புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_lcapகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_voting_barகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_lcapகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_voting_barகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_lcapகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_voting_barகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:31 am



நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக - தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

நெüடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!

ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, ""நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்''. என்கிறார். ""அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய "டமால்' சத்தம்''.

வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர். இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். ""ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.

ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். ""எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்'' என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது - இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.

ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.

""நான் வெளியேற வேண்டும் என்று போலீஸôர் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்'' என்கிறார் மட்சுமுரா.

அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. ""இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்'' என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

தினமணி



கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 14, 2012 12:13 pm

சிவா wrote:ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.
படிக்கும்போதே கண்ணீரை வரவைக்கிறது, இந்த மனிதரின் தியாகத்திற்கு கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்

சிவா wrote:மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.
வேதனையாக இருக்கிறது. கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 14, 2012 12:36 pm

ராஜா wrote: கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

ஒரு வித பயமாகதான் உள்ளது . இலங்கையில் தமிழ் மக்களை அழித்தது போல , தமிழ் நாட்டில் உள்ள மக்களை அணு உலை அழிக்க முயல்கிறாத மத்திய அரசு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 12:40 pm

இந்த நல்ல மனிதரின் நல்ல எண்ணத்திற்கு கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்



கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Uகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Dகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Aகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Yகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Aகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Sகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Uகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Dகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Hகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:41 pm

மனிதர்களுக்காக போராடவே தயங்கும் உலகில் இப்படியும் ஓர் அபூர்வ மனிதர் அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 12:53 pm

சிவா wrote:
மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.
இவர் ஆற்றும் தொண்டு அளவிடர்க்காரியது! சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 3:33 pm

சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 3:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote: கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

ஒரு வித பயமாகதான் உள்ளது . இலங்கையில் தமிழ் மக்களை அழித்தது போல , தமிழ் நாட்டில் உள்ள மக்களை அணு உலை அழிக்க முயல்கிறாத மத்திய அரசு ..
நினைக்கவே பயங்கரமாக உள்ளது. பயம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 3:52 pm

சோகம் சோகம் சோகம்

மட்சுமுரா - உண்மையான அர்ப்பணிப்பு

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Mar 14, 2012 5:48 pm

அந்த நல்ல மனிதரை கை கூப்பி :வணக்கம்: .....



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக