புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
69 Posts - 36%
heezulia
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
manikavi
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
320 Posts - 48%
heezulia
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
23 Posts - 3%
prajai
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மனந்திரும்புவது எப்படி? Poll_c10மனந்திரும்புவது எப்படி? Poll_m10மனந்திரும்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனந்திரும்புவது எப்படி?


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 7:29 am

“மனந்திரும்புவது எப்படி?”

முதலடியை நான் எடுத்து வைப்பது எப்படி? நான் எப்படி மனந்திரும்ப முடியும்?


1. மனந்திரும்புதல் தேவனிடமிருந்து வரும் ஈவாக இருக்கிறது:

“நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,...மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்” (அப்போஸ்தலர் நடபடிகள்: 5:30,31).

மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் தேவனிடமிருந்து வரும் ஈவுக்குள்ளாக இருக்கின்றன. அவை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் நபரில் இருக்கின்றன. மனந்திரும்புதல், பாவமன்னிப்பு என்னும் ஈவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், யாரிடம் அந்த ஈவுகள் இருக்கின்றனவோ அவரை ஏற்றுக் கொள்ள ‌வ‌ேண்டும். இயேசுவானவரை உங்கள் இருதயத்திலும் வாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. பாவத்தைக் குறித்த தேவனுக்க‌ேற்ற துக்கம்:

“தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகீக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2கொரிந்தியர்: 7:10).

நீங்கள் உங்கள் பாவத்தைக் குறித்து நினைக்கும்போது, குற்ற உணர்வையும் வெட்கப்படத்தக்க உணர்வையும் அடைகிறீர்கள். உங்கள் பாவத்துக்காக நீங்கள் வருத்தத்தையும் துக்கத்தையும் அடைகிறீர்கள். இந்த தேவனுக்கேற்ற துக்கம் மட்டுமே மனந்திரும்புதலை உருவாக்குகிறது.



தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 7:54 am

3. உங்கள் பாவத்தை தேவனிடம் அறிக்கையிடுங்கள்:


“தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” (லூக்கா: 18:13).


“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1யோவான்: 1:9).

நீங்கள் உங்கள் பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிடுவீர்களானால், அவர் உங்களை மன்னித்துச் சுத்திகரிப்பார் - இப்போதே!

இது எப்படிப்பட்ட அற்புதமான அன்பாகவும் இரக்கமாகவும் இருக்கிறது!


4. பாவத்தை விட்டுவிடுங்கள்:


“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள்: 28:13).

நீங்கள் உங்கள் பாவங்களையும் மீறுதல்களையும் தேவனிடம் அறிக்கையிட்ட பிறகு அவைகளை விட்டு விடுங்கள் - அவற்றை விட்டுத் திரும்புங்கள்; மறுபடியும் ஒருபோதும் அவைகளிடம் திரும்பாதிருங்கள்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 8:10 am

5. தவற்றைச் சரி செய்யுங்கள்:

நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு, த‌ேவனிடம் மன்னிப்பைப் பெற்று, உங்கள் பாவங்களை விட்டு விட்ட பிறகு, இன்னும் ஒரு காரியம் செய்து முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. உங்கள் தவறுகளை சரி செய்ய வ‌ேண்டியிருக்கிறது - மற்றவர்களுக்கு நியாயமாகச் சேர வெண்டிய நம்மிடமுள்ள பணத்தையும் பொருட்களையும் திரும்பக் கொடுக்க வேண்டும்.

நமது பாவத்தின் காரணமாக நாம் புண்படுத்தினவர்களிடம் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்க வேண்டும். சகேயுவின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள் (லூக்கா: 19:1-10). ஆண்டவராகிய இயேசுவைச் சந்தித்த பிறகு, அவன் எவ்வாறு தன் தவறுகளை சரி செய்தான் என்பதைக் கவனியுங்கள்.

நண்பரே, “உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் நடபடிகள்: 3:20). இயேசுவானவரை உங்கள் இருதயத்தில் உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர் தமது இரத்தத்தின் வல்லமையின் மூலமாக உங்கள் பாவங்களைக் கழுவிச் சுத்திகரிப்பார் என்று விசுவாசியுங்கள்.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தில் ஓர் அற்புதத்தைச் செய்வார் - நீங்கள் புதிதாகப் பிறப்பீர்கள். அப்போது விசுவாசத்தோடு சுத்த மனசாட்சியையும் பெறுவீர்கள் (1தீமோத்தேயு: 3:9).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 20, 2012 2:30 pm

“மனந்திரும்புதலின் கனி”


“மனந்திரும்புதலுக்கு ஏற்ற (ஒத்துப் போகிற) கனிகளைக் கொடுங்கள்” என்று வ‌ேதாகமம் நமக்குக் கட்டளையிடுகிறது (மத்தேயு: 3:8).

“மரமானது அதன் கனியினால் அறியப்படும்” (மத்தேயு: 7:15-20; 12:33-37).

பூமிக்கடியில் மறைந்திருக்கும், வெளியே காணப்படாத அதன் வேருக்கு ஏற்றபடியே ஒரு மரத்தின் கனி இருக்கும். மெய்யான மனந்திரும்புதலும் இப்படியே இருக்கிறது. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனி என்பது உங்கள் திடமான இருதய மாற்றத்தைச் செயல்பூர்வமாகக் காட்டும் வெளியரங்கமான நிரூபணமாகும்.

நமது இருதயமும் சிந்தையும் மாற்றப்பட்டிருக்கிறபடியால், நமது வார்த்தைகளும் வாழும் வழியும் மாற்றமடைகின்றன. மோசமான பழக்கங்கள் கைவிடப்படுகின்றன. நமக்குப் புதிய பிறப்பைக் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரின் அருமையான கனி வெளிப்படுத்தப்படும்: “அன்பு, சமாதானம், சந்தோஷம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர்: 5:22,23).

முழுக் குணாதிசயமும் மாற்றமடைகிறது; வாழ்க்கை கிறிஸ்துவைப் போலாக மாற்றம் பெற ஆரம்பிக்கிறது. ஏனென்றால், “கிறிஸ்துவைப்போல” என்பதுதான் “கிறிஸ்தவன்” என்பதின் உண்மையான அர்த்தமாகும்.

மேலும், கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கப் போகிறவர்கள் “தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்க‌ேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று” வ‌ேதாகமம் கட்டளையிடுகிறது.(அப்போஸ்தலர் நடபடிகள்: 26:20).

கனி, உள்ளான, காணப்படாத வளர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும் அதே வ‌ேளையில், கிரியைகள் நாம் செய்வதைக் குறிப்பிடுகின்றன. கிரியைகள் வெளியரங்கமான வெளிப்பாடாக இருக்கின்றன.

உள்ள‌ே மெய்யான மனந்திரும்புதல் இருக்குமானால், அது வாழ்க்கையில் செய்யப்படும் கிரியையின் மூலமாகக் காட்டப்படுகிறது.

மெய்யான மனந்திரும்புதல் முழு வாழ்க்கையிலும், வாழும் வகையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. விதிகளுக்கும் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்ட ஒரு சோகமான, கண்டிப்பான வாழ்க்கை அல்ல - “நான் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது” என்ற ஒரு வகைப்பட்ட வாழ்க்கை அல்ல - ஆனால், நமக்குள்ள‌ே இருக்கும் இயேசு கிறிஸ்துவின் ஜீவனின் சந்தோஷமான வெளிப்பாடாக அது இருக்கிறது.

முன்பு நம்மை நாமே பிரியப்படுத்திக் கொண்டிருந்தோம். நமது சொந்த சிந்தையைப் பின்பற்றினோம். நமது சொந்த வழியில் நடந்தோம். இப்போதோ நாம் மனந்திரும்பியிருக்கிறோம். நாம் முற்றிலுமாகத் திரும்பியிருக்கிறோம்.

நாம் இய‌ேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நமது இரட்கராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இப்போது நாம் கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றிருக்கிறோம் (1கொரிந்தியர்: 2:16).

அவர் தமது வாழ்க்கைய‌ை நமக்குள் வாழ்கிறார். எனவே, நாம் கிறிஸ்து செய்யும் காரியங்களை மட்டுமே செய்கிறோம். அவருடைய சிந்தனைகளை நாம் சிந்திக்கிறோம். அவருடைய வார்த்தைகளை நாம் பேசுகிறோம். மெய்யாகவே மனந்திரும்பிய ஒருவரின் வாழ்க்கையில் இந்தக் கனியின் கிரியைகளும் காணக்கூடியவையாக இருக்கின்றன.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 21, 2012 12:43 am

“மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கும் கூட...”


மனந்திரும்பும்படியான கட்டளை ஒருபோதும் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. மறுபடியும் பிறந்த அநேக கிறிஸ்தவர்களும் கூட மனந்திரும்ப வேண்டியிருக்கிறது.

மெய்யாகவே கிறிஸ்துவின் மீதான நமது அன்பில் பலவீனம் மனந்திரும்புதலை அவசியமாக்குகிறது. இதுவரை கிறிஸ்துவை அறியாதவர்கள் மீது நமது அன்பு குறைவுபடுதல் மற்றும் உடமைகள், பட்டங்கள், பதவிகள் இவைகளை நாம் விக்கிரகங்களாக்கிக் கொண்டிருத்தல் ஆகியவற்றைக் குறித்து நாம் மனந்திரும்ப வேண்டியிருக்கிறது.

நமது திருட்டைக் குறித்து நாம் மனந்திரும்புது அவசியமாக இருக்கிறது. நாம் எந்தக் கடையையும் உடைத்து கொள்ளையடிக்கவில்லை. ஆனால், எந்தவித வருத்தமும் இல்லாமல் தேவனைக் கொள்ளயைடிக்கிறோம். நாம் சம்பாதிப்பதில் தசமபாகம் தேவனுக்குரியது. அதை நமக்காக நாம் பயன்படுத்துவது துணிகரம் அல்லவா?

நாம் ஆண்டவருக்குக் கொடுக்கும் எந்தக் காணிக்கையும் நமது வருமானத்தில் அவருக்கு சொந்தமான தசமபாகத்துக்கு அதிகமானதாகவும் அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும் (மல்கியா: 3:8,9).

எபேசு சபைக்கு ஆண்டவர் “ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்கு குறை உண்டு” என்று கூறினார் (வெளிப்படுத்தின விசேசம்: 2:4).

கிறிஸ்துவிடம் இரட்சிப்புக்காத் திரும்பியவர்களிடம் அதிகமாகக் காணப்படும் பாவம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். நாம் முதலில் இரட்சகராக ஏற்றுக் கொண்டபோது காணப்பட்ட அன்பின் பிரகாசமும் நெருக்கமும் இனிமேலும் நம்மில் காணப்படவில்லை.

நான் நேற்று இரட்சகரிடம் காட்டிய அன்பைவிட இன்று நான் அவாிடம் காட்டும் அன்பு குறைவு படுமானால், நானும் ஆண்டவருடைய இந்தக் கட்டளைக்குச் செவிசாய்க்க வேண்டியவனாக இருக்கிறேன்: “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதினிடத்தினின்று நீக்கி விடுவ‌ேன்” ( வெளிப்படுத்தல்: 2:5).

இன்று இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியும்படி தேவன் தாமே நமக்கு உதவுவாராக! நாம் மனந்திரும்ப வேண்டியதின் அவசரத்தை நமது இருதயம் உணர்வதாக!


தொடரும்...



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 21, 2012 1:27 am

“மனந்திரும்புதலின் அடிப்படைக் கோட்பாடு”



மனந்திரும்புதல் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். “ஆகையால், கிறிஸ்துவைப் பற்றி சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்தகிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்... என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக” என்று எபிரேயர்: 6:1,2 வசனங்கள் கட்டளையிடுகின்றன.

ஆனால், நாம் இந்த அடிப்படைக் கோட்பாடுகளைப் போதிப்பதையும் அனுபவிப்பதையும் நிறுத்திவிட வேண்டும் என்பது இதற்கு அர்த்தம் அல்ல. நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்து இன்னும் ஆழமான சத்தியங்களைக் கற்க வேண்டும் என்றே எபிரேய நிருப ஆசிரியர் கூறுகிறார்.

அவர் மேலும் எழுதுகிறார்: “காலத்தைப் பார்த்தால் போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்; பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமை இன்னதென்று பயிற்சியினால் (பழக்கத்தினால்) பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்க‌ே தகும்” (எபிரேயர்: 5:12-14).

தேவனுடைய வார்த்தையின் திடமான உணவை விடுங்கள். முதன்மையான கொள்கைகளைக் குறித்தே நம்மில் ஒருசிலர் தான் அறிந்திருக்கிறார்கள்! இந்த எபிரேயர்: 6:1,2 வசனங்களில் முதன்மையான அடிப்படைக் கொள்கைகள் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன:

1. செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் என்ற அஸ்திபாரம்

2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்

3. ஞானஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்

4. கைகளை வைக்குதல்

5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்

6. நித்திய நியாயத் தீர்ப்பு

இவைகளிலிருந்து நாம் இதற்கு முன்ன‌ேறும்படி போதிக்கப்பட்டிருக்கிறோம்:

7. பூரணராகுதல் (முதிர்ச்சியடைதல்)

கிறிஸ்துவினுடைய கோட்பாட்டின் இந்த அடிப்படைக் கொள்கைகளை நீங்கள் அறிவீர்களா? பின்பு நாம் இதைப் பற்றி கற்போம். என்றாலும், மனந்திரும்புதலைக் குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்: “செத்தகிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், ... என்பவைகளாகிய அஸ்திபாரத்தை” (எபிரேயர்: 6:1). கிறிஸ்தவ வாழ்க்கைக்கான அஸ்திபாரத்தின் முதல் பகுதியாக மனந்திரும்புதல் இருக்கிறது என்பது உறுதியாக்கப்பட்டிருக்கிறது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 21, 2012 2:00 am

“மனந்திரும்புங்கள் அல்லது...”


இறுதி காலத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேதாகமத்தில் இறுதி நாட்களின் அடையாளங்களாகக் கூறப்பட்டுள்ளவை மிக வேகமாக நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இயேசுவானவர் மறுபடியுமாக வல்லமையோடும் அதிக மகிமையோடும், “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்க வரப்போகிறார்” (1பேதுரு: 4:5).எவரும் இந்த நியாயத் தீர்ப்புக்கு தப்ப முடியாது. நம்மில் ஒவ்வொருவரும் அங்கே இருப்போம்.

“நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே” (ரோமர்: 14:10).

எந்தத் தகுதியின் அடிப்படையில் நியாயந் நாம் தீர்க்கப்படுவோம்?

நாம் மனந்திரும்பியிருக்கிறோமா? அல்லது இல்லையா? என்பதைக் கொண்டும், இய‌ேசு கிறிஸ்துவின் தகுதி நிலையைக் கொண்டும் நாம் நியாயந் தீர்க்கப்படுவோம். நமது வாழ்க்கை அவருடைய வாழ்க்கையோடு ஒப்பிடப்படும்; நாம் எவ்வளவு தூரம் அவர் தமது வாழ்க்கையை நம்மில் வாழ அனுமதித்திருக்கிறோம் என்பது அளக்கப்படும்.

வேதாகமம் நமக்கு இந்த எச்சரிப்பைக் கொடுக்கிறது, “தேவன்...இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷரைக் கொண்டு (இயேசு) பூலோகத்தை நீதியாய் நியாயந் தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” (அப்போஸ்தலர்: 17:30,31).

நியாயத்தீர்ப்பு நாளில் அவருக்கு முன்னால் உங்களால் நிற்க முடியும் என்ற நிச்சயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?

அப்படியில்லாவிட்டால், உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வதற்கான வேளை இதுவ‌ே. “இப்பொழுதே” என்று வேதாகமம் கட்டளையிடுகிறது.

மனந்திரும்புதலுக்குப் பதிலாக வரக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான் உண்டு - அது தேவனுடைய பயங்கரமான நியாயத் தீர்ப்பாகும்.

“நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்” என்று இய‌ேசுவானவர் எச்சரித்திருக்கிறார். (லூக்கா: 13:5)

மனந்திரும்புவது எப்படி? 154550 மனந்திரும்புவது எப்படி? 154550 மனந்திரும்புவது எப்படி? 154550

மனந்திரும்புவது எப்படி? 40910426870036319197610

மனந்திரும்புவது எப்படி? 39947432948768709088510

மனந்திரும்புவது எப்படி? 40216434698560531946310


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக