Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த குட்டிக்கதைகள் இரண்டு
3 posters
Page 1 of 1
நான் ரசித்த குட்டிக்கதைகள் இரண்டு
ஒரு ஊரில் ஒரு விவசாயி குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். அவரது கனவில் கடவுள் தோன்றினார். ''உன் குடும்பத்தை விட்டு போகலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். அதற்கு முன் உனக்கு வேண்டியதை கேள், தருகிறேன்'' என்று சொன்னார். விவசாயிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. கடவுள் அவன் யோசித்து சொல்ல ஒரு நாள் அவகாசம் கொடுத்தார். விவசாயி தன் குடும்பத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
‘இப்ப நம்மகிட்ட இருக்கிற மாதிரி இன்னொரு பங்கு சொத்து கேளுங்க‘ என்று மனைவி சொன்னாள். மகனோ ‘உடுத்த துணியும் உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு வசதியும் எப்போதும் வேணும் கேளுங்க‘ என்றான். மகளோ ‘நம்ம வீட்ல தரித்திரம் ஏற்படவே கூடாதுனு கேளுங்கப்பா‘ என்றாள். கடைசியாய் அவனுடைய தாய் ‘குடும்பத்துல எல்லோரும் அன்பா பாசமா வாழணும்னு கேளுப்பா. அது போதும்‘ என்றாள்.
அடுத்த நாள் கனவில் கடவுள் வந்தார். ‘என்ன முடிவு எடுத்தாய்?‘ என்று கேட்டார். ‘இறைவா, எங்க வீட்ல எல்லோரும் அன்பா பிரியமா இருக்கணும். எங்களுக்குள் சண்டையே வரக்கூடாது. அந்த வரம் மட்டும் போதும்‘ என்று விவசாயி சொன்னான். இறைவன் யோசித்தார். ‘நீ இப்படி கேட்டதால் நானும் என் முடிவை மாத்திக்க வேண்டியதுதான்‘ என்றார். இவனுக்கு புரியவில்லை. கடவுள் விளக்கினார்.
‘எங்கே அன்பும் பாசமும் இருக்கிறதோ அந்த இடத்தில்தான் நான் இருப்பேன். நீ கேட்ட வரத்தின் மூலமாக உன்னை விட்டு நான் போக முடியாதபடி செய்துவிட்டாய். இனி உன்னுடனே இருப்பேன்‘ என்று சொல்லி இறைவன் மறைந்தார். அன்பும், பாசமும் நிலைக்கும் இடத்தில்தான் இறைவன் குடியிருப்பார் என்பதை உணர்ந்து மணமக்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டை போடுவார். ‘ஒருநாள் ஆபீஸ் போய் வேலை செய்து பார், சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று புரியும்‘ என்று அடிக்கடி சவால் விடுவார். அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ‘ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு வீட்டு பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்‘ என எதிர் சவால் விட்டாள்.
கனவனும் அதை ஏற்றுக் கொண்டான். அவன் வீட்டில் இருக்க, இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டி பெருக்கி சுத்தம் செய்தாள். வருகை பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளை பார்த்தாள்.
மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்கு புறப்பட நினைத்தபோது ஒரு அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசு பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டை பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்கு பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததை பார்த்தாள். இவளை பார்த்ததும் ‘பிள்ளையா பெத்து வச்சிருக்க? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே‘ என்று பாய, அவளோ ‘அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா‘ என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க? இவன் எதிர்வீட்டு பையனாச்சே‘ என்று அலற, ‘ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா?'' என கணவன் திகைக்க, அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை. இல்லத்தை பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்ப பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான் முடியும். மணமக்கள் இதை உணர்ந்து எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் ரசித்த குட்டிக்கதைகள் இரண்டு
அம்மா சூப்பர் கதைம்மா. இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவரவர் பொறுப்புணர்ந்து மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள நல்ல பாடம் புகட்டும் கதை.
அந்த பக்கத்து வீட்டு பையனை தன் பையன்னு நெனச்சு அடிச்சு படுக்க வெச்சது - சூப்பரோ சூப்பர்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ரசித்த குட்டிக்கதைகள் இரண்டு
///அன்பும், பாசமும் நிலைக்கும் இடத்தில்தான் இறைவன் குடியிருப்பார் என்பதை உணர்ந்து மணமக்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆதிக்கம் செலுத்தக்கூடாது///
கதைகருவைச் சொல்லும் வரிகள்...
அதிலும் அடிக்கோடிட்டது அற்புதக் கருத்து-வீட்டுக்கு மட்டுமன்று;நாட்டுக்கும்...
/// ‘ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க? இவன் எதிர்வீட்டு பையனாச்சே‘ என்று அலற, ‘ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா?'' என கணவன் திகைக்க...///
சரியான நகைச்சுவை...
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» ரசித்த கவிதைகள் இரண்டு
» எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்
» நான் ரசித்த நகைச்சுவைகள் சில..
» நான் ரசித்த படம்
» நான் ரசித்த நடிகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum