ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வன் (கவிதை)

3 posters

Go down

 முதல்வன் (கவிதை) Empty முதல்வன் (கவிதை)

Post by kirikasan Fri Mar 16, 2012 2:27 pm

 முதல்வன் (கவிதை) 22468082

முதல்வன்
(மேலே உள்ள படத்துக்கு கவிதை எழுத விதித்த கவியரங்கம் ஒன்றுக்கு எழுதப்பட்ட கவிதை)

நீதியின் தேவன் கூற்று:

இளமலர்க ளெங்கும்நிறைந் திலங்குமெழில் சோலை
இன்னிசையும் தென்றலதும் இன்பந்தரும் வாழ்வை
பழமினிதும் சுவைமதுவும பசியதனைப் போக்க
பால்நிலவும் பனிகுளிரும் படர்ந்தினிமை சேர்க்க
எழும்உதய ஒளிஅழகும் உச்சிவெயில் நிழலும்
என இனிமை வாழ்வளித்தாள் இயற்கை எனுமன்னை
அழமனமும் இழிவுடனே அஞ்சும்வகை செய்து
அழகுலகை அழித்தவனே அத்தனையும்போதும்

மலைகடலும் வயல்கள்கொளும் மரகத மாவுலகை
மாலைவெயில் மஞ்சளுடன் மனம்கவரச் செய்து
சிலையழகு மங்கையரும் செல்வருடன் தம்மைச்
சேர்ந்தவரும் கூடிவிளை யாடுமெழில் இல்லம்
கலைநிறைந்த மனமகிழ்வும கொண்டஒரு வாழ்வை
காணெனவே நல்லியற்கை கட்டமைத்த போதும்
கொலைபுரியுங் குற்றங்கள் கொடுமைகளைத் தூண்டி
குலைநடுங்க வைத்தவனே குணத்தை இனி மாற்று

(வேறு )

மேகமு டைந்துவி ழுந்ததுவோ ஒரு
மின்னல் அடித்திடவே
தேகமதிற் கொடுங்கோர மெடுத்தொரு
தீய பெரும் உருவம்
சாக வரம் இவன்தந்திடுவான் எனச்
சொல்லும் உடல் முறுகி
ஆகக் கொடும் உருகொண் டொருவன் திடு
மென்று முன்னே குதித்தான்

தூயமிளிர்வுடன்ஆடைஅணிந்தவன்
நீதியின் காவலனை
பாயுமொளிக் கதிர் பட்டுஒளிர்ந்திடப்
பக்கமிருந்தவனை
நீயும் எனக்கொரு தூசு கணக்கென
நெஞ்சினில் எண்ணிவிடு
நேயம் விடுத்திடுவா உன்தீரமும்
நேரினில் காட்டிவிடு

எத்தனை தூய்மை அழித்தவனாம் இவன்
என்னுடன் நீசமமோ
கத்தி யழித்திட வெட்டிப்புதையெனக்
கட்டளையிட்டவன் காண்
சத்தியம் நேர்மையும் விட்டவர்பக்கமே
சார்ந்திருப்பேன் அறிவாய்
இத்தரை மீதினில் நீதியழிந்திட
நேர்வதும் என்திறனே

பித்தெனும் பிஞ்சுகள் பேசரும் பெண்குலம்
பிள்ளைமுதியவர்கள்
அத்தனை பேரையு மள்ளி நெருப்பிடை
அன்றுஎரிய வைத்தேன்
பொத்தெனப் போட்டே எரித்ததும், பாமரர்
வெட்டும் குழி பதுங்க
முத்தென வெண்விழி கொட்டவர் மூச்சினை
மூடி மண் போட்டழித்தேன்

கத்தும் குரலெழும் காதிடை தேனிசை
கொள்ளலும் ஆனந்தமே
கொத்து மொலிக்கொரு கூவியழும்குரல்
கோடிஎன் இன்பங்களே
சித்த மிழந்தனை என்னை எதிர்த்திடும்
செய்கையை விட்டுவிடு
புத்திரனே உன்றன் பொன்னுடல் காத்திடப்
போ இதில் தோற்றுவிடு

---வேறு----

நீதியின் தேவன்:
கண்களைத் தந்தவள் காணென்றாள் நற்காட்சி
காணுதல் முறைமை யன்றோ
பெண்ணிலே காதலாம் மென்னுணர் வாக்கினள்
பிரியமாய் வாழவன்றோ
எண்ணெய்க்குள் ஒளிவைத்தும் எரிவதோ திரியோடு
ஏற்றிடத் தீபமன்றோ
எண்ணத்தில் புனிதமும் வைத்தான் உயிர்கள்தாம்
இழைந்தொன்றாய் வாழவன்றோ

கண்களோ காணுயிர் கொல்லென்று சினமோங்கி
கசந்திடும் நெஞ்சமாகி
பெண்மையைச் சிதைத்திட பிறன்மனை கொள்ளவும்
பிழைபடும் மனிதமாக
கண்ணியம் அற்றவர் காடுறை மாக்களாய்
கடுமனம் கொண்டுவாழ
மண்ணிலே மாந்தரை மாற்றினாய் கொடுமையே
மறுபடி எச்சரித்தேன்

வெண்ணிலா நீலவான் தந்தவள் நிலமதில்
விளைந்திடப் பசும்பயிர்கள்
வண்ணமோஆழியை வைத்தனள் நீலமாய்
வனப்பொடு பூமி செய்து
கண்ணிய வாழ்வுறக் கடிதெனும் அறிவையும்
கற்றுணர் தெளிவு தந்தாள்
திண்ணிய கொள்கைகள் தினந்தின மழித்துநீ
தீமைகள் செய்யவைத்தாய்

நீலமும் பச்சையாய் நிறமிட்ட புவிதன்னை
நீஇரத்த மோடவைத்து
ஓலமும் கதறலாய் ஊரெல்லாம் அழுதிட
உலகதைச் சீரழித்தாய்
காலமாய் பெண்மையை அழித்ததைப் பிறர்விழி
காணவும் செய்துநின்றாய்
ஞாலமே நல்லதை விட்டு நடந்திட
நாளும்பகை வளர்த்தாய்

வேறு---)
கண்கள் சினத்திடக் கண்டனவோ அவன்
காட்டிய வெஞ்சினமோ
புண்ணென வேதனை கொண்டுளம் மீதினில்
பொங்கிய கோபமதோ
வண்ணம் சிவந்திட உள்ளவனாம் கொடும்
வஞ்சகன் கைகளுடன்
எண்ணியதில் வென்று இவ்வுலகைக் கொள்ள
எட்டித்தன் கைகொடுத்தான்

வெற்றி கொள்ளப் பலப் போட்டிவைத்தார் அதில்
வெல்லுமவர் பொறுத்து
சுற்றி சுழன்றிடும் பூமியதில் பலர்
சந்தோச வாழ் வினுக்காய்
குற்றமிழைத்திடா மாந்தர்களும் உயிர்
கொன்று குவித்தவரும்
சற்று பொறுத்திடக் காத்திருந்தார் மனம்
சஞ்சலம்கொண்டிருக்க

நீதிக்குக் காவலன் முன்னிருந்தான் மனம்
நேர்மையைக் கொண்டிருந்தான்
பாதிக்கு மேலாய் இழந்தவர்கள் நீதி
பார்த்துக் துடித்திருந்தார்
சாதிக்கவே சித்தம் கொண்டிருந்தும் அது
சாத்திய மாகிடுமோ
ஊதிப் பெருத்திட்ட பேய்களுக்குப் பலம்
ஓங்கிப் பெருத்திடுமோ

வையகம்நின்று சுழல்கிறது வெயில்
வாரி அடிக்கிறது
மெய்யகம் நின்று துடித்திட ஓர்குலம்
மாய்ந்து கிடக்கின்றது
பொய்யில் பிறந்தவன் செய்ததெல்லாம்
புவி சொல்லித் தெரிகிறது
பையவெனும் ஒருநீதிவென்றே அந்தப்
பாமரர் வாழுவரோ?
**************************


Last edited by kirikasan on Fri Mar 16, 2012 2:33 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 முதல்வன் (கவிதை) Empty Re: முதல்வன் (கவிதை)

Post by பது Fri Mar 16, 2012 2:30 pm

சூப்பருங்க நான் மூளுக்க படிக்கல முதல் பந்தி நல்ல இருக்கு சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 முதல்வன் (கவிதை) Empty Re: முதல்வன் (கவிதை)

Post by dhilipdsp Fri Mar 16, 2012 2:54 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 முதல்வன் (கவிதை) Empty Re: முதல்வன் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum