புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
56 Posts - 73%
heezulia
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
8 Posts - 3%
prajai
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_m10மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 1:30 pm

மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை! இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. ( தினமலர்)

எடுத்தது tamilwin.com .

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே.

எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா.

வாக்கெடுப்பில் பங்கேற்காத 8 நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல்.

இந்தப் பட்டியலில் உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள், இலங்கை தீர்மானத்தின் அடிப்படையிலானவை மட்டுமே என்று நினைக்க வேண்டாம்...

இப்படி உலக நாடுகள் இருதரப்பாகப் பிரிந்து நிற்பதற்கான அடிப்படை, இலங்கைத்தமிழர் பிரச்சினையையும் தாண்டிய உலகளாவிய பிரச்சினை!

இந்த உலகளாவிய பிரச்சினை? : அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர்!

இந்த உலகளாவிய பிரச்சினையின் உச்சக்கட்டம்? : 3வது உலகப் போர் அல்லது உலகின் பல பகுதிகளிலும் சிறு சிறு போர்கள்!

ரஷ்யா தலைமையில் சோவியத் யூனியன் 1922ல் உருவானதும், உலக நாடுகள் 2 அணிகளாகப் பிரியத்தொடங்கின.

சோவியத் யூனியன் தலைமையில் ஒரு அணி, அமெரிக்கா தலைமையில் இன்னொரு அணி.

இது தவிர, இந்த இரு அணிகளையும் சாராமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அவ்வப்போது இந்த இரண்டில் ஏதாவது ஒரு அணியை ஆதரித்த சில நாடுகள் தனித்து இயங்கிவந்தன.

இப்படிப்பட்ட நாடுகள், 1961ல் ‘அணிசேரா நாடுகள்’ என்ற புது அணியாக மாறின. இந்த 3வது அணியை உருவாக்கியதில் அப்போதைய யூகோஸ்லாவிய அதிபர் டிட்டோ, இந்தியப் பிரதமர் நேரு, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேஷியப் பிரதமர் சுகர்ணோ, கானா அதிபர் குவாமே என்க்ருமா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

1991ல் சோவியத் யூனியன் பல நாடுகளாகச் சிதறியது. இதன் விளைவுகள்? 1. சோவியத் யூனியன் தலைமையிலான அணி சிதறியது, 2. அமெரிக்கா தலைமையிலான அணி விரிவடைந்து, அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்தது, 3. அணிசேரா நாடுகளின் சர்வதேச முக்கியத்துவம் குறைந்தது.

இந்த 3 விளைவுகளை விட மிக முக்கியமான 4வது விளைவு. சோவியத் யூனியன் சிதறியதால் உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப, சீனா அசுர வேகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தது!

சீனாவின் இந்தப் பாய்ச்சலை, அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நெருக்கம், ஒதுங்கல், எதிர்ப்பு என மூன்று விதமான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி, சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்க அமெரிக்க கூட்டணி நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா, உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. சீனா, உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த போராட்டங்கள்தான், இந்த இரு நாடுகள் இடையில் நடந்துவரும் பனிப்போரின் பின்னணி. இந்த பனிப்போர், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளில் சாதகங்களையும் பாதகங்களையும் ஏற்படுத்தி வருகின்றன!

இலங்கை, சீனா, இந்தியா

இலங்கையில் தமிழர் பகுதியில் பல ஆண்டுகளாகப் புலிகள் ஆட்சி நடந்தது. இலங்கையில் முன்னர் இருந்த அரசுகள், பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வந்தன.

ஆனால், ராஜபக்ச அரசுதான் கொடூரப் போரால் புலிகள் ஆட்சியை அகற்றும் பெயரில், இலங்கைத் தமிழினத்தையே கொன்று குவிக்கும் இனப்படுகொலையில் இறங்கியது. இதற்கு ராஜபக்சவுக்குத் துணிச்சல் அளித்தது, சீனாவின் பக்கபலம்தான்.

இலங்கையுடன் சீனா திடீர் நெருக்கத்தை வளர்த்தது ஏன்?

முதல் காரணம் : சீனாவைப் போல், இந்தியாவும் மிகப்பெரிய நாடு. ஆசிய அரசியலில் சீனாவின் ஏகாதிபத்தியம் ஏற்படுவதற்கு, இந்தியா ஒரு தடைக்கல்லாக இருந்துவருகிறது.

2வது காரணம் : அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருந்து வருகிறது. அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியாவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இது, சீனாவின் ‘உலகின் நம்பர் 1 நாடு’ இலட்சியத்தை நிறைவேற்ற தடைக்கல்லாக இருக்கிறது.

இந்த தடைக்கல்லை உடைக்க வேண்டுமானால், இந்தியாவை சர்வதேச அரசியலில் கவனம் செலுத்த முடியாத வகையில் தனது உள்நாட்டு விவகாரங்களிலேயே திணறடிக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் இராஜதந்திரம்.

இதைச் செயல்படுத்த- வங்கதேசம், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்துள்ளது. இதன்மூலம், நிலப்பகுதியில் இந்தியாவைச் சுற்றி சீனா ‘செக்’ வைத்துள்ளது.

இதுபோல், கடல்பகுதியில் ‘செக்’ வைக்க முடியாமல் சீனா திணறிக் கொண்டிருந்தது. இந்தியாவுக்கு கடல் பகுதியில் ‘செக்’ வைக்க வேண்டுமானால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் சீனா நெருங்கியாக வேண்டும்.

அதற்கான இராஜதந்திர திட்டத்தின் முதல்கட்டமாகத்தான், இலங்கையுடன் சீனா நெருங்கியது!

‘புலிகளின் ஆட்சியை ஒடுக்க உதவுகிறோம். இலங்கையில் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுகிறோம்; இதற்குப் பதிலாக, இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என ராஜபக்ச அரசுடன் சீனா பேசி முடித்தது.

சீனாவின் இந்த நோக்கம் நிறைவேறினால், இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது, மிகப்பெரிய தவறு. ‘சீனாவுடன் நெருங்கவேண்டாம், புலிகளுடன் சமரசத் தீர்வு ஏற்படுத்த நாங்கள் உதவுகிறோம்’ என்று இலங்கை அரசிடம் மத்திய அரசு பேசிமுடித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த இராஜதந்திர அணுகுமுறை மத்திய அரசிடம் இல்லாமல் போனது, இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமாக மாறியதோடு, இந்தியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலையும் வரவழைத்திருக்கிறது.

சரியான இராஜதந்திர அணுகுமுறைக்குப் பதிலாக, ‘புலிகளை ஒழிக்க நாங்களும் உதவுகிறோம்’ என்ற பத்தாம்பசலித்தனமான அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றியது. இது, ராஜபக்ச அரசுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறியது.

சீனாவுடன் நெருங்கிவிடுவோம் என்ற கருத்தை ஏற்படுத்தியபடி இந்தியாவிடம் பல உதவிகளைப் பெற்ற ராஜபக்ச அரசு, தனது படுபயங்கரங்களை தட்டிக்கேட்பார் இல்லாமல் நிறைவேற்றி முடித்தது. இந்தியாவும் இலங்கையின் பக்கம் நின்றதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேல்நாடுகளால் இலங்கைப் போரில் தலையிட்டு இனப்படுகொலைக்கு முடிவுகட்ட முடியவில்லை.

போர் முடிந்தபிறகு, இந்தியாவுக்கு ‘பெப்பே’ காட்டிய இலங்கை, மீண்டும் சீனாவுடன் நெருக்கமாகிவிட்டது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் சீனாவின் கடற்படை தளங்கள் போல் மாறிக் கொண்டிருப்பது, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகியிருக்கிறது.

இதுபோல்- கடல்பகுதியில் அடுத்த ‘செக்’ நடவடிக்கையையும் சீனா சமீபத்தில் நிறைவேற்றியது...

இந்தியாவின் மிகநெருங்கிய நட்பு நாடாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த மாலைதீவுகள் இருந்துவந்தது. இந்த நாட்டையும், சீனா வளைத்துவிட்டது. அங்கு சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியில் அதிபர் நசீத் அரசு கவிழ்ந்தது. துணை அதிபராக இருந்த வாகீத், புதிய அதிபராக மாறியிருக்கிறார். இந்தப் புரட்சியின் பின்னணியில் இருந்தது, சீனாதான்.

இப்படி- நிலத்திலும் நீரிலும் இராஜதந்திர வலையால் இந்தியாவைச் சீனா சுற்றிவளைத்துவிட்டது.

இந்த வலையை அறுத்தெறிய முடியாமல் மத்திய அரசு திணறிவருகிறது. ஆனால், இந்த வலையை அறுக்க, அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த முயற்சிகளில் சில

சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் மியன்மாரை, அமெரிக்க கூட்டணி நாடுகள் மெல்ல மெல்ல வளைத்து வருகின்றன. அங்கு இராணுவ ஆட்சி இருந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்த மியன்மார் அரசிடம், ‘ஜனநாயக ஆட்சிமுறையை அமுல்படுத்தினால், பொருளாதார நிதியுதவிகள் தாராளமாக வழங்கப்படும்’ என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியுள்ளன.

இதை ஏற்ற இராணுவ ஆட்சி, ‘பாதி’ ஜனநாயக அரசை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய அரசில் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 60 சதவீதம், இராணுவத்தால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் 40 சதவீதம் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து, பொருளாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ள பகுதி, பலுசிஸ்தான். இந்தப் பகுதிக்கு, 1947 ஆகஸ்ட் 11ல் பிரிட்டிஷ் அரசு விடுதலை வழங்கியது. இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர் விருப்பக் கடிதம் எழுதி அப்போதைய பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். ஆனால், அதை நேரு ஏற்கவில்லை. இதனால், பாகிஸ்தானுடன் அந்த மன்னர் இராணுவக் கூட்டணி ஒப்பந்தம் செய்தார். ஆனால், 1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது.

பலுசிஸ்தான் பூர்வீக மக்களை ஒடுக்க, அங்கு பழமைவாதத் தீவிரவாதிகளை பாக். அரசு குடியேற்றியிருக்கிறது. அந்த கும்பல்கள்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் மிகப்பெரிய பக்கபலமாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலும், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கும் இதே கும்பல்கள்தான் ஆயுதப் பயிற்சிகளையும் ஆயுத தளவாடங்களையும் வழங்கி வருகின்றனர்.

சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட, பலுசிஸ்தானைப் பிரித்து ஐநா கட்டுப்பாட்டின் கீழ் தனி நிர்வாகத்தில் வைக்க வேண்டும் என அமெரிக்காவில் சில முயற்சிகள் தொடங்கியுள்ளன.

பலுசிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என அமெரிக்க பார்லி.யில், கடந்த பிப்ரவரியில் குடியரசுக் கட்சி எம்பி டானா ரோராபேக்கர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பாக். எதிர்ப்பால் அந்த தீர்மானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வேளையும், அந்த தீர்மானம் மீண்டும் உயிர்பெறலாம்!

சர்வதேச அரங்கில்...சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்காக, ஆபிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்து வந்தது. ஆபிரிக்க நாடுகளுடன் வைரச் சுரங்க ஒப்பந்தங்கள், தாது சுரங்க ஒப்பந்தங்களைச் செய்த சீனா, வளைகுடா நாடுகளுடன் எண்ணை இறக்குமதி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதோடு, ஆபிரிக்க நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளைத் தொடர்வதற்கான ஆயுத தளவாடங்கள் மற்றும் போர் பயிற்சிகளையும் வழங்கிவந்தது.

சீனாவின் இந்த இராஜதந்திரத்தை, அமெரிக்கக் கூட்டணி நாடுகள் பதிலடி இராஜதந்திர நடவடிக்கைகளால் முறியடித்து வருகின்றன: சமீபத்தில் துனிஷியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சியால் ஆட்சிமாற்றம் நடந்துள்ளது. சிரியாவிலும் புரட்சி உச்சகட்டமாகியிருக்கிறது!

வடகொரியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் மிக நெருக்கமாக இருந்துவந்தன. அந்த நாட்டில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு. இந்தப் பிரச்னையையே, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் செக் வைக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்க கூட்டணி நாடுகள் பயன்படுத்தியுள்ளன.

உணவுத்தட்டுப்பாட்டை நீக்க முழு உதவி அளிக்கிறோம். அதற்குப் பதிலாக, தென்கொரியாவுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். அணுஆயுதப் போட்டியையும் கைவிட வேண்டும்’ என்று அமெரிக்கக் கூட்டணி நாடுகள் கூறியதை வடகொரியா ஏற்றுள்ளது.

தைவான் (சீன மக்கள் குடியரசு) மற்றும் ஜப்பானுடன் சீனாவுக்கு ‘பரம்பரை’ பகை உள்ளது. அந்த இரு நாடுகளுடன் அமெரிக்க கூட்டணி நாடுகள் நெருக்கத்தை மிக வேகமாக வளர்த்து வருகின்றன. வியட்னாமுடன் ஒரு காலத்தில் நட்பாக இருந்த சீனா, இப்போது தென்சீனக்கடல் பகுதி உரிமைப் போட்டியால் மோதலைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், வியட்னாமை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் ஆதரித்து வருகின்றன.

இழுபறி... புது ‘செக்’

அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் அதிரடிகளால், பல பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதன் அடுத்தகட்டமாகத்தான், ஐநா மனிதஉரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது...

முதலில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், ‘இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில், சர்வதேச அறிவுரை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசு ஏற்க வேண்டும்’ என்று திட்டவட்ட நடவடிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது.

இது திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கையையும், இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையையும் மிக வேகமாகச் செயல்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், அதைச் செயல்படுத்த இலங்கையும் சீனாவும் அனுமதிக்காமல் முரண்டு பிடித்திருக்கும். அதன் விளைவாக, ஐநா அனுமதியுடன் இலங்கையில் அமெரிக்க கூட்டணி நாடுகளின் அதிரடி நடவடிக்கை பாய்ந்திருக்கும்!

இந்த அதிரடியை, தீர்மானத்தில் இந்தியா இணைத்த ‘திருத்தம்’, தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளது...

அமெரிக்காவின் தீர்மானத்தில், ‘மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த வேண்டும்’ என ஒரு திருத்தத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக, இந்தத் திருத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் விளைவு..?

இலங்கைத் தமிழரின் மனிதஉரிமை நடவடிக்கைகள் தொடர்பான ஐநா மனிதஉரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கும் என எதிர்பார்க்க முடியாது. ‘எங்கள் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றுதான் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது’ என்று இலங்கை முரண்டு பிடிக்கும். அதை சீனாவும் ஆதரிக்கும்.

எத்தனை காலத்துக்குத்தான், அந்த ‘இழுபறி’ தொடர முடியும்?! எனவே, ஐநாவில் அமெரிக்க கூட்டணி நாடுகள் இன்னொரு அதிரடி தீர்மானத்தைக் கொண்டுவந்து, இலங்கைக்கும் சீனாவுக்கும் அதிரடி ‘செக்’ வைக்கும். இலங்கையின் திருகோணமலை பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக முகாம் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அந்த அதிரடி ‘செக்’ நடவடிக்கையின் பக்கவிளைவாக, உலகின் பல பகுதிகளிலும், அமெரிக்க கூட்டணிக்கும், சீனா தரப்புக்கும் சிறுசிறு போர்கள் வெடிக்கும். இந்த சிறுசிறு போர்கள் பெரிதாக வளர்ந்தால், 3வது உலகப் போரே வெடிக்கலாம்.

2வது உலகப்போருக்கு முன்பு இருந்த அதே பதட்ட சூழ்நிலை இப்போதும் தொடங்கியுள்ளது. அன்று, ஜெர்மனியின் மேலாதிக்க ஆசை; இன்று, சீனாவின் மேலாதிக்க ஆசை என்பது மட்டுமே வித்தியாசம்.

2வது உலகப்போரின் விளைவாக, பல நாடுகள் காலனிஆதிக்க ஆட்சிகளில் இருந்து விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் என பல புதிய நாடுகள் பிறந்தன. இப்போதைய பதட்ட சூழல் உச்சகட்டத்தை எட்டினால், அதுபோல் பல புதிய நாடுகள் பிறக்கலாம்!

விளைவு எப்படி அமைந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 4:31 pm

அலசல் கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி கிரிகாசன்.

சீனாவின் ராணுவ பேராசை ஆதிக்கம் நிறுத்தப் பட வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இந்திய அரசியல் வாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை நாட்டு நலனுக்காக பாடு படவில்லை என்பது பட்டவர்த்தனமா தெரிஞ்சது தானே?




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Mar 30, 2012 5:52 pm

மூன்றாவது உலகப்போர் நடந்தால் வருடக்கணக்கில் நடக்காது வாரக் கணக்கில் தான் நடக்கும்(ஆயுதங்கள் அப்படி)...சீனாவின் போக்கையும் இலங்கையின் அட்டூழித்தையும் அடக்க வேண்டியது அவசியம் தான் ஆனால் அதற்கு உலகப் போர் தான் ஒரு தீர்வாகும் என்பது தான் ஒன்னும் புரியல ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக