ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

+6
செல்ல கணேஷ்
பாலாஜி
பிஜிராமன்
இரா.பகவதி
சதாசிவம்
மகா பிரபு
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 9:35 am

வணக்கம் நண்பர்களே,

நுண்ணறிவுத் தகவல்கள் பகுதியில் அடுத்து நாம் இங்கே காண இருக்கும் பகுதி அணுசக்தி ஆகும். இது இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான மற்றும் அறிய வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்காது. அணுசக்தி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் தேவைகளையும், அதன் விளைவுகளையும் நாம் இங்கே காண இருக்கிறோம்.

இதில் உங்களுக்கு எழும் ஐயங்களை தயங்காமல் கேட்கும் போதுதான் இந்த திரி முழு வெற்றியடையும். என்னால் இயன்றவரை இங்கே பதில் அளிக்கிறேன். அண்ணன் சதாசிவம் அவர்கள் கண்டிப்பாக நல்ல வழிகாட்டுதலை இந்த திரியில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அணுவை பற்றிய பகுதி ஒரு கடல் போன்றது. இதை பற்றிய ஓரளவு அறிவை பெறுவதே இந்த திரியின் நோக்கமாகும்.

இந்த திரி தொடர்பான ஐயங்கள், மாற்றுக் கருத்துக்கள் மற்றும் பதில்களைத் தவிர்த்து, தேவையற்ற விவாதங்கள் மற்றும் பாராட்டுகளை தயவு செய்து தவிர்க்கவும். அவ்வாறு நிகழுமானால் அவை முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

இத்திரியின் நோக்கம், மற்றும் விதிகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


Last edited by மகா பிரபு on Wed Feb 29, 2012 1:50 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 9:49 am

அணுசக்தி அறிமுகம்:


நமது நாட்டில் ஆற்றல் தேவைகள் என்பது அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் ஆதாரங்கள் மிக குறைவாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. போதுமான மின் உற்பத்தி வழிகள் இல்லாமல் இருப்பதால் தான் நம் தமிழகத்தில் பயங்கர மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

புதைபடிவு எரிபொருள்கள் (நிலக்கரி) மிக குறைவானவை. அவையும் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. சூரிய ஆற்றலை முறையாக பயன்படுத்த நாம் இன்னும் முறையாக கற்று கொள்ளவில்லை. காற்று, அலைகள் ஆகியவை ஒரு பெரிய ஆற்றல் மூலங்கள் என்றாலும் அவற்றால் உலக அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. புனல் மின் நிலையங்கள் மட்டுமே நம் மின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில் அணுசக்தியானாது ஒரு மிக பெரிய ஆற்றல் ஆதாரமாக காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள அணுக்கருவின் ஆற்றல் ஆனது, அதே அளவுள்ள புதைபடிவு எரிபொருளில் உள்ள ஆற்றலை விட பன்மடங்கு அதிகமாகும்.

உதாரணமாக 1 கிகி யுரேனியத்தில் உள்ள ஆற்றல், 3400 டன் நிலக்கரியில் உள்ள ஆற்றலுக்கு சமமாகும்.

இனி வரும் பகுதிகளில் அணுசக்தியை பற்றி முழுமையாக காண்போம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by சதாசிவம் Tue Feb 28, 2012 10:09 am

வருக வருக பிரபு, இன்றைக்கு மக்கள் அறிய வேண்டிய அறிவியல் தலைப்பை எடுத்தமைக்கு பாராட்டுகள் . கேள்வியை உறவுகள் தொடரட்டும் , பதிலை தொடர என்னால் இயன்ற தோள் கொடுக்கிறேன்.


சதாசிவம்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 10:25 am

மிக்க நன்றி சதாசிவம் அண்ணா.

இந்த அணுசக்தியை பற்றி நாம் முழுமையாக அறிய கீழ்காணும் சில அடிப்படை தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.


அணு (Elements :


ஒரு தனிமத்தில் (Elements) உள்ள மிகச்சிறிய, பிரிக்க இயலாத துகளே அணு எனப்படுகிறது. தனிமங்களை இதைவிட சிறிய அளவாக, அவற்றின் தனிப்பட்ட அடையாளம் நீங்காமல் பிரிக்க முடியாது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவை.

அணுவின் உட்கூறுகள்:

ஒரு அணுவானது கீழ்கண்ட உட்கூறுகளை கொண்டுள்ளது.

1. புரோட்டான்
2. எலெக்ட்ரான்
3. நியூட்ரான்

படம்: நைட்ரஜனின் அணு அமைப்பு

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Anu1

• புரோட்டான்:

புரோட்டான் நேர்மின்சுமை உடையது. இது அணுவின் உட்கருவில் அமைந்துள்ளது. உட்காரு என்பது அணுவின் மையபகுதி ஆகும்.

• எலெக்ட்ரான்:
எலெக்ட்ரான் எதிர்மின்சுமை உடையது. இது அணுவின் உட்கருவை வெளிவட்ட பாதையில் சுற்றி வருகிறது.

• நியூட்ரான்:

நியூட்ரான் அணுவின் உட்கருவில் உள்ளது. இது மின்சுமையற்று காணப்படும். அதாவது நடுநிலை தன்மை வாய்ந்தது.

இவற்றை தவிர பல அடிப்படை துகள்கள் உட்கருவில் உள்ளது. அவற்றில் சில நிலையானவை , சில நிலையற்றவை.

நிலையானவை:

எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், ஆண்டி புரோட்டான்கள், பாஸிட்ரான்கள், நியூட்ரினோ, போட்டான்கள், மற்றும் கிராவிட்டான்கள் ஆகியவை நிலையானவை.

நிலையற்றவை.


நியூட்ரான்கள், மீசான்கள் மற்றும் V- துகள்கள் ஆகியவை நிலையற்றவை.


கூடுதல் தகவல்கள்:

கண்டுபிடிப்பாளர்கள்:


• நியூட்ரான் : ஜேம்ஸ் சாட்விக் (1932)
• புரோட்டான்: ரூதர்போர்ட் (1918)
• உட்கரு : ரூதர்போர்ட்
• எலெக்ட்ரான்: JJ. தாம்சன் (1897)
• அணு: ஜான் டால்ட்டன்


Last edited by மகா பிரபு on Tue Feb 28, 2012 10:53 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by சதாசிவம் Tue Feb 28, 2012 10:32 am

நன்றி பிரபு,
உங்கள் முன்னுரைக்குச் சில புள்ளி விவரங்கள்.
உலக சக்தி (energy) தேவையில்
பெட்ரோலியம் எண்ணைப் பொருள்கள் - 38 %
பெட்ரோலிய வாயுப் பொருள்கள் - 23%
நிலக்கரி - 26 %
புனல் மின் சக்தி - 6%
அணு மின் சக்தி - 6%
மற்றவை - 1 % (சூரியன், காற்று, கடலலை, புவி வெப்பம் போன்றவை )

2004 ஆம் ஆண்டு அமரிக்கா நடத்திய சக்தி புள்ளி விவரப்படி 2030 ஆம் ஆண்டில் சக்தியின் தேவை 57% சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தேவைக்கு சக்தி கிடைக்கும் வழிமுறைகள் மேலும் வளப்படுத்தவேண்டும் என்றும், 6% இருக்கும் அணுசக்தி 9% மாறும் போது இதன் சக்தித் தேவையை சமாளிக்கலாம் என்றும் கருத்து கணிக்கப்பட்டது.

இதன் மூலம் அனுசக்தியின் தேவையும், அதன் வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் உணரலாம்.



perநுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Energy%20Consumption%20chart


சதாசிவம்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 11:17 am

நிலையானவை, நிலையற்றவை., எவ்வாறு கூறுகிறீர்கள் மேலும் புனல் அனல் இரண்டும் ஒரே அர்த்தமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 11:27 am

இரா.பகவதி wrote:நிலையானவை, நிலையற்றவை., எவ்வாறு கூறுகிறீர்கள் மேலும் புனல் அனல் இரண்டும் ஒரே அர்த்தமா
நிலையானவை என்பது எப்பொழுதும் நிலையாக இருக்கக்கூடியது. ஆனால் நிலையற்றவை என்பது அணுக்கரு வினைகளின் போது தோன்றி, பின் சில மாற்றங்களுக்கு பின் மறையக்கூடியது.


அனல் என்பது நிலக்கரியை எரித்து அதன் மூலம் வரும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது. அனல் மின் உற்பத்தி நெய்வேலியில் உள்ளது.

புனல் என்றால் நீர். அதாவாது மேட்டூரில் தயாரிக்கப்படும் மின்சாரம் இவ்வகையை சார்ந்தது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 11:34 am

எலக்ட்ரான்கள், நிலயானவைகளா ?
மேலும் , ஆண்டி புரோட்டான்கள், பாஸிட்ரான்கள், நியூட்ரினோ, போட்டான்கள், மற்றும் கிராவிட்டான்கள் ஆகியவை பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 4:30 pm

எலக்ட்ரான்கள், நிலயானவைகளா ?

எலக்ட்ரான்கள் ஒரு வினை நிகழும் பொது ஒரு தனிமத்தில் இருந்து மற்றொரு தனிமத்திற்கு பரிமாறப்படுகிறது. அவை அவ்வாறு பரிமாறி கொண்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் அணுவை விட்டு வெளியேறுவதில்லை. அதனால் தான் இவை நிலையானது என்று சொல்கிறோம்.

ஆண்டி புரோட்டான்கள், பாஸிட்ரான்கள், நியூட்ரினோ, போட்டான்கள், மற்றும் கிராவிட்டான்கள் ஆகியவை பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா

ஆண்டி புரோட்டான்கள் என்பவை புரோட்டான்களுக்கு எதிரானவை. அதாவது புரோட்டன் நேர்மின்சுமை உடையது. ஆனால் இந்த ஆண்டி புரோட்டான்கள் எதிர்மின் சுமை உடையது. ஆனால் இரண்டின் நிறையும் (Mass) சமமாகவே இருக்கும்.

பாஸிட்ரான்கள் என்பவை எலக்ட்ரான்களுக்கு எதிரானவை. அதாவது எலக்ட்ரான் எதிர்மின் உடையது. ஆனால் இந்த பாஸிட்ரான்கள் நேர்மின்சுமை சுமை உடையது. ஆனால் இரண்டின் நிறையும் (Mass) சமமாகவே இருக்கும்.

போட்டான்கள் என்பது γ என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. இது அணுக்கரு வினைகளின் பொது உருவாகும் மின்காந்த அலை ஆகும். இது மின்சுமையற்றது. நிறையற்றது.


கிராவிட்டான்கள் என்பது இதுவும் மின்சுமைய்யற்ற, நிறையற்ற ஒரு அடிப்படை துகள். G எனும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது.


நியூட்ரினோ என்பது மிக சிறிய நடுநிலையான ஒரு துகள் ஆகும்.

மேற்கண்ட அனைத்து துகள்கலுமே அடிப்படையான சிறிய துகள்களாகும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by பிஜிராமன் Tue Feb 28, 2012 6:56 pm

எனக்கு அணுவைப் பற்றி அவ்வளவாக தெரியாது, இந்த திரியை பயன்ப்டுத்திக் கொள்கிறேன். வெளியிலிருந்தும் படித்து அறிந்து பதிகிறேன் அண்ணா. என்னுடைய சந்தேகம். கீழே....

தனிமங்களின் , நியூட்ரான், ப்ரோட்டான் மற்றும் எலக்ட்ரான் இன் அளவின் காரணமாக தான் அவை கதிர் வீச்சு தன்மை கொண்டவையாக உள்ளதா, அல்லது தனிமங்களின் கதிர் வீச்சு தன்மைக்கு வேறு காரணம் உள்ளதா அண்ணா....


எனக்கு தெரிந்த ஒரு தகவல்

அணுவில் எந்த அளவு எலக்ட்ரான் இருக்கிறதோ அந்த அளவு ப்ரோட்டான் இருக்கும், அதே போல் வழக்கமாக எந்த அளவு நியூட்ரான் இருக்கிறதோ அந்த அளவு ப்ரோட்டான் களும் இருக்கும்.

அதேபோல், ஒரு அணுவில் , ஒரு ப்ரோடானை சேர்த்தோம் என்றால், அது ஒரு புதிய அணுவை உண்டாக்கும்.

அதே சமயம் ஒரு நியூட்ரான் ஐ சேர்த்தோம் என்றால், அது அந்த அணுவின் ஐஸோடோப்பை உருவாக்கும், அது அந்த அணுவின் வலிமையான ஒன்றாக இருக்கும்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Empty Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum