ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் 2012

+2
பிரசன்னா
சிவா
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty தமிழக பட்ஜெட் 2012

Post by சிவா Mon Mar 26, 2012 12:59 pm

தமிழக பட்ஜெட் 2012 Gallerye_122027335_435108

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்பøடை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வி.ஏ.,ஓ.,க்களுக்கு லேப்டாப் வழங்குதல், பயிர்க்ககடனுக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு , 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கப்படும், இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்படும் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க,. எம்,எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் தமிழக முதல்வருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து பன்னீர்செல்வம் பேசுகையில்: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஜெ.,தயாரித்துள்ள தொலைநோக்கு திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு: வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9. 3 சதமாக இருக்கும். அதன்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தை பெருக்கிட முக்கிய வழிமுறை காணப்படும். ஏற்றத்தாழ்வுகளை களைந்திட சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து சீரான வளர்ச்சி அடைய 100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 12 ம் திட்ட நிதியை 1.85 லட்சம் கோடியை 2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும் கிராமப்புற வறுமையை களைந்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருக்கிட தனியார் நிறுவன துணையுடன் புதிய திட்டம் செயல்படுத்த ரூ.. 193 .2 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மின் ஆளுமைக்கு புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும், வருவாய், பதிவு, சமூக, வேலை வாய்ப்பு ஊரக துறைகளில் ஒட்டுமொத்த கணினி மையம் கொண்டு வரப்படும்.

ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா : * நகர்ப்புற மையங்களில் பொதுச்சேவை மன்றங்கள் அமைக்கப்படும், ஒரு லட்சம் பட்டாமனை வழங்க திட்டம்

* மடிக்கணினி வரும் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும்

* சட்டம் ஒழுங்கு முக்கிய குறிக்கோள் ஆகும். கடந்த 10 மாதங்களில்சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டுள்ளது. முதல்வர் இதில் முழு உறுதி யாக உள்ளார். நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் மூலம் 724 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பு வசதிகள் 100 சதம் நிறைவேற்றப்படும்

* ரோந்து படை உயர்த்தப்படும்

* தீயணைப்பு நிலையங்கள் மேம்படுத்திட 197.58 கோடி ஒதுக்கீடு

* வேளாண்உற்பத்தி 120 லட்சம் டன் உற்பத்தி இலக்கு

* இ, செல்லான் திட்டம் விரிவாக்ககம்

* ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு ரூ. 15 கோடி

* வேளாண்மை துறைக்கு 3 ஆயிரத்து 804 கோடி ஒதுக்கீடு

* வேளாண் பன்முனைத்திட்டம் அறிமுகம்

*உரம் குறைந்த விலையில் வழங்கிட ஏற்பாடு : விசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை குறைந்த விலையில் வழங்கிட இணையத்திற்கு 150 கோடி உயர்த்த வழங்கப்படும்

* பயிர்க்கடன் இலக்கு 4ஆயிரம் கோடி

* கால்நடை துறைக்கு 816. 3 கோடியாக உயர்த்துதல்

* மீனவர்கள் நிவாரண தொகை தொடர்ந்து வழங்ப்படும்

* வெள்ளாடுகள் வழங்குவதற்கு ரூ. 244 கோடி ஒதுக்கீடு

* பயிர்காப்பீட்டு திட்டம்

*சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் : அணை பராமரிப்புக்கு ரூ. 745 கோடி

* சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலக்காடு மேம்படுத்த திட்டம்

* வடக்கு சென்னை துறைமுகம் இணைக்கும் திட்டம்

* தொழில் முனைவோர் ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கிட 100 கோடி முதலீட்டு மாநியம்

* திருப்பூர் கழிவு நீர் வெளியேற்றத்தில் புதிய திட்டங்கள்

* யானை தடுப்பு அகழிகள்

* 100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்

* சூரிய மின் ஒளி கொண்ட பசுமை வீட்டுக்கு மேலும் 60 ஆயிரம் வீடுகள் அமைக்க ரூ. 150 கோடி செலவு

* மின் உற்பத்தியை பெருக்கிட சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்

* சூரிய மின் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும்

* மின் சேமிப்பு நோக்கில் சி,எல்.எப்.,பல்புகள் வழங்கப்படும்

* ஸ்ரீரங்கம், பழநி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

தினமலர்


தமிழக பட்ஜெட் 2012 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by சிவா Mon Mar 26, 2012 1:07 pm

ரூ.1500 கோடி செலவில் மின்உற்பத்தி திட்டம்

சென்னை : ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்; மின் விநியோக அமைப்புக்களை மேம்படுத்த ஜப்பான் கழகத்தின் உதவியுடன் மேற்கொள்ள திட்டம்; மின்சாரத்தை சேமிக்க சி.எல்.எஃப்., பல்புகள் வழங்க திட்டம்; 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.150 கோடி செலவில் சூரியஒளி மின்சக்தி அளிக்கப்படும்;


தமிழக பட்ஜெட் 2012 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 1:08 pm

இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.
வேளாண்உற்பத்தி 120 லட்சம் டன் உற்பத்தி இலக்கு
* வேளாண்மை துறைக்கு 3 ஆயிரத்து 804 கோடி ஒதுக்கீடு
* வேளாண் பன்முனைத்திட்டம் அறிமுகம்
பயிர்காப்பீட்டு திட்டம்
* மின் உற்பத்தியை பெருக்கிட சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்
* சூரிய மின் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும்
* மின் சேமிப்பு நோக்கில் சி,எல்.எப்.,பல்புகள் வழங்கப்படும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by சிவா Mon Mar 26, 2012 1:11 pm

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5, 650.48 கோடி

சென்னை : ‌நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5650.48 கோடி ஒதுக்கப்பட உள்ளது; சாலை பராமரிப்பிற்கு ரூ.1040 கோடி; ஆண்டுதோறும் 1000 தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கத் திட்டம்; பயிற்சி பெறுவோரில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர்; கால்நடை பராமரிப்பிற்கு ரூ.813.03 கோடி ஒதுக்கீடு; மின்னணு பயணச்சீட்டு முறை அமல்; புதிய பேருந்துகள் வாங்க ரூ.548 ‌கோடி ஒதுக்கீடு;


தமிழக பட்ஜெட் 2012 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by சிவா Mon Mar 26, 2012 1:13 pm

உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு

சென்னை : உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு; கிராமப்புறங்களில் 3844 நீர்நிலைகள் அமைக்கப்படும்; ரூ.100 கோடி செல்வில் பிளாஸ்டிக் சாலைகள் வரும் ஆண்டில் அமைக்கப்படும்; தமிழக ஆணைகளை மேம்படுத்த புதிய திட்டம்; யானை தடுப்பு, அகழிகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு; நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3924 கோடி ஒதுக்கீடு; ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு திருப்பூரில் பொது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளது;


தமிழக பட்ஜெட் 2012 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by சிவா Mon Mar 26, 2012 1:14 pm

தீயணைப்பு துறைக்கு ரூ.197.6 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு துறைக்கு ரூ.197.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; விவசாய விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு; நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு; தமிழகம் முழுவதும் 49 விரைவு நீதிமன்றங்கள; 1.5 லட்சம் பெண்களுக்கு ரூ.244 கோடி செலவில் ஆடு, மாடு வழங்கப்படும்; மீன்பிடி இறங்கு தளம் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு;


தமிழக பட்ஜெட் 2012 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by அருண் Mon Mar 26, 2012 1:39 pm

விரிவான பட்ஜெட் தகவலுக்கு நன்றி அண்ணா!
மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by பாலாஜி Mon Mar 26, 2012 1:49 pm

3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும் -- இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியை தருகிறது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 1:54 pm

ரூ.1500 கோடிக்கு புதிய வரி-சமையல் எண்ணெய் விலை உயரும், கோதுமை- இன்சுலின் விலை குறையும்

சென்னை: தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமையல் எண்ணெய், வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலை உள்ளிட்டவை உயருகின்றன.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாவது:

சமையல் எண்ணெய் மீதான மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீத வரி அதிகரிக்கப்படும்.

பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட வணிகர்கள், தொழில் கூட்டமைப்புகளுக்கான கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இதர கோரிக்கைகளின் அடிப்படையிலும் நுகர்வோருக்கு பயன் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

வரிச் சலுகைகள்

- கோதுமை மீது தற்போது விதிக்கப்படும் 2 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- ஒட்ஸ் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- சுற்றுச்சூழலுக்கு உகந்த சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு (இ-பைக்) விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு காம்பேக்ட் ப்ளோரசண்ட் விளக்குகள் மற்றும் காம்பேட் ப்ளோசரண்ட் குழல் விளக்குகளுக்கு தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

இன்சுலின் மீதான வரி முழுமையாக வாபஸ்

- பெருகி வரும் சர்க்கரை நோயினை கருத்தில் கொண்டு இன்சூலின் மருந்துகளின் விலையினை குறைக்கும் பொருட்டு, அதன் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் தொடர்ச்சியாக சானிடரி நேப்கின்கள் மற்றும் டயாபர்கள் தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

- கையினால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

- பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் காம்புகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.

ஹெல்மட் விலை குறையும்

- போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தலைக் கவசத்திற்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 1:55 pm

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

சென்னை: நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புக்கு ரூ. 4900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, 1.6.2011 முதல், 1.85 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் அறிவித்தார். நாட்டிலேயே அனைவருக்கும் முழுமையான உணவுப்பாதுகாப்பு அளிக்கும் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றையும் சலுகை விலையில் இந்த அரசு வழங்கி வருகிறது. 2012-2013 ஆம் ஆண்டில், உணவு மானியத்திற்காக 4,900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த அரசால் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட விலை கட்டுப்பாடு நிதியம் மூலம், இந்த ஆண்டில் மிளகாய்வற்றல், புளி ஆகியவற்றை வாங்கி அடக்க விலையிலேயே விற்பனை செய்து, வெளிச்சந்தையில் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழக பட்ஜெட் 2012 Empty Re: தமிழக பட்ஜெட் 2012

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum