புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
100 Posts - 48%
heezulia
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
7 Posts - 3%
prajai
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 1%
sanji
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
227 Posts - 51%
heezulia
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
28 Posts - 6%
mohamed nizamudeen
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
18 Posts - 4%
prajai
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
5 Posts - 1%
Barushree
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10மாற்றத்தின் அறிகுறி...! Poll_m10மாற்றத்தின் அறிகுறி...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றத்தின் அறிகுறி...!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 07, 2012 12:17 pm

முடிவுகள் வெளியாகி இருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம், எதிர்பார்ப்பு முலாயமா, மாயாவதியா என்பதாக இல்லாமல், ராகுல் காந்தியால் காங்கிரஸூக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா இல்லையா என்பதாக இருந்ததுதான். காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி வர்ணித்ததுபோல ஒருவேளை ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அது அகில இந்திய அளவில் காங்கிரஸூக்குப் புத்துணர்ச்சி அளித்து மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலி இருக்கக் கூடும்.

குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம்.

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன.

கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு!

பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான்.

பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை.

மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது.

முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 07, 2012 12:17 pm

காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ வாக்களிப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு மீண்டும் மாயாவதி ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் குறியாக இருந்தனர் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வித்தியாசமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததும் இன்னொரு காரணம். ராகுல் காந்தியைப்போல அந்நியத்தனம் இல்லாமல் மக்களில் ஒருவராகத் தெரிந்த அந்த இளைஞர் சமாஜவாதி கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட உதவினார் என்றும் கூற வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது.

இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும்.

மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!

நன்றி
தலையங்கம் தினமணி..!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 12:45 pm

தொங்கு சட்ட மன்றம் இல்லாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே.
அடிக்கடி குதிரை பேரங்களிலேயே ஆட்சி காலம் முடிஞ்சிடும்.

மெல்ல சாகிறதா காங்கிரஸ் அல்லது செத்து விட்டதா?




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 07, 2012 2:48 pm

சரியான கட்டுரை ராகுல் காந்தி என்ற மாயை உடைந்து விட்டது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 5:43 pm

பாவம் காங்கிரஸ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 6:45 pm

மாற்றத்தின் அறிகுறி...! WR_771484

தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 6:47 pm

மாற்றத்தின் அறிகுறி...! Mayavathi

நக்கீரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக