Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு
5 posters
Page 1 of 1
சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு
பாடகர்களுக்கு ஜலதோஷம் பிடித்தால் என்னாகும்? பாடுவார்களா, மாட்டார்களா?
வழக்கமாக பாட மாட்டார்கள். உடனடியாக ஜலதோஷத்தை கட்டுப்படுத்த மருந்து எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் கடுமையான ஜலதோஷம் பிடித்த நிலையிலும் டி.எம்.சவுந்தர்ராஜனைத் தேடி வந்தது ஒரு பாடல் அழைப்பு. அவரும் அடைபட்ட மூக் கை திறக்கமுடியாத நிலையிலும் போய்ப் பாடினார். பாடல் பெரிய ஹிட்.
சமீபத்தில் தனது 90-வது பிறந்த நாளை நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ கொண்டாடினார் `பாட்டு வேந்தன்' டி.எம்.சவுந்தர்ராஜன். அந்த விழாவில் தான் இந்த ஜலதோஷப் பாட்டு பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்தது.
இப்போது கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போய் வருவோமா..!
சிவாஜி நடிக்க ஏ.பீம்சிங் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, `பாலும் பழமும்.' விபத்தொன்றில் தன் காதல் மனைவி இறந்து விட்டதாக தவறாக கருதிய டாக்டர் ரவி, உறவினரின் கட்டாயத்துக்காக இன்னொரு பெண்ணை மணந்திருப்பார். ஆனால் முதல் மனைவியை மறக்கமுடியாத அவர் புதிய மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அவருக்கு பார்வை போய்விடுகிறது. அந்த நேரத்தில் முதல் மனைவி கணவனைக் காண வருகிறாள். நடந்ததை புரிந்து கொண்டவள், கணவருக்கு உதவியாளராக அதே வீட்டில் தங்குகிறாள். ஒருநாள் பூங்காவுக்கு வாக்கிங் அழைத்துச் சென்றவள், தன் கணவரிடம் அவரையே நினைத்து உருகும் இரண்டாவது மனைவிக்கு வாழ்வு கொடுக்கச் சொல்கிறாள். அப்போது டாக்டர் ரவியாக வரும் சிவாஜி, படத்தில் பாடுவதாக அமைந்த பாடல் தான் டி.எம்.எஸ். பாட வேண்டியது.
இந்தப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனும் டிïன் போட்டு விட்டார். டி.எம்.எஸ். வந்து பாட வேண்டியது தான் பாக்கி.
ஆனால் டி.எம்.எஸ்.சுக்குப் பதிலாக போன் வருகிறது. போனில் டைரக்டரிடம் பேசிய டி.எம்.எஸ், `தனக்கு கடுமையான ஜலதோஷம். அதனால் பாடல் பதிவை இரண்டு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாம்' என்று கேட்டுக் கொள்கிறார்.
ஆனால் டைரக்டரோ, `ஜலதோஷம் என்றாலும் பரவாயில்லை. வந்து பாடிக்கொடுத்து விடுங்கள்' என்கிறார்.
ஆனால் டி.எம்.எஸ். சம்மதிக்க வில்லை. `நான் பாடுவது சிவாஜிக்கு. குரலில் கம்பீரம் காட்டவேண்டும். ஜலதோஷம் பிடித்த நேரத்தில் பாடும் போது குரல் உள்வாங்கி விடும். எனவே அது சரியாக இருக்காது' என்கிறார்.
டைரக்டரும் விடவில்லை. `இதோ பாருங்க...கதைப்படி சிவாஜி உடல் நலமில்லாதவர். அவரை பூங்காவுக்கு அழைத்து வரும் நேரத்தில் அவர் பாடுவதாகத்தான் இந்தப் பாட்டுக் கான சூழல் அமைந்திருக்கிறது. அத னால் உங்கள் ஜலதோஷக் குரலே சரியாக இருக் கும். வந்து பாடிக்கொடுத்து விட்டுப் போங்கள்' என்று சொல்ல...
டி.எம்.எஸ்.சும் வந்தார். பாடினார். பாடல் எதிர்பார்த்த மாதிரியே அமைந்தது. படத்திலும் அந்தப் பாடல் பெரிய ஹிட்.
அந்தப்பாடல் எது என்று இன்னமும் தெரியாதவர்களுக்கு: `என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்? இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்?'
இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் டி.எம்.எஸ். குரலில் உள்ள சிறு மாற்றத்தை உணர முடியும்.
டி.எம்.எஸ்.சின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.என்.சுரேந்தர் கூறுகையில், "அந்த நாட்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவி.எம்.ராஜன், ஏன் நாகேஷூக்குக் கூட டி.எம்.எஸ். பாடியிருக்கிறார். படத்தில் பாடப்போகிறவர் யார் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு அவர்களுக்கேற்ற விதத்தில் பாடி விடுவது அவருக்கே உரிய தனிச்சிறப்பு. என் போன்ற பாடகர் களும் வியந்து அதிசயித்த உண்மை இது'' என்கிறார்.
இந்த நூற்றாண்டின் பாட்டு அதிசயம் தானே டி.எம்.எஸ்!
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடிய ஜலதோஷப்பாட்டு
டி.எம்.எஸ். இன் பாடல்கள் கேட்க கேட்க இனிமை..!!
இந்த நூற்றாண்டின் இணையற்ற பாடகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை...!!!
பதிவுக்கு நன்றிகள் சிவா அண்ணா..!!!
இந்த நூற்றாண்டின் இணையற்ற பாடகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை...!!!
பதிவுக்கு நன்றிகள் சிவா அண்ணா..!!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி!
» சின்மயி பாடிய பாடல்கள்
» பாடிய முதல் பாட்டு
» ரம்யா பாடிய புதுப்பாடல்
» பி.சுசீலா பாடிய பாடல்கள்
» சின்மயி பாடிய பாடல்கள்
» பாடிய முதல் பாட்டு
» ரம்யா பாடிய புதுப்பாடல்
» பி.சுசீலா பாடிய பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum