புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_m10அழகென்று எதனைச் சொல்வீர்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகென்று எதனைச் சொல்வீர்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 5:18 am

சமீபத்தில் தினகரன் நாளிதழில், கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடக்க இருந்தது. திருமண தினத்தன்று காலையில் மணப்பெண்ணின் உறவினர்களைப் பார்த்த மணமகனின் தாய், பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கறுப்பாக இருப்பதாகக் கூறி அத்திருமணத்தை நிறுத்தவேண்டும் என்றிருக்கிறார். இதற்கு அந்தப் பெண்ணின் கணவரும், மகனும் தலையாட்டியிருக்கிறார்கள்(இவனுங்கள எல்லாம் என்ன பண்ணலாம்?). பெண் வீட்டாரிடம் விஷயத்தைக் கூற... பெரிய தகராறு ஏற்பட்டிருக்கிறது. படிக்கும்போதே ரத்தம் கொதிக்கவில்லை? இவர்களை எல்லாம் விசாரணையே இல்லாமல் ஜெயிலில் தூக்கிப் போடவேண்டாம்? ஆனால் கடைசியில் என்ன நடந்ததென்றால் காவல் துறையினர் வந்து கட்டப் பஞ்சாயத்து செய்து, பெண்வீட்டாருக்கு 50000 வாங்கிக்கொடுத்து திருமணத்தை நிறுத்தியிருக்கின்றனர்.

இதில் காவல் துறையினர் செய்த பஞ்சாயத்தும், மணமகன் வீட்டார் கொடுத்த பணத்தை பெண் வீட்டார் வாங்கிக்கொண்டதும் கண்டனத்திற்குரியது என்றாலும் கட்டுரை அதைப் பற்றி அல்ல.

நமது இந்தியர்களின் மனப்பான்மையைத் தெரிந்துகொள்ள நமது பத்திரிகைகளில் வரும் மணமக்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்தாலே போதும். அழகான, சிவப்பான மணமக்கள் தேவை என்றுதான் பெரும்பாலான விளம்பரங்கள் வரும். இன்னும் சொல்லப்போனால் மணமகன் அல்லது மணமகளின் நிறத்தைக் குறிப்பிட்டு வரும் விளம்பரங்கள் இந்தியாவில் மட்டும்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கறுப்பாய் இருந்தாலே அழகில்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள். கறுப்பிலும் அழகானவர்கள் இருக்கிறார்கள். சிவப்பிலும் அழகில்லாதவர்கள் இருக்கிறார்கள். சரி... உண்மையில் அழகு என்றால் என்ன?

அழகு தொடர்பாக சமீபத்தில் வலைப்பதிவுகளில் பரபரப்பாக நடந்த ஒரு விவாதத்தைப் பார்ப்போம். எழுத்தாளர் கமலாதாஸ் அவர்களின் மறைவையொட்டி தனது வலைப்பதிவில் அஞ்சலிக் குறிப்பு எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன், அவர் அழகற்றவர். அந்தத் தாழ்வு மனப்பான்மையின் விளைவே அவரது பாலியல் சார்ந்த எழுத்துகள் என்று கூறியிருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சாருநிவேதிதாவோ கமலாதாஸை பேரழகி என்று குறிப்பிடுகிறார். இருவருமே தமிழ் நவீன இலக்கியத்தின் மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள். பல விஷயங்களிலும் இவர்களுடைய கருத்துகள் மிகவும் பொருட்படுத்தத் தக்கவை. ஆனால் இருவரும் ஒரே பெண்ணைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகளைக் கூறுகிறார்கள். ஏன்?

அடிப்படையாக சாரு, பாலியல் சுதந்திரம் தொடர்பான கருத்துகளுக்கு ஆதரவானவர். எனவே அவ்வகை எழுத்துகளை முன்னிறுத்திய கமலாதாஸை அவருடைய மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அவருக்கு கமலாதாஸ் பேரழகியாகத் தெரிகிறார். ஜெயமோகனோ கமலாதாஸின் படைப்புகளுக்கு பெரிய இலக்கிய அந்தஸ்து ஏதும் கிடையாது என்று கருதுகிறார். அதனால் அவருடைய கண்களுக்கு கமலாதாஸ் அழகற்றவராகத் தெரிகிறார். ஆக... இங்கு அழகு என்பது கமலாதாஸின் தோற்றத்தில் இல்லை. அவருடைய படைப்புகள் குறித்த இவர்களுடைய கருத்தே கமலாதாஸை ஒருவருக்கு அழகானவராகவும், மற்றொருவருக்கு அழகற்றவராகவும் காண்பிக்கிறது. நான் கமலா தாஸின் மை ஸ்டோரியையும், சில சிறுகதைகளையும் தவிர அதிகம் அவருடைய எழுத்துகளைப் படித்ததில்லை. எனவே எனக்கு அவருடைய இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஒரு தெளிவான, உறுதியான கருத்து ஏதும் இல்லை. அதனால் அவருடைய படைப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வெறும் பெண்ணாக நான் அவரைப் பார்க்கும்போது. சாரு போல எனக்கு கமலாதாஸ் பேரழகியாகவும் தோன்றவில்லை. ஜெயமோகன் போல தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக வேண்டிய அளவுக்கு அழகற்றவராகவும் தோன்றவில்லை. உண்மை இந்த இருவருடைய கூற்றுக்கும் நடுவில் இருப்பதாகத் தோன்றுகிறது.(கஷ்டம்டா சாமி... அவனவன் நயன்தாரா அழகா, த்ரிஷா அழகா என்று விவாதித்துக்கொண்டிருக்கிறான். நாம் வயதாகி இறந்துபோன ஒரு பெண் எழுத்தாளாரின் அழகைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.)

இதைப் பற்றி மேலும் சற்று எளிமையாக விவாதிக்கலாம் என்று கருதுகிறேன். அழகு என்று எடுத்துக்கொண்டால் பொதுவாக அனைவருக்குமே அது அழகாகத் தெரியவேண்டுமல்லவா? அதிகாலை வானம், அந்தி நேரத்துக் கடற்கரை, மழையில் நனையும் புல்வெளி... போன்ற இயற்கைக் காட்சிகள் எல்லாம் எல்லோருக்குமே அழகாகத்தானே தொரிகிறது. ஆனால் மனிதர்களின் அழகைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லோரும் ஒரே விதமான கருத்தைக் கொண்டிருப்பதில்லை. அனைத்து தமிழர்களுக்கும் நன்கு பரிச்சயமான தமிழ்த் திரை உலகத்தையே எடுத்துக்கொள்வோம். சிலர் இருப்பதிலேயே சிநேகாதான் அழகு என்கிறார்கள். சிலர் தமன்னாதான் அழகு என்கிறார்கள். வேறு சிலர் சிநேகாவும், தமன்னாவும் என்னத்த அழகு? நயன்தாராதான் அழகு என்கிறார்கள். ஆக... இது முக்கோணம், இது சதுரம் என்று குறிப்பிடப்படுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதைப் போல், ஒருவர் அழகு என்று கூறப்படுவதை, எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே அழகு என்பதை அழகாக அல்லது அழகற்றதாகக் குறிப்பிடப்படும் நபர்களின் தோற்றம் நிர்ணயிக்கவில்லை. அவர்களைக் கவனிக்கும் நபர்களின் ரசனையே அவர்கள் அழகானவர்களா, அழகற்றவர்களா என்பதை முடிவு செய்கிறது.

இது ஒரு புறமிருக்க... நாம் ஒருவரை புறத்தோற்றத்தின் அடிப்படையில் அழகு என்று நினைத்தால், அவர்கள் எப்போதுமே அழகாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. உதாரணத்திற்கு நாம் ஒரு நடிகர் அல்லது நடிகையை மிகவும் அழகாக இருப்பதாகக் கூறி ரசித்து வருகிறோம். திடீரென்று தொடர்ந்து அவரைப் பற்றி மோசமான தகவல்கள் வந்தால், சட்டென்று அவர்களுடைய அழகு பற்றிய பிரேமை நமக்குக் குறைந்துவிடுகிறது. அவர் அப்படியேதான் இருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய தவறான தகவல்களால் அவரின் அழகு குறைந்துவிட்டது போல் நமக்குத் தோன்றுகிறது.

அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகள், குணங்கள் என்றுதான் இல்லை. நான் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். நாம் ஒரு நடிகை அல்லது நடிகர் பெரிய அழகில்லை என்பது போல் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அவர் ஒரு அற்புதமான படத்தில் நடித்திருந்து, அதில் அவருடைய கேரக்டர் மிகவும் நன்றாக இருந்தால், அந்தப் படத்தில் அவர் நமக்கு அழகாகத் தோன்றுவார். ‘சலங்கை ஒலி’ படத்தில் ஜெயப்ரதா அழகாகத் தோன்றியது போல், மற்றப் படங்களில் எனக்கு அவர் அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. ஏனெனில் சலங்கை ஒலி படத்தில் அவருடைய கேரக்டர், அப்படி ஒரு வலுவான கேரக்டர். ஆக... திரைப்படங்களில் வரும் கதாபாத்திரத்தின் தன்மையைப் பொறுத்தே ஒருவருடைய அழகு கூடுதலாகவோ, குறைவாகவோ தெரிகிறது என்றால், நிஜ மனிதர்களின் தன்மையைப் பொறுத்தும் கூட அவர்களுடைய அழகு குறித்து நமது கருத்துகள் உருவாகுமல்லவா?



அழகென்று எதனைச் சொல்வீர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 5:18 am

இதை எனக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது போல், என் வாழ்வில் நான் ஒரு சம்பவத்தைப் பார்த்தேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் ஒரு நண்பனுடைய வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டில் ஒரு இளம் தம்பதி குடியிருந்தனர். தமிழர்கள்தான். அந்தப் பெண் மிகவும் அழகாக இருப்பாள். காரில் போவார்கள். வருவார்கள். ஒரு நாள் இரவு 11 மணி போல் இருக்கும். அந்தத் தம்பதியிடையே ஏதோ சண்டைபோல. சண்டை வீதிக்கே வந்துவிட்டது. எனக்கு இரண்டு ஆச்சரியம். ஒன்று பெங்களுர் போன்ற பெருநகரத்தில், ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடியிருப்புப் பகுதியில், கணவனும், மனைவியும் தெருவுக்கு வந்து சண்டை போடுவது முதலாவது ஆச்சரியம். இரண்டாவது, ஒரு கணவனும், மனைவியும் ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்வதையும் அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். ஊரில் ‘‘அறிவு கெட்ட நாயே..." ‘‘ஓடுறி உங்கப்பன் வீட்டுக்கு...’’ ‘‘நான் செத்தா என்ன கதியாவறன்னு பாரேன்..." என்பது போன்ற குடும்பச் சண்டைகளையே பார்த்துப் பழக்கமாகியிருந்த எனக்கு, ‘‘யூ டோன்ட் ஹேவ் தி ரைட் டூ ஸே லைக் திஸ்." ‘‘ ஐ வில் கில் யூ...:" ‘‘கமான்... கில் மீடா...கில் மீ..." என்ற ஆங்கில சண்டை எனக்கு புதிதாக இருந்தது.

சண்டையைப் பார்க்க, பார்க்க சண்டைக்கு காரணம் தெரியவந்தது. ஏதோ ஒரு வாக்குவாதத்தில் அவன் அவளை கெட் அவுட் என்று கூறியிருக்கிறான். அதற்குத்தான் அந்தப் பெண் மிகவும் கோபமாகி வெளியே வந்து, அவனைக் கண்டபடி ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தாள். அருகிலிருந்த அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்க்க... அதை அவள் பொருட்படுத்தவே இல்லை. அந்தக் கணவன்தான், ப்ளீஸ்... உள்ள வா... என்று கெஞ்சிக்கொண்டிருந்தான். இடையில் அவள் யாருக்கோ மொபைலில் போன் செய்தாள். அவன் யாருக்கோ போன் செய்தான். அவன், அவளை உள்ளே கூப்பிட... அவள் வரவேயில்லை. கோபமான அவன், "வீட்டு வாசல்ல நின்னு கத்தாதே. வெளியே போ..." என்று அவளை ரோட்டில் பிடித்துத் தள்ளிவிட்டான். அவ்வளவுதான். அவள் இன்னும் மோசமாக ஆங்கிலத்தில் திட்டியபடி, முதலில் ஒரு சிறிய கல்லைத் தூக்கி அவன் மீது எறிந்தாள். பிறகு சற்று பெரிய, பெரிய கற்களைத் தூக்கி எறிய ஆரம்பித்துவிட்டாள். அவன் வேறு வழியின்றி உள்ளே சென்று, கதவைத் தாளிட்டுக்கொள்ள... அடுத்து அந்தப் பெண் செய்த காரியம் என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

இன்னும் ஆத்திரம் அடங்காத அந்தப் பெண், சாலையில் கிடந்த ஒரு பெரிய கருங்கல்லை ஆக்ரோஷத்துடன் தூக்கி, பார்ப்போர் நெஞ்சு பதைபதைக்க... தனது கணவனின் கார் மீது தூக்கி டொம்மென்று போட்டாள். அப்போதும் கோபம் தணியாமல், மீண்டும் அதே கல்லை எடுத்து காரின் கண்ணாடிகள், ஹெட்லைட்கள் எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிய பிறகுதான் அவள் ஆத்திரம் அடங்கியது. எனக்கும், என் நண்பனுக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. சில நிமிடங்களில் அந்தப் பெண் சென்றுவிட... வெளியே வந்த அந்த இளைஞன் துக்கத்துடன் தன் காரைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். சில நிமிடங்களிலேயே அங்கொரு கார் வந்து நிற்க... அதிலிருந்து ஒரு வயதான பெண்மணி இறங்கினார். அவரைப் பார்த்தவுடனேயே அந்த இளைஞன், ‘‘எனக்கு மட்டும் ஏம்மா இப்படி ஒரு பொண்டாட்டி?" என்று தமிழில் வேதனையுடன் கேட்டபடி, சாலையென்றும் பார்க்காமல் அழ ஆரம்பிக்க... முன் பின் அறியாத அந்த இளைஞனை அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.(இக்காட்சியைப் பார்த்து நான்கு வருடங்களாகிறது, இதை எழுதும்போது காதுகளுக்குள் ‘எனக்கு மட்டும் ஏம்மா இப்படி ஒரு பொண்டாட்டி?’ என்ற அவனுடைய வார்த்தைகள் காதில் தெளிவாக ஒலிக்கிறது).

இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நான் மூன்று நாட்களுக்கு முன்பு பார்த்து எவ்வளவு அழகு என்று வியந்த அதே பெண்தான். ஆனால் என் கண்களுக்கு இப்போது அவள் மிகவும் கொடூரமாகத் தெரிந்தாள்.

இப்போது கூறுங்கள். அழகென்று எதனைச் சொல்வீர்? வெறும் நிறமும், தோற்றமும் மட்டுமே அழகை வரையறுப்பதில்லை. நமது ரசனைகள், அந்நபரின் தனிப்பட்ட குணங்கள், நடவடிக்கைகள், அவரைப் பற்றிய நமது மதிப்பீடுகள்... என்று எல்லாம் சேர்ந்தே ஒருவர் அழகா, இல்லையா என்பதை முடிவு செய்கிறது

ஜி. ஆர். சுரேந்தர்நாத்




அழகென்று எதனைச் சொல்வீர்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக