ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 9:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 20:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 20:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 20:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 17:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 17:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 16:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 22:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 21:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 10 Sep 2024 - 20:24

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:08

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 16:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 11:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 8:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 22:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 21:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 20:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 18:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 15:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 14:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 13:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by சார்லஸ் mc Sun 19 Feb 2012 - 21:40

தேவன் கட்டளையிடுகிறார்: “மனந்திரும்புங்கள்”


“... தேவன்...இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்” (அப்போஸ்தலர் நடபடிகள்: 17:30).


இயேசுவானவரின் முதல் பிரசங்கம்

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டியெழுப்பப்படுவதற்கு வேண்டிய முதல் அனுபவம் மனந்திரும்புதலாகும். இயேசுவானவரின் முதல் சுவிஷேசப் பிரசங்கம் - கிறிஸ்துவில் இந்த அற்புதமான இரட்சிப்பின் நற்செய்தி - “மனந்திரும்புங்கள்” என்பதாகும்; இரண்டாவது “விசுவாசியுங்கள்” என்பதாகும்.

“இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிஷேசத்தை விசுவாசியுங்கள் என்றார்” (மாற்கு: 1:14,15).

யோவான்ஸ்நானனின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” என்பதாகவே இருந்தது (மத்தேயு: 3:2).

இயேசு கிறிஸ்துவின் முதல் செய்தியும் “மனந்திரும்புங்கள்” என்பதாகவே இருந்தது (மத்தேயு: 4:17).

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களுக்கு “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” என்று கட்டளையிட்டார் (லூக்கா: 24:47).

இதைப் பின்பற்றி, “மனந்திரும்புங்கள்” என்பதே பேதுரு கொடுத்த முதல் செய்தியாக இருந்தது (அப்போஸ்தலர் நடபடிகள்: 2:38).

பவுல் அப்போஸ்தலன் - தேவன்...இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார் - என்று பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் நடபடிகள்: 17:30).

எனவே, எங்குமுள்ள மக்களுக்குத் தேவனுடைய கட்டளையாகிய “மனந்திரும்புங்கள்” என்பதின் அவசரத் தன்மையை நம்மால் காண முடிகிறது.


தொடரும்...





Last edited by சார்லஸ் mc on Fri 9 Nov 2012 - 11:38; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by சார்லஸ் mc Sun 19 Feb 2012 - 22:00

“எது மனந்திரும்புதல் இல்லை”

மனந்திரும்புதல் என்பது பாவத்தைக் குறித்த உணர்வு - குற்ற உணர்வு மற்றும் பாவத்தைக் குறித்த அவமான உணர்வு - அல்ல.

நாம் வேதாகமத்தின் பரிசுத்த தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம். அவருடைய கட்டளைகளை மீறியிருக்கிறோம் என்ற உறுதியான உணர்வு எப்போதுமே மனந்திரும்புதலுக்கு முன்னால் வருகிறது. ஆனால், அது மனந்திரும்புதல் அல்ல.

தனது பாவத்தை உணராத எவரும் மனந்திரும்புவதில்லை; ஆனால், தங்கள் பாவங்களை உணரும் அனைவரும் மனந்திரும்புவார்கள் என்றும் கூற முடியாது.

நாம் தவறு செய்வதில் பிடிக்கப்படும்போது, வருத்தப்படுவது மனந்திரும்புதல் அல்ல. திரளான மக்கள் ஏமாற்றப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் உள்ளத்தில் சில விசுவாசப்பிரமாணங்களையோ அல்லது கோட்பாடுகளையோ விசுவாசிக்கிறார்கள்.

அவர்கள், தலையில் - விசுவாசம் கொண்டவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். சில போதனைகளையும் பாரம்பரியங்களையும் ஏற்றுக் கொண்டதின் மூலம் தாங்கள் தேவனுக்கு முன்பாக நல்ல நிலையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள் - ஆனால், அவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவில்லை.

தங்கள் இருதயத்தில் வரும்படி ஆண்டவராகிய இயேசுவை வேண்டிக் கொண்டதில்லை; இரட்சிப்பைக் கொடுக்கக்கூடிய “இருதய விசுவாசத்தை” அவர்கள் செயல்படுத்தவில்லை.

நீங்கள் ஏற்றுக் கொண்டு “இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர்: 10:9).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri 9 Nov 2012 - 11:40; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by சார்லஸ் mc Sun 19 Feb 2012 - 22:31

“மெய்யான மனந்திரும்புதல் இது‌வே...”

மனந்திரும்புதல் முழு ஆளுமையையும், முழு மனிதனையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அது சிந்தை, இருதயம், சித்தத்தின் முழுமையான மாற்றமாக இருக்கிறது; குறிப்பாக, பாவத்தைக் குறித்தும், தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் முழுமையான மாற்றமாக இருக்கிறது.

சிந்தையின் மாற்றத்தில் நமது அறிவு உள்ளடங்கியுள்ளது. பாவத்தைக் குறித்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நாம் சிந்திக்கும் வழியில் மாற்றம் ஏற்படுகிறது.

இருதயத்தின் மாற்றத்தில் நமது உணர்வுகள் உள்ளடங்கியிருக்கின்றன. பாவத்தைக் குறித்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உள்ள நம் உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

சித்தத்தின் மாற்றத்தில் நாம் பாவத்திலிருந்து தேவனிடம் திரும்பி, அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

இய‌ேசுவானவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து தனது சிந்தையை மாற்றினான். ஆனால், தன் சித்தத்தை மாற்றவில்லை. அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். நித்திய இருளுக்குள் சென்று விட்டான்.

துவக்கத்தில் மனிதன் பரிபூரணமானவனாக இருந்தான். அவனுடைய சிந்தை எப்போதுமே தேவனுடைய வார்த்தை, த‌ேவனுடைய சித்தம், தேவனுடைய வழி இவைகளை நோக்கியே இருந்தது.

ஆனால், மனிதன் தேவனுக்கு கீழ்படியாமையைத் தெரிந்து கொண்டான். தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்துக்கும் கீழ்ப்படியாததின் மூலம், மனிதனின் சிந்தை, இருதயம், சித்தம் அனைத்தும் தேவனுக்கு விரோதமாக மாறியது.

எனவே, இன்று “மனந்திரும்புவது” அவசியமாக இருக்கிறது. நமது சொந்த வழியிலிருந்து திரும்ப வ‌ேண்டும். நமது சொந்த சித்தத்திலிருந்து திரும்ப வேண்டும். முற்றிலுமாகத் திரும்பி தேவனிடம் மறுபடியுமாக வர வேண்டும்.

இவைகளை வாசிக்கும் சிலர் இன்னும் மனந்திரும்பாதவர்களாக இருக்கலாம். இப்போது, தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் குற்ற உணர்வைப் பெற்று, உங்கள் பாவத்தைக் குறித்து வெட்கப்படுகிறீர்கள். ஆனால், தளர வேண்டாம். ஊக்கம் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் வண்ணமாகவே தேவன் உங்களை நேசிக்கிறார்.

நீங்கள் மனந்திரும்புவீர்களானால், உங்கள் சிந்தை, இருதயம், சித்தத்தின் மனோபாவத்தைத் தேவனை நோக்கித் திருப்புவீர்களானால், அவர் உங்கள் வாழ்க்கையில் வந்து, உங்கள் பாவத்திலிருந்து உங்களை இரட்சிப்பார்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri 9 Nov 2012 - 11:42; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by சார்லஸ் mc Sun 19 Feb 2012 - 22:57

“தனிப்பட்ட முறையில் இயேசுவானவரை அறிதல்”

இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் சுவிஷேசத்தின் இரண்டாவது வார்த்தை “விசுவாசியுங்கள்” என்பதாகும். (மாற்கு: 1:15).

தேவனிடம் மனந்திரும்பி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது (அப்போஸ்தலர் நடபடிகள்: 20:21).

நம்மைத் தேவனுடைய பிள்ளையாக ஆக்கும் என்கிற படியால், இப்போதே நீங்கள் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது மட்டுமல்ல, நீங்கள் ஏற்கனவே இயேசுவானவரைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவரை அறிவீர்களா?

இந்த உலகத்தில் புகழ் பெற்ற பலரை நான் அறிவேன். ஆனால். தனிப்பட்ட முறையில் அவர்களை அறிவேனா? நீங்கள் இயேசுவானவரை தனிப்பட்ட முறையில் அறிவீர்களா?

இப்போதே உங்கள் முழு மனதோடும், இருதயத்தோடும், சித்தத்தோடும் தேவனிடம் திரும்பி உங்கள் பாவங்களுக்காக மெய்யாகவே வருத்தப்படுங்கள். உங்கள் தனிப்பட்ட ஆண்டவராகவும் இரட்சகராகவும் இயேசுவானவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவர் சிலுவையில் மரித்தபோது அவர் சரீரத்திலிருந்து வ‌ழிந்த தமது இரத்தத்தின் வல்லமையால் அவர் உங்கள் பாவங்களைக் கழுவிச் சுத்திகரிப்பார். நீங்கள் யாராக இருந்தாலும், இயேசுவானவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் கதவண்டையில் தட்டிக் கொண்டு நிற்கிறார்.

மனந்திரும்புங்கள். உங்கள் வாழ்க்கையை அவருக்குத் திறந்து கொடுங்கள். இன்றே அவரை உள்ளே வர அனுமதியுங்கள்!


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri 9 Nov 2012 - 11:44; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by சார்லஸ் mc Sun 19 Feb 2012 - 23:30

கிறிஸ்தவர்களாகப் “பிறந்தவர்கள்” எவரும் கிடையாது

தன்னை கிறிஸ்தவர் என்று கூறிக் கொள்ளும் எவரையாவது சந்திக்கும்போது, அவரிடம் “நீங்கள் எப்போது கிறிஸ்தவரானீர்கள்?” என்று கேட்டால்... எப்போதுமே இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்.

ஒன்று, இரட்சிப்பைக் குறித்த சந்தோஷமான சாட்சியாக அந்த பதில் இருக்கும். அல்லது, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே தெரியவில்லையே” என்று கூறுவது போன்ற வியப்புக் கலந்த பார்வை பதிலாகக் கிடைக்கும்.

சிலர், “நான் எப்போது கிறிஸ்தவனானேன் என்றா கேட்கிறீர்கள்? நான் கிறிஸ்தவனாகவே பிறந்தேன். என் தாயார் கிறிஸ்தவப் பெண்மணி. என் அப்பா ஒரு கிறிஸ்தவர். நான் எப்போதுமே ஒரு கிறிஸ்தவனாகவே இருந்து வந்திருக்கிறேன்” என்று பதிலளிப்பார்கள்.

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறப்பது உங்களைக் கிறிஸ்தவராக ஆக்கி விடாது! நான் ஒரு மருத்துவமனையில் பிறந்தேன். அது என்னை ஒரு மருத்துவராக ஆக்கிவிடவில்லை.

கிறிஸ்தவர்களாகப் “பிறந்தவர்களைப் ” (Born Christains) பற்றி வேதாகமம் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.

இதற்கு மாறாக, இயேசுவானவர் “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றே கூறியிருக்கிறார் (யோவான்: 3:7).

எத்தனையோ போ் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, திடப்படுத்தல் பெற்று, சபைகளில் சேருகிறார்கள்; பிறகு நியாயத்தீர்ப்பு நாளில் தங்கள் நற்கிரியைகள் தங்கள் மோசமான கிரியைகளைவிட அதிகமாக இருக்காதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால், இய‌ேசுவானவரோ, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் (யோவான்: 3:3).

ஒரு ராஜயத்தைக் காணவே முடியாதபோது உள்ளே எப்படி நுழைய முடியும்?

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550 தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550 தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 154550


தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 16698423740891633692010தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 40834523681746972939810

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 40032028160134190458410
தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” 39664719421033734177411
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்” Empty Re: தேவன் கட்டளையிடுகிறாா்: “மனந்திரும்புங்கள்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum