Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவலை தரும் கருத்துத் திருட்டு!
+3
ரா.ரா3275
பது
சிவா
7 posters
Page 1 of 1
கவலை தரும் கருத்துத் திருட்டு!
கருத்துத் திருட்டு என்பது தற்போது கல்வித் துறையில், குறிப்பாக ஆய்வு மாணவர்களிடத்தில் அதிகரித்து வருவது பல பல்கலைக்கழகங்களில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இப்போது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் காரணம், எந்த ஓர் அறிவியல் அல்லது ஆய்வுத் தகவல்களையும் இணையதளத்தின் மூலம் எளிதில் தேடியெடுக்க, படியெடுக்க முடிகின்றது என்பதுதான்.
இணையதளத்திலிருந்து அப்படியே பல பக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அதை ஆய்வுக் கட்டுரையுடன் இணைத்துவிடும் தந்திரங்களைப் பல ஆய்வு மாணவர்கள் கையாளுகிறார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே மிகவும் வேதனைப்படுவதும், இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திணறுவதும், கருத்தரங்க மேடைகளில் புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது.
அண்மையில், இத்தகைய கருத்துத் திருட்டு விவகாரத்தில், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் ஒப்புதல் அளித்த ஆய்வுக் கட்டுரை சிக்கியது. அந்த ஆய்வுக் கட்டுரையின் சில தகவல்கள் ஏற்கெனவே ஓர் அறிவியல் இதழில் 2010-ம் ஆண்டிலேயே வந்திருப்பதை எடுத்துக்காட்டிய பிறகு, அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.
அந்த இருவரில் ஒருவர், ""கருத்தை எடுத்துக்கொண்டதில் தவறில்லை, அதன் எழுத்தை மாற்றாமல் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பயன்படுத்தியதுதான் தவறு'' என்றும்கூட சொல்லியிருக்கிறார்.
முன்பெல்லாம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வுக்கு உதவியவர்கள், உதவிய நூல்கள் பட்டியலை மாணவர்கள் இணைப்பார்கள். இந்தப் பட்டியல் மிகவும் நீளமாகவும் பல பக்கங்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவர்கள் பட்டியலில் குறிப்பிடும் நூல்களைப் புரட்டியாவது பார்த்திருக்கிறார்களா என்பதை பேராசிரியர்கள் நேர்காணலின்போது, அந்த நூல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சோதிப்பதுண்டு. ஆனால், காலப்போக்கில் எல்லா நடைமுறைகளும் மாறிவிட்டன. ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்துத் தொகுப்புரையை மட்டுமே படித்துவிட்டு, ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்புதல் வழங்கும் பேராசிரியர்கள் பெருகிவிட்டதும், இத்தகைய துணிச்சலான கருத்துத் திருட்டுக்கு வழிவகுத்துவிட்டது எனலாம்.
கருத்துகளை எடுத்துக் கையாளுதல், மேற்கோள் காட்டுதல், அல்லது கருத்துகளை மேலும் விரிவும் ஆழமும் கொண்டதாக விவாதித்தல் எல்லாமும் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இது இலக்கியத்தில் நடைபெறும்போது இதுபற்றி யாரும் அதிகம் கவலைப்படப்போவதில்லை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் கருத்தை, கவிஞர் கண்ணதாசன், "மாநிலம் எல்லாமும் நம் இல்லமே, மக்கள் நம் சொந்தமே' என்று பாடல் வரியாக மாற்றினால், அதை யாரும் கருத்துத் திருட்டு என்று சொல்லிவிட முடியாது. "காலங்களில் நான் வசந்தம்' என்ற பகவத் கீதை வரிகளை, "காலங்களில் அவள் வசந்தம்' என்று எழுதுவதும், அதற்கும் மேலாக கருத்துச் செறிவு தந்து கவிதையை உயர்த்துவதும் கவிஞரைப் பார்த்து வியக்க வைக்கத்தான் செய்யும். இலக்கியத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அறிவியல் ஆய்வுகளில் இதை ஏற்றுக்கொள்வது இயலாது.
ஆய்வு முடிவுகளில் பிறர் கருத்தை ஒப்பீடு செய்யலாமே தவிர, அப்படியே எடுத்தாளவோ அதில் திரிபு செய்து பயன்படுத்துவதோ இயலாது; செய்யவும் கூடாது.
இத்தகைய தவறுகளை ஆய்வு மாணவர்கள் செய்வதற்குக் காரணம் கருத்துத் திருட்டு அல்ல, வெறும் விவரணைத் திருட்டு என்றும் சொல்லப்படுகிறது.
எழுதத் தெரியாததும், எழுதுவதில் ஆர்வமின்மையும்தான் இத்தகைய மாணவர்களைக் கருத்துத் திருட்டில் ஈடுபட வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஓர் அறிவியல் கருத்தை எடுத்துச் சொல்லும் மொழிநடை வறட்சியானது, தட்டையான மொழியில் அமைந்த உரைநடை என்பதால் இதை மீண்டும் எழுதுவதற்குப் பதிலாக இதேபோன்று எழுதப்பட்ட, விவரித்துள்ள ஆய்வு ஏடுகளின் மொழியைத் திருடுவதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கின்றதே தவிர, கருத்துத் திருட்டாக அவர்கள் நினைப்பதில்லை. பாடப்புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி எழுதுவது சரி என்கிற உளவியல் பதிவு, இவ்வாறு அடுத்தவர் ஆய்வு ஏடுகளிலிருந்து கருத்தை அப்படியே எடுத்துக் கொள்வதை ஒரு தவறு என்ற உறுத்தலை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இல்லை.
பாடப் புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதிலாக எழுதும் கல்வி முறை மாறினால்தான், அடுத்தவர் ஆய்வுக் கட்டுரையிலிருந்து சோம்பேறித்தனத்தால் ஆய்வுப் பக்கங்களை அப்படியே எடுத்தாளும் நிலைமை மாறும். பாடப் புத்தகத்தில் இடம்பெறாத கேள்வி மூலம் கணக்குத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படுவதைப் போல, அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் தாங்கள் புரிந்து கொண்டதைத் தங்கள் மொழியில் எழுதும் வாய்ப்புகளையும் அதற்கான மதிப்பெண்களையும் அளிக்க வேண்டும்.
இந்தக் கெடுதலிலும் ஒரு நன்மை. ஓர் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ஒரு முறைக்குப் பல முறை படிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பேராசிரியர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
பல முனைவர் பட்ட ஆய்வுகள் எந்தவிதப் படிப்போ, உழைப்போ இல்லாமல் செய்யப்படுவதும், அவற்றை நமது பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துப் பட்டம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கென்றே தரகர்கள் வீதிதோறும் வலம் வரும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்கிற நிலைமைக்கு யார் காரணம்?
இந்தப் பிரச்னையில் மாணவர்களைக் குறை கூறுவதைவிட, பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்து வருவதைப் பற்றித்தான் நாம் கவலைப்பட்டாக வேண்டும். நோட்டுப் புத்தகங்களை விநியோகம் செய்வதுபோல முனைவர் பட்டங்களை வாரி வழங்காமல், முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் உறுதி செய்யப்பட்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தினமணி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவலை தரும் கருத்துத் திருட்டு!
கல்லூரியிலேயே இது தொடங்கிவிட்டது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவலை தரும் கருத்துத் திருட்டு!
இன்றைய நவீன உலகில் அனைத்தும் இணையங்களில் இருந்து தான் எடுக்கபடுகிறது
Re: கவலை தரும் கருத்துத் திருட்டு!
பாஸ் முன்னலாம் பீரோஜெக்ட் பன்றத்துக்கு பழய பிராஜேக்ட எடுத்து பேரை மாதி கொடுத்தார்கள் இப்போ அட்லீஸ்ட் கருத்துகளைத்தானே எடுத்து புது பிராஜேட் பந்த்ராங்களே இந்த அளவுக்காவது உழைக்கிறாங்களே அதுவே அதிகம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கவலை தரும் கருத்துத் திருட்டு!
விளம்பரமே அது மாதிரிதான் ஒளி பரப்பு செய்தார்கள் பேராசிரியர் கேட்கும் போது நோட்ஸ் சப்மிட் செய்து விட்டாயா என்று கேட்கும் போது மொபைல் இருந்து குறிப்பு எடுத்து சொல்வார் அப்படிதான் மாணவர்களும் பார்க்கும் போது செய்ய தூண்டும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கவலை தரும் கருத்துத் திருட்டு!
பிளகியாரிசம் எனப்படும் கருத்து திருட்டு பள்ளிகள், கல்லூரிகளில் மட்டும் அல்ல அலுவலகங்களில் மற்றும் ஜர்னலிசம், மீடியா போன்ற துறைகளிலும் இன்று சர்வ சாதாரணம்.
இதை கண்டுபிடிக்க பல ஆன்லைன் தளங்களும், மென் பொருள்களும் வந்து விட்டன.
கீழே உள்ள ஒரு தளம் போலே பல இருக்கின்றன:
http://plagiarisma.net/

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» கவலை தரும் காய்கறி எண்ணெய்
» திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை
» எடை குறைக்கும், குரல் வளம் தரும், ஞாபகசக்தி தரும்... வெற்றிலை! #VikatanPhotoCards
» அசலும் நகலும் - படம் சிரிப்பையும் தரும்,வெறுப்பையும் தரும்.
» வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum