ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமிசம் மனித உணவு அல்ல!

+11
asaswin
பத்மநாபன்
கேசவன்
உதயசுதா
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
valluvanraja
யினியவன்
இளமாறன்
அகிலன்
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அகிலன் Fri Mar 02, 2012 11:30 pm

First topic message reminder :

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

www.aanmegam.com
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by கே. பாலா Sat Mar 03, 2012 6:19 am

நடனம் நடனம் நடனம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 7:00 am

அகிலன் wrote:

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.
www.aanmegam.com

மிகவும் தவறான வாதமாகும். இப்போதும் நமக்கு நான்கு காரைப்பற்கள் (canine) இருக்கிறதே அது எதற்காக கடவுளால் படைக்கப் பட்டுள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருகாலத்தில் நாம் பச்சையாக மாமிசத்தை கிழித்து உண்டோம் என்பது தெளிவாகிறதே ?

அல்லாவையும் இவர்களோடு சேர்த்தது தவறாகும். அல்லா, ஏகோவா என்பன கடவுளின் நாமங்கள். ஒருவேளை முகமது நபி (ஸல்) என்று இருக்கவேண்டும். "இவைகள் எல்லாம் உங்களுக்காக படைக்கப்பட்டுள்ளது, அடித்துப் புசியுங்கள்" என்று விவிலியத்தில் மிகவும் ஆணித்தரமாக கூறப்பட்டு உள்ளதே ! கடற்க்கரை மணலில் அமர்ந்து தீமூட்டி ஏசுநாதர் மீனை சுட்டு சாப்பிட்டார்கள் என்று யோவான் சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். ஆடு, மாடு, ஒட்டகம் முதல் அடைகலான் குருவி வரை அநேக மாமிச உணவுகளை அரேபிய நாடுகளில் சாப்பிடுகிறார்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by கே. பாலா Sat Mar 03, 2012 7:38 am

நான்கு காரைப்பற்கள் (canine) இருக்கிறதே அது எதற்காக கடவுளால் படைக்கப் பட்டுள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருகாலத்தில் நாம் பச்சையாக மாமிசத்தை கிழித்து உண்டோம் என்பது தெளிவாகிறதே

இது தவறான வாதம்...... விலங்குகளின் கோரை பற்கள் கிழித்து திண்பதர்க்காக உருவானது ....மனிதனின் கோரை பற்கள் அப்படி அல்ல....

இயற்கையாகவே மனிதன் மாமிச பட்சிணியாக படைக்கப்படவில்லை.
அவனது உடல் வாகு தாவர உணவுகளை உண்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. மாமிசத்தையே உணவாக கொண்டு விலங்குகளுக்கு உள்ள கூரான வலுவான நகங்கள், மாமிசத்தை கிழித்து உண்ண உதவும் கோரைப்பற்கள் மனிதனுக்கு இல்லை.
சிங்கம், புலி போன்ற விலங்குகளின் உமிழ் நீர் அமிலத்தன்மை அதிகமானது. உண்ணும் பிராணிகளின் புரதங்களை ஜீரணிக்கவல்லது.
இந்த விலங்குகள் வட்டமான வயிற்றை கொண்டவை. இறைச்சியை ஜீரணம் செய்ய அதிக அளவில், வீர்யமான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்க வல்லவை. சிறிய குடலை உடையவை. இதனால் ஜீரணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு. தவிர இவற்றின் கல்லீரல், அதிகமாக சுரக்கும் யூரிக் அமிலத்தை சமாளிக்க வல்லது.

மனிதன் கடவாய் பற்கள் தாவிர உணவுக்கே ஏற்றவை. மனிதனின் உமிழ்நீர் காரத்தன்மை உள்ளது. தாவிர புரதத்தை ஜீரணிக்க ஏற்றது. மிருக புரதங்கள் உண்டாக்கும் அதிக யூரிக் அமிலத்தை மனிதனின் கல்லீரல் சமாளிக்க முடியாமல் போகலாம். அதிக யூரிக் அமிலம் படிகங்களாக மூட்டுகளில் தேங்கி கௌட் என்ற வலியுடன் கூடிய மூட்டு நோயை உண்டாக்கும்.

சிங்கம், புலி போன்றவற்றை விட மனிதனின் குடல் நீளமானது. தாவிர உணவுகளை உண்டு வாழும் மிருகங்களை விட மாமிசம் உண்ணும் மிருகங்களுக்கு குடல் சிறியதாக இருக்கிறது. ஜீரணத்திற்கு பின் உருவாகும் சக்கைகள், கழிவுகள் எல்லாம் குடலில் தான் வந்து தங்கும். மரக்கறி உணவுகள் சீக்கிரம் கெடுவதில்லை. எனவே அவை நீளமான குடலில் சில நாள்கள் வெளியேற்றப்படாமல் தங்கினாலும் பாதகமில்லை. ஆனால் மாமிசம் சீக்கிரம் அழுகி கெட்டு விடும். பல விஷங்களை உண்டாக்கும். புலி, சிங்கங்கள் போன்றவற்றின் குடல் சிறியதாக இருப்பதால் சீக்கிரமாக சக்கை, கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன. ஆனால் நீட்டமான மனிதனின் குடல் மாமிச உணவுக்காக உபயோகப்படுத்தப்பட்டால் மாமிச கழிவு சக்கை சீக்கிரம் வெளியேறாமல் விஷமாக மாறும். ஆரோக்கியம் கெடும்.

• சைவ உணவு மலிவானது, மென்று சாப்பிட எளிது. பற்கள் இல்லாது போனாலும் சைவ உணவை சாப்பிடலாம்.
• புலி, சிங்கம் போன்ற விலங்குகள் புல்லை தின்னும் மான் போன்றவற்றையே உண்கின்றன. ஒநாய், கரடி, கரி போன்ற இதர மாமிச பட்சிணிகளை விரும்பி உண்பதில்லை.
• மாமிச புரதத்தை ஜீரணிப்பது கடினம்.
• சைவ உணவில், அசைவ உணவை விட, கொழுப்புகள், கொலஸ்ட்ரால் குறைவு. கொழுப்புகள் அதிகமிருந்தால் அதீத பருமன், இதய நோய்கள், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய்கள் உண்டாகலாம். சைவ கொழுப்பை விட அசைவ கொழுப்பு கெடுதலானது. பல்வேறு வியாதிகளை உண்டாக்கும்.
• சைவ உணவு உண்பவர்களுக்கு மார்பக புற்றுநோய், சுக்கில வலகம் மற்றும் இதர புற்றுநோய்கள் பாதிக்கும் வாய்ப்புகள் குறைவு.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 8:03 am

அவா அவாளுக்கு என்ன பிடிக்கிறதோ, அதைச் ஷாப்பிடுங்கோ ...பேஷா ...யார் வேணாண்றாள் ?
பால் ஷாப்பிடலாம், தயிர் ஷாப்பிடலாம், மோர் ஷாப்பிடலாம், வெண்ணை ஷாப்பிடலாம், நெய் ஷாப்பிடலாம், பாலாடைகாட்டி ஷாப்பிடலாம் ...ஆனா இதையெல்லாம் கொடுக்கிற மாட்டை சாப்பிடக்கூடாதா? இது வாதம் இல்லையே...விதண்டாவாதமாகத் தெரியராதே !? சோகம்


இயற்கையாகவே மனிதன் மாமிச பட்சிணியாக படைக்கப்படவில்லை.
அவனது உடல் வாகு தாவர உணவுகளை உண்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. மாமிசத்தையே உணவாக கொண்டு விலங்குகளுக்கு உள்ள கூரான வலுவான நகங்கள், மாமிசத்தை கிழித்து உண்ண உதவும் கோரைப்பற்கள் மனிதனுக்கு இல்லை.
சிங்கம், புலி போன்ற விலங்குகளின் உமிழ் நீர் அமிலத்தன்மை அதிகமானது. உண்ணும் பிராணிகளின் புரதங்களை ஜீரணிக்கவல்லது.
இந்த விலங்குகள் வட்டமான வயிற்றை கொண்டவை. இறைச்சியை ஜீரணம் செய்ய அதிக அளவில், வீர்யமான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்க வல்லவை. சிறிய குடலை உடையவை. இதனால் ஜீரணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு. தவிர இவற்றின் கல்லீரல், அதிகமாக சுரக்கும் யூரிக் அமிலத்தை சமாளிக்க வல்லது.

Bushmen of Kalahari ஆபிரிக்க இன மக்களைக்குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களோ? அவர்களின் வயிற்றின் தன்மையும், உணவு சேமிக்கும் முறையும், ஜீரணமாகும் முறையும் பற்றி அறிந்துகொள்ளுங்கள். துந்திரப் பிரதேசத்தில் உள்ள எஸ்கிமோக்களின் உணவு என்ன என்பதையும், அவர்களிடம் உங்களின் வாதம் எடுபடாது என்பதையும் அறியுங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 8:15 am

அகிலன் wrote:
இளமாறன் wrote:கேட்க நல்லா தான் இருக்கு ...ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே சோகம்
மாமிச உணவை முழுமையாகக்கைவிடாவிட்டாலும் முடிந்த அளவு குறைக்கலாம்தானே இளமாறன்? நானும் முற்றாகவிடமுயாமல் மாமிசத்தை குறைந்த அளவே எடுக்கிறேன்.
இங்கு ஃபிரான்ஸ் வாழ்க்கை உங்களுக்கும் தெரியும்தானே.

அப்புறம் என்ன இங்கே எங்களுக்கு மட்டும் உபதேசம்? முதலிலேயே நம்ம தம்பி கேசவன் சாரோடு ஒரு நீண்ட பெரிய விவாதம் நடத்தி முடித்துள்ளோம். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by கே. பாலா Sat Mar 03, 2012 8:21 am

அவா அவாளுக்கு என்ன பிடிக்கிறதோ, அதைச் ஷாப்பிடுங்கோ ...பேஷா ...யார் வேணாண்றாள் ?
பால் ஷாப்பிடலாம், தயிர் ஷாப்பிடலாம், மோர் ஷாப்பிடலாம், வெண்ணை ஷாப்பிடலாம், நெய் ஷாப்பிடலாம், பாலாடைகாட்டி ஷாப்பிடலாம் ...ஆனா இதையெல்லாம் கொடுக்கிற மாட்டை சாப்பிடக்கூடாதா? இது வாதம் இல்லையே...விதண்டாவாதமாகத் தெரியராதே !? சோகம்
யார் வேண்டுமானாலும் எதையும் திங்கலாம் .....யாரையும் திருத்தவோ , கருத்தை திணிக்கோ ....தேவையில்லை...அவசியமும் இல்லை.....எனது கருத்தைதான் சொன்னேன்
அதற்க்கு குறுப்பிட்ட "ஜாதியினர்" பாழையில் இங்கே கேலி என்ன வேண்டிக்கிடக்கிறது கூடாது!


Last edited by கே. பாலா on Sat Mar 03, 2012 8:29 am; edited 4 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by கே. பாலா Sat Mar 03, 2012 8:25 am

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
252.
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
253.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
254.
பொருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
255.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
256.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
257.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
258.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
259.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
260.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by சிவா Sat Mar 03, 2012 8:42 am

பசும்பால் குடிப்பதால் மாடு சாப்பிடுவதில் தவறில்லை. அப்படியென்றால் தாய்ப்பாலும் குடித்திருக்கிறோமே? சோகம்


மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 10:11 am

கே. பாலா wrote:
அவா அவாளுக்கு என்ன பிடிக்கிறதோ, அதைச் ஷாப்பிடுங்கோ ...பேஷா ...யார் வேணாண்றாள் ?
பால் ஷாப்பிடலாம், தயிர் ஷாப்பிடலாம், மோர் ஷாப்பிடலாம், வெண்ணை ஷாப்பிடலாம், நெய் ஷாப்பிடலாம், பாலாடைகாட்டி ஷாப்பிடலாம் ...ஆனா இதையெல்லாம் கொடுக்கிற மாட்டை சாப்பிடக்கூடாதா? இது வாதம் இல்லையே...விதண்டாவாதமாகத் தெரியராதே !? சோகம்
யார் வேண்டுமானாலும் எதையும் திங்கலாம் .....யாரையும் திருத்தவோ , கருத்தை திணிக்கோ ....தேவையில்லை...அவசியமும் இல்லை.....எனது கருத்தைதான் சொன்னேன்
அதற்க்கு குறுப்பிட்ட "ஜாதியினர்" பாழையில் இங்கே கேலி என்ன வேண்டிக்கிடக்கிறது கூடாது!
மன்னிக்கவும் பாலா அவர்களே....நான் கேலியாக எழுதியது உண்மைதான். அது உங்களை வருத்தியிருந்தால் அதர்க்காக வருந்துகிறேன்.
உண்மையில் சொல்லப்போனால், இதுபோன்ற பதிவுகளால் என்னைப்போன்ற தினமும் புலால் உண்ணுபவர்கள் மனம் மிகவும் பாதிக்கப்படுகிறது. சைவ உணவு உண்ணுபவர்கள் நல்லவர்கள் போலவும் மாமிச உணவு உண்ணுபவர்கள் கெட்டவர்கள் போலவும் ஒரு மன நிலை உருவாக்கப்படுகிறது.

நண்பர்கள் முகைதின், பானு போன்றவர்கள் நல்ல மாமிச உணவு செய்வது குறித்து திரியை ஆரம்பிப்பார்கள். உடனே நம்ம தம்பி கேசவன் சார் அங்கே வந்து
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். சோகம்

என்ற இந்த குறளை பின்னூட்டம் இட்டு சோகத்தோடு இருப்பது போன்றும், அதிர்ச்சி அடைந்தவர் போன்றும் emoticon களை காட்டுவார். இது அடிக்கடி நடந்தது. ஒருமுறை தம்பி சார்லெஸ் சும், நானும் மற்றவர்களும் நீண்ட விவாதத்தை அவரிடம் நடாத்தினோம்.
அதன்பின்னர் இந்தத் திரி.

சைவ உணவை உயர்த்தியும், புலால் உணவைத் தாழ்த்தியும் பதிவுகள் வரும்போது என்னைப்போன்ற அசைவ உணவுப் பிரியர்களுக்கு மிகுந்த மன வருத்தமும், சஞ்சலமும் சமாதானமின்மையும் உண்டாகிறது. இதை சைவ உணவுப் பிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்வது எல்லாமே திருட்டுத் தொழில் தான். இதில் நல்ல திருடன், கேட்ட திருடன் என்ற பாகுபாடு ஏன்? தயவுசெய்து சிந்திக்க வேண்டுகிறேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by உதயசுதா Sat Mar 03, 2012 10:14 am

நான் இந்த ஆட்டத்து வரலை.நான் சைவம். என் வூட்டுக்காரரு அசைவம்
அவரையே ஒண்ணும் சொல்ல முடியலை.மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்றது


மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Uமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Dமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Aமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Yமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Aமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Sமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Uமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Dமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Hமாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 2 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum