ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

Go down

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!! Empty போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

Post by ராஜ்அருண் Tue Feb 21, 2012 1:24 pm

வணக்கம் நண்பர்களே..! வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருப்பதால், பொருட்களை உற்பத்திசெய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது..

இந்த வகையில் எலட்க்ரானிக் டிஜிட்டல் (Electronic Digital) சாதனங்களின் வரவும் வணிக சந்தையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சாதனங்கள் தற்காலத்தில் குப்பைப் போல குவிந்துகிடக்கிறது.



உதாரணமாக கணினி சார்ந்த பொருட்கள், யு.எஸ்.பி டிரைவ்(USB Flash Drive), மெமரி கார்ட் (Memory Card), செல்போன்கள்(Cell phones) போன்றவைகள் ஏகமாக உற்பத்தி ஆகி வருகின்றன.

இவைகள் நாளும் ஒரு புது தொழில்நுட்பத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதாவது இன்று வாங்கிய புது மாடல்(New Model), அடுத்த நாளே அது பழைய மாடல்(old Model) என்று சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது.

நுகர்வோர்களின் தேவையைக் கருதி இத்தகைய எலக்ட்ரானிக்(Electronic)- டிஜிட்டல் சாதனங்கள்(Digital Device) ஒரிஜினலைப் போன்றே தோற்றத்தில் உள்ள பல போலிகளையும் சந்தையில் வெளியிட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய போலிகளை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவது சீனத் தயாரிப்புகள்தான்.

E Bay என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தில்கூட இத்தகைய போலிகள் மலிந்து கொட்டிக்கிடக்கின்றன.

இத்தகைய போலி பிளாஸ் டிரைவ்கள்(duplicate flash drive), யு.எஸ்.பி(USB_pendrive), மெமரி கார்டுகள்(Memory Card) அனைத்தும் சோனி(Sony),கிங்ஸ்டன்(Kingston) போன்ற பிரபல நிறுவனங்களில் பெயர்களிலேயே கிடைப்பதால் நம்மவர்களும் இதை உண்மையானதென எண்ணி வாங்கிவிடுகின்றனர்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் USB Drive, Memory Card போன்றவற்றைக் கூறலாம்.

குறைந்த விலைக்கே 256GB, 512GB, 640GB என கிடைப்பதால்தான் இதை பலரும் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் உண்மையான ஸ்டோரேஜ் அவ்வளவு இருக்காது. ஒரு 4GB அல்லது 6GB வரைதான் இருக்கும். அதனால் குறிப்பிட அளவிற்கு மேல் கோப்புகளை அதில் சேமிக்கும்போது அதனுடைய செயல்படும் திறன் அப்படியே ஸ்தம்பித்துப் போகும் அல்லது அத்தோடு அதனுடைய வாழ்நாள் முடிந்துவிடும்.

உதாரணமாக 256GB கொள்ளவு கொண்ட ஒரு யூ.எஸ்.பி உங்களிடம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். கணினியில் நிறுவிப் பார்க்கும்போது அதனுடைய கொள்ளவு 256GB என்று காட்டும்.

ஆனால் அது உண்மையல்ல.அவ்வாறு கொள்ளளவை மாற்றிக் காட்டுவதற்கென (அதவாது 256GB) என காட்ட அதில் ஒரு புரோகிராம் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். - பொய்யான தகவல்களை நமக்குக் காட்டும்.

Flash Driver, Memoy Card போலியானதா என கண்டுப்பிடிக்க:

இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு நாம் எளிதாக இத்தகைய போலிகளை கண்டுபிடிக்கலாம்.

மென்பொருளின் பெயர்: H2testw

மென்பொருள் தரவிறக்க சுட்டி:

http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip

இம்மொன்பொருளைப் பற்றிய மேலதிக விவரங்கள் காண சுட்டி:

http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip

இம்மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் USB Flash Drive , Memory card போன்வைகளை முழுவதுமாக எந்த கோப்புகளில்லாமல் செய்து கணினியில் இணைத்துவிட்டு, மென்பொருளில் டார்கெட்டாக மெமரி கார்ட் அல்லது பிளாஸ் டிரைவ்வை கொடுங்கள்.

சிறிய நேர சோதனைக்குப் பிறகு உங்களுடைய பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்ட் போலியானதா.. அல்லது உண்மையானதா.. உண்மையான கொள்ளவு எவ்வளவு என்பதை துல்லியமாக காட்டிவிடும்.

சோதனையின் முடிவில் Test finished without errors என்று காட்டினால் உங்களது பிளாஷ் டிரைவ், Memory card உண்மையானது என கண்டுகொள்ளலாம்.

The media is likely to be defective என்ற செய்தி கிடைத்தால்...

போலியானது என்பது உறுதியாகிவிடும். எனவே இத்தகை கணினி சார்ந்த சாதனங்களை வாங்கும்போது நன்றாக தெரிந்தவர்களிடம் வாங்குவது ஒன்றேதான் இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும். பணமும் விரயமாகாது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என வாங்கிவிட்டு பிறகு அவதிக்குள்ளாவது நாம் தான். கவனம் நண்பர்களே..!! எச்சரிக்கையாக இருப்பது என்றுமே நம் கையில்தான் இருக்கிறது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்..!!

நன்றி

தங்கம் பழனி
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum