ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவான் - சினிமா விமர்சனம்

+2
அதி
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty அரவான் - சினிமா விமர்சனம்

Post by சிவா Sun Mar 11, 2012 3:59 pm

First topic message reminder :

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Aravan+Movie+Posters+%282011%29

தமிழ்த் திரையுலகில் “மயக்கம் என்ன” படத்திற்குப் பின்பு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் இதுதான். படத்தின் பட்ஜெட் ஒரு காரணமாகவும், இயக்குநர் வசந்தபாலனிடம் தங்களுக்காக படம் சொல்லிக் கேட்ட சில நடிகர்களின் காத்திருப்பை.. இன்னொரு காரணமாகவும் சொல்லலாம்..!

18-ம் நூற்றாண்டில் நகர்கிறது இக்கதை. சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலில் மையப்படும் 47 பக்கங்களைக் கொண்ட ஒரு கதையை எடுத்தாண்டிருக்கிறார் வசந்தபாலன். மனித குலத்தில் தவறும், சரியும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. திருடர்கள் இல்லாத சமூகமே கிடையாது. ஆனால் கள்வனாக வாழ்வதே வாழ்க்கை என்ற தீர்க்கதரிசனத்தோடு இருந்தவர்கள் உலகத்தின் எந்த மூலையிலும் இருந்திருப்பார்கள் போலும்..!

மூத்த குடி தமிழ்க் குடி என்று பெருமையாகச் சொன்னாலும், அதிலும் கள்ளம் உண்டு.. கள்வர் உண்டு.. கள்ளத்தனம் செய்திருந்தனர் என்பதையும் நாம் மிக நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "களவாமை" என்ற வார்த்தை சொல்லப்படாத தமிழ் இலக்கியம் உண்டா..? தொன்றுதொட்டு வந்த அந்த களவாடலை, ஒரு நுட்பமான கலையாகவும், அதனை வழிவழியாகத் தாங்கள் பின்பற்றப்பட வேண்டிய தொழிலாக கருதியும் செய்து வந்திருக்கின்றனர். இதன் நீட்சி முடிவுதான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம்..!

களவு என்பது பெரும் குற்றம் என்பதை அந்தப் பிரிவினர் என்றைக்கு உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய கதைகளை இப்போதும் நினைவு கூர்கிறது தமிழ் இலக்கியம்..! அந்த வரிசையில் இவர்களைப் பற்றிய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை திரை வெளிச்சமாக்கிய இயக்குனர் வசந்தபாலனுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள்..!

கள்வர்கள் மட்டுமே குடியிருக்கும் வேம்பூரின் பெரும் கள்வன் பசுபதி. கன்னம் வைத்துக் கொள்ளையடித்து கொண்டு வரும் நகைகளை விற்று ஈடாகக் கிடைக்கும் கோட்டை நெல்லை வைத்துதான் ஒட்டு மொத்த ஊருக்கும் ஜீவனம்..! மகாராணியின் வைர அட்டிகை திருட்டுக் கொடுக்கப்பட்டு அதை வேம்பூர்கார களவர்கள்தான் களவாடியிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டோடு தனது ஊர் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோபமாகும் பசுபதி, அந்த அதி அசுரத் திருடனை தான் கண்டறிந்து பிடித்து கொண்டு வந்து நிறுத்துவதாகவும், பதிலுக்கு 100 கோட்டை நெல்லை பரிசாக பெறவும் அரசுத் தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேடிச் செல்கிறான்.

திரைக்கதையில் மிகவும் கஷ்டப்படாமல் அசுரத் திருடன் ஆதியை மிகச் சர்வசாதாரணமாக பசுபதியுடன் சந்திக்க விடுகிறார் இயக்குனர். ஆதிதான் அந்தத் திருடன் என்பதையறிந்து அவனையும் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார் பசுபதி. சினிமாவிற்காக பசுபதியின் தங்கையுடன் ஒருதலைக் காதலுக்கு வழி வகுக்கிறார் ஆதி. ஒரு ஜல்லிக்கட்டு மோதலின்போது அக்கால வழக்கப்படியான "பலியாடு" என்கிற பெயரில் பதுங்கியிருந்ததாகச் சொல்லி ஆதி பகைவர்களிடம் பிடிபடுகிறார்..! பசுபதியால் அவரை மீட்க முடிந்ததா என்பதுதான் கதையா.. அல்லது ஆதி தானாகவே தப்பித்தாரா என்பதுதான் கதையா என்பதையெல்லாம் உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஆனால் இயக்குனரோ, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அதை மட்டும் அவர் செய்யவில்லை. இறுதியில் ஆதி மீதும், மரணத்தின் மீதும் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவொரு பரிதாப உணர்ச்சியும் ஏற்படவில்லை என்பதுதான் இந்தப் படம் காட்டும் பரிதாபம்..! மரண தண்டனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த இறுதி டைட்டில்கள் போடப்படாமலேயே இருந்திருந்தால், ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!

அக்காலத்திய தமிழின் வழக்கு முறையைத்தான் இப்படம் சுட்டிக் காட்டுகிறதா என்பதை நிரம்பவே நம்ப முடியவில்லை..! பசுபதி முதல் களவுத் தொழில் செய்யும் வீட்டில் படுத்திருக்கும் தம்பதியினரிடையே ஏற்படும் சிறு சச்சரவை எடுத்துக் காட்டும்போதே "ஐயையோ இதுலயுமா..?" என்றது மனது. மாமியார், மருமகள் சச்சரவு அப்போதும் இப்படித்தான் என்பதையும், கணவரை மனைவி உதைப்பதும், பதிலுக்கு மனைவியை கணவர் உதைப்பதுமாகக் காட்டியதில் நொடியில் தொலைந்து போனது இப்படம் பற்றிய எனது வரலாற்றுக் கனவு..!

பல இடங்களில் தற்காலத்திய தமிழ் புகுந்து விளையாடுகிறது. “தட்டுவாணிச் சிறுக்கி, எடுவட்ட பய புள்ளை, மொள்ளமாரி, முடிச்சவிக்கி..” என்றெல்லாம் தயவு தாட்சண்யமே இல்லாமல் கூவத்துடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழ் புழங்குவதைப் பார்த்தால், இப்படம் எந்த வரலாற்று நிகழ்வைச் சொல்கிறது என்றே சந்தேகம் வருகிறது. தமிழகத்தில் பேசப்படும் அனைத்துவகை தமிழையும் லேசுபாசாக தொட்டிருக்கிறார்கள்..!

திரைக்கதை ஓடும் ஓட்டத்தையும், காட்டும் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் வயதாகவில்லை என்பதை மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆன பின்பும், அதே முகப் பொலிவுடன், வித்தியாசமே காட்டாத மேக்கப்பில் ஆதியை எப்படி வைத்திருக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவரை மட்டுமல்ல.. படத்தின் கேரக்டர்கள் பலருமே அது போலவே காணப்படுவது கொஞ்சம் நெருடல்தான்..!

அத்தோடு மிக, மிக குறுகிய நேரத்தில் கதையை கொண்டு செல்வதற்காக திடீர் திரைக்கதைகளை அமைத்திருப்பது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. உதாரணமாக பசுபதியின் தங்கை ஆதியிடம் “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” என்று கேட்பது.. தன்ஷிகா, ஆதி தொடர்பான பேச்சுக்கள்... இன்னொரு பக்கம், இவைகளெல்லாம் உண்மையானதாகவே இருக்குமானால், தமிழ்ச் சமூகம் பெண்ணடிமைச் சமூகமாக இருந்ததே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிடலாம்..!

பசுபதியின் நிமிடத்திற்கொரு முறை மாறும் முகபாவங்கள், ஆதியின் சிக்ஸ் பேக் உடம்புடன் பேசும் தெனாவெட்டு.. கிராமத்துப் பெரிசுகள், "கொழுந்தியாள்களை பாதுகாக்கணும்யா.." என்ற சிங்கம்புலியின் காலம் கடந்தும் உணர்த்தும் உண்மைகள்.. அக்காலத்திய சில சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பலவற்றையும் பார்த்து, பார்த்து நெய்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

இயக்குனருக்கு ஏற்றாற்போல் நடிப்பில் வளைந்து கொடுத்திருக்கும் அத்தனை பேரையும் பாராட்டத்தான் வேண்டும்.. சின்ன வேடம் என்றாலும் குருநாதருக்காக தட்சணை செய்ய முன் வந்த பரத், அஞ்சலி இருவருக்கும் எனது நன்றிகள்..! இனி வரும்காலத்தில் இயக்குனர்கள் நன்றியுணர்விற்கு குறிப்பிட்டுச் சொல்ல இப்படம் உதவிகரமாக இருக்கும்..!

முற்பாதியில் கதை எதன் போக்கில் போகிறது என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் ஆதியின் புதிய கிளைக் கதை சுவாரஸ்யத்தைக் கொடுத்ததுதான் என்றாலும், இக்கதைதான் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கிளறிவிட்டது..

கரிகாலனுடனான சண்டையின்போது எருமைக் கூட்டத்தைக் கூட்டி வந்து பசுபதியை மீட்டுச் செல்லும் ஆதியின் சண்டை கிராபிக்ஸில் சின்னாபின்னமாகிவிட்டது. கொஞ்சம் செம்மைப்படுத்தி செதுக்கியிருக்கலாம்.. பணமா இல்லை..? எத்தனையோ செலவுகளை செய்துவிட்டு இதில் மட்டும் கஞ்சம் பிடித்தால் எப்படி..? காட்சியின் வேகத்தில் இது கண்டும் காணாமல் விடப்படும் என்று இயக்குநர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவர் ஏமாற்றமடைவார்..

ஆதி, பிடிபட்ட பின்பு இயேசுநாதரை போல் கொண்டு செல்லப்படுவதும், திருமாறனின் மனைவியும், மகனையும் அவ்விடத்தில் காட்டும் யுக்தியும் சுவாரசியமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையே..!

வியந்து பாராட்ட வேண்டும் என்றால், இயக்குனருக்கு பின்பு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தைத்தான்..! காணாடுகாத்தான் வீடுகளின் பிரமாண்டத்தையும், காடு, மலை, அருவி என்று அவர் படம் பிடித்திருப்பவைகள் அவர்களின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது..! ராஜாவின் மரணக் காட்சியில் அலைகளுடனேயே கேமிராவும் ஆடும் வித்தை அசத்தல்..! கொஞ்சமே வந்தாலும் கேரளத்து பேரழகி ஸ்வாதி மேனனின் விஸ்வரூபத்தை காட்டியதற்காக சித்தார்த்தின் கேமிராவுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

வரலாற்று நிகழ்வுகளுக்கேற்றாற் போன்று கலை இயக்கம் பயன்பட்டிருக்கிறது..! 18-ம் நூற்றாண்டுதானே என்பதால் கொஞ்சம், கொஞ்சம் மிச்சம், மீதி பிடித்து வைத்திருக்கிறார்கள். வீடுகள், பொருட்கள், கழி, குவளைகள் என்பதோடு நிறுத்திக் கொண்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு வைத்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.

ஏற்கெனவே எழுதப்பட்ட கதைதான் என்பதால் வெங்கடேசனின் வசனங்கள் கதையை காட்சிக்கு காட்சிக்கு நகர்த்தவே பயன்பட்டிருக்கிறது..! அனைவரும் நீள, நீளமான வசனங்களை தேவையே இல்லாத இடங்களில்கூட பயன்படுத்தியிருப்பதுதான் மிகுந்த சோர்வைத் தருகிறது. வசனங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை காட்சிப்படுத்துவதில் செலுத்தியிருக்கலாம்..! பரத்தை கொலை செய்தது யார் என்று திடீரென்று ஆதிக்கும், திருமாறனுக்கும் வரும் சந்தேகம் ஏன் முன்பே வரவில்லை என்று நமக்கே சந்தேகத்தை எழுப்புகிறது..! இதன் தொடர்ச்சியாய் துப்பறியும் படமாக இது உருமாறி, கடைசியில் தோல்வி கண்ட புலனாய்வுப் புலியாய் ஆதியைக் காட்டி முடித்திருத்திருப்பில் முடிந்திருக்கிறது..!

புதிய இசையமைப்பாளர். கார்த்திக். "ஊரு ஊரு என்னைப் பெத்த ஊரு", "உன்னைக் கொல்லப் போறேன்", "நிலா நிலா போகுதே" பாடல்களில் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து இசையைப் பின்னுக்குத் தள்ளி கேட்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் இசையமைப்பாளருக்கு..! ஜல்லிக் கட்டு காட்சியிலும், ஸ்வாதி மேனன் இடுப்பு ஒட்டியாணத்தை ஆதியின் இடுப்பில் வைத்து சோதனை செய்யும் காட்சியிலும் ரீரிக்கார்டிங்கில் கொஞ்சம் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம்..!

இயக்குனரின் இயக்கத்தை பற்றி நாம் சந்தேகப்பட வேண்டிய தேவையே இல்லை.. ஏற்கெனவே வெயிலிலும், அங்காடி தெருவிலும் அழுக வைத்து அனுப்பி வைத்தவர், இதில் லேசாக கண்ணைக் கசக்கக்கூட விடவில்லை என்பதுதான் உண்மை..!


கள்வர்கள் என்ற ஒரு வார்த்தையிலேயே இவனுகளுக்கெல்லாம் இப்படித்தான் சாவு வரும் என்ற போக்கிலேயே வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகம், இந்தப் படத்தையும் இப்படித்தான் பார்க்கப் போகிறதோ என்ற ஐயம் என் மனதில் எழுகிறது..!

பலவித கேள்விகள்.. சந்தேகங்கள் ஆயிரம் இருந்தாலும், தனக்கிருக்கும் பெயரைப் பயன்படுத்தி பக்கா கமர்ஷியல் கம்மர் கட் சாப்பிட்டு தன்னுடைய பேங்க் பேலன்ஸை ஏற்றிக் கொள்ள நினைக்காமல், மொழி, மாநிலம், இலக்கியம், தமிழ் என்று அனைத்திற்கும் ஒரு அடையாளக் குறியீட்டைச் செய்ய முன் வந்திருக்கும் வசந்தபாலனின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே..!

"பாலை" படத்திற்குப் பின் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய திரைப்படம் இது. "பாலை"யின் வறட்சியான பட்ஜெட்டிற்கு முன்னால் இப்படம் ஒரு பெரும் யானையாக நிமிர்ந்து நிற்கிறது..! அந்த வகையில் வசந்தபாலன் அதிர்ஷ்டக்காரர்தான்..!

அவசியம் பார்த்தே தீர வேண்டியது அரவான்..!

http://truetamilans.blogspot.com


அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Sun Mar 11, 2012 9:19 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:
எம்.ஜி.ஆர். பேரச் சொல்லி உங்கள காப்பாத்திருக்கேன்...
உங்களைன்னு எல்லாம் சொல்ல வேண்டாம்....உன்னைன்னே சொல்லிறுங்க....நீங்களே வயசானவர்....என்னை அதை விட தொண்டு கிழவியா யாராச்சும் நினைச்சிட போறாங்க சிரி

ஹலோ...சின்னப்புள்ளைய அழவெச்சுடாதீங்க...நா பாவம்...


அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 224747944

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Rஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Aஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Emptyஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Rஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by அதி Sun Mar 11, 2012 9:22 pm

ரா.ரா3275 wrote:
ஹலோ...சின்னப்புள்ளைய அழவெச்சுடாதீங்க...நா பாவம்...
சின்ன புள்ளைங்க அழுதா நீங்க மட்டும் இல்ல நானும் தான் பாவம் பார்ப்பேன்.ஆமா சின்ன புள்ளை யாரு இங்க? ஓ...என்னை சொன்னீங்களா? சரி சரி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by ரா.ரா3275 Sun Mar 11, 2012 9:29 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:
ஹலோ...சின்னப்புள்ளைய அழவெச்சுடாதீங்க...நா பாவம்...
சின்ன புள்ளைங்க அழுதா நீங்க மட்டும் இல்ல நானும் தான் பாவம் பார்ப்பேன்.ஆமா சின்ன புள்ளை யாரு இங்க? ஓ...என்னை சொன்னீங்களா? சரி சரி

இங்கே 'என்னை' என்பது என்னைக் குறிக்கும்...ஐ மீன் ரா.ராஜசேகரன் ஆகிய என்னை...
எனவே என்னை என்றால் எந்தப் பெண்ணையும் குறிக்காது இங்கு...


அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 224747944

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Rஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Aஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Emptyஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Rஅரவான் - சினிமா விமர்சனம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by அன்பு தளபதி Mon Mar 12, 2012 10:49 am

வெங்கடசனின் நாவல் குறித்த எஸ்ராவின் கருத்துக்களை நாம் படிக்க வேண்டியது அவசியம் மேலும் இது ஒரு சிறந்த திறப்படம் என்பதில் மாற்று கருத்து இல்லை, மவுன குருவிர்க்கு பின் அரவானை ரசித்தேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by றினா Mon Mar 12, 2012 11:08 am

வசந்த பாலனுக்கு ஒரு O


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அரவான் - சினிமா விமர்சனம் - Page 2 Empty Re: அரவான் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum