ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

குயிலின் நிறம்  .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்  .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Apr 01, 2012 3:25 pm

குயிலின் நிறம்

நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காலம் வெளியீடு புதுக்கோட்டை.

புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர். ரமா
ராமநாதன். சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம் ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை அற்புதம் .அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு முதல் அறுபது வரை அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் . மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .


ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !

கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .

வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !

தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .

கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .

விற்பனைக்கு மல்லிகைப் பூ
இலவசமாய் ...
வாசம் !

சூரியனுக்கு ஆணை இடுகின்றார் பாருங்கள் .

மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில் பனித்துளி !

இயற்கையை உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .

எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை
வண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !

வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை , மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கும், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள் வைக்கின்றார் .

வரிகளைக் கூட்டாதீர்
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும் !
,
வறுமை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை ,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின் வறுமையை யாருமே ஒழிப்பதில்லை.
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !

மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஒரு ஹைக்கூ .

காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக் கூடம் !

சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் ஊதியம் உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .

சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !

ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .

விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம் !

பூவை உவமைக் காட்டி வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .

சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ !

குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப் போன்ற வெண்மை குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை விதைகின்றார் .

மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது .அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» குயிலின் நிறம் , நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் ,நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum