அடைந்து நிரந்தர இன்பம் பெற்று வாழ்க

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

பாற்கடல் கடைந்தபோது வெளி வந்த ஆலகாலத்தை உண்டு அசுரர்கள் தேவர்கள் அனைவருக்கும் பொதுவில் நின்ற நீலமணிமிடற்று ஒருவன் எல்லா உயிர்கட்கும் ஆதாரமானவன். அவன் திருவருட் கருணையில் ஆழ்ந்து அதன் சாரத்தைக் கண்டு கொள்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு
படுத்துவீர்களா ?



குறள் வெண்பா இலக்கணத்துள் வரும்

மா முன் நிரையும் காய்முன் நேரும் விரவி வரவேண்டும்.எதுகை மோனை சிறப்பாய் அமைந்து
துள்ளலோசையுடன் கூடி விளங்க வேண்டும்.


ஈற்றுக் கடை அடி காசு நாள் மலர் பிறப்பு என்ற அளவில் வரவேண்டும்
நேரமின்மை காரணமாகத் திருத்தி அனுப்ப இயலவில்லை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Sat 10 Oct 2009 - 16:45; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by nandhtiha Fri 9 Oct 2009 - 19:03

வணக்கம்
அன்புச் சகோதரிக்கு
எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருக்கிறேன். எப்படி இருக்கிறது?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by சுடர் வீ Fri 9 Oct 2009 - 19:11

நிகழ்கால ஒளவ்வை நந்திதா. வாழிய பல்லாண்டு


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

நந்திதா அக்காவுக்கு .. Empty Re: நந்திதா அக்காவுக்கு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum