ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

5 posters

Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by கே. பாலா Sat Mar 24, 2012 9:51 pm

கொழும்பு: யார் என்ன சொன்னாலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கேட்க மாட்டோம். இலங்கை சுயாட்சி மிக்க நாடு. இங்கு வேறு யாருக்கும் இடமில்லை, என்று திமிராகப் பேசியுள்ளார் ராஜபக்சே.

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை தோற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முப்பதாண்டு காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையில் நாட்டுக்கு எதிரான அந்நிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நாம் இந்த நாட்டின் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறுதான் கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பயனின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.

இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளி நாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.

இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்த பின்னர் வடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.

சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் எடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபிட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.

இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன.

ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பெரும் அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன.

எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.

இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இது சுயமான ஆட்சி நடக்கும் நாடு. யார் சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

தட்ஸ் தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by யினியவன் Sat Mar 24, 2012 10:04 pm

இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by மகா பிரபு Sat Mar 24, 2012 10:10 pm

கொலவெறி wrote:இந்த ஆளுக்கு வாயக் கிழிச்சு தெச்சு ரத்தத்தாலேயே எம்ப்ராய்டரி போட்டு விட்டாத் தான் அடங்குவாரா?

கொஞ்ச நாள்ல சீனாக்காரனே போட்டு விட போறான் பாருங்க.

திபெத்தின் நிலைமைதான் இவர்களுக்கும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by அசுரன் Sat Mar 24, 2012 10:31 pm

அவர் நாட்டு மக்களுக்கு அவர் கொடுக்கும் செய்தி இது... இதை நாம் பெரிதுபடுத்த வேன்டியது இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by Guest Sun Mar 25, 2012 10:43 am

அமெரிக்க படைய குவிசாதான் அடங்குவார் போல ..
avatar
Guest
Guest


Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by ஹர்ஷித் Sun Mar 25, 2012 11:15 am

அழிவு காலம் நெருங்கிவிட்டதால் பிதற்றுகிறார்.. அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு Empty Re: யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே திமிர்ப் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களைக் கொன்று குவித்தோம்.. சிங்கள தளபதி 'பகீர்' பேச்சு!
» சல்மான் கான் பேச்சு : 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க தேசிய பெண்கள் ஆணையம் கெடு
» ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்
» புதிய அணைக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்- கேரள அமைச்சர் திமிர் பேச்சு
» நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum