புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_m10நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 1:01 pm

எந்த உணவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று வீட்டிலிருக்கும் பெரியவர்களைக் கேட்டால் இட்லி, தோசை, பிஸ்ஸா, பர்கர், பாஸ்தா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். `கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கூழ் குடிப்பதிலும், கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடுவதிலும் இருக்கும் சுகம் வேறெதிலும் வராது' என்றுதான் சொல்வார்கள்.

நம் வீட்டு பெரியவர்கள் மட்டுமல்ல, நாமும் கூட அப்படிச் சொல்லும் காலம் விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. `ஆமாம், உண்மைதான்' என்று இந்த கருத்தை ஆமோதிப்பதைப் போல்தான் இருக்கிறது, வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள, ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்து நடத்தப்பட்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன.

இந்த 4 ஆய்வுகளில், ஆசிய நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் இரண்டும், மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டும் நடத்தப்பட்டன. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடுகையில் அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிடும் பழக்கமுள்ள ஆசிய நாட்டவர்களில், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு மேலும் உறுதியாக இருக்கிறதா என்பதை கண்டறிவதே இந்த மறு ஆய்வின் நோக்கமாகும்.

4 முதல் 22 வருடங்களாக, நீரிழிவு நோய் இல்லாத சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் மக்களின் அரிசி சாதம் உண்ணும் விவரங்களை சேகரித்து பரிசோதனைகளை செய்தனர். இந்த நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்ட காலங் களிலேயே, ஆய்வில் பங்குபெற்ற சுமார் 13 ஆயிரத்து 284 பேருக்கு டைப் 2 நீரிழிவு ஏற்பட்டது தெரியவந்தது.

அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு இரு பிரிவுகளிலும் இருந்தாலும், ஆசிய நாட்டவர்களுக்கே இந்த தொடர்பு மிகவும் உறுதியாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இந்த தொடர்பானது ஆண்களை விட பெண்களிலேயே மிகவும் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

மேலும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில், மூன்று அல்லது நான்கு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று தெரியவந்தது. முக்கியமாக, ஒரு நாளைக்கு சாப்பிடும் அரிசி சாதத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

`ஐயய்யோ, வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடுமா? அப்படியென்றால், இதை தவிர்க்க இப்பொழுது நான் என்ன செய்வது?' என்று அதிர்ச்சியாகும் பலரில் நீங்களும் ஒருவரென்றால் கவலை வேண்டாம் என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ப்ரூஸ் நீல்.

ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் ஒரு உறுதியான தொடர்பு இருக்கிறது என்றுதான் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதே தவிர, அரிசி சாதம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை என்று நம் வயிற்றில் பாலை வார்க்கிறார் பேராசிரியர் நீல்.

அதெல்லாம் சரி, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு?

வெள்ளை அரிசியின் கிளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) அளவு 64. அதாவது, 64/100. இது பிற உணவுகளைவிட மிகவும் அதிகம். உதாரணமாக, ஐஸ்கிரீமின் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 61, ஆரஞ்சு ஜுஸின் அளவு 50 என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரமொன்று.

மாவுச்சத்துக்களை குளூக்கோஸாக மாற்றும் திறனின் அளவுகோள்தான் கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது. அரிசி மற்றும் இதர உணவுகளிலுள்ள குளூக்கோஸ் அல்லது சர்க்கரை, ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவு அதிகரித்தால் அதுதான் நீரிழிவு நோய்.

ஆக, வெள்ளை அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தின் குளூக்கோஸ் அளவுகள் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்கிறது அறிவியல்!

மேலும், இதற்கு முந்தைய ஆய்வுகளில் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவு முறைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள வெள்ளை அரிசியில் உள்ள போஷாக்குகள் `பிரவுன் ரைஸ்' என்றழைக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் இருப்பதை விட மிகவும் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆக, `இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று' என்று திருவள்ளுவர் சொன்னதைப்போல, அதிக போஷாக்குள்ள கனி போன்ற கைக்குத்தல் அரிசி இருக்க, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள காய் போன்ற வெள்ளை அரிசி நமக்கு எதற்கு என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க ஆய்வாளர்கள்.

தினதந்தி

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 1:07 pm

நல்ல தகவல் தல அருமையிருக்கு

கைகுத்தல் அரிசி இப்ப அதிகமா யார் உபயோகிக்கிறாங்க?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 1:25 pm

நல்ல தகவல் இது சிவா. இங்கயும் சரி.அங்க ஊரிலும் சரி எங்க வீடுகளில் மதியம் ஒரு வேளைதான் அரிசி உணவு.இரவு நேரங்களில் சப்பாத்தி இல்லைன்னா கோதுமை தோசை தான்.

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Uநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Dநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Aநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Yநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Aநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Sநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Uநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Dநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் Hநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக