புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_m10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
Guna.D

1 Post - 3%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_m10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_m10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_m10கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Poll_c10 
9 Posts - 2%

Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 9:59 pm

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் தனது உற்பத்தியை இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கையின் விவரம்:

2012-2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் மின் பற்றாக்குறையை நீக்குவதற்காக புதிய மின் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஏற்கெனவே சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றியும் தங்கள் கருத்துகளை இந்த மாமன்றத்திலே எடுத்துரைத்தார்கள்.

புதிய மின் திட்டங்களை அறிவிப்பது மட்டுமின்றி, அவற்றை காலத்தே செயல்படுத்தி அவற்றின் பயன் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை முன்னின்று எனது அரசு எப்போதும் எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

2001 லிருந்து 2006 ஆம் ஆண்டு வரை எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் மின் வெட்டு நிலையே இல்லாமல் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 2001 லிருந்து 2006 ஆம் ஆண்டு வரையில் 2518 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது.

எனவேதான், அப்போது மின் பிரச்னை ஏதும் இருந்ததில்லை. ஆனால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் கூடுதலாக நிறுவப்பட்ட மின்நிறுவு திறன் வெறும் 206 மெகாவாட் மட்டுமே. அதன் காரணமாகத்தான் தமிழகம் இன்றைக்கும் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

2011-12 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், தற்போதுள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய திட்டம், 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம் என 3,800 மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களை அறிவித்திருந்தோம்.

எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம்

660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த அனல் மின் திட்டம் Super Critical என்னும் தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியை பெற இயலும். குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்.

இதுவரை தமிழ்நாட்டில், புனல், அனல், அணு, எரிவாயு சுழலி ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புனல் மின்நிலையம் மூலம் இதற்கு மேல் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது கடினம். அதைப் போன்று, அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசால் போதுமான அளவு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கே நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு சரிவர செய்யவில்லை.

எனவே, மாற்று எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டியது, தற்போது காலத்தின் கட்டாயம் ஆகும். மின் உற்பத்திக்கு Liquefied Natural Gas, அதாவது திரவ இயற்கை எரிவாயு ஒரு மாற்று எரிபொருளாக அமையும். மேலும், LNGஐ எரிபொருளாகக் கொண்ட மின்நிலையம் மிகக் குறைந்த கால அளவில் உருவாக்க இயலும். ஆனால், அதற்கு LNG Terminal, அதாவது எல்.என்.ஜி. முனையம் தேவை. எல்.என்.ஜி. முனையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் எனது முன்னிலையில் 22.3.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது. எனவே, அந்த முனையம் அமைக்கப்பட்டவுடன் கிடைக்கப் பெறும் திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, 500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க எனது தலைமையிலான அரசு ஆய்வு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி வழியாக கொச்சி முதல் பெங்களூருக்கு திரவ இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய் அமைக்கும் பணிகளை GAIL நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி, 500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க எனது தலைமையிலான அரசு ஆராயும்.

2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களின் நிலைமை பற்றியும் இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டது. எனவே, அது பற்றியும் இங்கே எடுத்துக் கூறுவது எனது கடமை என கருதுகிறேன்.

800 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி விரிவாக்க அனல் மின் திட்டம் துவங்கப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக, சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2015-2016 நிதியாண்டில் செயல்பாட்டிற்கு வரும். 1600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டத்திற்கான முன்சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன.

கடலோர பகுதி ஒழுங்குமுறை, அதாவது, Coastal Regulation Zone விதிகளின் அடிப்படையில் திட்ட எல்லைகளை வரையறுக்க 28.1.2012 அன்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதற்கான பணி ஆணைகள் விரைவில் வழங்கப்படும். மேலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர் நியமிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு, மதிப்பாய்வில் உள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் ஆய்வுக்கான குறிப்பு விதிமுறைகள், அதாவது Terms of Reference ஒப்புதலுக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும்.

40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை நிறுவ உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும், Super Critical தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் குறைந்த அளவு நிலக்கரியில் அதிக அளவு மின் உற்பத்தியை பெற முடியும் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே, 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தை, Super Critical தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 660 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான முன்சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் திட்டமும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை அனல் மின் திட்டத்தைப் பொறுத்த வரை, கடலோர பகுதி ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி அனல்மின் திட்ட எல்லைகளை வரையறுப்பதற்கான பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையும் பெறப்பட்டுவிட்டது. மேலும், சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட விவர அறிக்கையினை தயாரிப்பதற்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டுவிட்டார். இந்த அனல் மின் திட்டம் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

வட சென்னை அருகில் வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை தேசிய மின் கழகத்துடன் இணைந்து நிறுவ 12.7.2002 அன்று எனது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் எனது அரசால் துவங்கப்பட்டன. பின்னர் வந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு இதனை விரைந்து செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இன்னமும் வல்லூர் அனல் மின் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

எனது அரசு பொறுப்பேற்ற போது மந்த கதியில் நடைபெற்ற வந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த ஆண்டு ஜூன் மாதம், முதல் அலகு உற்பத்தியை துவங்கும். இரண்டாம் அலகு இந்த ஆண்டு நவம்பர் மாதமும், மூன்றாம் அலகு அடுத்த ஆண்டு ஜூன் மாதமும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதே போன்று, தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தோடு கூட்டு முயற்சியில் நிறுவ 19.6.2003 அன்று எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் முந்தைய எனது அரசாலேயே மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

இந்த அனல் மின் திட்டத்தின் பணிகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு சரியாக கண்காணிக்கத் தவறியதால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் அலகு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதமும், இரண்டாம் அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் செயல்பாட்டிற்கு வரும். எனது அரசால் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு 750 மெகாவாட் ஆகும்.

ஆனால், இத்திட்டம் பற்றி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் சரியாக எடுத்துக்கூறாத காரணத்தால், இது ஒரு மத்திய அரசின் திட்டம் என கருதப்பட்டு, காட்கில் ஃபார்முலா அடிப்படையில் 387 மெகாவாட் என குறைக்கப்பட்டுவிட்டது.

இவையன்றி, ஒவ்வொன்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை நிலை – 2 மின் நிலையம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு யூனிட்டும், டிசம்பர் மாதத்தில் மற்றொரு யூனிட்டும் மின் உற்பத்தியை தொடங்கும். 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மூன்றாம் நிலை அனல் மின் நிலையம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அதன் முழுத் திறனும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கப் பெறும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தனது உற்பத்தியை இன்னும் இரண்டு மாதங்களில் துவக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறையும்..

நான் தற்போது விவரித்துள்ளவாறு எனது தலைமையிலான அரசு பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்கியுள்ளதுடன், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் திட்டப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு, 2011 ஆம் ஆண்டு மே மாதம் தான் பொறுப்பேற்றது. அதன் பின்னர், இந்த அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவை ஆளுநர் உரையிலும், நிதி நிலை அறிக்கையிலும், கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி தான் நிறைவடைந்தது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவர். எனவே, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததற்கும், நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கும் உள்ள இடைவெளி ஆறு மாத காலம் தான்.

சாதாரணமாக, ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கும் இடையே ஓராண்டு இடைவெளி இருக்கும். எனவே, கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டதா என்று எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை அல்ல என்பதை நியாய உணர்வு உள்ளவர்கள் அறிவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

விகடன்.com

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:31 pm

நீளமான நிதிநிலை அறிக்கை நிலையானது எந்த ஆட்சி வந்தாலும்...
அதில் எவ்வளவு அமுலாகிறது என்றால் தான் நீளம் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............................................................மிகக் குறைவே... அநியாயம் என்ன கொடுமை சார் இது

கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் 224747944

கூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Rகூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Aகூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Emptyகூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் Rகூடங்குளத்தில் 2 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்: முதல்வர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:50 pm

அட இந்த தமிழ்நாட விடுங்கம்மா - சும்மா மக்களுக்காகவே எப்பம் பார்த்தாலும் நீங்க தியாகம் பண்ணி உங்க வாழ்க்கையவே தொலச்சிட்டீங்க.

இப்பதான் உங்க சினேகிதி திரும்ப வரப் போறாங்க - அவங்களோட கொடநாடு கெளம்பிப் போயி நல்லா ஒய்வு எடுங்கம்மா. இந்த பாழாப் போன சனங்களுக்கு எவ்ளோ பண்ணினாலும் நன்றியே கெடயாதும்மா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக