புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
29 Posts - 60%
heezulia
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 8:55 pm

தனிநபர் வருவாயும், வரி விலக்கும்

* ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை. 2 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில், 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு மூலம் வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், ஆண்டுக்கு தங்களது வருமானத்தில், 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
* ராஜிவ்காந்தி பெயரில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அதற்கு 50 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும்.
* ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* ரத்தச் சோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் அதற்கான செலவு தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.
* வெளிநாட்டில் சொத்துக்கள் வைத்திருந்தால், அதுபற்றி வருமான வரி கணக்குகளில் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சொத்து வாங்கியதில் இருந்து 16 ஆண்டுகள் வரை, அந்த சொத்துக்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
* இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்கினால், அவற்றுக்கு உடனடியாக அங்கேயே வரி செலுத்தியாக வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு

* அடிப்படை கட்டமைப்பு துறை முதலீட்டில் தகுதி பெற்ற, தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி.
* அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீட்டை ஊக்குவிக்க, வரி விலக்கு கொண்ட கடன் பத்திர வெளியீட்டின் வரம்பு 30 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* சென்ற நிதியாண்டில் 7,300 கி.மீ வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. வரும் 2012-13ம் நிதியாண்டில் புதிதாக, 8,800 கி.மீ தூரத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
* துறைமுகங்கள், கப்பல் கட்டுமானம், அணை, சாலை, பாலம் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்கி, நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு கடன் மீதான வட்டி கட்டணத்திற்கு விதிக்கப்படும் வரி 20 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக, மூன்று ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
* ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள
20 ஆயிரம் கோடியில் 5,000 கோடி ரூபாய் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு பயன்படுத்தப் படும்.
* கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் கொடுக்கும் ஐ.ஐ.எப்.சி.எல்., நிறுவனம், தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு, டெண்டர் புள்ளியில் போட்டியிடும் போதே கடன் ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
* பெரிய அளவிலான வேளாண் சந்தைகள், நீர் பாசன திட்டங்கள் ஆகியவற்றில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், லாப பற்றாக்குறை நிதி அளிக்கப் படும்.

நிபுணர் கருத்து

வளர்ச்சிக்கான பட்ஜெட்: ஜி.ஆர்.கே ரெட்டி, தலைவர் மார்க் குழுமம்: வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சார துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி செலவினம் அதிகரிப்பு, தொழில் துறையில் தேக்க நிலை சாதகமற்ற சந்தை நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பார்வையுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. குறிப்பாக, அடிப்படை கட்டமைப்பு துறையில், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வரியற்ற கட்டமைப்பு கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்சார சாதனங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேவை வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பங்குச்சந்தை

* பங்கு பரிவர்த்தனை வரி 0.1 சதவீதமாக குறைப்பு
* சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மூன்றாண்டு காலவயைறை கொண்ட இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
* வரும் 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும்.
* 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட புதிய பங்கு வெளியீடுகளில் 10 சதவீதம் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்
* 10 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி, மூன்றாண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால், 50 சதவீத வரி விலக்கு
* துணிகர முதலீட்டு நிதியங்கள் (வென்சர் கேப்பிட்டல் பண்டு) பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்
* நிறுவனங்கள் அவற்றின் அயல்நாட்டு சொத்துக்கள் குறித்த விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்

நிபுணர் கருத்து: பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்பட்டுள்ளதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரம் நன்கு இல்லாமல் போனால், இந்த அளவிற்கு நிதியை திரட்டுவது கடினம்.

வேளாண் துறை

* நடப்பு நிதியாண்டில், வேளாண் துறை வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* பட்ஜெட் ஒதுக்கீட்டில் வேளாண் துறை திட்டங்களுக்கான நிதி 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
* வேளாண் துறைக்கான கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு 4.75 லட்சம் கோடியிலிருந்து 5.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கரும்பு நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கும் அவற்றின் உதிரிபாகங்களுக்கும் சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 18 சதவீதம் உயர்ந்து 17 ஆயிரத்து 123 கோடியில் இருந்து 20 ஆயிரத்து 208 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.
* சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பிராந்திய ஊரக வங்கிகள் குறுகிய கால கடன்களை வழங்குவதற்காக, தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)க்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* குறுகிய கால பயிர் கடனுக்கான ஆண்டு வட்டி ஏழு சதவீதமாகவே தொடரும். கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படும். (மூன்று சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்)
* அறுவடைக்கு பிறகு விவசாயிகள் சந்திக்க நேரும் இழப்பை தடுக்கும் நோக்கில், கிடங்குகளில் உணவு தானியங்களை வைப்பதற்காக நான்கு சதவீத வட்டியில் அறுவடைக்கு பின்பு கடன் வழங்கப்படும்.
* ஏ.டி.எம் மையங்களில் பயன்படுத்தும் வகையில் கிசான் கடன் அட்டை திட்டம் மேம்படுத்தப்படும்.
* அதிக மகசூல் மற்றும் தட்பவெப்ப மாறுதலை தாங்கும் விதை வகைகளை உருவாக்குவதற்கான ஆய்விற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* வேளாண் துறைக்கான பாசன வசதியை அதிகரிக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு, 14 ஆயிரத்து 242 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* உணவு பதப்படுத்தல் துறையை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய செயல் திட்டம் உருவாக்கப்படும்.

நிபுணர் கருத்து: நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி அதிகரித்து பணவீக்கம் குறைய வாய்ப்பு உருவாகும்.

மின்சாரம்

* மின் நிறுவனங்கள், அன்னிய வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்படும்.
* மின் துறை நிறுவனங்களின், வரியில்லா கடன் பத்திர வெளியீட்டு வரம்பு ஐந்தாயிரம் கோடி ரூபாயில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
* நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 2014ம் ஆண்டு மார்ச் இறுதி வரை, நிலக்கரி இறக்குமதிக்கு சுங்கவரியில் இருந்தும் முழு விலக்கும், 1 சதவீத எதிர் விதிப்பு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
* இயற்கை எரிவாயு, திரவ எரிவாயு, யுரேனியம், யுரேனியம் டையாக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* மின்நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் விதமாக, மூன்றாண்டுகளுக்கு அன்னிய வர்த்தக கடனுக்கான வட்டியின் மீத விதிக்கப் படும் வரி, 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு முடிவடைய உள்ள வரி விலக்கு சலுகை காலம், மேலும் ஓராண்டிற்கு, அதாவது வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும்.
* மின் நிறுவனங்கள் கையகப்படுத்தும் புதிய சொத்துக்களுக்கு முதலாண்டு கூடுதலாக 20 சதவீத தேய்மானம் அனுமதிக்கப்படும்.
* மார்ச் 31, 2013க்குள் முடிக்கப்படும் மின் திட்டங்களுக்கு, லாபத்தின் மீதான வரி, 10 ஆண்டுகளுக்கு 100 சதவீத விலக்கு வழங்கப்படும்.
* வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி திறன் 80 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும்.
* மார்ச் 31, 2015க்குள் முடிக்கப்படும் திட்டங்களுக்கான நிலக்கரி விற்பனை ஒப்பந்தங்களை இப்போதே முடித்துக்கொள்ள கோல் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்

* இந்நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்குதற்காக, 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், "சிட்பி' நிறுவனத்துடன் இணைந்து, துணிகர முதலீட்டு நிதியம் ஏற்படுத்தப்படும். இது, "இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் வென்சர் பண்ட்' என்ற பெயரில் செயல்படும்.
* இத்துறை ஊக்குவிக்கும் வகையில், ஒரு சில சாதனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூலப் பொருட்களின் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை, 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எதிர்மறை வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* இதயத்தில் பொருத்தக் கூடிய வால்வுகள், ஸ்டெண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
* பொதுத் துறை மற்றும் அரசு நிறுவனங்கள் அவற்றின் மொத்த கொள்முதலில், 20 சதவீத பொருட்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வாங்க வேண்டும். இதில், எஸ்.சி.மற்றும் எஸ்.டி. பிரிவினரிடமிருந்து, 4 சதவீத பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
* சிறு நிறுவனங்களின் கணக்கு தணிக்கைக்கான விற்றுமுதல் வரம்பு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கி-பாதுகாப்பு-விமானம்

* பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்திய விமான நிறுவனங்கள் ஓராண்டிற்கு அன்னிய வர்த்தக கடன் மூலம் 100 கோடி டாலர் (5,000 கோடி ரூபாய்) திரட்ட அனுமதி
* விமான உதிரிபாகங்கள், டயர்கள் மற்றும் சோதனை சாதனங்கள் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு
* நலிவுற்ற ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 4,000 கோடி ரூபாய் நிதியுதவி
* இந்திய விமான நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் 49 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்
* வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பு 25 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வங்கி சேமிப்பு கணக்கில் 10ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி விலக்கு
* பொதுத்துறை வங்கிகள்,கிராமப்புற வங்கிகளின் மூலதன இருப்பை உயர்த்திக் கொள்ள, 15 ஆயிரத்து 888 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்
* மருத்துவ காப்பீட்டின் கீழ், 5,000 ரூபாய் வரையிலான பரிசோதனை தொகைக்கு வரி விலக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 8:57 pm

எப்படி பட்ஜெட் போட்டாலும் பெட்ரோல் விலையோ குறைய போவதே இல்லை...அப்பறம் எதுக்கு பட்ஜெட்டைப் பார்த்துக்கிட்டு...பல்ஸை ஏத்திக்கிட்டு புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 9:02 pm

இந்த பட்ஜெட் அம்சமாவே இல்லையே?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:05 pm

அதிபொண்ணு wrote:எப்படி பட்ஜெட் போட்டாலும் பெட்ரோல் விலையோ குறைய போவதே இல்லை...அப்பறம் எதுக்கு பட்ஜெட்டைப் பார்த்துக்கிட்டு...பல்ஸை ஏத்திக்கிட்டு புன்னகை
சோகம் பெட்ரோல் விலை எப்படி குறையும் ..அடுத்து ஈரான் போர் இருக்கிறதே அதனால் தான் இன்னும் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக