புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_m10பள்ளிகூட கலாட்டக்கள் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகூட கலாட்டக்கள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 19, 2012 11:30 am

பள்ளிகூட கலாட்டக்கள் School
பள்ளி
அனுபங்களை எழுதுங்கள்
தங்கை கலையின்
அன்பு வேண்டுகோளுக்காக
இப்பதிவு

கல்வி
அறியாமை இருளை விரட்டும்
ஒளிச் சுடர்
இதுவரையிலான வாழ்கையில் உணர்ந்த
உண்மையும் கூட

வெளிச்சத்தின்
வீரியம் சிலருக்கு
பிரகாசமாக மங்கலாக ஒளிரும்
அது கல்வியின் தரம்

அந்த
கல்வியை முதன்முதலில் தந்தது
தமிழ்த்தாயின் மூற்றாம் பிள்ளையான
மலையாளம்

தாய் தந்தை
தமிழர்கள் என்பதால்
பாண்டி என்று வேற்பிரித்து
ஏளனமாய் மலையாளசகாக்கள் அழைக்கையில்
பிஞ்சு வயசிலேயே உணர்ந்தேன்
வேற்றுமையின் வன்மத்தை

கேலிச்சினமாய்
எத்தனையோ தருணங்களில்
தனித்து நின்று அழுகையில்
கண்ணீர் துடைக்கும் ஆசிரியை
பெயர் ஞாபகத்தில் இல்லை
உருவமோ அழியாமல் இன்னும்
மனசில்

வகுப்பிலும்
விளையாட்டுத் திடலிலும்
எனக்கும் அண்ணனுக்கும் நண்பனாய்
தனிமை மட்டும்

ஞாயிறுகளில்
கடலோரத்தில் சிறு நண்டுபிடித்தும்
அலைகளில் பாதம் நனைத்தவிளையாட்டும்
இன்றும் மனசில் ததும்பும்
குட்டி நினைவுகள்

நான்காண்டு
நீண்ட பள்ளிப்படிப்பில்
மனசில் கல்வியை தவிர வேறெதுவும்
ஆழமாய் பதியவில்லை

சற்றென
ஒரு இரவில் வேரோடுபிடிங்கி
உறக்கத்திலேயே நட்டார்கள்
ஈரத் தமிழ் மண்ணில்

இடம்
மொழி
மனிதர்கள் எல்லாம் புதுமையாய்
பிடுங்கி நடப்பட்ட செடியைப் போல்
நாங்கள்

திரிகூடபுரம் முகைதீன் ஆண்டவர் முதல் நிலை பள்ளி

ஐந்தாம்
வகுப்பின் முதல் நாள்
மொழியில் விலகிய சகாக்கள்
சிலநாள் நீண்ட கேலிபேச்சுக்கள்
என்றோ ஓர்நாள் இறந்துவிட
செய்கை பேச்சுக்களில் நல்ல
நண்பர்களாய்

நட்ட செடிக்கு
ஊற்றிய நீரில் அன்பும் நட்பும்
வேர்கள் மண்ணை இருகப்பிடிக்க
ஓங்கி வளர்ந்தது தமிழும் நட்பும்

ஓராண்டு
பள்ளிப்படிப்பில் எத்தனையே
மறக்க முடியாத நிகழ்வுகள்
அதில் சிலவை இதோ

வெள்ளி
எங்களுக்கு விடுமுறை என்பதால்
ஞாயிறில் பள்ளி இருக்கும்
துலைகாட்சியில் படமும் இருக்கும்
அன்றுதான் சில சகாக்களுக்கு
வயிற்றுவலியும் வரும்

திங்களன்று
வகுப்பறை கரும்பலகையில் எழுதியிருக்கும்
பஞ்சாயத்து தொலைகாட்சியில்
படம்பார்த்தவர்களின் பெயர்கள்

அடிவாங்கும்
படலம் அரங்கேற
சிரிப்பாலும் அழுகையாலும் களைகெட்டும்
வகுப்பு

எதோ
ஒரு கேள்விற்கு
பதில் தெரியாமல் ஆண் சகாக்கள்
பெண் சகாக்களிடம் கொட்டுவாங்கியது
இன்னும் மாயாத நாணம்

நொண்டி
ஸ்கிப்பிங்
கண்ணாம்பூச்சி
பெண் சகாகளுடனான
விளையாட்டுக்கள்

கோலி
கிட்டிப் பிள்ளை
கொங்கரி முக்கான்
கிரிக்கெட்
பம்பரம்
ஆண் சகாக்களுடனான
ஆக்ரோஷ விளையாட்டுக்கள்

நட்பெனும்
வெள்ளைப் பாலில்
....நஞ்சு கலக்காத பால்யம்
வாழ்கையின் வரபிரசாதம்

நடுநிலை
உயர்நிலை
கல்வியை கற்றுத் தந்தது
மசூது தைக்கா நடுநிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி (கடையநல்லூர் )

நிறைய
புதிய நண்பர்கள்
எண்ணிலடங்கா அனுபவங்கள்
எழுத முயன்றால் நாட்கள் நீளும்

தமிழை
தமிழாய் கற்றதும்
எனக்குள் நல் கலைஞனை
உணரச் செய்ததும் இப்பள்ளியே

காலை
தமிழ் வாழ்த்து அணிவகுப்பில்
வரததவர்களுக்கும் வந்தும் நையாண்டி செய்பவர்க்கும்
வகுப்பறையில் பயமுறுத்தும்
பிரம்படி

ஆசிரியர்
இல்லாத தருணத்தில்
பேசக்கூடாது என்ற ஆடரும்
அதை கவனிக்கும் தலைமை மாணவனும்
கரும்பலகையில் பொறிக்கப்படும்
தவறிப் பேசுகிறவனின் பெயர்

வரிசையாய் எழுப்பி
வினாக்களுக்கு பதில் கேட்க
ஆர்வமாய் பதில்சொல்லும் சகாக்கள்
திரு திருவென முழிக்கும் படிக்காத சகாக்கள்
சுவராசியமான தருணங்கள்

வீட்டுப்பாடம்
எழுதிய நோட்டுக்களை
மேஜையில் அடுக்கச்சொல்ல
அடிவயிற்றில் புளியை கரைக்கும்
எழுதாதவர்களுக்கு

தேர்வு
மேஜைக்கிடையில்
நண்பர்களுக்கு பிட்டனுப்பும் சகாக்கள்
அதை காட்டிக்கொடுத்து நல்லபேர்வாங்கும்
எட்டப்பர்கள்

எதையோ
கிறுக்க அதை படக்கென்று பறித்து
ஆசிரியரிடம் கொடுத்த சகாக்கள்
பிற பாடஆசிரியர்கள் திட்டினாலும்
அதை கவிதை என்று முதன்முதலில் பாராட்டிய
தமிழ் ஆசிரியர்

அன்று
அசுத்தம் கலக்காத ஊரணியில்
குளித்து கும்மாளம் செய்வதும்
அட்டக் குளத்தில் மீன்பிடிப்பதும்
கும்மாளக் கூத்து

பகுப்பை கட்டடித்து
மகராஜா திரையரங்கில்
வீர ரஜினி படம் பார்த்ததும்
காட்டிக் கொடுத்த ஒருவனால்
வீட்டிலும் பள்ளியிலும் அடிவாங்கியது
மாறாத வடு

எங்கள்
ஊரில் நிற்காமல் செல்லும்
பாண்டியன் பேரூந்தை
மாணவர்கள் கூடி நிறுத்தியதும்
ஊர் கூடி பின் போலீஸ்வந்ததும்
படபடத்த நிமிஷங்கள்

படிக்கும்போதே
நூலகத்தோடு உண்டான உறவு
நிறைய கற்றுக்கொடுத்தது
இன்றும் கற்றுக்கொடுக்கிறது

அகத்தில்
சினிமா மோகம் குடியேறியதால்
கல்லூரிவரை நீளாமல் மேல்நிலை பள்ளியிலேயே
படியிறங்கியது படிப்பு

அன்பை
உணர்வை
பொருளை பகிர்ந்துகொள்ள
கற்றுக் கொடுக்கிறது
பள்ளிவாழ்க்கை

நட்புக்காக
வீதியில் சண்டையிட்டதும்
அது என் ஆளு
யாருக்காகவோ சண்டையிட்டு பிரியும்
பள்ளி நட்புக்களும்

மீசை
தளிராத வயசில்
காதல் கடிதம் எழுதியதும்
கடித தூதுவனாக சகாக்களும்
இன்றும் அதை நினைக்கையில்
வழியுது வெட்கம்

பள்ளிப் பருவமும்
பால்ய சுட்டித்தனங்களும்
ஆழ்மனதில் உறங்கும் அழகிய
பொக்கிஷம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 11:48 am

[quote]ஆழ்மனதில் உறங்கும் அழகிய
பொக்கிஷம்[quote]

சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலிக்கு ஒரு சிறு வேண்டுகோள்..."இன்னும் உறங்காத"
என்று இருந்தால் எப்படி இருக்கும்?...
மற்றபடி அருமை...அருமை...



பள்ளிகூட கலாட்டக்கள் 224747944

பள்ளிகூட கலாட்டக்கள் Rபள்ளிகூட கலாட்டக்கள் Aபள்ளிகூட கலாட்டக்கள் Emptyபள்ளிகூட கலாட்டக்கள் Rபள்ளிகூட கலாட்டக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 11:50 am

பள்ளிப் பருவமும்
பால்ய சுட்டித்தனங்களும்
ஆழ்மனதில் உறங்கும் அழகிய
பொக்கிஷம்


உண்மை வரிகள். மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 19, 2012 4:26 pm

[quote="ரா.ரா3275"][quote]ஆழ்மனதில் உறங்கும் அழகிய
பொக்கிஷம்


சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலிக்கு ஒரு சிறு வேண்டுகோள்..."இன்னும் உறங்காத"
என்று இருந்தால் எப்படி இருக்கும்?...
மற்றபடி அருமை...அருமை...

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 19, 2012 4:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:பள்ளிப் பருவமும்
பால்ய சுட்டித்தனங்களும்
ஆழ்மனதில் உறங்கும் அழகிய
பொக்கிஷம்


உண்மை வரிகள். மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 19, 2012 4:28 pm

இந்த கவிதைய படிச்சு முடிச்சதும் என்னோட பள்ளி கால அனுபவங்களுக்கு சென்று மீண்டேன் செய்யது அலி.

வாழ்த்துகள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



பள்ளிகூட கலாட்டக்கள் Uபள்ளிகூட கலாட்டக்கள் Dபள்ளிகூட கலாட்டக்கள் Aபள்ளிகூட கலாட்டக்கள் Yபள்ளிகூட கலாட்டக்கள் Aபள்ளிகூட கலாட்டக்கள் Sபள்ளிகூட கலாட்டக்கள் Uபள்ளிகூட கலாட்டக்கள் Dபள்ளிகூட கலாட்டக்கள் Hபள்ளிகூட கலாட்டக்கள் A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 19, 2012 4:38 pm

உதயசுதா wrote:இந்த கவிதைய படிச்சு முடிச்சதும் என்னோட பள்ளி கால அனுபவங்களுக்கு சென்று மீண்டேன் செய்யது அலி.

வாழ்த்துகள். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:41 pm

கவிதை அருமை செய்தாலி .. சூப்பருங்க சூப்பருங்க
பள்ளிக்கூட நினைவுகளை கண் முன் நிறுத்தியது மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 19, 2012 5:05 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை செய்தாலி .. சூப்பருங்க சூப்பருங்க
பள்ளிக்கூட நினைவுகளை கண் முன் நிறுத்தியது மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக