புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_m10ஜப்பானியத் தமிழியல் ஆய்வு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானியத் தமிழியல் ஆய்வு


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Aug 18, 2012 5:16 am



.
...


சுசுமு ஓனோ அவர்கள்

உலகில் முன்னேறிய நாடுகளில் சப்பான் நாடு குறிப்பிடத் தகுந்தது.சப்பானியர்களின் கடும் உழைப்பும் சுறுசுறுப்பும் நேர்மையும் இவர்களுக்கு உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத்தந்தன.அறிவாற்றலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் இவர்கள் மொழி,பண்பாட்டாலும் உயர்வுடையவர்கள் என்ற உண்மை தெரிந்ததும் மிக மகிழ்ந்தனர்.

ஆம்.சப்பானிய மொழி உலகில் எந்த மொழிக்குடும்பத்துடன் உறவுடையது என்ற ஆய்வில் ஈடுபட்டபொழுது மொழியியல் அறிஞர்கள் தொடக்கத்தில் பல மொழிகளைச் சப்பானிய மொழியுடன் உறவுடையது என ஆராய்ந்து உரைத்தனர்.ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆய்வுகளில் அந்த செய்திகள் மறுக்கப்பட்டன.சப்பானியமொழி தமிழ்மொழியுடன் தொடர்புடையது என்ற ஆய்வு முடிவைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைத்தபொழுது சப்பானியர்களும் மொழியாராய்ச்சி உலகினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

பல வகையிலும் சிறப்புப்பெற்ற தாங்கள் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியுடன் உறவுடையவர்கள் என்று நினைத்துப் பேருவகை அடைந்தனர். இப்பெருமைக்குரிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் அறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் ஆவார்.அவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944 இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார்.1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார்.1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் சப்பானியஅறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர்.இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார்.கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்
(1952).சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட சப்பானிய அகராதியின் படிகள் சப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய சப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

"சப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு சப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை சப்பானியர்களுக்கு உருவானது.

ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர்.ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே சப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான சப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.

1957ல் அவர் சப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் சப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின(நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).

தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.

1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "சப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் சப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980 சனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்-சப்பானிய மொழி உறவு பற்றி சப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.

ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை சப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்-சப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு சப்பான் திரும்பினார்.

தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் சப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் சப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது.

ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் சப்பான் என்.எச்.கே நிறுவனம் சப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.

தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்,தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் சப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே சப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம்.இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் சப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.

12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் சப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார்.சப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார்.இவையெல்லாம் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.

ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் சப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.

தமிழ்மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க இலக்கியங்கள் போலச் சப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் சப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

(எ.கா)

நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர

எனச் சொல் ஒற்றுமை உள்ளன.

சுசுமு ஓனோ அவர்கள் சப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் சப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் சப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.

1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது சப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் சப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 திசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் சப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் சப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.

தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர்.சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின.

இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.

சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் சப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு.

1999 இல் தமிழகம்,இலங்கை,மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் சப்பானுக்கு அழைத்துத் தமிழ் சப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில்பொற்கோ ஒருங்கிணைப்பாளர்.பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி,குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர்.இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் சப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் சப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் சப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.

தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.

நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், 18.01.2009


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 8:22 am

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி கண்ணன். மகிழ்ச்சி

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Aug 18, 2012 11:21 am

பயனுள்ள பகிர்வு. நன்றி!!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 18, 2012 6:42 pm

மகிழ்ச்சி கிடைப்பதற்கு அறிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நண்பரே மகிழ்ச்சி



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 6:58 pm

அருமையான புதிய தகவலுக்கு நன்றி கண்ணன்.

அதான் சூப்பர் ஸ்டார் படம் அங்க பிச்சிகிட்டு ஓடுது போல இருக்கு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக