புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
432 Posts - 48%
heezulia
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_m10இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:03 am

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சியை கண்ட நாடு, இப்போது செல்போன் புரட்சியை சந்தித்து இருக்கிறது.

மொபைல் போன், செல்லுலார் போன், செல்போன், ஹேண்ட் போன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிற செல்போன், அங்கு இங்கு என்றில்லாத வகையில் எல்லா பக்கமும் தனது ஆதிக்கக்கொடியை பறக்க விட்டு வருகிறது.

ஒரு காலத்தில் போன் வைத்திருந்தாலே வசதியானவர்கள் என்று கருதப்பட்டது. போன் வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூட இந்தியாவில் விதி இருந்தது. போன் இணைப்பு வாங்க வேண்டும் என்றால் விண்ணப்பித்து விட்டு, வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தொலை தொடர்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று டெலிபோன் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தது. அதற்காக எம்.பி.க்களிடம் நடையாக நடந்து இணைப்பு பெற்றவர்கள் உண்டு.

"உங்கள் பிள்ளை வீட்டில் போன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, உங்களுக்கு திருமணம் ஆனவுடனேயே போனுக்கு விண்ணப்பித்து விடுங்கள்'' என்று ஜோக் அடிப்பதுவும் உண்டு.

ஆனால் இதில் ஒரு மாற்றம் உருவானது. 1992-ம் ஆண்டு தொலை தொடர்புத்துறையில் மத்திய அரசு தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது. போன் இணைப்புக்கள் கிடைப்பது எளிதானது.

1995-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கியது. தொடக்கத்தில் செல்போன் விலை அதிகமாக இருந்தது. சேவைக்கட்டணங்களும் அதிகமாகவே இருந்தது. இதனால் செல்போன்கள் வசதி படைத்தவர்களின் கைகளில் மட்டும் அடைக்கலமாகி இருந்தது.

செல்போன் வந்த காலக்கட்டத்தில் ஒரு நிமிட அழைப்புக்கு கட்டணம் 16 ரூபாயாக இருந்தது. குறைந்தபட்ச செல்போன் விலை ரூ.5 ஆயிரம். இதனால் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 19 லட்சம்தான். அதன்பின்னர் தனியாருக்கு செல்போன் சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன.

செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பெருகத்தொடங்கின. சேவை நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகப்பெருக இந்தத் துறையில் போட்டி வலுத்தது. அதன்பயன் பொதுமக்களை வந்து அடையத் தொடங்கியது. செல்போன்கள் விலை குறையத் தொடங்கியது. சேவைக்கட்டணமும் குறைந்தது. இதனால் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் சென்றது.

2001-ல் 36 லட்சம் பேர், 2002-ல் 65 லட்சம் பேர் செல்போன் பயன்படுத்தினர். 2003-ல்தான் இந்த எண்ணிக்கை கோடியைத் தொட்டது. அப்போது செல்போன் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம் பேர் ஆவர். அதன்பின்னர் வளர்ச்சி இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. 2004-ம் ஆண்டு 3 கோடியே 37 லட்சம், 2005-ல் 5 கோடியே 22 லட்சம், 2006-ல் 9 கோடியே 2 லட்சம், 2007-ல் 161/2 கோடி, 2008-ல் 26 கோடியே 10 லட்சம், 2009-ல் 39 கோடியே 10 லட்சம் என அடைந்து வந்த வளர்ச்சி 2010-ல் ஜெட் வேகத்தில் எகிறி 58 கோடியே 40 லட்சம் ஆனது.

கடந்த ஆண்டு இது 89 கோடியே 30 லட்சம் ஆக உயர்ந்தது. இது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான செல்போன் உபயோகிப்பாளர்களைக் கொண்ட இரண்டாவது நாடு என்ற பெயரை இந்தியாவுக்கு பெற்றுத்தந்துள்ளது.

இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:03 am

இப்போது ஒரு நிமிட அழைப்புக்கட்டணம் 10 காசுகள் என்ற அளவிலும், ஒரு செல்போனின் விலை ரூ.800- 1000 என்ற அளவுக்கு குறைந்து விட்டது. இன்டர்நெட் பயன்படுத்தத்தகுந்த ஸ்மார்ட் செல்போன்கள் ரூ.5 ஆயிரத்துக்கே கிடைக்கின்றன.

இந்த ஆண்டு செல்போன் துறையில் சதம் கண்டு விடலாம். அதாவது, இந்த ஆண்டில் நமது நாட்டில் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி விடும்.

உலக அளவில் 1990-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை 20 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்பாடு, உலக அளவில் பிரமிக்கத்தக்க அளவில் பெருகி இருக்கிறது. 1 கோடியே 24 லட்சம் என்ற உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 560 கோடி என்ற அளவுக்கு சிகரம் தொட்டிருக்கிறது.

இந்தியாவில் வீடுகளில் அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்கிறதோ இல்லையோ தகவல் தொடர்பு வசதிக்குரிய செல்போன் இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

இப்போது செல்போன் கையடக்கமாக, ஸ்லிம்மாக, அழகாக கிடைக்கிறது. ஆனால் செல்போன் முதன்முதலாக மோட்டரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்ட்டின் கூப்பரால் 1973-ம் ஆண்டு உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் எடை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. ஒரு கிலோ!

10 ஆண்டுகள் கழித்து 1983-ம் ஆண்டு `டைனா டேக் 8000 எக்ஸ்' என்ற பெயரில் செல்போன்கள் வணிக ரீதியில் விற்பனைக்கு வந்தன.

அப்போதெல்லாம் பெரும் தொழில் அதிபர்கள், சினிமா பெரும்புள்ளிகள், அரசியல் தலைவர்கள்தான் செல்போன்களை பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு.

ஆனால் இப்போது தெருக்களில் குப்பை பொறுக்கு கிறவர்கள், அட, பிச்சை எடுக்கிறவர்கள் கூட செல்போன் பயன்படுத்துகிறார்கள். முற்றும் துறந்த துறவிகள் கைகளில் கூட செல்போன்தான்.

கையில் அல்லது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரம், நினைத்த நபருக்கு பேசுவதற்கு வந்த செல்போனில் வசதிகளும் பெருகி விட்டன. கேமரா, ரேடியோ, டி.வி., இன்டர்நெட் என்று வசதிகளும் பெருகி வருகிறது. இது ஆபத்திலும் கொண்டு போய் விட்டு விடும் என்பது வேறு கதை.

இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:04 am

இந்த செல்போனை எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால்-

* தொழிலுக்காக * வியாபாரத்துக்காக * குடும்ப உறவு வளர்க்க * நட்பினை பலப்படுத்த * அவசரமான தகவல் பரிமாற்றத்துக்காக * அரசியல் பணிகளுக்காக * வங்கி அலுவல்களை கவனிக்க...

ஆட்டோ டிரைவர்கள் செல்போன் வைத்திருக்கிறார்கள். செல்போனில் சவாரிக்கு அழைக்கிற வாடிக்கையாளர்கள் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். மீனவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். செல்போனில் வானிலை பற்றிய தகவல்கள் அறிந்து கடலுக்கு போவதா, வேண்டாமா என்று நாங்கள் முடிவு செய்வது உண்டு என்கிறார்கள் இவர்கள். விவசாயிகள் செல்போன் வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் நாங்கள் வெவ்வேறு இடங்களிலும் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை நிலவரத்தை தெரிந்துகொள்கிறோம் என்று சொல்கிறார்கள். வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு செல்போன் உதவுவதாக போலீசார் சொல்கின்றனர்.

இதெல்லாம் சரிதான். ஆனால் நண்பர்கள், காதலர்கள் அரட்டை அடிப்பதற்கெல்லாம் செல்போனை மணிக்கணக்கில் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிறைய கள்ளக்காதல்களுக்கு செல்போன்தான் உதவியாக இருப்பதை அவ்வப்போது நடக்கிற குற்றச்சம்பவங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன.

செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்காந்த கதிர்வீச்சால் பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சித்தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக மூளைப்புற்றுநோய் ஏற்பட செல்போன் பயன்பாடும் ஒரு காரணம்தான். தினமும் 30 நிமிடம் செல்போன் பேசுபவர்களுக்கு 10 ஆண்டுகளில் மூளைப்புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் அதிகமாம். இதை உலக சுகாதார நிறுவனம் ஹூவும் உறுதி செய்திருக்கிறது.

மூளைக்கட்டிகள், அல்சீமர் நோய், பார்க்கின்சன்நோய், மயக்கம், தலைவலி உள்ளிட்ட நோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இவற்றை எல்லாம் பார்க்கிறபோதுதான் இப்போதைய செல்போன் புரட்சி நல்லதா, கெட்டதா என்ற கேள்வி எழுகிறது.

செல்போன் தவிர்க்க முடியாத ஒரு சாதனமாகி விட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி இருக்கிறபோது, செல்போன் பயன்பாட்டை அளவோடு வைத்துக்கொள்வது நல்லது.

தவிர்க்க முடியாத தருணத்தில், நெருக்கடியான சூழலில், அவசர பயன்பாட்டுக்கு செல்போனை பயன்படுத்தலாம்.

ஆனால் மணிக்கணக்கில் பேசினால் அதனால் ஏற்படப்போகிற எதிர்விளைவுகள் செல்போன் புரட்சி, கெட்டது என்று சொல்ல வைத்து விடும். செல்போன் வந்தபிறகு தகவல் பரிமாற்றம் எளிதாகி விட்டது என்பதை எண்ணிப்பார்த்தால் செல்போன் புரட்சி நல்லதுதான் என பேச வைக்கிறது.

ஆக, செல்போனை பயன்படுத்துகிற விதத்தை வைத்துத்தான் இந்தப் புரட்சி நல்லதா அல்லது கெட்டதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 9:04 am

ஒன்றுக்கு இரண்டாக...

ஒரு நபர் ஒன்றுக்கும்மேற்பட்ட செல்போன்கள் பயன்படுத்தும் வழக்கமும் இருக்கிறது. ஒரு செல்போன் வீட்டுக்கு தெரிந்தும், மற்றொரு செல்போனை வீட்டுக்கு தெரியாமலும் பயன்படுத்துகின்றனர். பத்தில் ஒருவர் இப்படி இரண்டு செல்போன்கள் வைத்திருக்கின்றனர்.

ரகசிய செல்போனை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் வியாபாரத்துக்கும், கள்ளக்காதலுக்கும் என்ற தகவல் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.

***

மந்திரிகள் பதவிக்கு வேட்டு

செல்போனில் பேசியதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. கர்நாடகத்தில் 3 மந்திரிகள் சட்டசபையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்து மாட்டிக்கொண்டார்கள். விளைவு, லட்சுமன் சவாதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பலேமார் என்ற அந்த 3 மந்திரிகளும் பதவி இழந்த பரிதாப நிலை ஏற்பட்டது.

***

இளைய தலைமுறையினரை தாக்கும் `நோமோபோபியா'

தமிழ் இலக்கியத்தில், பிரிக்க முடியாதது எதுகையும், மோனையும் என்று சொல்வது உண்டு.

நவீன உலகத்தில் பிரிக்க முடியாதது இளைய தலைமுறையினரும், செல்போனும் என்று சொல்லலாம். அந்தளவுக்கு செல்போன்கள் இளைய தலைமுறையினரோடு இணைந்திருந்து ஒட்டி உறவாடுகிறது.

இதனால்தானோ என்னவோ இளைய தலைமுறையினரை `நோமோபோபியா' தாக்கத் தவறுவதில்லை. அதென்ன `நோமோபோபியா' என்கிறீர்களா? `நோ மொபைல் போன்போபியா'வைத்தான் சுருக்கமாக `நோமோபோபியா' என்று மனநல மருத்துவ நிபுணர்கள் அழைக்கின்றனர்.

அந்தப் பெண் சென்னை கல்லூரி ஒன்றில் மாணவி. இருபத்து நான்கு மணி நேரமும் செல்போனும் கையுமாகத்தான் இருப்பார். அன்று தனது கல்லூரி தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு போய் விட்டு திரும்பியபோது, எப்படியோ பேச்சு சுவாரசியத்தில் தோழி வீட்டில் தனது செல்போனை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார்.

வீட்டில் அவருக்கு இருப்பே கொள்ளவில்லை. செல்போன் இல்லாமல் ஒரு நாளை எப்படி கழிப்பது? எத்தனை அழைப்புக்கள் வரும், எத்தனை குறுந்தகவல்கள் வரும், செல்போன் இல்லாமல் நான் என்ன செய்வேன் என அவர் தவித்துப்போய் விட்டார். இது பற்றிய தகவல்களுக்காக தோழியை தனது வீட்டு லேண்ட் லைன் போன் மூலம் அழைத்து உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்.

மறுநாள் காலையிலேயே தோழி வீட்டுக்கு போய் தனது செல்போனை திரும்பப் பெற்று வந்த பின்னர்தான் அமைதியானார். எத்தனையோ நாள் காணாமல் போய் விட்ட ஒரு குழந்தையை திரும்ப அடைந்த தாயின் நிம்மதி அவரது முகத்தில் பளிச்சிட்டது.

இந்த மாணவி ஒரு நாள் முழுக்க தவித்தாரே, அந்தத் தவிப்பினால் வரும் தாக்கம்தான் `நோமோபோபியா'. பல இளைஞர்களை, இளம்பெண்களை இந்தப் பிரச்சினை அவ்வப்போது தாக்கி வருகிறது என்கிறார்கள், மனநல மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக 13-35 வயதுக்கு இடையில் இருப்பவர்களையே இந்தப் பிரச்சினை அதிகமாக தாக்குகிறது.

இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வேயில் மூன்றில் இரண்டு பங்கு இளைய தலைமுறையினர், தங்கள் செல்போன் காணாமல் போய்விட்டால் ஐயோ, என்ன செய்வது என்று தவிப்பில் ஆழ்ந்து விடுவோம் என கூறி உள்ளனர்.

மும்பையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 56 சதவீதத்தினர் செல்போன் இல்லாமல் தங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

என்னதான் செல்போனைப் பிடிக்கும், தகவல் பரிமாற்றத்துக்கு செல்போனைப் போன்றதொரு வசதியான சாதனம் எதுவும் இல்லை என்றாலும்கூட, எப்போதும் செல்போனுடனேயே ஒட்டி உறவாடுவதுதான் இத்தகைய பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இன்றைய இளைய தலைமுறை தம்பதியரில் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுவும் செல்போன்தான் என்ற கசப்பான உண்மையை சொல்லாமல் விட்டு விட முடியாது. கணவன், மனைவி இணைந்து காணப்படுவதே அரிதாகி வருகிறது. அப்படி சேர்ந்து இருக்கும்போதுகூட, இருவரில் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது, மற்றவரை எரிச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது.

இது ஒரு புறமிருக்க, பிள்ளைகள் செல்போனில் கொண்டுள்ள ஈர்ப்பால் எரிச்சல் அடைந்து பெற்றோர்கள் கண்டித்து, பறித்தால் அவர்கள் பிளாக்மெயில் செய்கிற அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பதும் உண்மைதான்.

ஆமாம், செல்போன் இல்லாத இளைய தலைமுறை வேண்டும் என்று சொல்லத்தோன்றுகிறது அல்லவா?

தினதந்தி

இந்தியாவில் செல்போன் இந்த ஆண்டு சதம் அடிக்கப்போகிறது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 9:41 am

செல் ஃபோன் இல்லாமலும் இருக்க முடியவில்லை அதனை அதிகமா பயன்படுதினாலும் ஆபத்து , இதனை மனதில் கொண்டு முறையாக பயன் படுதினால் நலம் பயக்கும் இல்லை என்றாள் பின்விளைவுகள் கொஞ்சம் பயங்கரமாகதான் இருக்கும்

பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 18, 2012 9:45 am

முதலில் சாதாரண மக்கள் செல்போன் பயன்படுத்தாமல் தான் இருந்தார்கள், தயாநிதி மாறன் மந்திரியாக இருந்தபோது பல திட்டங்கள் தீட்டி (காசு பார்க்க) செல்போன் கட்டணங்களை குறைத்து, அவர்கள் லாபம் அடைய ஏழைகளை செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாக்கி, கட்டண சேனல்கள் மாதிரி மக்களை அதிக பயன்பாட்டிற்கு தள்ளி 500 ரூ. இரண்டு மொபைல் என்றெல்லாம் ஒரு காலத்தில் கொடுத்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றார்போல மைய அரசின் திட்டங்களை வளைத்து நெளித்து இன்று பாவம் மக்கள் தங்களையும் அறியாமல் இந்த சதியில் மாட்டிக்கொண்டு அவசியம் ஒரு செல்போன் வச்சிருந்தா தான் கவுரவம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 10:44 am

செல்லில்லையென செல்லாக் காசாகாதை விடின்
செல்வாங்கி செலவு செய்து செல்லாக் காசாவதே மேல்

என நாம் நினைத்து விட்ட படியால் செல்லமே என் செல்லமே ன்னு ஓட்ட வேண்டி இருக்கிறது காலத்த.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 18, 2012 11:10 am

வளர்ந்து வரும் உலகில் வரி ச்சுமை,விலை உயர்வு,பண நெருக்கடி போல்
அலைகற்றை நெருக்கடியிலும் வாழ வேண்டி தான் உள்ளது.... சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக