புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_c10அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_m10அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_c10 
32 Posts - 42%
heezulia

Manimegala

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_c10அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_m10அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகளின் அலட்சியமே உயிர் பலிக்கு காரணம் : விபத்துக்குள்ளான படகு டிரைவர் பேட்டி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 02, 2009 7:20 pm

படகு சரியில்லை என பலமுறை தெரிவித்தும், அதை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்ததே இத்தனை உயிர்பலிகள் ஏற்பட காரணம் என, விபத்துக்குள்ளான படகை இயக்கி விக்டர்சாமுவேல் தெரிவித்தார்.

தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் கூறுகையில்; தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவராக ஐந்து மாதமாக பணிபுரிந்து வருகிறேன். விபத்துக்குள்ளான படகை தொடர்ந்து மூன்று நாட்களாக இயக்கி வந்தேன். மேல்தளத்தில் மற்றொரு ஊழியர் இருந்தார். மனக்காவலை என்ற இடத்தில் வந்த போது காட்டு யானைகள் நீர் பருகுவதை பார்க்க பயணிகள் படகின் ஒரு பக்கமாக திரண்டனர். இதனால் படகின் வேகத்தை முழுமையாக குறைத்தேன். பைபர் படகு என்பதால் பாரம் தாங்காமல் வலது பக்கமாக சரியத் துவங்கியது.எனது அறை கண்ணாடி கூண்டு போன்றது என்பதால் என்னால் வெளியே வர முடியவில்லை. தண்ணீருக்குள் படகுடன் மூழ்கினோம். இத்தோடு கதை முடிந்தது என்று நினைத்த நான், தப்பித்து வெளியே வந்தேன். அப்போது பலர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் வெளிநாட்டினர் சென்ற படகை கைதட்டி அழைத்தேன். அவர்களும், நானும் சேர்ந்து 15 பேர் வரை காப்பாற்றினோம்.புதிதாக வாங்கப்பட்ட இந்த படகு பல நாட்களாக இயக்கப்படாமல் இருந்தது. பலமுறை இந்த படகு கவிழ்வது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதால் படகு சரி இல்லை என டிரைவர்கள் அனைவரும் பலமுறை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் இதை அலட்சியம் செய்தனர். இதுவே இத்தனை உயிர்ப்பலிக்கு காரணம். மேலும் பைபர் படகுகள் இது போன்ற நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதல்ல. இதில் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் பேலன்ஸ் கிடைப்பதில்லை என்றார்.

குடும்பம், குடும்பமாக தண்ணீரில் மூழ்கி பலியான பரிதாபம் : தேக்கடி ஏரி படகு விபத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாயினர்.கும்பகோணம் பழனிச்சாமி நகரில் வசிப்பவர் சேகர்(45); கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி சுகந்தி(40); திருச்சேறை உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு குருதீப் (14) பிரீத்தி (13) ஆதித்யன் (11) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.கும்பகோணம் காமராஜ் நகர் நீலத்தநல்லூர் ரோட்டில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுர்ஜித்(42); இவரது மனைவி சுசீலா (35). இவர்களது மகன் ரோஹித் (14). சேகரின் நண்பர் சுர்ஜித்.இரு குடும்பத்தினரும், நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா காரில் புறப்பட்டு மதுரை சென்றனர். முதலில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டனர். பின் தேக்கடி சென்ற இவர்கள், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் படகில் ஏறினர். படகு மூழ்கியதில், சேகரின் நண்பர் சுர்ஜித், சுசீலா, ரோஹித் ஆகியோர் உடல் நேற்று மாலை, பிணமாக மீட்கப்பட்டன.சேகரின் குழந்தைகள் பிரீத்தி, ஆதித்யன் உடல்கள், குமுளி மருத்துவமனையில் உள்ளன. உயிர் தப்பிய சுகந்தியும், மகன் குருதீப்பும் நேற்று கும்பகோணம் வந்தனர்.

விபத்து குறித்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ஆசிரியை சுகந்தி கூறுகையில், ""நாங்கள் சந்தோஷமாக படகு சவாரி செய்து கொண்டிருந்தோம். திடீரென படகு கவிழ்ந்தது. என் ஒரு மகனை கையில் பிடித்திருந்தேன். மகள் அருகில் உட்கார்ந்திருந்தாள். அவர்கள் இருவரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்களுடன் வந்திருந்த மூவரையும் காணவில்லை,'' என்று கதறி அழுதார்.

விபத்தில் உயிர் தப்பிய சிறுவன் குருதீப் கூறுகையில், ""படகு சென்று கொண்டிருந்த போது, திடீரென கவிழ்ந்தது. ஜன்னல் வழியே நான் வெளியே வந்தேன். கவிழ்ந்திருந்த படகின் மேல் ஏறி நின்றேன். அப்போது அங்கு வந்த மற்றொரு படகில் இருந்தவர்கள் என்னை கரை சேர்த்தனர்,'' என்று கதறி அழுதான்.

இதே போல், கோவை மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 9 பேர் தேக்கடி படகு விபத்தில் பலியாகியுள்ளனர். கோவை, சுந்தராபுரம், குறிச்சி, வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(41); கலெக்டர் ஆபீஸ் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சீனியர் கிளார்க்காக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுசுயா(32); குறிச்சி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ராகுல்; தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தான். மகள் ஸ்வாதிகா(3) இவர்களும், அனுசுயாவின் சகோதரர் பல்லடத்தைச் சேர்ந்த பஞ்சலிங்கம் குடும்பத்தினரும் தேக்கடிக்கு சுற்றுலா சென்றிரு ந்தனர். படகு கவிழ்ந்து, ஜெயப்பிரகாஷ் குடும்பத்தில் அனைவருமே நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். பஞ்சலிங்கம் குடும்பத்தில் அவரது மனைவி சுதா, மகள்கள் இலக்கியா, பிரகதீஷ்வரி பலியாகினர்.

அனுசுயாவின் மற்றொரு சகோதரரான சென்னையைச் சேர்ந்த ரவியின் குழந்தைகள் தாரணி, சந்தியாவும் பலியாகிவிட்டனர். இவர்களது தாயார் சரஸ்வதி மட்டும் உயிர்தப்பினார். படகு சவாரிக்கு செல்ல விரும்பாத பஞ்சலிங்கம், ஏரிக்கரையின் ஓரத்தில் வேடிக்கை பார்த்தபடி நின்றுள்ளார். அப்போது, சற்று தூரத்தில் தள்ளாடிய படகு நீரில் கவிழ்ந்து மூழ்கியது.கண்ணெதிரே குடும்பத்தினர் நீரில் மூழ்குவதை கண்ட பஞ்சலிங்கம் கதறி அழுதபடி அபயக்குரல் எழுப்பியுள்ளார். அருகிலிருந்தோர் ஓடி வந்து, நீரில் மூழ்கிய பலரை மீட்டுள்ளனர். எனினும், பஞ்சலிங்கத்தின் மனைவி, இரு மகள்கள் பிணமாகவே மீட்கப் பட்டனர்.குறிச்சியைச் சேர்ந்த டெலி போன் ஊழியர் ஜெயப்பிரகாஷ் குடும்பம் பலியானதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஜெயப்பிரகாஷ் வீட்டு முன் கூட்டம் கூடியது. சோகம் தாளாமல் உறவினர்கள் பலரும் கதறி அழுதனர்.

படகு விபத்தில் பலியான பெரியகுளம் குழந்தைகள் : பெரியகுளத்திலிருந்து தேக்கடிக்கு சுற்றுலா சென்ற, ஒரே குடும்பத்தைச் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவத்தினால் பெரியகுளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பெரியகுளம் வடகரை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (40). சென்னையில் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (34). மகள்கள் தாரணி (10), சந்தியா (8) இருவரும் பெரியகுளம் சித்தார்த்தா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஐந்து மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். ரவிச்சந்திரனின் அண்ணன் கோவை பல்லடத்தைச் சேர்ந்த பஞ்சலிங்கம். இவர், தனது மனைவி சுதா, மகள்கள் இலக்கியா (10), பிரகதீஸ்வரி (7) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த தங்கை அனுசுயா, கணவர் ஜெயப்பிரகாஷ், மகன் ராகுல் (8), மகள் சுவாதீகா (3) ஆகியோருடன் காலாண்டு தேர்வு விடுமுறைக்காக பெரியகுளம் வந்துள்ளனர்.

குடும்பத்துடன் அனைவரும் தேக்கடிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். ரவிச்சந்திரன் அவசரவேலையாக சென்னை சென்றதால், ரவிச்சந்திரனை தவிர 11 பேர் சுமோ காரில் தேக்கடிக்கு நேற்று முன்தினம் சென்றனர்.பஞ்சலிங்கம் படகு சவாரிக்கு செல்லாமல் கரையிலேயே இருந்துகொண்டார். மற்றவர்கள் படகில் சென்றனர். படகு கவிழ்ந்ததில் சரஸ்வதியை தவிர ஒன்பது பேர் பலியாயினர். பெரியகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இறந்தவர்களின் உடலை பல்லடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

டில்லியைச் சேர்ந்த 11 பேர்: விபத்தில் இறந்தவர்களில் 11 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. டில்லி, பச்சிம் விகார் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர், விடுமுறையை கொண்டாடுவதற்காக, தேக்கடிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பத்து பேரில் ஆறு பேர் படகு விபத்தில் இறந்து விட்டனர். டில்லியில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் பிரதீப் ஜெயின், அவரது மனைவி சந்தியா, மகள் சுருதி ஆகியோர் பலியாகி விட்டனர்.சுருதியின் கணவர் பாலாதூத்தும், ஒன்பது வயது குழந்தை நிதியும் உயிர் பிழைத்தனர். இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விமலா ஜெயின், சங்கீதா சர்மா, பர்த்தா சர்மா ஆகியோரும் இதில் உயிரிழந்து விட்டனர். இறந்த ஆறு பேரின் உடல்களை நிதி தான், அடையாளம் காட்டினார்.இந்த ஆறு பேரை தவிர, டில்லியைச் சேர்ந்த அருண்குமார், அவரது மகள் அல்கா ஆகியோரும், மேற்கு டில்லி ஜானக்புரியைச் சேர்ந்த ஹரீந்தர் சிங் என்பவரின் மனைவியும் பலியாயினர். டில்லியைச் சேர்ந்த மேலும் இருவரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

வருமானத்தை குறிக்கோளாக கொண்ட படகு போக்குவரத்து : கேரள அரசு வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு படகு போக்குவரத்தை இயக்குகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளன என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டினர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காலையில் தேக்கடியில் படகு சவாரி செய்தார்.அவர் கூறியதாவது:காலை நேரம் என்பதால் அதிக அளவில் கூட்டம் இல்லை. நாங்கள் சென்ற படகில் 30 பேர் இருந்தோம். படகில் செல்லும் போது, வனப்பகுதியில் தெரியும் பாறைகளைக் கூட மிருகங்கள் எனக் கருதி, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் படகின் ஒரு பக்கமாகச் சென்று பார்க்கின்றனர். படகில் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை எடுத்துக் கூறவோ, சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்தவோ ஆட்கள் இல்லை. பயணிகளைக் கட்டுப்படுத்த ஆட்கள் இருந்திருந்தால், இது போன்ற சோக சம்பவம் நிகழ்ந்திருக்காது.மேலும், படகில் பயணிகள் அமருவதற்கு எவ்வித பிடிப்புகளும் இல்லாமல் பிளாஸ்டிக் சேர் போடப்பட்டுள்ளது. இதுவும் மிகுந்த ஆபத்தாக உள்ளது. கேரள அரசு வருமானத்தை பெருக்கும் நோக்கில் படகு போக்குவரத்தை நடத்துகிறது. உயிருக்கு பாதுகாப்பு அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேக்கடி படகு விபத்தில் இறந்தவர் எத்தனை? ஓட்டல்களில் ஆட்கள் கணக்கெடுப்பு : தேக்கடி ஏரியில் கவிழ்ந்த படகில் எத்தனை பேர் சென்றனர் என்பதை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை. இதனால், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடி ஏரியில் நேற்று முன்தினம், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள மாநில அதிகாரிகளும், போலீசாரும் புதுக் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். விபத்துக்குள்ளான படகில் 76 பேர் பயணம் செய்ததாக, கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதைவிட அதிகமானோர் படகில் சென்றதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகு, படகுத் துறையில் இருந்த கிளம்பியபோது, அதை நேரில் பார்த்தவர்கள், அதில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கேரள சுற்றுலாத் துறை சார்பில் படகில் பயணம் செய்வோருக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துத் தான், படகில் 76 பேர் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் வழங்கப்படுவது இல்லை. ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் படகில் இருந்துள்ளனர். இதுதவிர, கேரள சுற்றுலாத் துறை சார்பில், வி.ஐ.பி.,க்களுக்கு படகில் செல்வதற்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் வி.ஐ.பி.,க்களை கணக்கில் சேர்க்காமல், 76 பேர் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 76 பேருக்கும் அதிகமானோர் கண்டிப்பாக படகில் சென்று இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

படகில் எத்தனை பேர் சென்றனர் என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் அதிகாரிகளிடையே குழப்பம் நீடிக்கிறது. இதையடுத்து, தேக்கடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அங்கு தங்கியிருந்தவர்கள் யாரும் காணாமல் போயுள்ளனரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று திருவனந்தபுரம் வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளாவில் ஏரி சார்ந்த சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளன. இதனால், அங்கு ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையிலும், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் ஒரு பிரிவை இங்கு பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.இந்த விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் அச்சுதானந்தன், "இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளார்.

சோனியா இரங்கல்: தேக்கடி படகு விபத்தில் பலியானோருக்கு காங்., தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:உல்லாசமாக சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியானது மிகவும் துக்கமான விஷயம். இதை யாராலுமே தாங்கிக் கொள்ள முடியாது. விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற விபத்து, எதிர்காலத்தில் நடக்காத வகையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.

தேக்கடி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு : தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. கடற்படை வீரர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேக்கடி ஏரியில் நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் சென்ற இரண்டடுக்கு படகு கவிழ்ந்தது. ராட்சத விளக்குகளைக் கொண்டு மீட்புப் பணி நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்ததில், 30 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. அதிகாலை 2 மணியளவில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. கொச்சியில் இருந்து வந்த கடற்படையைச் சேர்ந்த 23 வீரர்கள், நீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களைத் தேடினர். இரண்டு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. காலை 5 மணிக்கு ஒன்பது பேர் உடல்களும், பகல் 2 மணிக்கு இரண்டு உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது.மீட்கப்பட்ட உடல்கள், குமுளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அடையாளம் காணப்பட்ட பின், எர்ணாகுளம் அமிர்தா மருத்துவமனை, ஜெனரல் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின், சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல கேரள அரசே ஏற்பாடு செய்தது.

கோவையைச் சேர்ந்த நான்கு பேர், பல்லடத்தை சேர்ந்த மூன்று பேர், பெரியகுளத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ஐந்து பேர், மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் என தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆந்திரா - 4, கோல்கட்டா - 5, பஞ்சாப், மும்பை தலா - 1, டில்லி - 11, கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்; ஒருவர் அடையாளம் தெரியவில்லை.மீட்புப் பணியின் போது சுற்றுலாப் பயணியின் ஒரு பேக்கிலிருந்து மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம், ஏ.டி.எம்., கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கேரள படகு விபத்துக்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய தேக்கடி :மூணாறு : கேரளாவில் இதுவரை நடந்துள்ள படகு விபத்துக்களில் தேக்கடியில் நடந்த விபத்தில் தான் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்த படகு விபத்துக்கள் விபரம்:

*1924 ஜூன் 16 ல் கொல்லம் பல்லணை ஆற்றில் ரிடிமர் என்ற இரண்டு தளம் கொண்ட படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலியாயினர். படகில் மொத்தம் 136 பேர் பயணம் செய்தனர்.
* 1952 ஏப்ரலில் வேம்ப நாட்டுகாயலில் படகு கவிழ்ந்து 19 பேர் பலியாயினர்.
*1958 ஜூலை 21ல் மலம்புழா அணையில் படகு விபத்துக்குள்ளாகிய“தில் 35 பேர் பலியாயினர்.
* 1974 பிப்ரவரி 5 ல் இடுக்கி பொன்முடி அணையில் படகு கவிழ்ந்து 12 பேர் பலியாயினர்.
* 1977 மார்ச் 2 ல் கோழிக்கோடு காப்பாட் கடலில் பிளாஸ்டிக் படகு கவிழ்ந்து திருமண கோஷ்டியைசேர்ந்த நான்கு பேர் பலியாயினர்.
*1980 மார்ச் 19 ல் எர்ணாகுளம் கண்ணாமாலியில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாயினர்.
*1983 ல் செப்டம்பர் 23 ல் கொச்சி முரிக்கும்பாடம் படகு துறை அருகே படகு விபத்துக்குள்ளாகி 18 பேர் பலியாயினர்.
*1990 டிசம்பர் 25 ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று திருவனந்தபுரம் பேப்பாறை அணையில் படகு கவிழ்ந்து ஏழு பேர் பலியாயினர்.
*1998 மே 2 ல் ஆழப்புழா அருகே பரிசல் மூழ்கி ஆறு பேர் பலியாயினர்.
* 2002 ஜூலை 27ல் வேம்பநாடு காயலில் குமரகம் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் பொது தேர்வு எழுதுவதற்கு சென்ற மாணவ, மாணவிகள் 29 பேர் உயிரிழந்தனர்.
* 2007 பிப்ரவரி 20 ல் தட்டக்காடு படகு விபத்தில் 15 பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 18 பேர் பலியாயினர்.இதற்கு முன் நடந்த படகு விபத்தில் அதிகபட்சமாக மலைம்புழா அணையில் நடந்த படகு விபத்தில் தான் அதிகபட்சமாக 35 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது தேக்கடியில் நடந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
* பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கான நீர் திறப்பு நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது.
* மூணாறு மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேக்கடியில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியவர்களில் நேற்று முன்தினம் இரவு வரை 23 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது. நேற்று 13 பேர் உடல் மீட்கப்பட்டு, 12 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்:
1.சந்தியா(15), பெரியகுளம்
2.சிர்ஜித்(44), கும்பகோணம்
3.சுசிலா(40), கும்பகோணம்
4.பிரீத்தி(13), கும்பகோணம்
5.அப்பு(15), கும்பகோணம்
6.அன்பரசி(40), மதுரை
7.சினேகா, மதுரை
8.சண்முகவேல், மதுரை
9.சுவாதி(3), கோவைகுறிச்சி
10.அணில்குமார், ஐதராபாத்
11.ஹாய்மனாஸ்(21), ஐதராபாத்
12.மகாஸ், டில்லி
13.சங்கீத்வர்மா, டில்லி
14.ஸ்ருதிஜெயின், டில்லி
15.விமலாஜெயின், டில்லி
16.நிர்மல்தாஸ், கோல்கத்தா
17.மீராதாஸ், கோல்கத்தா
18.கல்பனாதத், கோல்கத்தா
19.அகஸ்தி, மும்பை
20.ராமசாமி, பெங்களூரு
21.ராஜசேகர், பெங்களூரு

அடிப்படை வசதிகள் இல்லாத குமுளி ஆஸ்பத்திரி : குமுளி அரசு ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லாததால் தேக்கடி படகு விபத்தில் தப்பியவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு குமுளி அரசு ஆஸ்பத்திரி, பெரியார் ஆஸ்பத்திரி, 66ம் மைல் ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்தன. போதிய இட வசதியின்றி ஒரே அறையில் அனைத்து உடல்களும் கட்டில் மற்றும் தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. விபத்தில் உயிர் தப்பியவர்கள் மற்றும் உறவினர்கள் அடையாளம் காண்பதற்கு சிரமம் ஏற்பட்டது.குமுளி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும் வகையில் வசதி உள்ளது. எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை.உயிர் தப்பியவர்களுக்கு போதிய சிகிச்சையளிக்க முடியவில்லை. சுற்றுலாத்தலமான குமுளி மற்றும் தேக்கடியில் ஆஸ்பத்திரி வசதிகளை விரிவுபடுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமுளியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
* நீரில் கவிழ்ந்த இரண்டடுக்கு பைபர் படகை இயக்க அனுமதி வழங்கியது குறித்தும், படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
* படகின் அடித்தளத்தில் பயணம் செய்தவர்களே வெளியேற வழியின்றி அதிகளவில் பலியாகியுள்ளனர்.

கேரளா படகு விபத்துகள் : கேரளாவில், 1927 முதல் 2007ம் ஆண்டு வரை, பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், 167 பேர் உயிரிழந்துள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் அதிகளவு படகு விபத்துகள் நடந்துள்ளன. இங்கு மட்டும் இதுவரை ஏழு விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு முன் நடந்த படகு விபத்தில் அதிகபட்சமாக மலைம்புழா அணையில் நடந்த படகு விபத்தில் தான் அதிகபட்சமாக 35 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது, தேக்கடியில் நடந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sat Oct 03, 2009 3:25 am

அதிகாரிகளின் அலட்சியம் பெருத்துவிட்டது.....அதற்க்கு காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியமே காரணம்...என்று திருந்துவார்களோ தெரியவில்லை.

அன்புடன்
உங்கள் சுதாகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக