ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

2 posters

Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by Guest Sun Apr 01, 2012 10:53 am

மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வை கண்டித்து, திமுக சார்பில் வரும் ஏப்ரல் 9-ந்தேதி எல்லா மாவட்ட தலைநகரங்களில் அறப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


Last edited by புரட்சி on Sun Apr 01, 2012 10:57 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty Re: மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:55 am

இன்னும் நாலு வருசத்துக்கு பொழப்பு ஓடனும்ல, அனைத்து கட்சிகளும் போராட்டம் அறிவிச்சிருக்கு... இதனால் பயன் ஏதுமில்லை. அம்மா விலைவாசியை குறைக்க மாட்டாங்க... சட்டசபையில் மின்கட்டண உயர்வு ஏன் என்று கேட்டதற்கு, "நானா மின் கட்டணத்தை ஏற்றினேன், ஒழுங்குமுறை ஆணையம் தானே ஏத்துச்சின்னு" நம்ம நெஞ்சில அப்பவே ஏத்திட்டாங்களே அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty Re: மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by Guest Sun Apr 01, 2012 10:58 am

இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் கண்டனம்

சென்னை: மாநிலத்தில் மின்சாரமே இல்லை. இதில் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது என்ன நியாயம்? கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வு குறித்து தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்ன முதலமைச்சர் கடந்த காலத்தில் மூன்று மணிநேரம் மின்வெட்டு என்பதற்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு நேரம் என்பதுபோய், மின்சாரமே இல்லை என்ற நிலைதான் உள்ளது. மின்சாரத்தை கொடுத்துவிட்டு, சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தந்து மின்சாரக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்தினால் கூட சமாளிக்கலாம். ஆனால் இன்று சம்பாதிக்க வழியும் இல்லை. அதே நேரத்தில் கொஞ்சம், நஞ்சம் தரும் மின்சாரத்திற்கு இருமடங்கு கூடுதல் கட்டணம் கட்டுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?

விவசாயத்தையும், தொழில் துறையையும் இந்த மின் கட்டண உயர்வு அதலபாதாளத்திற்கு இட்டு செல்லக் கூடிய நிலையையே உருவாக்கியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுகின்ற கடும் இழப்பை ஈடு செய்வதற்கு பதிலாக வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதைப் போல், மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். அத்தோடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலை கண்டு விவசாயத்தையே கைவிட்டு விடக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தமிழக மக்களுக்கு சோதனை காலம் போலும். ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசி, வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப் பதிவுக்கான நில வழிகாட்டி மதிப்பு கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வினால் விழி பிதுங்கி இருக்கும் நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பெரும் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது.

இதைத்தான் பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்றனர் போலும். இந்த அவலச் சூழ்நிலையை கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty Re: மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by Guest Sun Apr 01, 2012 11:00 am

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ , ராமதாஸ்

சென்னை: மின்சார கட்டண உயர்வ திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ மற்றும் ராமதாஸ் ஆகிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறுகையில், "மின் கட்டண உயர்வு குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காகவே நடத்தப்பட்டது என்பது இப்போது புலனாகிறது.

தமிழ்நாட்டில் சராசரி நடுத்தரக் குடும்பங்களின் மின்சார நுகர்வு இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் ஆகும். தற்போதைய கட்ட ணம் 201 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ. 2.20. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75. இதற்கு அரசு மானியமும் கிடையாது.

எனவே இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் பயன் படுத்தும் சராசரிக் குடும்பம் மின் கட்டணமாக ரூ. 2,130 அதிகம் செலவிட வேண்டும். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழக மக்கள் தலையில் பேரிடியாகத் தாக்கி உள்ள மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.7,874 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழக மக்களின் தலையில் தாங்க முடியாத சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்திற்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை சரிசெய்யவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இழப்புகளை ஈடுசெய்ய மக்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஏற்கனவே மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள், இந்த கட்டண உயர்வால் அடியோடு முடங்கி, ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும். மின்கட்டண உயர்வின் தொடர் விளைவுகளால் விலைவாசியும் கடுமையாக உயரும். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வை எதிர்த்து டெல்லியில் உள்ள மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தட்ஸ் தமிழ் +
avatar
Guest
Guest


Back to top Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty Re: மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by சிவா Sun Apr 01, 2012 11:11 am

அனைத்துமே நாடகம் தானே! இவர்களின் ஆட்டத்திற்கு பலியாவது மக்கள்தான்!




மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின் கட்டண உயர்வு - கட்சிகளின்  காமெடி ஆரம்பம்  Empty Re: மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
» இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
»  இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum