புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
171 Posts - 80%
heezulia
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
1 Post - 0%
prajai
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
1 Post - 0%
Pampu
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
336 Posts - 79%
heezulia
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_m10 ஈழத் தமிழருக்கு என்ன வழி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழருக்கு என்ன வழி?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 11, 2012 10:14 am

உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன.

உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது.

1990களில் உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000ஆம் ஆண்டுகளில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா,
தெற்கு சூடான் என்ற நாடுகள் தேசிய இன விடுதலைக்குச் சான்றாய் நின்றன. இன்றும் நடைபெறுகிற காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழம் போன்ற இவற்றுக்குள் கூர்மை பெற்று முன்னணியில் இருக்கும் போராட்டம் ஈழப் போராட்டம்.
தமிழீழம் சரியா, பிழையா என்ற விவாதத்தை வரலாறு கடந்து விட்டது. தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள அரசுடன் இனியொருபோதும் இணக்கப் போக்கு சாத்தியமில்லை.

இனப் படுகொலைகளை நடத்திய இடத்திலிருந்து இன விடுதலையின் அடுத்த நகர்வைத் தொடங்க வேண்டும். இது தொடர்பில்-
``வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல் இனப்படுகொலைக்கு ஆளான எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான்,அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை.

1948-இனஅழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும், உரிய இழப்பீடும் ஆகும்’’ என்று பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ளவேண்டும்.
(பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், உலக மனித உரிமைகள் அமைப்பின் (World Human Rights Organization) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்)
நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அறவழிப் பாதையில் இருக்கிறபோது உலகில் யாரும் கவனம் கொள்வதில்லை. ஆயுதப் போராட்ட வடிவெடுக்கையில் மாத்திரமே சர்வதேச கவனமும் தலையீடும் பெறுகிறது.

ஈழத்தமிழர் விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம் வரை கண்டு கொள்ளவில்லை. காந்தீய வழிப் போராட்டத்தை அங்கீகரித்து, அப்போதே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணும் முன்னெடுப்பை இந்தியா செய்திருக்க முடியும்.

1972லும் அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.
``இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவிட்டு, அதைக் கையாளுவதே இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது.

எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் பிரச்சனைகளை தனது நலனுக்குகந்த அளவில் ஓரளவு தீர்த்து வைப்பதும், தனது தலைமையை இலங்கை அரசை ஏற்க வைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.’’ என்பது எண்பதுகளின் மத்தியில் ஈழத்தில் சொல்லப்பட்ட ஒருகருத்தாகும்.

தான் விடுதலைபெற்ற கையோடு, மக்களுக்கான விடுதலை அரசியலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், நாடுகள்,எங்கெங்கு எழுச்சி பெறுகிறார்களோ அதற்குத் துணைசெய்வது என்ற நோக்கம் நேரு காலத்தில் குரல் அளவில் இருந்த ஆதரவும் பிற்காலத்தில் ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.

ஆனால் விடுதலை பெற்றதும், பிடல் காஸ்ட்ரோவின் தொடக்க கால கியூபா, போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆபிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்கு பொருளாதார, ஆயுத, மருத்துவ உதவிகள்செய்து துணை நின்றது. அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009ல் ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைக்கு ஆதவராய் தீர்மானத்தை முன்மொழிந்த கியூபாவுக்கும் இடையிலான வெளி 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இனக் கொலைக்குத் துணைபோன தலைகீழ் மாற்றமும்தான்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து கேடு தருகிற நிலைப்பாடுகளையே எடுத்துவந்துள்ளது. 1983 இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து, ஐ.நா.துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலைவர்கள் பலர் பேசினர். ஐ.நா.வி.ன் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத்,
’’இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவமுள்ள பிரச்சினைகள் பற்றி ஐ.நா.அவையில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி 1983 படுகொலை பற்றிப் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என்று கருதினார் போல.

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பது போல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்ததும், அதிலிருந்து இலங்கையை நீக்கம் செய்வதற்காக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் உள்நாட்டு நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதற்காக போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் அளித்தது இந்தியா.

இலங்கை அரசு இனவாதத்தை சாட்டாக்கி 1970 களில் மேலைத் தேசங்களுடன் கை கோர்த்து இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக்கியே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசு ஆக உருவாகிக் கொண்டிருந்த இந்தியா தனது நோக்குநிலையிலிருந்து தீர்வுக்கு வர வேண்டியிருந்தது. முரண்பாடுகள் இராணுவப் பரிமாணத்தினாலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக முறுகல்நிலை கொண்டன.

பலாத்காரத்தைத் தவிர வேறு வழியில் தீர்க்க முடியாதெனக் கருதி, முன்னர் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987ல் இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்கா முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாரில்லை.
இதுவரை காலமும் இருந்ததில் இருந்து சிறிய விட்டுக் கொடுப்பைச் செய்து பிரச்சினையை சமரசப்படுத்த அமெரிக்க தயாரானபோது, ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவும் அதனைப் புரிந்துகொண்டார். சமரசத் தீர்வை சாகசமான வார்த்தைகளில் அமெரிக்கா வரவேற்றது என்பது இங்கு கூர்மையாகக் கவனிக்கப்படவேண்டியது.

''இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற வார்த்தைதளில் வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கைப் பிரச்சினையில் குறைந்தபட்ச உடன்பாட்டுக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடி.கைக்குப் பின் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே இடம்பெற்ற ஒப்பந்தமானது, கைவிலங்கு உடைக்கப் புறப்பட்டவர்களுக்குக் கால் விலங்கும் மாட்டிய கதையாக ஆனதாக தமிழர்களால் சொல்லப்பட்டது.
பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம் வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டது. தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே என இதனை பிரபாகரன் வலியுறுத்தினார்.

அப்போது பிரபாகரகன் பக்கமாக நெருங்கி வந்து ராஜிவ் காந்தி காதோடு காது வைத்ததுபோல்`` இலங்கையின் சிங்கள தீவிர வாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்துவதற்குத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.ஆனால் நிரந்தர இணைப்புத்தான்’’ என்று கூறினார்.
ராஜிவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதிகளுக்கும்,போராளிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தார்கள். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜிவ் பின்னாளில் இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை. இப்போது கூட இந்தியத் தலைமைகள் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசுவதில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து ஒரு முதல்வரை நியமிக்க வேண்டியுள்ளது எனவும், மூன்று பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறும் இந்தியத் தூதராக அப்போதிருந்த தீட்சித் பிரபாகரனிடம் கேட்டுக் கொண்டார்.
''மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயர்தான் கொடுக்க முடியும் என்று பிரபாககரன் மறுப்புத் தெரிவித்தார்.`` மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவு செய்வோம்’’ என தீட்சித் உறுதியளிக்க புலிகள் அவ்வாறே செய்தார்கள். முதலாவது பெயராக கிழக்கு மாகாண மட்டக்களப்பைச் சேர்ந்த, அரசின் உயர்நிலை அதிகாரியாக இருந்த பத்மநாதன், மூன்றாவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர்கள் குறித்துத் தரப்பட்டன.

மூன்றாவதாக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானத்தையே ஜே.ஆர்.ஜெயவர்த்தானா முதல்வராக இராஜதந்திரமாகத் தேர்வு செய்தார். கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்படுத்த ஜே.ஆர்.செய்த திருவினையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இப்படியான நிகழ்வுகள் இந்தியா மீதான நம்பிக்கையின்மையை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தியது. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்று உணர்ந்தே இருந்தனர்.

இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை, அனைத்துப் போராளிக் குழுக்களும் விளங்கிக் கொண்டிருந்தனர். மறுத்தார்களில்லை. பிரச்னை என்னவென்றால் இந்தியாவின் ராஜதந்திரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஜே.ஆ.ரின் தந்திரமான சொற்களால் இழுபட்டுப் போய்விட்டனர்.
பிரச்சினை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துக்களில் கூறப்பட்டதற்கு மாறாக ஜே.ஆர். செய்துகொண்டு வந்த எல்லாவற்றையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தூதர் தீட்சித்
''நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தெரிவித்தார்’’

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தானவும், இராஜபக்ஸக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிடவேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இதுபோன்ற நம்பிக்கைத் துரோகங்களின் வரிசையான அடுக்கின் முடிவில்தான் ``இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணம் செய்த குரங்கின் கதியாகி விடும்’’என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இது இந்தியா பற்றிய அவருடைய,போhhளிகளினுடைய கசப்பானஅனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜிவைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் கால்வாசியை நண்பர்களாய் கருதப்பட்ட தமிழர்கள் மீது இந்தியா காட்டத் தயாராயில்லை. இறுதியாய் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழிப்பதன் மூலம், சிங்களரின் நேசத்துக்குரியோராய் மாறிவிடலாம் என்று நினைத்தார்கள் போல.

இப்போதும் தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியயெமன்பதும், ஈழத்தமிழர் வாழும் புவிப் பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து இந்தியத் தலைமைகள் நடப்பதாக இல்லை.
ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லையென்று காட்டி புலிகளை அழித்தாயிற்று. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை அரசு அதை நடைமுறைப்படுத்தாதபோது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 2012, சனவரி மாதம் இலங்கை போய் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஸ ஒத்துக்கொண்டுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு அந்தப்பக்கம் நகரவில்லை. ``அப்படியெல்லாம் நான் செய்துவிட முடியாது. நாடாளுமன்ற ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்த முடியும்’’ என்று ராஜபக்ஸ சொல்லிவிட்டார்.

இலங்கைக்குச் சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரி நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்காது, தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று மறுத்த ஒரு கன்னடர். அப்போதைய கன்னட முதலவர். அதனால் ராசபக்ஸ அமைத்த இலங்கை அரசுக்குச் சாதகமான `கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்க விசாரணைக் குழுவின்`அறிக்கையை எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்கிறார்.
புலிகள் அழிக்கப்பட்ட பின், இலங்கை அளித்த 13-வது சட்டத் திருத்தம் மற்றும் அதற்கு அப்பாலும் செல்வது என்ற பிரதான வாக்குறுதியை செயல்படுத்தாதது ஏன் என எஸ்.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்பவில்லை.அப்பால் செல்வது என்பதை விட பல காத தொலைவு பின்னால் செல்வது என்பதையே, ராசபக்ஸ மறுப்பு அறிக்கையால் காட்டி விட்டார்.

யதீந்திரா குறிப்பிடுவது போல் இந்திய சரணாகதி அரசியல் அல்ல தீர்வு. இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் வேறு வழியில்லை. ஆனால் இந்தியாவை எதிர்கொள்ள ஈழப் பிரதேசத்துக்குள்ளேயே ஒரு ஐக்கிய முன்னனி அமைத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதை புலிகள் உணரவில்லை.

இலங்கை இனவெறி அரசை எதிர்கொள்ள முதலில் இந்த முக்கிய முன்னணி தந்திரத்தை புலிகள் கையிலெடுத்திருக்க வேண்டும். புலிகள் இதில் அக்கறை செலுத்தவில்லை. தாமே ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயற்பட்டதால் எதிரிக்கு பிரித்தாளும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

''விடுதலைப்புலிகள் 1991-ல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு (ராஜிவ்கொலை) இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரிகோடாக அமைந்தது’’ என யதீந்திரா குறிப்பிடுகிறார். அது ஒரு வரலாற்றுத் தவறு . அந்தத் தவறு விடுதலைப் போருக்குப் பின்புலமாக இருந்த தமிழக மக்களைத் தனிமைப்படுத்திவிட்டது.

தேசப்பற்று என்று ஏற்றப்பட்டிருக்கிற மக்களின் உளவியலை இந்தியா தனக்கு நிரந்தரப் பிரிகோடாய் மாற்றிவிட்டது. ஆனால் ராஜிவ் கொலை தொடர்பான விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மு.புஷ்பராஜன்
''உண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அழுத்தம் கொடுத்தது. ராஜிவ் காந்தி கொலை,விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தானாக மடியில் விழுந்த கனி.

அக்கொலை நடைபெற்றிருக்காவிடினும் இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும். (மு.புஷ்பராசன் வாழ்புலம் இழந்த துயர்)
இந்த பின்புலத்தை ஏற்றுக்கொள்வதில் யதீந்திரா இடறுகிறார். மாறாக வேறொரு எதிர் இடத்துக்கு. ``தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல் போக்கில் இடம்பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக் கொள்ளாமையின் விளைவுகள்தாம்’’ என்று நியாயப்படுத்தும் புள்ளியில் போய் நிற்கிறார்.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 11, 2012 10:15 am

இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விடுதலைப் புலிகள் புரிந்து வைத்திருந்தார்கள். போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது, பின்னர் திம்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் போனது, அரட்டி,மிரட்டி விடுதலைப் புலிகளையும் ஒப்புக் கொள்ள வைத்து, 1987ல் ஈழத்தின் மீது இந்தியப் படையெடுப்பு வரை இந்தியா எந்த இடத்தை தகவமைப்பதற்கான முயற்சியிலிருக்கிறது போன்ற தெளிவுகளை அரசியல் ஆய்வாளர்களும் எடுத்துத் தந்திருந்தார்கள்.

யுத்தநிறுத்த உடன்பாடானது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கே நன்மையளித்தது என நோர்வே அறிக்கை விவரிப்பது உண்மைக்குப் புறம்பானது. ஆனால் `அறிக்கை விபரித்திருக்கும் மேற்படி விடயங்கள் அனைத்தும் பொதுவாக ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மைகள் நார்வே இயலாமை, கையாலாகத்தனம் என்பவைகளை மறைத்துச் சொல்லப்பட்டதாக இருக்கிறது என்பது தான் உண்மை.

''இன்னும் ஆழமாகப் பார்ப்போமாயின் யுத்த நிறுத்த காலத்தில தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக் கொண்டு மீண்டும் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவது பிரபாகரனின் திட்டமாக இருந்தது’’ என்கிற நார்வே அறிக்கையின் பகுதி யதார்த்த நிலைமைகளிலிருந்து, நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டதாக இல்லை. புரிந்துணர்வு காலத்தில் செயல்கள் எதிர்மாறாகவே இருந்தன.

இலங்கை தனது இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க விடுதலைப் புலிகள் இயல்பான வாழ் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மிகக் குறைந்த போராளிகளே இருந்தனர். அங்கங்கே நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டிருந்த போராளிகள் தவிர களத்தில் நிற்பவர்கள் குறைவானவர்களே.

விடுதலைப் புலிகள் மக்களுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தாலும் அது போதுமானவையாக இல்லை. வெகுமக்கள் திரள் நடவடிக்கைகளாக உருக்கொள்ளவில்லை. தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கும் தமது எல்லைகளுக்கு அப்பாலுமுள்ள மக்களுக்குமான சனநாயக வெளியாக மாற்றித் தரப்படவில்லை.

2011 செப்டம்பர் 11, உலக வரலாற்று அரங்கில் ஒரு மோசமான நாள்.அது எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க புஷ் தனது அரசியல் இருப்புக்காக நடத்திய நிகழ்வுதான் செப்டம்பர் 11 என்றாலும் அது வெற்றிகரமான அரசியல் நாடகமாகவே நடந்தது.
பயங்கரவாதம் என்ற அளவுகோலைக் கையிலெடுத்து ஊடகங்களையும் இராணுவ வல்லமையையும் தன் கையில் கொண்டுள்ள அமெரிக்கா வழியில் உலக நாடுகள் நடந்தன. தத்தமது நாட்டில் பயங்கரவாத அரசை இயக்கிக் கொண்டிருந்த நாடுகளுக்கு இது பெருவாய்ப்பாக மாறியது. விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் போன்றவைகளை பயங்கரவாதமாக சித்தரித்தனர். கூட்டமாக கூட்டமாய்க் கொல்லும் கொலைக்களத்தை உருவாக்கி நடத்த ஏதுவாயிற்று.

பயங்கரவாத ஒழிப்பு என்ற முழக்கத்தினடியாக உலகை வேறொரு திசையில் வல்லரசுகள் நகர்த்திக் கொண்டிருந்த , மாறிய சூழலை விடுதலைப் புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. கணக்கில் கொண்டிருப்பார்களோயனால் இராணுவ வல்லமையைக் பெருக்குவதற்காக கடைசிவரை காத்திருந்து மோசம் நடந்திருக்க வாய்ப்பில்ல

நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு பற்றி (1997-2009 வரை) அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் சமாதான முன்னெடுப்பு என்பது முதலில் நோர்வேயின் முயற்சி அல்ல. அதை முன்தள்ளுவதில் அமெரிக்கா போன்ற மேற்குலகம், இந்தியா,சீனா,ஜப்பான போன்ற ஆசிய உலகம் அவரவர் விருப்ப அடிப்படையில் பங்காற்றியுள்ளனர். ஈழத்தில் சர்வதேச சுற்றிவளைப்பு என இதைக்குறிப்பிடலாம்.

நோர்வே என்பது சர்வதேச உலகத்தால் பின்னிருந்து உள்நுழைக்கப்பட்ட கருவி. இதை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை நம்பவில்லை.
அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நோர்வே நடுநிலையாகக்கூட இல்லை. அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துக்களில் முக்கியமான ஒன்று தமிழர் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இலங்கையின் இராணுவ அகற்றல்களும், தமிழர் மீள்குடியேற்றங்களையும் பற்றியது. இவைபற்றி பலமுறை ஆதாரங்களுடன் அளித்தும் நோர்வேயின் நடவடிக்கை எதுவும் இல்லை. நோர்வே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதற்கு எதிர்மாறாகவே நிகழ்வுகள் இருந்தன.

2002 சனவரியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. 2002 அக்டோர் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். முடிந்து திரும்புகையில் கிளிநொச்சியில் பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடகியிருந்தது. அச்சந்திப்பின்போது அவரிடம் கேட்டோம்.

''அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நோர்வேயின் முயற்சிகளை நம்புகிறீர்களா’’? என்ற எங்களின் கேள்விக்கு உலக அரசியலை அவதானித்துக் கொண்டு வருகிறோம் என்பதிலிருந்து பெற்ற நிதானமாக அவருடைய பதில் இருந்தது. உலக ஆதிக்கப் போட்டிகள் அனைத்தையும் உள்நுழைந்து பார்க்கிற தீர்க்கத்துடன் பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்.
''நாங்கள் நோர்வேயை நம்பவில்லை. அமெரிக்காவின் குரூர முகம் இஸ்ரேல் , அமெரிக்காவின் மென்மையான முகம் நோர்வே .இதை நாங்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம்.’’

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தி யதீந்திராவுக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய செய்திதான்.
ஆனால் நார்வே அறிக்கையை நடுநிலையான எந்தச் சார்புமற்ற ஒன்று என யதீந்திரா கருதினார், நாம் செய்ய ஒன்றுமில்லை. ஒவ்வொரு அறிக்கையின் நோக்கமும், சாராம்சத்தில் வெளிப்படும் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே அமைகிறது.
ஐ.நா.விசாரணைக் குழுவின் அறிக்கை போன்றது அல்ல நோர்வே அறிக்கை. ஐ.நா அறிக்கை இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தாலும் இன்னும் அழிந்தொழிந்து போகாமல் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிற இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறும் கடமை உண்டென அந்த அறிக்கை சுட்டுகிறது.

நோர்வே அறிக்கையால் வழி நடத்தப்படுகிற யதீந்திரா போன்றவர்கள் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நோர்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இந்தியா புலிகளை அழித்ததா என்பதல்ல உண்மை. அது ஈழத்தின் மக்களை அழித்தது என்பது உண்மை.
''போரின் இறுதி நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செறிந்திருந்த போதும் ,மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை ரோ அமைப்பு சரியாக இனங்காட்டியருந்தபோதும், முள்ளிவாய்க்காலுக்குள் போராற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் செறிந்திருந்த பகுதிக்குள் இறுதி வலிந்த தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தை முன்னெடுக்குமாறு எம்.கே.நாராயணனும் சிவசங்கரமேனனும் அறிவுறுத்தினர்.

பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புக்களை குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாமற் செய்ய வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையினையும் பொது மக்களையும் வெளியேற்றுவதற்கு வழி செய்து விடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளி வாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை’’
ரோ-உளவு அமைப்பில் பணியாற்றிய முக்கிய அதிகாரியான இந்த சுப்பிரமணியம் தொடர்ந்து சொல்வார் `` சோனியாவின் அதிகாரம் பெற்ற முகவர்களின் மறைமுகமான கையாளாகவே கோத்தபய அப்போது செயற்பட்டிருக்கிறார்.

இந்த கொலைகளுக்கான தனிப் பொறுப்பினை கோத்தபய மீது மட்டும் சுமத்தமுடியாது. அவ்வாற சுமத்த முயன்ற டில்லியின் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபய கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவினைக் கையிலெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார்.

இது டில்லியின் வாயைஅடைத்தது. இந்தியா இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்கா அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக்காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரை தொடர்நது முன்னெடுப்பது தவிர வேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாய் அவதானித்து, எப்படிக் கையாளுவது என்ற ராசதந்திரத்துடன் நகர வேண்டும்.

ஈழத் தமிழர் ,புலம்பெயர் தமிழர், தாயகத் தமிழர் ஆகிய மூன்று தளங்களில் ஒருங்கிணந்த செயல்பாடுகள்தாம் விடிவுக்கு வழி. ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு. ஒன்றே போல்வன அல்ல என்பதை மட்டும் குறித்துக் கொள்ளுதல் நல்லது. அதே போல் மற்றொன்றையும் குறித்துக் கொள்வோம். மூன்று தமிழரின். கடமையும் இந்திய சரணாகதி அரசியல் அல்ல.

யாழ்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 11, 2012 10:22 am

பதிவுக்கு நன்றி புரட்சித் தம்பி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக