ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் அணிக்கு மரியாதை...

+11
அதி
யினியவன்
உதயசுதா
பிரசன்னா
ராஜா
ஹர்ஷித்
உமா
இரா.பகவதி
ஜாஹீதாபானு
dhilipdsp
ரா.ரா3275
15 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 1:59 pm

First topic message reminder :

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Images?q=tbn:ANd9GcRBR2okkE1czt8XEhJtqQxyC_KVWOv15Y_6oduD0ThmSTLVuK-_xA

நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.

இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.

ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.

மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.

இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.

இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.

இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.

இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.

இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Images?q=tbn:ANd9GcQGwf9mGcvPBx_y7IlETCgqtuq57WeohoOxCqqdMM5FeQTKwBysrw

Last edited by ரா.ரா3275 on Mon Mar 19, 2012 2:43 pm; edited 1 time in total

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by உதயசுதா Mon Mar 19, 2012 4:20 pm

நன்றி ரா.ரா.உங்கள் பதிவுக்கு.

பெண்ணுக்கே ஒரு இயல்பான குணம் உண்டு.தன்னை தாங்கும் தலை மகன் இருக்கும் வரை அவர்களின் எந்த குணமும் மற்றவர்களுக்கு தெரியாது.ஆனால் ஒரு கட்டத்தில் தன்னால் தான் குடும்பம் தலை நிமிர வேண்டும் என்ற நிலை வரும்போது அவர்கள் எடுக்கும் விஸ்வரூபம் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவுக்கும்,சில சமயம் பயப்படும் அளவுக்கும் இருக்கும்.

உங்களின் இந்த பதிவை வீட்டுக்காகவும், நாட்டுக்காகவும் உழைக்கும் அனைத்து பெண்களின் மரியாதையாக எடுத்து கொள்கிறேன்

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Uமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Dமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Yமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Sமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Uமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Dமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Hமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 5:42 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....

அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..

கட்டுரை அருமை ராரா...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் ஆமோதித்தல்

நிஜமாவா உமா ........ நன்றி அன்பு மலர்

உண்மைதான் அக்கா.இதைவிட ஒரு மறுமொழி எவ்வாறு கொடுப்பது.
அதனால் தான் தங்களின் கருத்தை ஆமோதித்தேன். சூப்பருங்க

உண்மைதான்...ஜாகீதாபானு அவர்களின் பின்னூட்டம் கொஞ்சம் கண்கலங்க வைக்கக் கூடியதுதான்... ஆமோதித்தல்

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 5:44 pm

ராஜா wrote:ராராவின் பதிவும் அதற்கு பானுவின் பின்னூட்டமும் மனதை நெகிழ செய்கிறது

நன்றி ராஜா...
ஆனால் அவரின் பின்னூட்டம் கட்டுரையைவிட சற்றே தூக்கலானது...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 5:45 pm

பிரசன்னா wrote: அருமையிருக்கு

இறைவன் அருளால் அந்த குடும்பங்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்...

பிள்ளைகளால் அந்த தாய்மார்கள் மேலும் பெருமை அடைவார்கள்....

கண்டிப்பாக நடக்கும் பிரசன்னா...காலம் அதை மெய்ப்பிக்கும்...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 5:47 pm

உதயசுதா wrote:நன்றி ரா.ரா.உங்கள் பதிவுக்கு.

பெண்ணுக்கே ஒரு இயல்பான குணம் உண்டு.தன்னை தாங்கும் தலை மகன் இருக்கும் வரை அவர்களின் எந்த குணமும் மற்றவர்களுக்கு தெரியாது.ஆனால் ஒரு கட்டத்தில் தன்னால் தான் குடும்பம் தலை நிமிர வேண்டும் என்ற நிலை வரும்போது அவர்கள் எடுக்கும் விஸ்வரூபம் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவுக்கும்,சில சமயம் பயப்படும் அளவுக்கும் இருக்கும்.

உங்களின் இந்த பதிவை வீட்டுக்காகவும், நாட்டுக்காகவும் உழைக்கும் அனைத்து பெண்களின் மரியாதையாக எடுத்து கொள்கிறேன்

பெண்கள் உண்மையில் இல்லற வாழ்வின் ஆற்றல் சாலைகள்...
அதில் சந்தேகமே இல்லை...
நன்றி உதயசுதா அவர்களே...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by யினியவன் Mon Mar 19, 2012 8:35 pm

தாய்மைக்கு ஈடு இணை ஏதுமில்லை நண்பரே.
பெண்ணுக்கு பெண்மை இருப்பது பெருமை அல்ல
அவளுள் தாய்மை இருப்பதுவே சிறப்பு.

நீங்கள் பகிர்ந்த பாதிக்கப் பட்ட பெண்களிலும் தாய்மை தான்
சிறந்தோங்கி இருந்தது அதுவும் தந்தையும் தாயும் இணைந்தே.

ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?

எதையும் இழக்காமலே இயங்கும் பெண்களும் சிறக்க வேண்டும் - அப்படி சிறப்பின் ஆணாதிக்கம் எனும் மாயை விலகி மானுடம் மேம்படும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by அதி Mon Mar 19, 2012 8:42 pm

நெகிழ வைக்கும் பதிவு ரா.ரா.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:05 pm

கொலவெறி wrote:தாய்மைக்கு ஈடு இணை ஏதுமில்லை நண்பரே.
பெண்ணுக்கு பெண்மை இருப்பது பெருமை அல்ல
அவளுள் தாய்மை இருப்பதுவே சிறப்பு.

நீங்கள் பகிர்ந்த பாதிக்கப் பட்ட பெண்களிலும் தாய்மை தான்
சிறந்தோங்கி இருந்தது அதுவும் தந்தையும் தாயும் இணைந்தே.

ஒரே ஒரு வினா? ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?

எதையும் இழக்காமலே இயங்கும் பெண்களும் சிறக்க வேண்டும் - அப்படி சிறப்பின் ஆணாதிக்கம் எனும் மாயை விலகி மானுடம் மேம்படும்.

நன்றி நண்பரே...
உங்கள் கருத்தை நான் ஆமோதித்தல்

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:06 pm

அதிபொண்ணு wrote:நெகிழ வைக்கும் பதிவு ரா.ரா.

நன்றி அதிபொண்ணு...

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 12:28 am

கொலவெறி wrote: ஏன் பாதிக்கப் படும்போது தான் தாய்மை உயர்ந்தோங்க வேண்டும்?

எதையும் இழக்காமலே இயங்கும் பெண்களும் சிறக்க வேண்டும் - அப்படி சிறப்பின் ஆணாதிக்கம் எனும் மாயை விலகி மானுடம் மேம்படும்.

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல்

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 3 Empty Re: மகளிர் அணிக்கு மரியாதை...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டி தொடர்: இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நீடிக்கிறார் மித்தாலி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு
» நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum