ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

4 posters

Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by பிரசன்னா Sun Mar 04, 2012 2:41 pm

“கீதை காட்டும் கர்மயோகமே, நம்முடைய பாதை. கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற தன்னலமற்ற உழைப்பின் மூலமே நாம் நம் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்,’ என்று ஏராளமான உதாரணங்களுடன் பேசினார் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியன் முன்னாள் தலைவர் என்.வகுள். கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு மிகச் சிறந்த விளம்பரத்துக்குப் பரிசும் பாராட்டிதழும் வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் நடைபெற்றது. தலைமையேற்ற என்.வகுள் “இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் கல்கி சதாசிவம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

“நமது பொருளாதாரம் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறது. எட்டு சதவிகித வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அது 6.9 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் 5.5 சதவிகிதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாநில அரசுகளின் கடன் சுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் பத்து சதவிகிதத்தைத் தாண்டும். தொழில் செய்வதற்கான நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து விட்டது. வெளிநாட்டு முதலீடுகளும் அரிதாகி விட்டன. இதுதான் இன்றைய நம் பொருளாதாரத்தின் நிலைமை.’

இரண்டாயிரமாவது ஆண்டையொட்டி, கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனம் முதல் முதலில் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) பொருளாதாரமே இருபத்தொன்றாம் நூற்றாண்டை ஆளப்போகிறது என்று சொன்னபோது, எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி. அதில் இப்போது, ரஷ்யப் பொருளாதாரம் பின்வாங்கிவிட்டது.

2002 - 2004 காலகட்டத்தில், இந்தியாவில் ஒன்பது சதவிகித வளர்ச்சி. ஆனால், 2004 - 2009 காலகட்டத்தில் வளர்ச்சி சரியத் தொடங்கியது. காரணம் உலகப் பொருளாதாரத் தேக்கம் என்றார்கள். அது உண்மையென்றால் நம்மை விட சீனாவுக்கத்தான் அதிக பாதிப்பு இருக்க வேண்டும். ஆனால் அங்கே முன்னேற்றம்தான் இருக்கிறது. அவர்கள் வருவாயில் முப்பத்தைந்து சதவிகிதம் ஏற்றுமதி மூலமே வருகிறது.

ஏன் சில தைரிய முடிவுகளை எடுத்து பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கேட்டால், கூட்டணி அரசின் கட்டாயங்கள் என்றொரு புதுக்காரணம் சொன்னார்கள்.

அடுத்தொரு காரணம், சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிவிட்டன. அதனால், ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்துக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. அதைச் சமன்செய்ய இலவசங்களை வாரி வழங்க வேண்டிய தேவை உருவாகிவிட்டது என்றார்கள்.

எனக்குத் தெரிந்து, இரண்டே இரண்டு விஷயங்கள்தான் நம் பொருளாதாரச் சரிவுக்க முக்கிய காரணங்கள், ஒன்று - அரசு, தனியார் துறை, இரண்டிலும் முழுமையான நிர்வாகச் சீர்கேடு, இரண்டாவது காரணம், லஞ்ச - ஊழல்.

ஒருமுறை நான் ராஜஸ்தானுக்குப் போயிருந்தேன். பாகர் என்ற கிராமத்துக்குப் போக எவ்வளவு நேரமாகும் என்று கார் டிரைவரைக் கேட்டேன். அரை மணி என்றார். அதற்கேற்ப திட்டமிட்டுக் கொண்டு, கிளம்பினேன். என்னை அழைத்தப் போக நிறுவன ஊழியர் ஒருவர் வந்திருந்தார்.

வண்டி போய்க்கொண்டு இருந்தபோது, டிரைவரிடம் கேட்டேன், உங்களுக்க கிராமத்தக்குப்போக வழி தெரியுமா? தெரியாது என்றார் டிரைவர்! கூட வந்த ஊழியரிடம் கேட்க எனக்கு ஜுன்ஜுனாரில் இருந்துதான் வழி தெரியும். அங்கிருந்து முக்கால் மணி நேரத்தில் போயிடலாம் என்றார்! வேறு வழியில்லாமல் ஜுன்ஜுனார் போய், அங்கிருந்து பாகர் போக, ஒன்றேகால் மணி நேரம் ஆனது!

அது போல்தான் நம் பொருளாதாரமும், போகவேண்டிய திசையைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. 1991ல் ஆரம்பித்த தாராளமயமாக்கல், இன்று அந்தரங்கத்தில் தொங்குகிறது. கோடிக்கணக்கில் செலவு வைக்கும், வருவாய்க்கு வழியற்ற பல திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. விளைவு, பண வீக்கம்; விலைவாசி உயர்வு.

ஒருமுறை தில்லி - மும்பை விமானத்தில் வந்துகொண்டு இருந்தேன். விமானம் கிளம்பியவுடனேயே தள்ளாட ஆரம்பித்து விட்டது. ஏர் பாக்கெட்டில் மாட்டிக் கொண்டால், இதுபோல் அதிர்வுகள் விமானத்தில் தெரியும். எப்படியோ விமானி சமாளித்துக்கொண்டு மேலே போய்விட்டார்.

தரையிறங்கிய பிறகு, விமானியிடம் விவரம் கேட்டேன். ஏர் பாக்கெட்டுகள் 15000 அடி உயரத்திலும் வரலாம், 5000 அடி உயரத்திலும் வரலாம். பதினைந்தாயிரம் அடி என்றால் கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். இந்த முறை, ஐந்தாயிரம் அடியிலேயே வந்துவிட்டது. கீழே விழுந்து நொறுங்கியிருப்போம். கடவுள் காப்பாற்றினார் என்றார். அப்படித்தான் நம் பொருளாதாரமும், பேராபத்தை சந்தித்தாலும் எப்படியாவது சமாளித்து விடுவோம்!

உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நாடு சூப்பர் பவராக ஆகியிருக்கிறது. முதலில் பிரிட்டன், 1956க்குப் பிறகு அமெரிக்கா. 2015 -16க்குள் அடுத்த சூப்பர் பவர் ஆக சீனா ஆசைப்படுகிறது.

ஆசை நிறைவேறினால் அது எப்படி நம்மை எல்லாம் கட்டுப்படுத்தப் போகிறது என்பது புரியாத புதிர். ஆனால், உலகத்தக்கு மற்றொரு போலீஸ்காரன் வரப்போகிறான் என்பது மட்டும் நிச்சயம். சீனாவின் அரசு அமைப்பு முறையை நாம் பின்பற்ற முடியாது. நமது ஜனநாயகத்தைக் கைவிடாமலும் கூட்டணி நிர்பந்தங்கள் இருந்த போதிலும் நாம் முன்னேறியாக வேண்டும்.

ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி, நிர்வாகச் சீர்கேடு லஞ்ச ஊழலும்தான் நம் பொருளாதாரச் சரிவுக்கு முக்கிய காரணங்கள். இதிலிருந்து மீளுவதற்கான வழியைப் பார்க்கும்போது, நம்முடைய வேலை நெறிமுறைகள் (வொர்க் எதிக்ஸ்) பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகமெங்கும் ப்ராட்டஸ்ட்டன்ட் வொர்க் எதிக்ஸ் தான் பின்பற்றப்பட்டு வந்தது. இறையுணர்வோடு கூடிய கடுமையான உழைப்பே அதன் அடிப்படை. ஆனால், இன்று கடவுள் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. இதனால், கடுமையான உழைப்பு காணாமலே போய்க் கொண்டு இருக்கிறது.
ப்ராட்டஸ்ட்டன்ட் வொர்க் எதிக்ஸுக்குப் பதில் வேறொரு வேலை நெறிமுறை பிரபலமாகியுள்ளது. அதனை நான் வால் ஸ்ட்ரீட் வொர்க் எதிக்ஸ் என்று அழைப்பேன். யார் வெற்றி பெற்றிருக்கிறார்களோ, நிறைய பணம் சம்பாதித்துள்ளார்களோ, புகழ்பெற்றிருக்கிறார்களோ, அவர்களை வழிபடுவதும் பின்பற்றுவதும் இப்போது நடைமுறையில் இருக்கிறது. இதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம்.

இந்தியர்களுக்கு என்று ஓர் வொர்க் எதிக்ஸ் இருக்கிறது. கீதை காட்டும் கர்மயோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற தன்னலமற்ற பணி நெறிமுறைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு இத்தனை நூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.

தன் நலனுக்காக இல்லாம், எந்த ஒரு வேலையையும் பொதுநலன் கருதி செய்யவேண்டும். அதற்கான முதல் அடியை இப்போதே எடுத்த வைக்க வேண்டும் என்றுதான் கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறான். உண்மையில் இதுதான் உலகம் முழுவதற்குமான வொர்க்ஸ் எதிக்ஸ். இப்படி தன்னலமற்ற பணிபுரிந்தவர்களால்தான் நம் பொருளாதாரம் ஓரளவு முன்னேறியிருக்கிறது. எல்லோரும் பின்பற்றினால் மேலும் துரிதமாக முன்னேறுவோம்.

இத்துடன் 1991ல் ஆரம்பித்த பொருளாதார தாராளமயமாக்கலையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். எங்கெல்லாம் தனியார் துறையை அனுமதிக்கமுடியுமோ அங்கெல்லாம் அனுமதித்து, முழு திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

அடிப்படையில் நம்பண்பாட்டில் உள்ள, மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள கீதை வொர்க் எதிக்ஸ், மீண்டும் தூண்டி விட வேண்டும். அவர்களை தன்னலமற்று பணியாற்ற உற்சாகப்படுத்த வேண்டும். ஒளவையார் சொன்னது போல், வளம் பெருகி, கோனும் குடியும் உயர முதலில் வரப்புயர வேண்டும். கிராமப் பொருளாதாரம் மேம்பட வேண்டும்.

நம் பொருளாதார வளத்துக்கு ஒரே தீர்வு வரப்புயர்வதுதான் என்றார் வகுள்.
இவ்வாண்டு விருது பெற்றுள்ள விளம்பரமும் கீதையின் கருத்தைத்தான் முன்மொழிகிறது. அதன் வாசகம் இதுதான்:
“தங்கள் பணி எதுவாக இருந்தாலும், தங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், தங்கள் பதவி எதுவாக இருந்தாலும் தங்கள் சேவை தெய்வத்துக்கு நிகரானது. அதனைப் பெருமையுடன் செய்திடுங்கள், நேர்மையுடன் செய்திடுங்கள்....’

கல்கி சதாசிவம் மெமோரியல் அவார்டு
2011-ஆம் ஆண்டில் தமிழ் தினசரிகள் மற்றும் சஞ்சிகைகளில் வெளியான விளம்பரங்களுள், சமூக நோக்குடன் கூடிய மிகச் சிறந்த விளம்பரத்துக்கு கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை வழங்கும் பத்தாயிரம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பத்திரமும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துக்காக, கிரேயான்ஸ் விளம்பரத்தை உருவாக்கிய அட்வர்டைஸிங் நிறுவனத்துக்கும் அளிக்கப்பட்டது.

- ஆர் வெங்கடேஷ்

கல்கி இதழ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by கே. பாலா Sun Mar 04, 2012 2:45 pm

நல்ல கட்டுரை...பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 2:56 pm

அருமையான தகவல்கள் பகிந்தமைக்கு நன்றி , ஏர் பாக்கெட்டுகள் என்றாள் என்ன ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by கே. பாலா Sun Mar 04, 2012 3:06 pm

இரா.பகவதி wrote:அருமையான தகவல்கள் பகிந்தமைக்கு நன்றி , ஏர் பாக்கெட்டுகள் என்றாள் என்ன ,
யாராவது சொல்லுங்கப்பா!...கொலவெறிக்கும் பகவதிக்கும் வாட்டர் பாக்கெட் மட்டும்தான் தெரியுமாம்!.!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 3:13 pm

பாலா அண்ணா பிக்பாக்கெட் விடுடிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by யினியவன் Sun Mar 04, 2012 3:16 pm

கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:அருமையான தகவல்கள் பகிந்தமைக்கு நன்றி , ஏர் பாக்கெட்டுகள் என்றாள் என்ன ,
யாராவது சொல்லுங்கப்பா!...கொலவெறிக்கும் பகவதிக்கும் வாட்டர் பாக்கெட் மட்டும்தான் தெரியுமாம்!.!
ஏர் டர்ப்யூலன்ஸ் எனப்படுவது தான் ஏர் பாக்கெட்.
ஸ்ட்ரீம் ஆப் ஏர் இர்ரெகுலர் மோஷனில் இருப்பது ஒரு வகை.
இது கிளியர் ஸ்கை யாக இருக்கும் பொது நடப்பது மற்றறொரு வகை.
இவற்றை விமானம் எதிர்கொள்ளும் போது விமானம் தட தடவென ஆடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by கே. பாலா Sun Mar 04, 2012 3:17 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:அருமையான தகவல்கள் பகிந்தமைக்கு நன்றி , ஏர் பாக்கெட்டுகள் என்றாள் என்ன ,
யாராவது சொல்லுங்கப்பா!...கொலவெறிக்கும் பகவதிக்கும் வாட்டர் பாக்கெட் மட்டும்தான் தெரியுமாம்!.!
ஏர் டர்ப்யூலன்ஸ் எனப்படுவது தான் ஏர் பாக்கெட்.
ஸ்ட்ரீம் ஆப் ஏர் இர்ரெகுலர் மோஷனில் இருப்பது ஒரு வகை.
இது கிளியர் ஸ்கை யாக இருக்கும் பொது நடப்பது மற்றறொரு வகை.
இவற்றை விமானம் எதிர்கொள்ளும் போது விமானம் தட தடவென ஆடும்.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 3:22 pm

குருவே நன்றி, பாலா அண்ணா நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள் Empty Re: கர்ம யோகமே நம்முடைய வொர்க் எதிக்ஸ்! - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் என். வகுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum