புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
6 Posts - 4%
prajai
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தமிழை வளர்ப்பது யார்? I_vote_lcapதமிழை வளர்ப்பது யார்? I_voting_barதமிழை வளர்ப்பது யார்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வளர்ப்பது யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 5:21 am

தமிழை வளர்ப்பது யார்? Vasandhi


தமிழ் மொழி பாக்கியம் செய்தமொழி. தொன்மையில் அதற்கு ஈடான சமஸ்கிருதமோ அல்லது பிந்திய கிரேக்கமோ லத்தீனோ செய்யாத பாக்கியம். பரிதாபத்துக்குரிய மொழிகள் அவை. அம்மொழிகளை உயிர்ப்பிக்கும் வேகமோ ஆவேசமோ உணர்ச்சிப் பெருக்கோ அதை உபயோகித்த மக்களுக்கு இருந்திருக்கத் தேவை இல்லை. அந்த ஆர்வம் அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இன்று உன்னத நிலையிலேயே இருந்திருக்கும் ; பல்கலைக் கழக வாசகசாலை அலமாரிகளில் பதுங்கியிருக்காது.

அந்தத் தலைவர்களின் துதிபாடிகளே அவற்றை வாழவைத்திருப்பார்கள் தமிழ் மொழிக்கு நேர்ந்ததைப் போல.

ஆஹா, தமிழ் மொழி அதிர்ஷ்டம் செய்த மொழி. எத்தகைய தமிழ்ப் பற்று கொண்ட தலைவர்களைத் தமிழ்நாடு கண்டு வருகிறது ! பழைய சரித்திரம் பேசவில்லை இப்போது.

இது சமீபத்திய வரலாறு.

நிகழ்கால வரலாறு.
வரலாறு படைப்பவர்கள் நமது அரசியல் தலைவர்கள். மொழி , மொழிப் பற்று என்பது அரசியல். அது அரசியலாக்கப் படும் . அதை வைத்து அரசியல் செய்யப்படும். கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் மிக முக்கிய அங்கம் வகித்ததாலேயே தமிழ் இன்று இத்தனை உன்னதத்துக்கு வந்திருக்கிறது. தன்மானத்தோடு வாழ்கிறது. மறுப்பதற்கில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியே தமிழினத் தலைவர் என்று திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார். தண்டவாளத்தில் தலையை வைத்தார். தமிழ் பிழைத்தது. "தமிழன் பெற்ற வெற்றி நான்கு. முதலாவது, அயன் வள்ளுவன். இரண்டாம் வெற்றி பெரியார். மூன்றாம் வெற்றி அண்ணா. தமிழன் பெற்ற நான்காம் வெற்றி கலைஞர் கருணாநிதி"- இப்படி கவிப் பேரரசு வைரமுத்து சொல்லியிருக்கிறார்.

இந்த நால்வரினாலேயே தமிழ் பிழைத்திருக்கிறது. வளர்ச்சி கண்டிருக்கிறது. வள்ளுவனுக்கும் பெரியாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் செத்திருந்ததோ என்னவோ. தமிழை வளர்த்த பக்தி இலக்கியங்கள் இப்போது எவருக்கும் நினைவில்லை. 'பாட்டுடைத் தலைவன்' இப்போது கருணாநிதி என்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் , காஞ்சீபுரத்தில் கவிஞர் யுகபாரதி சொன்னார். அங்கிருந்த கூட்டமும் தொண்டர்களின் ஆரவார உற்சாகமும் கருணாநிதி நிச்சயமாகத் தமிழினத்தின் தலைவர் என்று உறுதிபடுத்தியது. ஒரு மாணவன் கருணாநிதியைப் பார்த்து 'என்னை வாழவைத்த தெய்வம்' என்று சொன்னபோது என் கண்கள் குளமாயின. தமிழகத்தின் நம்பிக்கையாக ,அதன் தலையெழுத்தை மாற்றிய மாபெரும் தலைவர் என்ற உருவமாக அவர் அமர்ந்திருந்தார். இலங்கைத் தமிழர் விஷயத்தில் அந்த பிம்பம் சற்று மங்கிப் போனது உண்மைதான். ஆனால் நல்லகாலம் இலங்கை இனப்போரில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பமும் முடிவும் , பிறகு திமுகவுக்கு பாராளுமன்றத் தேர்தல் களத்தில் கிடைத்த வெற்றியும் ஆசுவாசத்தை அளித்தன. இலங்கைத் தமிழர் படும் துயரைப் பற்றின எதிர்கட்சியினரின் பேச்சு இப்போது குறைவாகக் கேட்கிறது.

அவர்களது குரல் கேட்பதே இல்லை. அவர்கள் எங்கோ , வனத்திலோ கிடங்கிலோ பதுங்கிவிட்டார்கள். தமிழினத் தலைவர் பட்டத்தை மீட்டெடுக்கும் அயனான தருணம் இது. குடும்பச் சிக்கல்களை விடுவித்தாகிவிட்டது. அதாவது அவை எதிர்காலத்தில் ஏற்படாதவகையில் ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. முதல்வர் பணியையும் தம்பி ஸ்டாலின் தோள்களில் முக்காலை இறக்கிவிட்டதால், சினிமாவுக்கு மீண்டும் வசனம் எழுதவும் , கலைஞர் தொலைக்காட்சியில் கவிதை படிக்கவும் நேரம் மிஞ்சியிருக்கிறது. தமிழுக்கு இதைவிட சிறப்பாக எந்த அரசியல்வாதி தொண்டாற்றுவார்? ஆனால் இது போதாது 86 வயதில். இன்னும் எத்தனையோ செய்யமுடியும். உலகத் தமிழ் வளர்ச்சி வரலாற்று ஏடுகளில் நிரந்தர இடம் பெறும் வழிகள் உண்டு..அசோகச் சக்கரத்தைத் தென்திசைப்பக்கம் திருப்பமுடியும் என்கிற எண்ணம் துணிவைத்தருகிறது. இந்தப் பதவி நிரந்தரம் என்று என்றோ புரிந்துவிட்டது. 2010 ஃபெப்ரவரி என்பது அதிகத் தொலைவு இல்லை. அடுத்த ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தப் படும் என்ற அறிவிப்பு தமிழ் மொழிப் பற்றுள்ளோரை எவ்வளவு திருப்திபடுத்தும் !

அந்த அறிவிப்பை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு முன்பே அறிவித்ததும் நல்ல முடிவு. அன்றைக்கு வேறு ஒரு முக்கிய நிகழ்வு பிரதானமாக இருக்கும். இருக்கவேண்டும். அவருக்கு அண்ணா விருது அளிக்கப்படும் நாள். திமுக ஆதரவாளர்கள், அவரது அபிமானிகள் என்று முகம் பார்த்து, குணம் அறிந்து பலர் பாராட்டும் விருதும் பெறுவார்கள்.

எங்கோ பதுங்கியிருக்கும் அதிமுக தலைவி அரண்டுவிட்டார், அல்லது வெகுண்டுவிட்டார் வழக்கம்போல. உலகத்தமிழ் மாநாடு பற்றின அறிக்கையில் கருணாநிதி 1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஜெயலலிதா நடத்திய எட்டாவது மாநாட்டைக் குறிப்பிடவே இல்லை. முந்தைய ஏழைக் குறிப்பிட்டவர் எட்டாவதைப் பொருட்படுத்தவே இல்லை. கருணாநிதியின் அறிவிப்பு ஆணவமானது, சுய விளம்பரத்துக்கானது என்று சொல்கிறார் ஜெயலலிதா. இந்த மாநாட்டை நடத்துவது ஏதோ தமது அதிகாரத்தின் கீழ் இருப்பது போலப் பேசுகிறார் கருணாநிதி, சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஆதரவில்லாமல் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக மாநாடு நடத்தமுடியாது என்கிறார். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர் வ.செ குழந்தைசாமி இருக்கும் போது அனுமதி கேட்டு வாங்குவது அரசுக்கு என்ன சிரமம்? தவிர உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்துக்கு யாராவது மாநாடு நடத்திக் கொடுத்தால் சம்மதம்தான். 1995-இல் ஜெயலலிதா தஞ்சாவூரில் மாநாட்டுக்கு 'ஏற்பாடு' செய்து கொடுக்க முன்வந்ததும் தானும் தமிழர்களின் தலைவி என்று காட்டிக்கொள்ளத்தான். அந்த மாநாட்டுக்கு நேரில் சென்று வந்தவள் நான்.

தஞ்சாவூர் ஐந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டது. "தமிழ்த் தாயே" "தமிழைக்காக்க வந்த தலைவியே!," "தமிழே, நீ இருப்பதாலேயே நான் இருக்கிறேன்!" என்று கழகக் கண்மணிகள் அவரை வானளாவப் புகழ்ந்து விளித்துப் பாடிய அபத்தத் தமிழ்ப் பாடல்களுடன் பிரும்மாண்ட கட் அவுட்டுகள் ஆகாசத்துக்கு உயர்ந்திருந்தன. எங்கு சென்றாலும் ஜெயலலிதாவின் புகழ் பாமாலைகளும், மருத்துவமனைக்கு அவசரகால சிகிட்சைக்குக்கூடச் செல்ல முடியாமல் சாலை நெருக்கடிகளும் பாதுகாப்பு பந்தோபஸ்து கெடுபிடிகளுமே மக்களைக் கலவரப்படுத்தின. அது என்னவோ ஜெயலலிதாவுக்கான விழாபோல இருந்ததே தவிர , தமிழுக்கானதாகத் தெரியவில்லை. பல்கலைக் கழக வளாகத்தில் சில அமர்வுகள் தமிழறிஞர்களால் ஓசைப்படாமல் நடந்தன. நிறைவு விழா அன்று நன்றி கூறிய அமைச்சர் சேடப்பட்டி முத்தையா தூய தமிழில் சொன்னார்." இங்கு மக்கல் வரலாறு காணாதவகையில் திரலாக வந்திருப்பது நமது தலைவியின் வெற்றி. அவர் பல்லாண்டு வால வாழ்த்துக்கல். தமில் வால்க!" அவரது புகழாரங்களில் தலைவி துவண்டார். தமிழ் கொலையுண்டது.



தமிழை வளர்ப்பது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 5:21 am

தலைவர்களின் புகழ் பாடுவது தமிழ் மரபு. மன்னன் புகழ் பாடியே தமிழ்ப் புலவர்கள் பிழைக்கமுடிந்தது. பரிசு பெற முடிந்தது. விமர்சனம் செய்த எவருக்காவது பரிசு கிடைத்ததான சரித்திரமே இல்லை. அன்றும் இன்றும் . பரிசு கிடைக்காதது இருக்கட்டும், அவர்களது விலாசமே காணாமல் போகும். அந்தத் தொண்டர் சரியாகச் சொன்னார் ." நீ இருப்பதாலேயே நான் இருக்கிறேன்." துதிபாடிகள் இப்போது கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டுவதும் பகிரங்கமாக அதிமுக தலைவியைக் கிண்டல் அடிப்பதும் இதே காரணத்துக்குத்தான். கருணாநிதியால்தான் அவர்கள் வாழ்கிறார்கள். 1995 -இல் தஞ்சாவூரில் நடந்த அதே கூத்துதான் அடுத்த ஆண்டு கோவையிலும் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா தனது குற்றச்சாட்டுக்கு வேறு ஒரு வலுவான காரணத்தை முன் வைக்கிறார். அது அவர் செய்யும் அரசியல் என்பதில் சந்தேகமில்லை. இருந்தும் யோசிக்க வைப்பது. "உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966இல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்திய மலேசியத் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகத் தரம் தாழ்த்தப்பட்டிருப்பதை உணர்ந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 1974-இல் 4-ஆவது உலகத் தமிழ் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்திய இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாமில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.... ஆனால் இப்போது உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து கோயம்புத்தூரில் தான் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று கருணாநிதி எப்படி எதிர்பார்க்கமுடியும்?"

"95க்குப்பிறகு உலகத் தமிழ் மாநாடு நடக்காததற்கு அவரவரது யதார்த்த நிலைமையே காரணம் என்கிறார் ஜெயலலிதா. எரிகிற கொள்ளியில் தீவட்டி பற்றிக்கொள்ள நினைக்கும் கருணாநிதியா தமிழினத் தலைவர் என்று சாட்டையாக அடித்திருக்கிறார். திமுக தொண்டர்களை இது நிச்சயம் யோசிக்க வைக்கும். கருணாநிதிக்கு எரிச்சல் வரும். முரசொலியில் 'அம்மையாரின்' வண்டவாளங்களை ஏதேனும் எடுத்துப் போட்டு பதிலளிப்பார். ஆனால் உலகெங்கும் தமிழ் பேசும் ஒரு கணிசமான எண்ணிக்கை துவண்டு உயிர்ப்பித்தலுக்குக் காத்திருக்கும் வேளையில் உலகத் தமிழ் மாநாடு பற்றின அறிவிப்பு தேவையா என்கிற கேள்வி பாமரனுக்கும் எழும். தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் கட்சித் தலைமைகளால் நடத்தப்படும் அத்தகைய மாநாடு தமிழை வளர்க்கப் பயன்படாது , தலைவர்களின் பிம்பங்களைப் பெரிதுபடுத்த மட்டுமே பயன்படும் என்று அவன் அறிவான்.

வாஸந்தி



தமிழை வளர்ப்பது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக