புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:09 am

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஞானதேசிகன்

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக மத்திய அரசையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தி சிலர் பேசிவந்தனர். ஆனால் இன்றைக்கு இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அப்பாவி தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதையும், மனித உரிமை மீறல்களை இந்தியா என்றைக்கும் ஆதரிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு துணைநின்ற தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கும், சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இலங்கையில் வாழ்கிற 30 லட்சத்திற்கும் மேல் உள்ள தமிழர்களுக்கு உரிமையையும், நல்ல வாழ்க்கை முறையையும், அரசியல் தீர்வையும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாலேயே இலங்கை தமிழர்களின் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று கூறமுடியாது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியவரக்கூடும். அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக இதை கருதலாம்.

அதே நேரத்தில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதுடன், நமது கடைமை முடிந்துவிட்டது என்று நாம் ஓய்ந்துவிடக்கூடாது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் அறிக்கையில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. சிங்களர்களுக்கு தமிழர்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பலமுறை கூறியுள்ள நிலையில், அவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு அதிகாரம் தரமாட்டார்கள். சிங்களர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்வதும் சாத்தியமற்ற ஒன்று.

எனவே இலங்கை இனச்சிக்கலுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் அமைப்பதுதான். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை நாம் விரைவுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நீதிபெற்று தரும் கடமை இந்திய அரசுக்கு உண்டு என்பதால், தனித் தமிழ் ஈழம் அமைக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. அமைப்பை இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜீ.ராமகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலும், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென முடிவெடுத்துள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமஅந்தஸ்து, சம உரிமைகள், சுயாட்சி, அதிகாரப்பகிர்வு ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளிட்ட ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய அரசியல் தீர்வு காண இலங்கை அரசினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

ஐ.நா. மனித உரிமை குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்ததற்கு பதிலாக, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். இருப்பினும், இப்போது போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கவும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் இலங்கையை நிர்பந்திப்பதற்கு இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இலங்கையை வற்புறுத்த வேண்டும்.

இந்த தீர்மானம், இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கை. சர்வதேச சமூகத்தின் கவலையை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச ஆய்வுக்கு இலங்கை உட்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இலங்கை என்ன செய்யப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கவனித்துக் கொண்டிருக்கும்.

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

தினதந்தி

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:10 am

ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு: இந்தியா விளக்க அறிக்கை

ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

வரவேற்பு

இலங்கை அரசு நியமித்த `கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்' (எல்.எல்.ஆர்.சி.) சிபாரிசுகளை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். இலங்கையின் பல்வேறு மதரீதியான, இனரீதியான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண இது நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.

கடந்த 2009-ம் ஆண்டு இதே குழு கூட்டத்தில் இலங்கை, இதை செய்வதாக உறுதி அளித்தது. தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தினோம்.

அரசியல் தீர்வு

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை எல்.எல்.ஆர்.சி. ஆணையம் அங்கீகரித்துள்ளது.

போரின்போது காணாமல்போன நபர்கள், சிறை வைக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், உயர் பாதுகாப்பு மண்டலங்களை குறைத்தல், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை தடை செய்தல், தனியார் நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், ராணுவமயமாக்கலை குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எல்.எல்.ஆர்.சி. ஆணையம் உறுதியான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த குழு கூட்டத்தில் இலங்கை அரசு விளக்கிக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவது, உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியா உதவி

இந்தியாவும், வடக்கு இலங்கையில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கணிசமான உதவிகளை செய்துள்ளது. வீடு கட்டிக் கொடுத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பொது சுகாதாரம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளதால், அங்கு இயல்பு நிலைமை திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகார பகிர்வு

இந்த பின்னணியில், இலங்கை அரசு விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துதல், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மனித உரிமை மீறல் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்களை பொறுப்பாளி ஆக்குவதுடன், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், இலங்கையின் சிறுபான்மை இனமாகிய தமிழர்கள் உள்பட அனைத்து இன மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.

இறையாண்மை

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, நாடுகளுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்புகிறது. எனவே, இதுதொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் (இலங்கை) இறையாண்மை உரிமையை மதிப்பதாக இருக்க வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதெல்லாம், ஐ.நா. மனித உரிமை குழுவில் நாம் ஒப்புக்கொண்ட விதிமுறைகள்.

நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக் கூடாது.

இலங்கையுடன் உறவு

அண்டை நாடான இலங்கையுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவு, இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கை நிகழ்வுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது.

இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் கூடிய எதிர்காலம் அமைவதற்காக, நல்லிணக்க நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:11 am

இலங்கைக்கு தோல்வி ஏன்? மந்திரி பெரீஸ்

ஜெனீவா நகரில் நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானம் அமோக வெற்றி பெற்றது. இது மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஓட்டெடுப்பின்போது உடனிருந்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல். பெரீஸ் கூறியதாவது:-

பல்வேறு வகையில் வந்த தீவிரமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் ஓட்டு அளித்திருப்பது மிகப்பெரிய திருப்தி அளிக்கிறது. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. 47 உறுப்பினர்களை கொண்ட மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்க வில்லை. 24 நாடுகள்தான் ஆதரித்துள்ளன. அப்படிப்பார்த்தால் மிகக்குறைந்த வித்தியாசம்தான்.

இதில் மிகவும் வேதனை தந்த அம்சம், குறித்த பிரச்சினையின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஓட்டு உறுதி செய்யப்படவில்லை. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தீர்மானம் தொடர்பான நாட்டின் நலன் கண்டுகொள்ளப்படவில்லை. மனித உரிமை கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு இது எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு ஓட்டு அளிக்க தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியைத்தான், உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் என்று பெரீஸ் குறிப்பிட்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக