ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலி (கதை)

+6
இரா.பகவதி
யினியவன்
றினா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிளேடு பக்கிரி
மகா பிரபு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூலி (கதை) - Page 2 Empty கூலி (கதை)

Post by மகா பிரபு Sat 10 Mar 2012 - 13:47

First topic message reminder :

கூலி (கதை) - Page 2 E_1331178778

வெள்ளிமலை ஜமீன்தார் வீட்டுப் பொற்கொல்லன் வாசு. அவனது பாட்டனார், முப்பாட்டனர் காலத்திலிருந்து அக்குடும்பத்தவர் ஜமீன்தார் வீட்டு நகைகளையும், மற்ற தங்கப் பாத்திரங்களையும் செய்து கொடுத்து வந்தனர்.
வாசுவின் மகன் சசிகுமார் அவன் தன் தந்தை செய்யும் தொழிலைக் கற்காமல், ஊர் சுற்றி வந்தான். உடல் வளைந்து வேலை செய்வது என்றால் அவனுக்கு அது எட்டிக் காயாக இருந்தது.
வாசு இறந்தபிறகு சசிகுமார் வேலைக்கு செல்லாமல், தன் முன்னோர் வைத்துவிட்டுப் போன சொத்தின் வருமானத்தில் வாழ்ந்தான்.

ஒருநாள் ஜமீன்தார் அழைத்து வரச் சொன்னதாக சசியிடம் ஒரு சேவகன் வந்து கூறினான். அவனும் சென்றான்.
ஜமீன்தார் அவனிடம் சில நகைகள் செய்ய வேண்டும் எனக் கூறவே, தன் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆறியதும், செய்து தருவதாக, சாக்கு சொல்லி விட்டு வந்தான்.

அதைக்கேட்ட சசியின் தாய் தன்மகனிடம், ""சசிகுமார்! ஜமீன்தார் வீட்டு வேலையை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை. நீ எப்படியாவது அவர் சொல்லும் நகைகளை உன் தந்தையிடம் வேலை செய்தவர்களை வைத்துச் செய். அவர்களுக்கு கூலி கொடுத்து விட்டு பாக்கி பணத்தை நாம் வைத்துக் கொள்ளலாம்,'' என்றாள்.
இரண்டு நாள் கழித்து சசிகுமார் ஜமீன்தாரரைக் கண்டு அவர் கூறும் நகைகளைச் செய்து கொடுப்பதாகக் கூறினான்.

அவரும் என்னென்ன நகைகள் செய்ய வேண்டும் எனக்கூறி அவற்றிற்கு எவ்வளவு தங்கமும் ரத்தினக் கற்களும் தேவை எனச் சொல்லச் சொன்னார்.

சசி கணக்குப்போட்டு மறுநாள் காலை விவரமாக சொல்வதாக கூறிச் சென்றான்.
சசி தன் தந்தையிடம் வேலை செய்தவர்களை அழைத்து ஜமீன்தாரர் சொன்ன நகைகளை செய்து கொடுக்குமாறும், அதற்கு அவர்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் கூறினான். பிறகு அந்த நகைகளைச் செய்ய ஆகும் தங்கம், நவரத்தினங்கள் முதலியவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

மறுநாள் காலை ஜமீன்தாரைக் கண்டு விவரங்களைக் கூறி, அவரிடமிருந்து தங்கத்தையும், ரத்தினங்களையும் வாங்கிக் கொண்டான். அவரிடம் முன்பணம் ஏதும் வாங்கவில்லை. மேலும், நகைகளுக்கு மதிப்பிட்டதற்கு மேலே கொஞ்சம் தங்கம் போட வேண்டி வந்தது. அதையும் சசிகுமார் தன் கையிலிருந்தே போட்டான். அவர்களும் நகைகளை செய்து கொடுத்தனர்.

சசி நகைகளை எடுத்துப் போய் ஜமீன்தாரரிடம் கொடுத்தான். ஜமீன்தாரரும் அவற்றின் வேலைப்பாட்டைப் பாராட்டி பத்து வராகன்களை சசிகுமாருக்குக் கொடுத்தார்.

சசி திடுக்கிட்டான்.
ஏனெனில், கூலியாகவும் அதிகத் தங்கம் போட்ட வகையிலும் அவன் நூறு வராகன்கள் வரை செலவு செய்திருந்தான்.

ஜமீன்தாரும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து மனதிற்குள் சத்தோஷப்பட்டார்.
""இதோ பார். இன்னும் சில நகைகளைச் செய்ய வேண்டும். இவற்றை நீ ஐந்து நாட்களில் செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார் ஜமீன்தார்.

ஜமீன்தாரர் தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொண்டு வரச் சொல்லி, அவற்றை சசியிடம் கொடுத்து, ""இதற்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று உன்னை மதிப்பிடச் சொல்லி உனக்கு சிரமம் கொடுக்காமல் நானே கணக்கிட்டு விட்டேன்,'' என்றார் சிரித்தவாறே.

சசி முன்போலவே கூலியாட்களைக் கொண்டு நகைகளைச் செய்து ஐந்து நாட்களுக்குள் ஜமீன்தாரரிடம் கொண்டு போய்க் கொடுத்தான். அதற்கு அவனுடைய பணம் நூற்று ஐம்பது வராகன்கள் செலவாயிற்று. ஆனால், ஜமீன்தாரர் கூலியாகக் கொடுத்ததோ பதினைந்து வராகன்கள் மட்டுமே! அடுத்த சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஜமீன்தாரர் சசியை வரவழைத்து, மேலும், சில நகைகளைச் செய்யச் சொல்லி அதற்கான தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொடுத்தார்.

சசியும் அவற்றை வாங்கிக் கொண்டு சோகத்துடன் வீட்டிற்குப் போனான். அவன் தன் தாயாரிடம், ""இப்போது என்னம்மா செய்வது? ஒவ்வொரு தடவையும் நான் வேலைக்காரர்களுக்கு கூலி கொடுத்து நஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதா?'' என்றான்.

""வேண்டாம். கடந்த இருமுறைகளில் அந்த வேலையாட்களுடன் உட்கார்ந்து அவர்கள் நகைகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதை நன்கு கவனித்து வந்திருக்கிறாய். அதனால் நீயே யாருடைய உதவியும் இல்லாமல் இந்த நகைகளைச் செய். உன்னால் முடியும்,'' என்றாள்.

சசியும் தன் தாய் சொல்வது சரி எனத் தோன்றவே, அவனே ஜமீன்தாரரின் நகைகளைச் செய்யலானான். இரவும், பகலுமாகச் சிரத்தையுடன் அவற்றைச் செய்து முடித்தான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஜமீன்தாரரிடம் கொடுக்கவே, அவரும் அவனது வேலைத் திறனைப் பாராட்டிவிட்டு இரண்டு வராகன்களைக் கூலியாகக் கொடுத்தார்.

அதைக் கண்ட சசிக்கு கோபம் கோபமாய் வந்தது.
""ஐயா! தங்களுக்கு உழைப்பின் மதிப்பே கொஞ்சமும் தெரியவில்லை. இந்த நகைகளைச் செய்ய நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? இனிமேல் இம்மாதிரிக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய இயலாது. என்னை விட்டுவிடுங்கள். வேறு எங்காவது போய் இந்தத் தொழிலை செய்து அதற்கு உரிய கூலியை பெற்று சுகமாக வாழ்கிறேன்,'' என்றான் படபடப்பாக.

""ஓ அப்படியானால் நீயே இந்த நகைகளை உன் கைப்படச் செய்ததாகச் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.
அது கேட்டு சசியும் ஆச்சரியத்துடன் ஜமீன்தாரைப் பார்த்தான்.
அவர் சசியை தன் பக்கம் வரச்சொல்லி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, ""சபாஷ்! கடந்த இரண்டு தடவைகளில் நான் கொடுத்த கூலி குறைவானது என்று கூறவில்லை. வேறு யாரையோ செய்யச் சொன்னாய். அதனால் அப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரியவில்லை. நான் கொடுத்ததையும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டு போனாய். ஆனால், இந்தத் தடவை நான் உனக்கு மிகக் குறைந்த கூலி கொடுத்தபோது நீ உழைப்பின் மதிப்பு பற்றிப் பேசியதால் இந்த நகைகளை நீயே உன் கைப்பட செய்திருக்கிறாய் எனத் தெரிந்துக் கொண்டேன். நீ இவ்வளவு நாட்களாக உன் தொழிலைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்தது பற்றி நான் கேள்விப் பட்டுதான் இப்படிச் செய்தேன். இப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரிந்து விட்டது. நீ வேறு எங்கும் போக வேண்டாம். இங்கேயே அக்கரையுடன் உன் தொழிலைச் செய்து வா,'' என்று அறிவுரை கூறி அவனுக்கு ஆயிரம் வராகன்களை கொடுத்தார்.

உழைப்பின் மதிப்பை அறிய செய்த ஜமீன்தாரை வணங்கி அன்றுடன் திருந்தினான்.
***



சிறுவர்மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


கூலி (கதை) - Page 2 Empty Re: கூலி (கதை)

Post by ரா.ரா3275 Sat 10 Mar 2012 - 22:56

இந்தக் கதை இப்போதைய காலகட்டத்திற்கு மிக அவசியமானது...
நல்ல பதிவு-பகிர்வு...நன்றி பிரபு...


கூலி (கதை) - Page 2 224747944

கூலி (கதை) - Page 2 Rகூலி (கதை) - Page 2 Aகூலி (கதை) - Page 2 Emptyகூலி (கதை) - Page 2 Rகூலி (கதை) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கூலி (கதை) - Page 2 Empty Re: கூலி (கதை)

Post by kalidasan காளிதாசன் Sun 11 Mar 2012 - 0:40

ஜோரா கீது னா
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

கூலி (கதை) - Page 2 Empty Re: கூலி (கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum