புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
90 Posts - 71%
heezulia
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
255 Posts - 75%
heezulia
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_m10இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 12:52 pm

“இரட்சிப்பினால் விடுவிக்கப்படுதல்”

ஒரு புதிய உடன்படிக்கையின் மூலமாக

வேதாகமத்திலுள்ள உடன்படிக்கைகள்


உடன்படிக்கை“ என்பது இரு சாரார் சில குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களையோ அல்லது நிபந்தனைகளையோ நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுத்து, செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும்.

1
“நிபந்தனைக்குட்பட்ட” உடன்படிக்கை என்றால், இருவரில் ஒருவர் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் ஒன்றைச் செய்வதாக மற்றவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் ஆகும். “நீ அதைச் செய்தால் நான் இதைச் செய்வேன்”.

2
“நிபந்தனையற்ற” உடன்படிக்கை என்றால் எந்த நிபந்தனையுமில்லாத வாக்குத்தத்தம் ஆகும். “நீ என்ன செய்தாலும், அல்லது செய்யா விட்டாலும், நான் இதைச் செய்வேன்”.

வேதாகமத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பல சுவாரசியமான, முக்கியமான உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன:

1. ஏதேனில் - தேவனுக்கும் மனுக்குலத்துக்கும் இடையே

2. ஆதாமோடு - தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே

3. நோவாவோடு - தேவனுக்கும் நோவாவுக்கும் இடையே

4. ஆபிரகாமோடு - தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே

5. மோசேயோடு (பழையது) - தேவனுக்கும் .ஸ்ரவேலருக்கும் இடையே

6. தாவீதோடு - தேவனுக்கும் தாவீதுக்கும் இடையே

7. புதிய ஏற்பாடு - தேவனுக்கும் சபைக்கும் இடையே

“ஏற்பாடு” என்பதற்கும் “உடன்படிக்கை” என்பதற்கும் அர்த்தம் ஒன்றே.

வேதாகமம் பழைய மற்றும் புதிய “ஏற்பாடுகளாகப்” பிரிக்கப்பட்டிருப்பதை
நாம் அறிவோம்.

திட்டவட்டமாக குறிப்பிட வேண்டுமானால், “பழைய ஏற்பாடு” தேவனுடைய நியாயப் பிரமாணத்தை அடிப்படையக் கொண்டிருந்த, மோசேயின் உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

“புதிய ஏற்பாடு” - தேவனுடைய கிருபையை அடிப்படையாகக் கொண்ட புதியதும் இன்னும் சிறப்பானதுமான உடன்படிக்கையை குறிப்பிடுகிறது.

இப்போது இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் விளக்கமாகப் காண்போம்.

தொடரும்...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 1:16 pm

“புதிய உடன்படிக்கை பழையதுக்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது”


இரட்சிப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பழைய மற்றும் புதியஉடன்படிக்கைகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். நிழலுக்கும் சூரிய ஒளிக்கும் உள்ளது போன்று பெரிய வேறுபாடு இருக்கிறது. எபிரேய நிருப ஆசிரியர் அதை இவ்வாறு விளக்குகிறார்: “இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

“அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேட வேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வரும்படிக்கு, நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப் போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலை நிற்கவில்லையே. நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்”.

“ஏனெனில், நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்”.

“புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்து போகக் காலம் சமீபித்திருக்கிறது” (எபிரேயர்: 8:6-10,12,13).

தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 1:32 pm

“புதிய உடன்படிக்கை: நியாயப் பிரமாணத்தை அல்ல, அன்பை அடிப்டையாகக் கொண்டது”

பழைய உடன்படிக்கையின் நியாயப் பிரமாணங்களும் கட்டளைகளும் தேவனால் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டன. நியாயப்பிரமாணம் பரிசுத்தமானதாக இருந்தாலும், அது அன்பற்றதாகவும், கடினமானதாகவும், சுமக்கப் பாரமானதாகவும் இருந்தது. “உள்ளான மனிதனால்” நிறைவேற்ற முடியாதவைகளை எப்போதுமே எதிர்பார்த்து, ஒருவரின் வாழ்க்கைக்கு வெளியே எப்போதுமே அது நின்றது.

இதற்கு மாறாக, புதிய உடன்படிக்கை தேவ ஆவியானவரின் ஒரு கிரியையாகும்; அவர் தமது சித்தத்தை நமது இருதயங்களிலும் சிந்தைகளிலும் எழுதி வைக்கிறார். மேலும், அன்பின் பிரமாணத்தில் தேவனுடைய சித்தத்தை தொகுத்து கூற முடியும்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை.... உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக: (மாற்கு: 12:30,31).

ஆம், புதிய உடன்படிக்கைக்குப் பின்னனியாக தூண்டுதல் அன்பாகவே இருக்கிறது. “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” (யோவான்: 14:15) என்று இயேசுவானவர் கூறியிருக்கிறார். மேலும், “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூறுகிறோம்” (1யோவான்: 4:19).

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 12, 2012 7:15 am

“ஒரு புதியஇருதயத்துக்கான த‌ேவை”


பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை தாவீதின் ஒரு சங்கீதம் தெளிவாக வெளிப்படுத்தகிறது. பத்சேபாளுடன் அவன் விபசாரக் குற்றம் புரிந்த பிறகு இந்த சங்கீதம் எழுதப்பட்டது.

தனது பாவம் தேவனுடைய இருதயத்துக்கு அதிக வேதனையைக் கொண்டு வந்திருப்பதை தாவீது மெய்யாகவே கண்டு கொண்டபோது அவன் ஆழ்ந்த மன வருத்தத்துடன் மனந்திரும்பினான். அவன் இருதய வேதனையோடு கர்த்தரிடம் இரக்கத்துக்காகவும் மன்னிப்புக்காகவும் கதறினான்.

பிறகு அவனுடைய ஜெபம் தீர்க்கதரிசன குறிப்பை உள்ளடக்கியதாக மாறியது. ஒரு நாள் சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு புதிய உடன்படிக்கையாக எழுதப்படப் போகும் மானிட இரட்சிப்பைக் குறித்து அது குறிப்பிடுறது. அந்த அருமையான வார்த்தைகளை கவனியுங்கள்.

“தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும், என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னை சுத்திகரியும்.

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்க‌ே விரோதமாக நான் பாவஞ் செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், இதை அறிக்கையிடுகிற‌ேன்.

“இதோ, நான் தூ்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந் தரித்தாள். இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்... தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்கீதம்: 51:1-6,10).

தாவீத பெற்றுக் கொண்ட தீர்க்கதரிசன உள்ளறிவு தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்ய விருமபிய புதிய கிரியையைக் குறித்ததாக இருந்தது. ஒரு மொழிப்பெயர்ப்பு “புதிய இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” என்று கூறுகிறது.

தேவனுடைய நியாயப் பிரமாணம் நல்லது. ஆனால், தன் இருதயம் பொல்லாதது என்பதை தாவீது தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான் இரண்டையும் ஒன்றாகப் பொருத்த அவனால் முடியவில்லை.

தனது சொந்த இருதயத்திலும் இதே பிரச்சினை இருப்பதை உணர்ந்த பவுல் அப்போஸ்தலன் “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ” என்று கதறினார்.(ரோமர்: 7:24).

தொடரும்...







சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 7:54 am

“பாவத்தோடு நம்முடைய போராட்டம்”


தாவீதும் பவுலும் மட்டுமே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கவில்லை என்று நாம் அனைவருமே ஒப்புக் கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் பாவத்தின் பிரசன்னம், சக்தி, பழக்கம் இவைகளைக் குறித்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

மேலும், நம்மால் ஒரு போதும் நியாயப் பிரமாணத்தின் “கற்பலகைகளிலிருந்து” ஆறுதலைப் பெற முடியாது. நியாயப்பிரமாணம் பரிசுத்தமாயும் நன்மையாயும் நீதியுமாயும் இருப்பது உண்மைதான்.(ரோமர்: 7:12). ஆனால், நம்முடைய இருதயமோ பாவத்தால் நிறைந்ததாகவும் உண்மையில்லாததாகவும் இருக்கிறது. நமது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இந்த உண்மைகளை அறிந்திருக்கிறோம் அல்லவா?

தேவனுடைய நல்ல நியாயப் பிரமாணம் நியாயந்தீர்க்கிறது; ஆனால், மனிதனுடைய தீய இருதயத்துக்கு அதனால் எந்த உதவியும் செய்ய முடியாது. எனவேதான், நாம் அனைவரும் தாவீதைப்போல நமது உள்ளான பகுதிகளில் ஒரு தீவிரமான கிரியை‌ச் செய்யும்படி ஆண்டவரை நோக்கிக் கதறுகிறோம்: “தே‌வனே, ஒரு புதிய சுத்தமான இருதயத்தை என்னில் சிருஷ்டியும்”.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 8:16 am

“எரேமியா பழைய உடன்படிக்கைக்கு அப்பால் பார்க்கிறார்”


தாவீதக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் எரேமியா தீர்க்கதரிசி இதே காரியத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் புதிய உடன்படிக்கையை தேவனுடைய கிருபையின் உள்ளான கிாியையாகக் கண்டார். எனவே, அவர் பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளுக்கு இடையேயுள்ள திட்டவட்டமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.

நாம் இந்த வார்த்தைகளுக்கு கவனமாக செவி கொடுக்க வேண்டும். இதே வார்த்தைகள‌ே எபிரேய நிருபம் 8 ம் அதிகாரத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் கண்ட கொள்வீர்கள். எரேமியாவின் வார்த்தைகளில் முதலாவது காண்போம்:

“இதோ. நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களைஎகிப்து தேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில், நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவா்கள் மீறி அவமாக்கிப் போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது: நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்தில‌ே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா: 31:31-33).

எசேக்கியேல்: 36:26,27 - “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்கு கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்”

தொடரும்....


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 8:35 am

பழைய உடன்படிக்கை: கற்பலகைகளின் மீது எழுதப்பட்டது”

தேவன் தமது வல்லமையினால் தமது மக்களை எகிப்திலிருந்து வெளியே புறப்பட்டு வருமபடி செய்தபோது, சீனாய் மலையில் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்த கொண்டார் என்று எரேமியா குறிப்பிடுகிறார் (யாத்திராகமம் - 18 லிருந்து 32 அதிகாரங்கள் வரை).

அவர்களை ஆசாரியர்களின் இராஜ்யமாக, ஒரு பரிசுத்த தேசமாக, ஒரு தனிச்சிறப்பான மக்களாக ஆக்குவதாக தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் அருளினார். ஆனால், அவர்கள் அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்.

“...கர்த்தர் உங்களோடே பேசினார்...பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து...” என்று மோசே பின்னர் அவர்களுக்கு நினைவுப்படுத்தினார்.(உபாகமம்: 4:12,13; 5:1-27 ஆகிய வசனங்களை கவனமாக வாசித்துப் பாருங்கள்).

அவா் தமது பி‌ரமாணங்களை இரண்டு கற்பலகைகளில் எழுதி ‌ மோசேயிடம் கொடுத்தார். அக்கினி, புகை, இடிமுழக்கம், பூமியதிர்ச்சி இவைகளின் மூலமாக உடன்படிக்கையின் முக்கியத்துவம் காட்டப்பட்டது.

இஸ்ரவேலர்கள் அதிகமான தர்க்கத்துக்கு உள்ளானார்கள். ஆனால், கொஞ்ச காலத்துக்கு மட்டுமே அது நீடித்திருந்தது. மோசே மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன்பாகவே அவர்கள் தேவனுடைய பிரமாணத்தை மீறி விட்டார்கள். அவர்கள் எகிப்தில் தாங்கள் கண்டிருந்தபடி தங்க விக்ரகத்தைச் செய்து, அதை ஆராதித்து, அதற்கு முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.

மோசே அவர்கள் செய்து கொண்டிருந்ததைக் கண்டவுடன் கற்பலகைகளைக் கீழே எறிந்து உடைத்துப் போட்டார். அவர்களின் காலடியில் நொறுங்கிக் கிடந்த கற்பலகைகள் அவர்களின் இருதயத்தில் பிரமாணம் மீறப்பட்டதற்கு அடையாளமாக இருந்தது.

தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 4:12 am

“உடன்படிக்கைப் பெட்டி”



மோசே மலையுச்சிக்குத் திரும்பினார். தேவன் தமது கற்பனைகள் எழுதப்பட்ட வேறு இரு கற்பலகைகளை அவாிடம் கொடுத்தார். மறுபடியுமாக மோசே நியாயப்பிரமாணத்தை மக்களிடம் கொண்டு வந்தார்.

பிறகு தேவன் நியாயப்பிரமாணத்தின் கற்பலகைகளைப் பத்திரமாக வைப்பதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்தார். “உடன்படிக்கைப்பெட்டி” உருவாக்கப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தில் “மகா பரிசுத்தஸ்தலம்” என்ற பகுதியில் இது வைக்கப்பட்டது.

உடன்படிக்கைப் பெட்டி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஓர் அருமையான சித்திரமாக இருக்கிறது. அவர் நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாகக் கைக்கொண்டவர். அவர் ஒரு போதும் தவறவில்லை. தேவனுடைய நியாயப்பிரமாணம் எப்போதும் அவருடைய இருதயத்தின் சந்தோஷமாகவும், களிப்பாகவும் இருந்தது. “என் தேவனே, உமக்குப் பிாியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” (சங்கீதம்: 40:8).

பல நூற்றாண்டுகளாக நியாயப்பிரமாணம் கற்பலகைகளிலேயே இருந்தது. இப்போது, முதன் முறையாக, நியாயப்பிரமாணம் ஒரு மனிதனின் உள்ளத்தில் காணப்படுகிறது - மனிதனாகியகிறிஸ்து இயேசு அவரே தெரிந்து கொள்ளப்பட்டவர்; அவர் மூலமாகவே புதிய உடன்படிக்கை வருகிறது.

உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மக்களின் மத்தியில் அவர் தாபரிக்கும் இடமாக இருந்தது. இயேசுகிறிஸ்துவோ உலகிலுள்ள அனைத்து மக்களின் மத்தியிலும் தேவனுடைய பிரசன்னத்தின் ஜீவனுள்ள உடன்படிக்கை பெட்டியானார்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 4:40 am

“பழைய உடன்படிக்கையின் தோல்வி”


பழைய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணம் மனிதரைப் பரிசுத்தமாக்குவதில் தோல்வியுற்றது. அது செய்யலாம், செய்யக் கூடாது என்பவைகளின் பட்டியலாக இருந்து: “நீ இதைச் செய்யலாம்; நீ இதைச் செய்யக் கூடாது”.

மனிதர்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்து, பின்னர் அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ வேண்டியிருந்தது. ஆனால், இது ஒரு முடியாத காரியம் என்பதை பவுல் மிகவும் தெளிவாக விளக்குகிறார். (கலாத்தியர் 2 லிருந்து 4 ம் அதிகாரம் வரை காணலாம்) எந்த மனிதனும் எவ்வளவுதான் முயன்றாலும் நியாயப்பிரமாணத்தை முழுமையாகக் கைக் கொள்ள முடியாது.

நம்மைப் பரிசுத்தமாக்குவது நியாயப்பிரமாணத்தின் நோக்கமல்ல. நாம் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறோம் என்பதை நமக்கு வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாக இருக்கிறது. நாம் என்னதான் செய்தாலும் நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாது என்பதை நியாயப்பிரமாணம் நமக்குக் காட்டுகிறது.

நம்மை இரடசகரிடம் வழி நடத்தவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது: “இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்துகிற உபாத்தியாய் இருந்தது” (கலாத்தியர்: 3:24).

நாம் செய்பவைகளின் மூலம் தேவனுக்கு முன்பாகச் சரியானவர்களாக ஆக முடியாது; நாம் விசுவாசிப்பதன் மூலமாகவே அப்படி ஆக முடியும். நீதிமானாக்கப்படுதல் விசுவாசத்தினாலேயே வருகிறது. கிரியைகளினால் அல்ல! (ரோமர்: 3:21-26 வரை காண்க)

பழைய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணம் தேவன் சித்தம் கொள்வது என்ன?, விருமபுவது என்ன? என்பதைக் கூறும், “வெளியே இருந்து அளிக்கப்படும் அறிக்கையாக” இருந்தது.

என்றாலும், நியாயப்பிரமாணத்தை கைக் கொள்ளுவதற்கான வல்லமையை அதனால் நமக்கு அளிக்க முடியவில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்று நியாயப்பிரமாணம் நமக்குக் கூறியது. ஆனால் அதைச் செய்வதற்கான எந்த வல்லமையையும் நமக்குக் கொடுக்கவில்லை. நாம் எவ்வளவு பலவீனமானவர்கள், எவ்வளவு பாவகரமானவர்கள் என்பதை நமக்குக் காட்டியது. ஆனால், அதன் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நமக்கு எந்த திறனையும் அளிக்கவில்லை.

புதிய ஏற்பாடோ வித்தியாசமாக இருக்கிறது. புதிய உடன்படிக்கையில் தேவன் மக்களிடம் “உங்களுக்கு நீங்களாகவே செய்ய முடியாததை நான் உங்களுக்காக செய்வ‌ேன். வெளிய‌ே உள்ள நியாயப்பிரமாணத்தை நான் எடுத்து, அதை உள்ளே உங்கள் இருதயங்களில் எழுதுவ‌ேன்.”

“இனிமேலும் நீங்கள் வெளியே நியாயப்பிரமாணத்தை நோக்கிப் பார்க்க வேண்டியதில்லை. அதன் பாரத்தை உங்கள் கைகளில் சுமக்க வேண்டியதில்லை. அதை நான் உங்கள் உள்ளான அந்தரங்கத்தில் பதிய வைத்து நீங்கள் என்னுடைய சித்தத்தை செய்வதிலும் என் வழியில் நடப்பதிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி செய்வேன். இனிமேல் என்னுடைய பிரமாணம் வெளியேயிருந்து கட்டளையிடுவதற்கு மாறாக, உள்ளேயிருந்து உங்களை ஆளுகை செய்து, உங்கள் வாழ்க்கைக்கு பலனளிக்கும்.

”மேலும் எனது புதிய உடன்படிக்கைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய பங்கு அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே. இது எனது கிருபை மற்றும் அன்பின் ஈவாக உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது” என்று கூறுகிறார்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 4:53 am

“ஒரு புதிய ஆவிக்கான தேவை”


தேவனால் எவ்வாறு இவ்வளவு அற்புதமான வாக்குத்தத்தத்‌தை காத்துக் கொள்ள முடியும்? அவரால் எப்படி பிரமாணத்தை உயிரற்ற கற்பலகைகளிலிருந்து எடுத்து, மனிதனின் இருதயத்துக்குள்ளும் சிந்தைக்குள்ளும் எழுத முடியும்?

நாம் பதிலைக் காணும்படி, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை காண்போம். இது முக்கியமான காரியமாகும். ஏனென்றால், எசேக்கியேலின் கூடுதலான வெளிப்பாடு இல்லாமல், புதிய உடன்படிக்கை வெறும் கொள்கையாக மட்டுமே இருக்கும்; அது நமது வாழ்க்கையில் யதார்த்தமாகாது.

தேவன் தனக்கு ஒரு சுத்தமான இருதயத்தைக் கொடுப்பதோடு மட்டுமின்றி, தனக்குள் நிலைவரமான ஆவியைப் புதுப்பிக்கும்படியும் தாவீது வேண்டிக் கொண்டான். இப்போது எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைக் கவனிப்போம்:

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்தப் பொட்டு சதையான இருதயத்தை உங்களுக்கு கொடுப்ப‌ேன்.”

“உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும், என் நியாயங்களைக் கைக் கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” (எச‌ேக்கியேல்: 36:26,27).


தொடரும்....


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக