புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல்  Poll_c10காதல்  Poll_m10காதல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Feb 20, 2012 6:38 am

1973

"இதை கேட்ககூடாதுன்னு தான் இருந்தேன். மனசு கேட்கலை" குப்புசாமி தயங்கினார்.

"சும்மா கேளுங்க" என்றான் சதீஷ். குடித்து முடித்த சிகரெட்டின் அடிப்பகுதியில் சுட்டுவிரலை வைத்து சுண்டினான்.அது சுழன்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது.உள்ளே இருந்து அதை பார்த்த லேகாவின் உடல் சிலிர்த்தது.

"சிகரெட்டை இந்த மாதிரி சுண்டுபவர்கள் காரியம் ஆனபின் யாரையும் இதுபோல் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள்" என லேகாவின் தோழி சொல்லியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

"இல்லை...உங்களுக்கு படிப்பு இருக்கு, லட்சணம் இருக்கு. நல்ல குடும்பம். இத்தனை இருந்தும் ஏன் உங்க குடும்பத்தை பகைச்சுகிட்டு ஒரு விதவைபெண்னை மறுமணம் செய்ய முன்வரணும்?"

"உங்க பெண்ணை எங்க அக்கா வீட்டு விஷேசத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது.அதனால் தான்"

"என் சொத்து, வியாபாரம், நிலம், நீச்சு இதெல்லாம் காரணமில்லையே?"

"இல்லை" என்றான் சதீஷ் பளிச்சென.

"பொய், பொய்" என லேகாவின் உள்மனம் எச்சரித்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் பெண்கள் தகப்பன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசி பழக்கமில்லை.

1975

"இந்தாங்க மாமா...பணம் சரியா இருக்கான்னு பாத்துகுங்க" சதீஷ் பணகட்டை மேஜையில் எறிந்தான்.

"ஏது மாப்பிள்ளை காசு?" குப்புசாமி எண்ண துவங்கினார்.

"என் தம்பி பணத்தை கையாடிட்டதாவும், கருப்பு பணம் என்பதால் போலிசுக்கு போகமுடியலைன்னும் சொன்னீங்களே?அதான் இது.."

"அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?"

"ஹாலில் கட்டி வெச்சு பொண்டாட்டி, குழந்தைகள் முன்னாடி நாலு சாத்து சாத்தினா வராத பணமும் உண்டா?"

"அய்யோ..போலிஸ், கேசு.."

"எதுவும் வராது" என்றான் சதீஷ். சிரித்தான்.

"ஆனா உங்க சொந்த தம்பியை போட்டு அடிக்க எப்படி மனசு வந்தது?"

"பிசினஸ்னு வந்துச்சுன்னு வையுங்க. அண்ணன் தம்பி என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை"

அவன் முகம் வில்லன் முகம் போல மாறியது.

உள்ளே வந்த லேகாவுக்கு மீண்டும் உடல் நடுங்கியது.."அண்ணன், தம்பி என்பதை பார்க்கலை என்பதுபோல் மனைவி, மாமனார் என்பதையும் பார்க்காவிட்டால்..."

லேகாவை பார்த்ததும் சதீஷ் முகத்தில் இருந்த வில்லன் முகம் மறைந்தது. கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.

1977

"உங்க மகளுக்கு கர்ப்பபையில் கோளாறு.அவருக்கு இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை"

மருத்துவர் சொல்லி முடித்ததும் குப்புசாமி அழ துவங்கினார்.

"மாப்பிள்ளைக்கு.."

"எந்த குறையும் இல்லை."

அப்போதெல்லாம் இதற்கு ஒரு தீர்வுகள் தான் இருந்தன. ஒன்று மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்வது அல்லது தத்து எடுப்பது.

சதீஷ் இரண்டையும் நிராகரித்தான்.

"முட்டாள்தனமா பேசாதீங்க மாமா.ஜோதி எனக்கு தங்கச்சி மாதிரி.இப்ப குழந்தை இல்லைன்னா என்ன?நாங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கு இன்னொருத்தர் குழந்தையா இருந்துட்டு போறோம்"

எமோஷன் இல்லாமல் ஒப்பிப்பது போல் வசனம் பேசினான்.சிகரெட்டை மீண்டும் அடிபகுதியில் கைவைத்து சுண்டி எறிந்தான்.

ஏனோ லேகாவின் உடல் மீண்டும் நடுங்கியது.

1980

அவர்கள் வீட்டுவாசலில் ஒரு குழந்தை வைக்கபட்டிருந்தது. அழுதுகொண்டிருந்த குழந்தையை லேகாவின் அம்மா உள்ளே எடுத்து வந்தார்.

"அனாதை குழந்தை மாதிரி இருக்கு. நம்ம வீட்ல யார் வெச்சாங்க?குழந்தையை போலிஸ் ஸ்டேஷன்ல.."

"வேண்டாம்.நாமே வளர்க்கலாம்" என்றான் சதிஷ்

யாரும் மறுபேச்சு பேசவில்லை.

லேகா குழந்தையை கையில் எடுத்தபோது அது சதீஷ் ஜாடையில் இருப்பதுபோல் பட்டது.அந்த காலகட்டத்தில் டி.என்.ஏ டெஸ்ட் எல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1982

குப்புசாமி மரண அவஸ்தையில் நெளிந்தார்.அருகே மொத்த குடும்பமும் கூடியிருந்தது.

"சொத்து முழுக்க மாப்பிள்ளை பேர்ல எழுதி வெச்சுட்டேன்.மாப்பிள்ளை நீங்கதான் ஜோதிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும். நீங்க தான் இனி அவளை அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்க்கணும்"

"நிச்சயமா மாமா" என்றான் சதீஷ், அவன் முகத்தில் மீண்டும் வில்லன் களை ஏறியது.சிகரெட்டை சுண்டி எறிந்தான்.

"இதுதான் சதீஷ் வாழ்நாள் முழுக்க காத்திருந்த நிமிடம்" என லேகாவுக்கு பட்டது. பத்திரங்களையும், கொத்து சாவியையும் சதீஷ் கையில் அவள் அப்பா கொடுத்தபோது அதை அங்கே யாரும் தடுக்கவில்லை.

1984

ஜோதி தூக்கில் தொங்கியிருந்தாள்."காதல் தோல்வி" என பேச்சு அடிபட துவங்கியது.போலிஸ் வருவதற்குள் உடலை எரித்துவிட சதீஷ் ஆலோசனை கூறினான்.அந்த காலகட்டத்தில் இதுபோன்ற விஷயங்களை குடும்பமானம் கருதி மறைத்துவிடுவது வழக்கம்.

1986

லேகாவும், சதீஷும் அந்த மலைசரிவில் காரை ஓட்டிகொண்டு சென்றனர். வலபக்கம் நீண்ட நெடிய காடு. இடப்பக்கம் ஆழமான பள்ளதாக்கு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவர்களை தவிர வேறு யாரும் இல்லை.

சதீஷ் முகத்தில் மீண்டும் வில்லன் களை குடிவந்தது."இன்றுடன் உன் கதை முடிந்தது" என லேகாவிடம் யாரோ சொல்வது போல் பட்டது.

இந்த அத்துவான காட்டில் கார் பஞ்சர் ஆகி நின்றால்...

கார் பஞ்சர் ஆகி நின்றது.

சதீஷ் இறங்கினான்..சிகரெட்டை முழுக்க புகைத்து முடித்தான். சுண்டி தூக்கி எறிந்தான்.

"அந்த மரத்துபின்னாடி ஏதோ லைட் தெரியுது.வீடா இருக்கலாம்.பார்த்துட்டு வர்ரேன்" சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவன் அந்த வீட்டுக்கு போய் சேர்ந்து அலிபி ஏற்படுத்தியபின்னர் காட்டில் இருந்து மூன்று அடியாட்கள் வந்து தன்னை கொன்று விட்டால்....லேகா படித்த ராஜேஷ்குமார் கதை ட்விஸ்ட்கள் எல்லாம் மனதில் நுழைந்தன.

மரங்க்ளிடையே இருந்து மூவர் வெளியே வந்தனர்.காரை நெருங்கினர்.

லேகா நடுங்கினாள்..அவர்கள் அவளை வெளியே இழுத்து போட்டார்கள்.

"வலிக்காமல் கொன்றுவிடுங்கள்" லேகா கையெடுத்து கும்பிட்டாள்.

"இத பார்ரா.." அவர்கள் சிரித்தார்கள்."வலிக்காம எப்படி ரேப் செய்யறது?"

காட்டிலிருந்து சதீஷ் ஓடிவந்தான்.அவன் முகத்தில் வில்லன் களை தாண்டவமாடியது.அவர்கள் மேல் விழுந்தான்.கொஞ்சம் நேரம் அங்கே சண்டை நடந்தது.சதீஷ் கையில் இருந்த பேனாகத்தியால் ஒருவனை குத்தினான்.மூவரும் அடிவாங்கிகொண்டு ஓடிவிட்டார்கள்.

சதீஷ் உடலெங்கும் ரத்தம்.காயம்

"உனக்கு ஒண்ணும் ஆகலையே லேகா" என்றான்

லேகா ஏன் "என்னை மன்னிசுடுங்க" என கதறினாள் என்பது அவனுக்கு கடைசிவரை தெரியவில்லை.

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அதில் வில்லன் களை சுத்தமாக இல்லை.கல்யாணத்தின்போது இருந்த அப்பாவிதனமாக முகபாவம் மீண்டும் வந்து சேர்ந்தது.

லேகா அவனை அன்றுமுதல் புதிதாக காதலிக்க துவங்கினாள்.




வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக