ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_m10வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

4 posters

Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 11:39 am

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna--Ramada-Dance
சொற்கள் காலத்தால் திரிபுபடுவது, பொருள் மாறுபடுவது உண்டு! நாற்றம் என்பது நறு நாற்றத்தை, நறு மணத்தைக் குறிக்கிற சொல்லாக இருந்து; பிறகு முடை நாற்றத்தைக் குறிக்கிற சொல்லாக மாறிப்போனது. காலமாற்றத்தால் அப்படிப் பொருள் திரிந்து போதல் இயல்பானதே.

அப்படிக் கடைசியாக... கருணா என்ற நல்ல பொருள் கொண்ட சொல், இப்போது கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்டது. ஈழத்தில் ஒரு கருணா... இங்கே ஒரு கருணா.

நடுநிலையாக நின்று ஆராய்ந்து பார்த்தால், இந்த இரு கருணாக்களும்தான் ஈழத்து இனப்படுகொலைக்குப் பெரும் துணையாக நின்றவர்கள். உடம்புக்குள்ளேயே இருந்து கொல்கின்ற புற்றுநோயைப் போல, அந்தக் கருணா; மாவீரன் தம்பியோடு கூட இருந்து நெஞ்சை வஞ்சிக்கும் நீசனாக மாறி ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்துக்குக் குழிபறித்து அழிவில் தள்ளினான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் யுக்திகளைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுத்து, தானும் துணை நின்று விபீஷண வேலையைச் செய்தான். இங்கே இருக்கிற, இந்தக் கருணா, அந்தக் கருணாவைக் காட்டிலும் மிக மோசமான துரோகத்தைச் செய்தார். பதவிகளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு ஒரு பச்சைப் படுகொலைக்கு தமிழனத்தை ஆளாக்கிவிட்டார்.
வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karunanidhi-in-pattu-vaetti-sattai

‘இறுதிக்கட்டமாக எல்லாம் முடியப் போகிறது, தம்பியும் தப்பிக்கமாட்டார்’ என்று தகவல் கேட்டு மருத்துவமனைக்குள் ஒளிந்துகொண்டு ஓய்வெடுத்தார். இந்த ஒரு மனிதன், மனிதனாக இருந்திருந்தால்; வரலாற்றுப் பக்கங்களை இரத்தத்தால் தோய்த்தெடுத்த இனப்படுகொலை நடந்திருக்கவே நடந்திருக்காது. ஈழயுத்தத்தை நடத்திய இந்தியாவின் துரோக அரசு, கருணாநிதி நினைத்திருந்தால் ஒரே நாளில் கவிழ்ந்துபோயிருக்கும்.

இந்திய அரசு கவிழ்ந்துபோயிருந்தால் ஒரு காபந்து அரசால், இலங்கைப் பயங்கரவாத அரசுக்குத் துணையாக நின்று அந்தப் போரையே தன் கையில் எடுத்துக் கொண்டு நடத்தியிருக்க முடியாது! இரண்டு கருணாக்களின் துரோகம் ஒன்றரை லட்சம் பேருக்கு மரண ஓலை எழுதியது. ‘நக்கிக் குடி அதை நல்லதென்று சொல்’ என்ற பாவேந்தர் சொல்படி இரண்டு கருணாக்களும் தமிழினப் பகைவர்களின் பாதத்தை நக்கிக் குடித்தார்கள். நெஞ்சில் ஆறாத இரணத்தை உண்டாக்கிய ஒரு துயரச் சரித்திரத்தை எழுதி முடித்தார்கள்.

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Lanka-kodumai-111
தமிழன்தான் தமிழனைக் காட்டிக் கொடுப்பான், கருவறுப்பான்! கல்லறை கட்டுவான்! தமிழினத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் விழச்செய்த இந்திய அரசை விழாமல் பாதுகாத்துவிட்டு... இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் வீடியோ காட்சிகளைப் பார்த்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

ஒரு நாற்காலியை சாயாமல் பாதுகாப்பதற்காக, சாயாத ஒரு வீரமிக்க இனத்தையே சாய்த்தவர் இந்த மனிதர்! ஈவிரக்கமில்லாமல் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அவனுக்கே இரங்கற்கவிதை படிக்கிற மனிதர் இந்த மனிதர். இறுதிக் கட்டப் போரின்போது இவர் எங்கே போயிருந்தார்? சுய நினைவோடுதான் இருந்தாரா? இறுதிக்கட்டப் போர் நடக்க இவர் ஏன் துணைபோனார்? இறுதிப்போர் நடக்காமல் தடுக்க இவர் ஏன் முன்வரவில்லை? அப்படி அதைத் தடுக்காதபடி இவரை எது தடுத்தது?

முதலமைச்சர் பதவி நாற்காலியா? டூ-ஜி கொள்ளையில் கோபாலபுரத்தைக் குபேர புரியாக்க, ஆயிரம் ஆயிரம் கோடியாகக் கொட்டிக் கொண்டிருந்ததே... அந்த ஆயிரம் ஆயிரம் கோடி கொள்ளைப் பணமா?

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Puligal-110a
இவரால் இறுதிப் போரைத் தடுக்க முடிந்தும் அப்படித் தடுக்காமல் எது தடுத்தது? நம் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காரர்கள் என்று பிடித்து, கைகளையும் கால்களையும் கண்களையும் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்திக் கிடத்தி இலங்கை இராணுவ வெறிநாய்கள் பின்புறத்தில் பூட்ஸ் காலால் உதைத்து, சுட்டுக் கொன்ற, நெஞ்சு பதைபதைக்க வைக்கும் காட்சி வீடியோ வெளிவந்ததே... அதை ஏன் அன்றே இவரது ‘கலைஞர் தொலைக்காட்சி’ மூடி மறைத்தது? இவரது குடும்பத் தொலைக்காட்சி ‘சன் தொலைக்காட்சி’ அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லையே, அது ஏன்? இப்போது இந்தப் புதிய நாடகம், இந்தப் புதிய வசனம், புதியமேடைப் போட்டு ஏன் நடிக்கிறார்?

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna-lanka-11
இறுதிப்போரை நடத்திய இலங்கை அரசோடு சேர்ந்து போரை நடத்திய மத்திய அரசு வீடியோவில் எதைப் பார்க்கவேண்டும்? இவர் பார்த்து என்ன கிழித்தார்? ஏ... கயமையே உனக்குப் பெயர்தான் கருணாநிதியா? இறுதிப்போரில் நடந்த கொடுமைகளை மூன்றாவது மனிதர்களைத்தான் பார்க்கச் சொல்ல வேண்டும். இறுதிப்போரை நடத்தியவர்களுக்கே வீடியோ காட்சியைக் காட்டித்தான் அல்லது பார்த்துதான் தெளிவு கொள்ள வேண்டுமா? நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பிறந்தநாள் சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று, இன்று பதவி விலகிப் போயிருக்கும் தளபதி வி.கே. சிங்குக்குத் தெரியாத வீடியோ காட்சிகளா? நான்காவது ஈழப்போர் வெற்றியின் நாயகன், யுத்த சேனா என்று கொழும்பு விருதுகொடுத்து விழா நடத்திப் பாராட்டியதே... என்ன சொல்லி விழா நடத்தியது? இறுதிப் போர் வெற்றிக்குக் காரணமானவர் இந்த இந்தியத் தளபதிதான்.

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Karuna-pti_4.jpg
ஈழத்தில் இரத்த ஆறு ஓடவிட்ட சாகசக்காரர், சரித்திர புருஷர் இந்த வி.கே.சிங் அறியாத இறுதிப்போரின் வீடியோ காட்சிகளா? இதை ஐந்து முறை முதலமைச்சராக அரியணையில் வீற்றிருந்த இவர் பத்திரிகைகளில் படிக்கவில்லையா? புதிதாக என்ன வீடியோ காட்சி? அதைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் நடந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமா? இறுதிப்போர் நடந்தபோது ஒன்றரை இலட்சம் பிணங்கள் வீதி வீதியாகக் கிடந்தபோது; கொத்துக் கொத்தாய் குண்டுமழை பொழிந்தபோது... வாய்ந்திறந்தால் எங்கே இராஜபக்சே கோபித்துக் கொள்வாரோ என்று வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது எதைப் பார்க்கச் சொல்கிறார் இந்த வீராதி வீரர், விபீஷணின் பேரர் கருணாநிதி?

திகார் சிறையில் இருந்த தனது மகளைப் பார்க்க விண்ணப்பம் போடப் போனபோதே... இந்த வீடியோவையும் போட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கலாமே? ஒரு மகாத்மாவால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் பாபாத்மாக்களால் அடக்கம் செய்யப்பட இருக்கும் நேரம் நெருங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி மரண மூச்சோடு போராடிக் கொண்டிருக்கிறது. அது இறுதி ஊர்வலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. மனித நேயத்துக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றொழித்த பாவத்துக்குப் பரிகாரம் தேடிக் கொள்ள மத்திய அரசின் மனசாட்சி நினைக்குமானால்... மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தந்து, கங்கையில் கழுவ முடியாத பாவத்தை ஜெனிவாவில் கழுவிக் கொள்ளவேண்டும்.

நீதியின் குரலும், நியாயத்தின் குரலும், யார் தடுத்தாலும், உலகத்தின் செவிகளில் விழாமல் போகாது! நியாயம் எது என்பது, பாதிக்கப்-பட்டவர்களின் பக்கம் நின்று பார்க்கும் கண்களுக்குத்தான் தெரியும் புரியும்! உண்மையும் நியாயமும் எங்கள் பக்கம் நின்று சாட்சி சொல்லும். நீதி எங்களுக்கு நல்ல தீர்ப்பு சொல்லும். இது காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய ஆட்சிக்கும் அக்னிப் பரிட்சைக்கான காலம்.

நாங்கள் ஏராளமாக இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு எதுவுமில்லை! ஆகட்டும் பார்ப்போம்..!

நன்றி: புலமைப்பித்தன்( தமிழக அரசியல் இதழில் வெளிவரும் தலைவர்- தம்பி- நான் தொடர்)

http://www.tamilleader.in/news/1574-2012-03-25-17-32-50.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty Re: வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by அசுரன் Mon Mar 26, 2012 11:51 am

சவுக்கடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty Re: வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 12:38 pm

அசுரன் wrote:சவுக்கடி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty Re: வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by ராஜா Mon Mar 26, 2012 12:58 pm

நல்ல பிறப்பா இருந்தா இத படிச்ச பிறகு நாக்க பிடுங்கிக்கிட்டு சாகனும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty Re: வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by பது Mon Mar 26, 2012 3:51 pm

பாஸ் தலைப்பா மாத்துங்க விபீஷணன் ஆவது நீதியை காப்பாற்றதான் ராமன் பக்கம் சாய்ந்தார் ஆனால் இவர்கள் ..............
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வீராதி வீரர்; விபீஷணன் பேரர்! Empty Re: வீராதி வீரர்; விபீஷணன் பேரர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum