புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
5 Posts - 3%
prajai
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
2 Posts - 1%
சிவா
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
435 Posts - 47%
heezulia
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
30 Posts - 3%
prajai
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விளக்கம் தேவை.? Poll_c10விளக்கம் தேவை.? Poll_m10விளக்கம் தேவை.? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை.?

Page 1 of 2 1, 2  Next

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Sun Sep 25, 2016 1:02 pm

அன்பிற்கினிய தமிழ் சான்றோர்களுக்கு இனியவனின் இனிய வணக்கங்கள்.?
சமீபத்தில் எனக்கேற்பட்ட இரு சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் பெற ஆவலாக உள்ளேன்.

சந்தேகம் 1 :
மகாகவி பாரதியின் "தேடிச்சோறு நிதந்தின்று" எனும் கவிதையை நாம் அனைவருமே படித்திருப்போம்..அதில் வரும் "கொடுங்கூற்று" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் விளக்கம் என்ன.??

சந்தேகம் 2 :
தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும்,
"த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும்,
"தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" என்றும் அதுவே இப்பொழுது திராவிடம் என மருவியுள்ளதாய் ஒரு கருத்தும் பரவலாக நிலவியுள்ளதே.?

இதில் சரியான கூற்று எது.? ஆரியம் - திராவிடம் இவை தமிழ் மண்ணில் தோன்றியது எப்போது.? எங்கு.? யாரால்.??

பதில்களுக்கு காத்திருக்கும்,

*தி.கோ இனியவன்

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 25, 2016 4:08 pm

நானும் ஒரு கத்துக்குட்டிதான். ஆனாலும் படிப்பனவற்றை எதுவாயினும் குறிப்பெடுத்து வைக்கும் பழக்கம் உண்டு.ஈகரையில் வந்த பல தகவல்கள்,ஈகரைக்கு செல்லாமலேயே சொல்லிவிட முடியும்.எப்போது எந்த தலைப்பில் என சொல்லிவிட முடியும்.

திராவிடம் பற்றி எனக்கும் கேள்விகள் எழுந்தன.சில குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். பகிர்ந்து கொள்கிறேன். கல்வியாளர்கள் வருவார்கள் தகவல் தருவார்கள். அதுவரை உங்கள் சிந்தனைக்கு.............

முதலில் சந்தேகம் 1. தமிழ் சொல் அகராதியில் உள்ளது. பாரதி பாடல்களுக்கு உரை சொல்லி வரும் முனைவர் மகாதேவன்,தன் உரையில் …........

பிறர் வாழ்வில் சிக்கல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி, கொடிய காலனுக்கு இரையாகும் வேடிக்கை மனிதர்களைப் போல ..............
கொடுங்கூற்று - கொடும்+ கூற்று - கொடிய காலன்-யமன்
2.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார் தந்த வடிவம். பல தமிழ்ப் பெயர்களை ஆங்கிலேயர்கள் மாற்றியது போல்.

1. 'தமிழ்' என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு, 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு 'திராவிட' மாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி 'தமிழ்' அல்லது 'திராவிடம்' என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று; ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி. தமிழ், காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. - பாபா சாகேப் அம்பேத்கர்.
'பாபா சாகேப்' 'தமிழ்' என்ற வார்த்தை தான் சமஸ்கிருதத்தில் 'திராவிடம்' என்று உச்சரிப்படுவதாக குறிப்பிடுகிறார்.

2. தமிழம் என்பது திராவிடம் என்பதன் திரிபுச்சொல்லே - பாவாணர்
பண்டைய காலத்தில் நாட்டுப்பெயர்கள் 'அம்' ஈறு பெற்றே வழங்கி வந்தன. (எ.கா) சிங்களம், கடாரம், ஆரியம், மராட்டியம், வங்காளம், அராபியம் இவ்வகையிலேயே தமிழம் என்று வழங்கப்பட்டது.
ஒரு சொல்லின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், அதிலுள்ள உயிரெழுத்தை நீக்கி, மெய்யாக நிறுத்தி, அதையடுத்து 'ர' என்னும் எழுத்தை சேர்த்துக் கொள்வது ஒருவகை திரிபு முறை.
படி (copy) என்ற சொல்லில் உள்ள 'ப' என்ற உயிர் மெய் எழுத்தில், 'அ' என்னும் உயிரெழுத்தை நீக்கி, 'ப்' மெய் எழுத்தை நிறுத்தி, 'ர' எழுத்தை சேர்த்தால் 'ப்ரடி' 'ப்ரதி' 'பிரதி' என்று வடமொழியில் மாறும்.
பவளம் - ப்ரவளம் - பிரவாளம்
மதங்கம் - ம்ரதங்கம் - மிர்தங்கம் - மிருதங்கம்
தமிழம் - த்ரமிளம் என்று திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் 'த்ரமிடம்' என்று திரிந்து 'திரவிடம்' என்றாகித் 'திராவிடம்' என்று நீண்டது என்று பாவாணர் விளக்குகிறார்.

3. "திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார்.

திராவிட எனும் பதம் வடமொழி நூல்கள் சிலவற்றிலே வருகின்றது. மனுஸ்மிருதியிலே (10.22 , 44) ‘திராவிட’ என்பது தென்னிந்தியாவிலே வாழ்ந்த மக்களைக் குறிப்பதாகக் காணப்படுகின்றது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 5:03 pm

மூர்த்தி அவர்களே முத்தான விளக்கம் அளித்துள்ளீர் அருமை அருமை .

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Sun Sep 25, 2016 5:52 pm

மூர்த்தி wrote:நானும் ஒரு கத்துக்குட்டிதான். ஆனாலும் படிப்பனவற்றை எதுவாயினும் குறிப்பெடுத்து வைக்கும் பழக்கம் உண்டு.ஈகரையில் வந்த பல தகவல்கள்,ஈகரைக்கு செல்லாமலேயே சொல்லிவிட முடியும்.எப்போது எந்த தலைப்பில் என சொல்லிவிட முடியும்.

திராவிடம் பற்றி எனக்கும் கேள்விகள் எழுந்தன.சில குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். பகிர்ந்து கொள்கிறேன். கல்வியாளர்கள் வருவார்கள் தகவல் தருவார்கள். அதுவரை உங்கள் சிந்தனைக்கு.............

முதலில் சந்தேகம் 1. தமிழ் சொல் அகராதியில் உள்ளது. பாரதி பாடல்களுக்கு உரை சொல்லி வரும் முனைவர் மகாதேவன்,தன் உரையில் …........

பிறர் வாழ்வில் சிக்கல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி, கொடிய காலனுக்கு இரையாகும் வேடிக்கை மனிதர்களைப் போல ..............
கொடுங்கூற்று - கொடும்+ கூற்று - கொடிய காலன்-யமன்
2.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார் தந்த வடிவம். பல தமிழ்ப் பெயர்களை ஆங்கிலேயர்கள் மாற்றியது போல்.

1. 'தமிழ்' என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு, 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு 'திராவிட' மாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி 'தமிழ்' அல்லது 'திராவிடம்' என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று; ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்திய துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழி. தமிழ், காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. - பாபா சாகேப் அம்பேத்கர்.
'பாபா சாகேப்' 'தமிழ்' என்ற வார்த்தை தான் சமஸ்கிருதத்தில் 'திராவிடம்' என்று உச்சரிப்படுவதாக குறிப்பிடுகிறார்.

2. தமிழம் என்பது திராவிடம் என்பதன் திரிபுச்சொல்லே - பாவாணர்
பண்டைய காலத்தில் நாட்டுப்பெயர்கள் 'அம்' ஈறு பெற்றே வழங்கி வந்தன. (எ.கா) சிங்களம், கடாரம், ஆரியம், மராட்டியம், வங்காளம், அராபியம் இவ்வகையிலேயே தமிழம் என்று வழங்கப்பட்டது.
ஒரு சொல்லின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், அதிலுள்ள உயிரெழுத்தை நீக்கி, மெய்யாக நிறுத்தி, அதையடுத்து 'ர' என்னும் எழுத்தை சேர்த்துக் கொள்வது ஒருவகை திரிபு முறை.
படி (copy) என்ற சொல்லில் உள்ள 'ப' என்ற உயிர் மெய் எழுத்தில், 'அ' என்னும் உயிரெழுத்தை நீக்கி, 'ப்' மெய் எழுத்தை நிறுத்தி, 'ர' எழுத்தை சேர்த்தால் 'ப்ரடி' 'ப்ரதி' 'பிரதி' என்று வடமொழியில் மாறும்.
பவளம் - ப்ரவளம் - பிரவாளம்
மதங்கம் - ம்ரதங்கம் - மிர்தங்கம் - மிருதங்கம்
தமிழம் - த்ரமிளம் என்று திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் 'த்ரமிடம்' என்று திரிந்து 'திரவிடம்' என்றாகித் 'திராவிடம்' என்று நீண்டது என்று பாவாணர் விளக்குகிறார்.

3. "திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார்.

திராவிட எனும் பதம் வடமொழி நூல்கள் சிலவற்றிலே வருகின்றது. மனுஸ்மிருதியிலே (10.22 , 44) ‘திராவிட’ என்பது தென்னிந்தியாவிலே வாழ்ந்த மக்களைக் குறிப்பதாகக் காணப்படுகின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1222691

விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்..நான் சமீபத்தில் கூகுளில் சில விடயங்களை பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது திராவிட மொழிகள் 73 எனவும் அவற்றை ஐந்தாக பகுத்தளித்து முறையே தென்,தென் நடு,நடு,வட மற்றும் வகைப்படுத்தபடாத திராவிடம் என பிரித்திருப்பதை கண்டேன்..
அதிலிருந்தே இவ்வினா என்னை ஆட்கொண்டு விட்டது..

கால்வெல்டு அடிகளார் 1856ல் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளையும் ஒன்றாக இணைத்து திராவிட மொழிகள் என பெயரிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.? ஆயினும் தமிழ் மொழியே தொன்மையான மொழியாக இருக்கும் பட்சத்தில் மற்ற மூமொழிகளும் இதிலிருந்து பிரிந்து வந்திருக்க வேண்டுமென்பது என் ஐயம்.?? அதற்கு ஏதுவாக ஏதெனும் சான்று உள்ளனவா.??

மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 25, 2016 6:38 pm

மனோன்மணீயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தில் சான்று உள்ளதே !

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 25, 2016 8:01 pm

ஆர்யர்  என்னும் சொல் - நல்லவர், பிறருக்கு அனுகூலமானவர், அறிவாளி, அன்பானவர் என்றெல்லாம் உயர்வான அத்தனைப் பொருளும் கொண்டது.  இன்றைய ஆப்கானிஸ்தானத்திலிருந்து  வேத காலத்திற்கும் முன்பாக நம் பாரத மண்ணிற்கு வந்த ஆப்கானிஸ்தானத்தவர்கள்  தம்மை இவ்வாறுதான்  நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.  

பாரதத்திருநாட்டின் வடக்கில் இமயம், தெற்கில் விந்தியம், மேற்கில் அரபிக்கடல், கிழக்கே வங்காள விரிகுடா என்ற எல்லையை வகுத்துக் கொண்டு அதற்கு ஆர்ய வர்த்தம்- ( மநு ஸ்ம்ரிதி 2.22) அதாவது நல்லவர்கள்-கற்றவர்கள்- அறிஞர்கள்  வாழும் நாடு என்றும் பெயரிட்டுக் கொண்டார்களாம்.

பாரதத்தில் எஞ்சி நின்றது  விந்தியத்திற்குத் தெற்கே தக்காண பீடபூமிதானே – இது தஷிணம் – தெற்கு > தக்காணம் > திராவிடம் என்றாயிற்று.

திராவிடத்தில் வாழ்பவர்கள் திராவிடர்கள்.

திராவிடர்கள் பேசுவது திராவிட மொழி .

அதற்காக திராவிடம் தீய நாடோ , திராவிடர்கள் தீயவர்கள் என்றோ ஆகிவிடாது.

வடக்கே ஆரிய வர்த்தம் என்றால் தெற்கே திராவிட வர்த்தம் .

இதில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும்; வெறுப்புணர்வைக் கைக்கொள்வதும் நம் அறியாமைதானே !

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 25, 2016 8:41 pm

விளக்கம் தேவை.? 103459460 விளக்கம் தேவை.? 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 25, 2016 11:56 pm

மொழி ஆய்வுகள் மூன்று விதமாக ஆராயப்படுவதாகப் படித்திருக்கிறேன்.

எழுத்து வடிவமும், இலக்கியங்களையும் உடைய மொழிகள், எழுத்து வடிவமும், இலக்கியங்களும் இல்லாத பேச்சு மொழிகள் , மொழியின் வேர்ச் சொற்களின் அடிப்படையிலும்,மொழி இலக்கண பயன்பாடு இவற்றை வைத்து ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த வகையில் தான் இந்தி சம்ஸ்கிருதம் போன்ற வட மொழிகளை இந்தோ-ஐரோப்பியன் மொழிகள் (சேர்மானிய மொழிக் குடும்பம்) அதன் பின்னர் உட் பிரிவில் இந்தோ-ஈரானிய குடும்பமாகவும் சொல்கிறார்கள்.மேலதிகத் தகவல்களை என்சைக்ளோபீடியாவை பார்க்கலாம். அனைத்து மொழிகள் பற்றிய வரலாற்று விபரங்கள் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தமிழில் இருந்து உருவான மொழிகள் 30 ற்கு மேல் என சிலரும்,வேறு சிலர் 9 மொழிகள் (திருந்திய மொழிகள்) எனவும்,இன்னொரு ஆய்வு 78 மொழிகள் எனவும் (இவர்கள் மொஹெஞ்சதாரோ-சுமேரிய ஆய்வுகளையும் இணைத்து அதன் அடிப்படையில்) சொல்கின்றனர்.

இதுபற்றி வரலாற்று ஆதரங்களுடன் டாக்டர் லோகநாதன் மலேசியா தனது இணையப் பக்கத்தில் தந்திருக்கிறார். தமிழ் நாட்டில் ஏட்டுச் சுவடிகளை சேகரித்து வரும் சுபா அக்காவிடம் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். இருவருமே தமிழ் ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஈகரையில் சில தகவல்கள் உள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளை மேலைநாட்டார் மலபார் மொழிகள் என்றும், தமுலிக் என்றும் முதலில் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு விசயம் தெரியுமா? தமிழ் என்ற ஒரு வார்த்தையை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் தமிழர்கள் மெலெனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 26, 2016 6:18 am

இனியவன் wrote:தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும்,
"த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும்,
"தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" என்றும் அதுவே இப்பொழுது திராவிடம் என மருவியுள்ளதாய் ஒரு கருத்தும் பரவலாக நிலவியுள்ளதே.?

இதில் சரியான கூற்று எது.? ஆரியம் - திராவிடம் இவை தமிழ் மண்ணில் தோன்றியது எப்போது.? எங்கு.? யாரால்.??

பதில்களுக்கு காத்திருக்கும்,

*தி.கோ இனியவன்
மேற்கோள் செய்த பதிவு: 1222685

"தமிழுக்கும் அமுதென்று பேர் " என்றான் பாவேந்தன் .

" அமிழ்து , அமிழ்து " என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தால் , அது " தமிழ் , தமிழ் " என்று நம் காதுகளில் ஒலிக்கும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 8:42 am

தமிழில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் ,
தமிழ் என்ற வார்த்தையை ,
1330 குறள்களில் ஓரிடத்திலும்
உபயோகப்படுத்தவில்லையே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக