ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
Dr.S.Soundarapandian
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
heezulia
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
i6appar
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

5 posters

Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by பிரசன்னா Sun Mar 18, 2012 3:17 pm

கோடீஸ்வரன் நிகழ்ச்சி அரங்கு, ஒளிவெள்ளம் இல்லாமல் மேடை இருண்டு கிடக்க, பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. “யார் வந்து நிகழ்ச்சியை நடத்தப் போறாங்கன்னே தெரியலையே... சேனல் காரங்க அறிவிக்காம இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டாங்களே...” என்று முணுமுணுவென பேச்சுக்கள்.

இப்போது மேடையில் தொகுப்பாளினி ஒருவர் வர, அவர் மீது ஒளிவட்டம் விழுகிறது, “நம்ம நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கறது யார்ன்னு நீங்க நினைச்சே பாத்திருக்க மாட்டிங்க. வானத்துல ஒரு நெலவு, தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருளில் ஒரு உருவம் நடந்து வந்து ஒற்றை விரலை உயர்த்த. உருவத்தின் மேல் ஒளிவெள்ளம் பாய... அட, நம்ம சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்!

“நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டேன்...” என்றபடி தொகுப்பாளர் சேரில் அமரும் அவர் மவுஸைத் தூக்கி வீசி கேட்ச் பிடிக்க, தயாரிப்பாளர் அலறியடித்து ஓடி வருகிறார். “சார்... புரோகிராமை ஸ்டார்ட் பண்ணுங்க...”

போட்டியாளர் வந்து எதிர் இருக்கையில் அமர, கஜினி, “உங்க பேர் என்ன?” என்க, அவர், “செல்லப்பா சார்...” என்கிறார். கஜினி, “மிஸ்டர் செல்லப்பா,. ‘செல்’லைக் கண்டுபிடிச்சது யாரு.. இதான் உங்களுக்கு கேள்வி, இதுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கு...” என எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேச, அவர் மிரண்டு, “ஸார், கேள்வி புரியலை, திரும்பச் சொல்லுங்க... என்கிறார்.

கஜினி, “என்னைப் பத்தி தெரியுமில்ல... நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. நீங்க போகலாம். நெக்ஸ்ட்....” என்று திரும்புகிறார். அடுத்து ஒரு பெண் வந்து அமர, “உங்க பேர் என்ன?” என்கிறார் கஜினி. “பயலலிதா” என்று அந்தப் பெண் சொல்ல, “நோ... நோ... உங்ககிட்ட நான் கேள்வி கேக்க மாட்டேன். தமிழக மக்கள்தான் கேக்கணும். யூகோ... நெக்ஸ்ட்...” என்று அலறுகிறார் கஜினி.

அடுத்த நபர் வர, அவரிடம், “உங்க பேர்?” என்று கஜினி கேட்க, ”குருணாநிதி” என்கிறார் அவர். “ஐயோ... நான் இமயமலை ப்ளைட்டை பிடிக்கணும். எஸ்கேப்...” என்று அடுத்த செகண்டில் காணாமல் போகிறார் கஜினி.

இப்போது மீண்டும் தொகுப்பாளினி வந்து, ”அவர் போயிட்டதால இப்ப நிகழ்ச்சியைத் தொடர வர்றவர் பேரை நான் சொல்ல வேண்டியதில்லை. ‘கலகநாயகன்’னு சொன்னாலே போதும்...” என்க, கூட்டம் “விமலஹாசன்” என்று கத்துகிறது, சிரித்த முகமாய் கையாட்டியபடி வந்து இருக்கையில் அமர்கிறார் விமலஹாசன் . போட்டியாளரிடம், “உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கப் போறேன். வினான்னும் சொல்லலாம், கொஸ்டின்னும் சொல்லலாம். சரி, கேள்வின்னே வெச்சுப்போமே...” என்க, போட்டியாளர் ‘ஙே‘ என விழிக்கிறார்.

“சங்க இலக்கியத்துல மழையைப் பத்தி எழுதியிருக்கற பாட்டு எதுன்னு நீங்க சொல்லணும். நாலு ஆப்ஷன் வரும்...” என விமலஹாசன் சொல்ல, “ஸார்... கொஞ்சம் ஈஸியான கேள்வியா கேளுங்களேன்...” என்கிறார் போட்டியாளர். “ஆ... தமிழனுக்கு தமிழைப் பத்தியே தெரியலை. தமிழனுக்கு கிடைக்க வேண்டிய பேரு, புகழ் எல்லாம் இங்கிலீஷ்காரனுக்கும் கிடைச்சுடுதே... என்ன அநியாயம்... மழையைப் பத்தி நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், கேளுங்க...” என்று ஆரம்பிக்க, போட்டியாளர் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார். தயாரிப்பாளர் வந்து, “ஸார்... சின்ன கமர்ஷியல் பிரேக் விட்ருக்கோம், வாங்க, காபி குடிச்சுட்டு வரலாம்...” என்று விமலை கூட்டிப் போகிறார்.

மீண்டும் தொகுப்பாளினி வந்து, “இப்ப வர்றவருக்கு அறிமுகமே தேவையில்ல. இவரு பல முகங்கள் கொண்டவர். எந்த முகம் யாருக்குப் பிடிக்கும்னே தெரியாது...” என்க, வந்து நிற்கும் உருவத்தின் மேல் ஒளி வட்டம் விழ, அட! அது பத்திரிகையாளரும் நடிகருமான ‘கோ’.

போட்டியாளர் வந்து அமர, “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க. அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கான கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்க, கீழே நான்கு ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. பார்வையாளர், “என்ன சொல்றதுன்னே புரியலை. ஒரே குழப்பமா இருக்கு ஸார்...” என்கிறார். ”நான் ஒரு இடத்துல இருந்தா... அங்க குழப்பம் இல்லாம இருக்குமா?” என்கிறார் கோ. “தலையப் பிச்சுக்கலாம் போலருக்கு” என போட்டியாளர் சொல்ல, “அதுக்குத்தான் என்னை மாதிரி தலையை வெச்சுக்கணும்” என்று கோ தன் தலையைத் தடவ, பார்வையாளர் தலைதெறிக்க ஓடுகிறார். ‘கோ‘வின் கேள்விகள் தொடர்ந்தால் நிகழ்ச்சியே தாறுமாறாகி விடுமே என்று பயந்து அவரை அழைத்துச் செல்கிறார் தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி அரங்கம் மீண்டும் இருள. சத்தம் இல்லாமல் ஒரு உருவம் வந்து நிற்கிறது. ‘’முருகனுக்கு இருக்கறது ஆறுமுகம், எனக்கிருக்கறது பல முகம், எனக்குத் தேவையில்ல அறிமுகம்” என்று அந்த உருவம் பிளிற, ஒளிவட்டம் உருவத்தின் மீது விழ, அட... அது நம்ம குஜய கே.ஆர்.!

போட்டியாளர் வந்து அமர, “தமிழ்நாட்டு அரசியல்ல ரெண்டு முதல்வர்களை எதிர்த்து நின்ன ஒரே நடிகர் யார்? நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்று சந்தடிசாக்கில் கே.ஆர் சுயவிளம்பரக் கேள்விவீச, போட்டியாளர் யோசிக்கிறார். “எம்.ஜி.ஆர். சுத்தினது கம்பு, எனக்கு பதில் சொல்ல உனக்கு வேணும் தெம்பு, உடனே பதில் சொல்லாட்டா இருக்கு வம்பு” என்று கே.ஆர். அலற, போட்டியாளர் மயங்கி விழுகிறார்.

குஜய கே.ஆர். இப்போது திரும்பிப் பார்க்க, அரங்கமே காலியாக இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் ஒரு மூலையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அவரிடம் வருகிறார் கே.ஆர். “என்னாச்சு... மக்கள் எல்லாம் எங்க?” என்று கேட்கிறார்.

“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. பத்தாக்குறைக்கு போகிற போக்கில எவனோ ஒருத்தன் அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு... இனி நான் எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டேன். ஆள விடுங்கடா சாமி...” என்றவாறு திரும்பிப் பார்க்காமல் ஓட, ‘’ஏ டன்டனக்கா...” என்றபடி அவரைத் துரத்தி ஓடுகிறார் கே.ஆர்.

பளிச்சென்று முகத்தின் மேல் தண்ணீர்த் துளிகள் விழ, “மழை.... மழை...” என்றபடி கண் விழித்தேன். ’‘என்னடா ஆச்சு உனக்கு? கோடீஸ்வரன், கஜினி, விமல்ன்னு என்னென்னமோ தூக்கத்துல உளர்ற... நைட்டு டிவி பாத்துட்டு படுக்காதன்னா கேக்கறியா..?” என்று அருகில் அம்மாவின் கோப முகம் தெரிந்தது, ச்சே...! கனவில்தானா இத்தனை கூத்தும்!

நன்றி - http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_5958.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty Re: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by ஹர்ஷித் Sun Mar 18, 2012 3:47 pm

பிரசன்னா wrote:அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty Re: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by poongulazhi Sun Mar 18, 2012 5:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty Re: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by யினியவன் Sun Mar 18, 2012 6:00 pm

அருமை அருமை பிரசன்னா - பகிர்வுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty Re: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by உதயசுதா Mon Mar 19, 2012 10:29 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Uநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Dநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Aநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Yநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Aநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Sநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Uநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Dநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Hநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Empty Re: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum