ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:28 pm

கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?

தரைமட்டத்திற்குக்
கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில்
வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி.
வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம்
பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில
பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு;
அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது
வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை
கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45
செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25
செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில்,
கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.


ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை

ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை
மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது
ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ
உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில
வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை
பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின்
போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது
நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை
முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை
மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே
சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு
குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை
முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை
சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம்
மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
தெரிவித்துள்ளார்.

விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?

விண்வெளிக்
கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா
என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு
படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே
பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக
மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7,
------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில்
ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப்
பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு
கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும்
எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை
உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச்
சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம்
தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற
இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக்
கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை
மேற்கொள்ளப்படுகிறது.
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=2570111200205863852&na=3&npn=7&nid=37515815-2570111200205863852-5151712228176952236


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:29 pm

சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன் ?

சோப்பு
நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ்
என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின்
மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension)
காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன
அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும்
பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில்
ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும்
சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை
அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே
காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது
பொருந்தும்.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:30 pm

நீர்வேட்கை மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட, குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது ஏன் ?

மூளையின்
அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான (Nerve cells) வேட்கை மையம் (Thirst
center) எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து
போகும்போது மேற்கூறிய வேட்கை மையத்தில் அது உணரப்பெற்று நமக்கு நீர் வேட்கை
உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் (lining) வறண்டு போகும்போதும்
வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால்
அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற
மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது
தண்மையடைந்து வறட்சி தணியப்பெறுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை
அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது
விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுகிறது.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:30 pm

சில தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்னால் நிழலுருவம் தோன்றுவது ஏன் ?

தொலைக்காட்சி
சமிக்கைகள் (signals) ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி
அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. இவ்வலைகள் ஆன்டெனாக்களில்
சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு
மற்றும் படக்குழாய்களால் (electronic and picture tube) படங்களாக
மாற்றப்படுகின்றன. தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு
உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், முற்கூறிய மின்காந்த அலைகளை,
அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள்
ஏற்றுக் கொள்ளுகின்றன. இந்த அலைகள் ஏற்கனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,
சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால்
உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக்
காட்சியளிக்கும்.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:30 pm

பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில் (cylindrical trunk) அமைந்திருப்பது ஏன்?

மரத்தின்
தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத்
தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை. புல் வகைகளின்
தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண
அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால்
(cells) ஆனவை; அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு
சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். தனிப்பட்ட உயிரணுவின்
அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய
இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப்
பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன.
அவை முறையே மரவியம் (Xylem), பட்டையம் (Phloem) என்பன. மரவியம் தண்டின்
நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது
மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி
வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக
உருளை வடிவில் அமைகிறது.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:31 pm

பண்பலை ஒலிபரப்பு (F M Transmission) என்பது என்ன ?

வானொலியின்
ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high
frequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை
அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து
செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து
செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.


இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency)
மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும்
செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண்
பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு
பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால்
AM ஒலிபரப்பில் கர கர ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM
ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம்.
தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM
மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:31 pm

பிஸ்கட் சூடான பாலை விரைந்து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை அவ்வாறின்றி மெதுவாக உறிஞ்சுவதும் ஏன்?

அணுக்கள்
அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினால் உண்டாகும் பிணைப்பை
வேண்டர் வால் (Vander Wall’s) பிணைப்பு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த
வரையில், அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு
வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில்
தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக்
காணலாம். இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால்
பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை
அடைந்துவிடுவதேயாகும்.

பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும்
பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும்.
பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே
குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மை
அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின்
பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடான அந்நிலையில்,
சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன்
காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விரைவுத் தன்மை ஆறிய பாலில்
இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு
நிலையில் இருப்பதேயாகும்.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 9:33 pm

மிகவும் நன்றி கேசவன் சாரே...விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by அதி Sat Apr 07, 2012 9:36 pm

சுவாரசியமாக இருந்தது படிக்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:38 pm

மிகவும் நன்றி கேசவன் சாரே...விரும்பினேன் உங்களின் பதிவை அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   677196 அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   677196
சுவாரசியமாக இருந்தது படிக்க
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   678642 அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   678642 அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   678642


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   Empty Re: அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum