ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by சிவா Sat Feb 18, 2012 11:53 pm

முனைவர் மு. பழனியப்பன்சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.

மதுரைக் காஞ்சியின் காலம்

மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன் ஆவான். "ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இல்லாமையால் பாண்டிய நாடு வளம் குன்றி நலிவுற்றது. இந்நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல் நகரைக் கைப்பற்றி அரசனானான்'' என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்த காலச் சூழலை மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். இக்கருத்தின்வழி பாண்டிய நாட்டில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்பாண்டிய மன்னன் ஆட்சிக்கு வந்துள்ளான் என்பது தெரியவருகின்றது.

ஆட்சிக்கு வந்த இவனும் மிக இளைய வயதினனாக இருந்துள்ளான். இதன் காரணமாக இவன் சான்றோர் சொற்களுக்கு முன்னுரிமை அளித்து அவ்வழி நடந்துள்ளான். மேலும் இவன் பாடிய பாடலாக கிடைக்கும் புறநானூற்று எழுத்தியிரண்டாம் பாடலில் இடம்பெறும் "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ்சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை '' என்ற அடிகள் இவனின் சான்றோர் சொல் கேட்கும் முறைமையில் உள்ள விருப்பத்தை வெளியிடுவதாக உள்ளது.

பல சான்றோர்களின் அறிவுரைகளின்படி நடக்கும் குணம் உடையவனான இவனின் போர்விருப்பத்தை மாற்றி அறவிருப்பத்திற்கு ஆற்றுப்படுத்தும் போக்கில் இந்நூல் வரையப் பெற்றுள்ளது. இவன் ஏழுஅரசர்களைத் தலையாலங்கானத்தில் வென்றார். அதன்பின் வடபுல அரசர்கள், நெல்லூர் அரசர் போன்ற பலரை வென்று போர்த்தொழில் உடையவனாக விளங்கிய இவனின் விருப்பத்தை மடைமாற்றி அறத்தின் பக்கம் சாரச் செய்யும் நோக்கில் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக மதுரைக்காஞ்சியின் தோற்றச் சூழல் அறத் தன்மை வாய்ந்தது என்பது தெளிவாகின்றது. இவ்வறச்சூழலில் படைக்கப் பெற்றுள்ள மதுரைக்காஞ்சி சங்கத் தமிழகத்தின் அன்றைய அற நிலையையும், அறம் பெருக வேண்டிய நிலையையும் எடுத்துரைக்கின்றது.

மதுரைக்காஞ்சியின் அடிப்படையில் அறம் என்னும் பொருள்

அறம் என்பதற்கு தருமம், புண்ணியம்,தகுதியானது, சமயம், ஞானம் எனப் பல பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்ஸிகன். "மனத்துக்கண் மாசிலன் ஆதல், பிறன் பழிப்பது இல்லாயின் நன்று'' என்று அறத்திற்குப் பொருள்தருவார் திருவள்ளுவர்.

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்....
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய் புகர்அறு சிறப்பின் தோன்றி ''

என்று மதுரைக் காஞ்சி அறத்திற்கு இலக்கணம் வகுக்கின்றது. பழமையான மொழிகளை ஆணைகளாகத் தருகின்ற நல்லாசிரயர்கள் உரைக்கும் மெய்யறிவின் தெளிவு, வியப்பும் சால்பும் உடைய செம்மை மிக்க சான்றோர் பலரின் குற்றமற்ற வாய்மொழிகளும் அறம் எனப்படும் என்று மதுரைக் காஞ்சி தெளிவு படுத்துகின்றது.

மதுரைக் காஞ்சியின் அடிப்படையில் அறம் என்பதை மாறும் தன்மை உடையதாக அறியமுடிகின்றது. அறம் என்பது செம்மைத் தன்மை உடைய சான்றோர்கள் தன் வழித் தலைமுறைக்கு உரைக்கும் முறைமையது என்பதை உணரமுடிகின்றது. அறத்தின் தன்மை காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்பதை இவ்வடிகளின் வழி உணர முடிகின்றது.

மதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனார் உயர்ந்த கேள்வியை உடையவர் என்பதை இப்பாட்டுடைத்தலைவன் பதிவு செய்துள்ளான். இந்நிலையில் செம்மைத்திறம் வாய்ந்த மாங்குடி மருனாரின் வாய்மொழிகள் அறத்தின் தன்மையின என்பது தெளிவாகின்றது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty Re: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by சிவா Sat Feb 18, 2012 11:54 pm

சமுகப் படிநிலை

மதுரைக்காஞ்சி சமுக படிநிலைகளைக் காட்டி அச்சமுக படிநிலைகளுக்கான அறங்களை உணர்த்திச் சென்றுள்ளது. மதுரைக்காஞ்சி காலத்தில் நான்கு வகைப்பட்ட சமுக படிநிலையைக் காண முடிகின்றது.

தொல்காப்பிய காலம் முதலாக அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற சமுதாயப் படிநிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இப்படிநிலையின் அமைப்புமுறையை மதுரைக்காஞ்சியின் படைப்பு முறையிலும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அரசர்க்கு முதலிடம் தந்து அதன்பின் அந்தணர்,வணிகர், வேளாளர் என்ற முறைமை இதனுள் காட்டப் பெற்றுள்ளது. இந்நால்வகை நிலையினரும் அவரவர்க்கான ஓழுக்கங்களில் தலை நிற்க வேண்டிய நிலையை மதுரைக்காஞ்சி காட்டுகின்றது.

அரசர்க்கான அறங்கள்

மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலம் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவனுக்கு நிலையாமை பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது. போர் வெற்றி போன்றன நிலையில்லாவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச் செய்ய இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

அரசனுக்கு போர்வெற்றி மட்டும் போதாது, அரசன் அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.

"பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!''

இவ்வடிகளில் போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர் என்று காட்டப் பெற்றுள்ளது. போரில் வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை மணலினும் பலர். அது உண்மையான புகழ் இல்லை என்பது இதன் முலம் அரசனுக்குத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.

"பரந்து தோன்றா வியன்நகரால்
பல்யாகசாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய

அரியதந்து குடிஅகற்றி
பெரியகற்று இசைவிளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த'' (778770)

என்ற அடிகள் அரசர்க்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.

அசரன் வேள்விகள் பல செய்யவேண்டும். சான்றோர் பலரின் நல்லக் கருத்துகளை ஏற்று அதன்படி நடக்கவேண்டும். குடிமக்களுக்குக் கிடைக்காத அரிய பொருள்களாயினும் அவற்றைத் தந்துக் காக்கவேண்டும். நிறைய கற்கவேண்டும். சுற்றத்தைக் காக்கவேண்டும். இவை அரசரக்குரிய அறங்களாக மதுரைக் காஞ்சியில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.

அந்தணர்க்குரிய அறங்கள்

சங்க காலத்தில் அந்தணர்கள் மதுரை மாநகரில் அவர்க்குரிய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர்.

சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி (468 474)

அந்தணர்கள் வாழ்ந்த இடம் அந்தணர் பள்ளி என்று சங்ககாலத்தில் அழைக்கப்பெற்றுள்ளது. அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும். அந்தணர்க்கான ஒழுக்கங்களைப் பேணி வாழவேண்டும். அறநெறி பிறழாது வாழவேண்டும். அன்புடை நெஞ்சத்தோடு இருக்கவேண்டும். உயர்நிலையான வீட்டுலகினை இங்கிருந்தே அடைவதற்கான செயல்களை அவர்கள் செய்து ஒழுகவேண்டும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty Re: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by சிவா Sat Feb 18, 2012 11:55 pm

வணிகர்

பெருவணிகர், சிறு வணிகர் என்று பலபிரிவினர் மதுரைக்காஞ்சியில் காட்டப் பெறுகின்றனர். பெருவணிகர்கள் மலை, நிலம், நீர் படு பொருள்களை விற்பனை செய்தனர். அவர்களின் வீடுகள் பருந்துகள் வந்து தங்கும் அளவிற்கு வலிமையும், பெருமையும், உயரமும் கொண்டு விளங்கியிருந்தன. அவர்கள் "அறநெறி பிழையா ஆற்றின் ஒழுகி'' வாழ்ந்து வந்தனர்.

சிறுவணிகர் என்ற நிலையில் வீடுதோறும் சென்று பூ, பண்ணியம் முதலானவற்றை விற்ற பெண்களை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இவர்கள்

"கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்
புடையமை பொலிந்த வகையமை செப்பில
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவோடு மனைமனை மறுக''

என்ற நிலையில் மெல்ல நடந்து கைதட்டி அழைத்து, கற்காத மக்களோடு கலந்து, ஒவ்வொரு வீடாகச் சென்று பொருள் விற்றுக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.

கல்லாத மாந்தருக்கு நல்ல பொருள் விற்கவேண்டிய அறத்தின் கூறுபாடு இவர்களிடம் காணப்படுகிறது.

இவை தவிர பூமாலைகள், பூக்கள் கொண்டு தயாரிக்கப்பெற்ற சுண்ணம், பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பல பொருள்களும் அங்கு விற்கப் பெற்றன. அப்போது போர்ப்படை ஒன்று அவ்வழியாக கடந்துபோக அஞ்சி தங்கள் கடைகளைச் சுருக்கிப் பின் விரித்து வைத்த நிலையை மதுரைக் காஞ்சி பாடுகின்றது.

வேளாளர்

வேளாளர் பற்றிய தனித்த செய்திகள் மதுரைக்காஞ்சியில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே சிற்சில இடங்களில் மட்டும் இவர்களுக்கான அறங்கள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

இருவகையான் இசைசான்ற
சிறுகுடி பெருந்தொழுவர்
குடிகழீஇய நால்நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
என்ற அடிகளின்வழி வேளாளர்க்கான அறங்கள் சுட்டப் பெற்றுள்ளன. இருவகையான் என்பதற்கு உழவும் வாணிகமும் என்று உரையெழுதுவோர் பொருள்கொள்ளுகின்றனர். சிறுகுடி என்பது உழவர்களையும், பெருந்தொழுவர் என்பது உழவால் விளைந்த பொருள்களை விற்பவராகவும் ஏற்கப் பெறுகின்றனர். இதன் காரணமாக உழவரும் வணிகரும் நால்வகை நிலத்தாருடன் உறவு கொண்டிருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. தொன்று தொட்டு உழவுமுறைகளைச் சொல்லி தொழில் நடத்துதல் இவர்களின் அறமாக மதுரைக் காஞ்சி சுட்டுகின்றது.

படைஞர்

இம்மன்னன் படையெடுத்துச் செல்வதில் விருப்பம் கொண்டவன் என்பதால் மதுரைக்காஞ்சி படைஞர் பற்றிய பல செய்திகளைத் தருகின்றது. யானை, குதிரை,தேர், காலாள் ஆகிய நான்கு படைஞர்கள் இம்மன்னனுக்கு உதவியுள்ளன. படை கருதியும் தூது கருதியும் பிரியும் பிரிவு அனைத்துப் பிரிவினருக்கும் உண்டு என்பதால் மேற்கண்ட சமுதாயப் படிநிலைக்கு உட்பட்டோர் படைஞராகவும் விளங்கியுள்ளனர். இவர்களுக்கு உள்ள அறங்கள் பற்றியும் மதுரைக் காஞ்சி கருத்துரைக்கின்றது. "எழாத் தோள் '' இம்மறவர்களின் தோள்களாகும். அதாவது புறமுதுகிட்டு ஓடுவாரை விரட்டிச் சென்று அழிக்காத அறம் இவர்களுக்குரியது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty Re: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by சிவா Sat Feb 18, 2012 11:55 pm

செல்வர் செய்யும் அறம்

பொருள்நிலையில் ஏற்றம் பெற்று விளங்கும் செல்வர்களுக்கான அறத்தையும் மதுரைக் காஞ்சி எடுத்துரைக்கின்றது. அக்காலத்தில் செல்வர் பூத்தொழில் ஆடையை அணிந்து இருந்தனர். அவர்கள் பொன்னால் அமைந்த கைப்பிடியை உடைய உடைவாளைக் கொண்டிருந்தனர். தேர் அவர்களின் வாகனமாக இருந்தது. காற்றைப்போலக் குதிரைகளைச் செலுத்தி அவர்கள் செல்வர். தேர்த்தட்டில் அவர்களின் ஆடைகள் பரவி இருந்தன. இவர்கள் வீரக்கழலை அணிந்து இருந்தனர். " வான வண்கை வளம்கெழு செல்வர் நாள் மகிழ் இருக்கை காண்மார் '' என்று இவர்களின் அறம் பற்றி எடுத்துரைக்கின்றது மதுரைக்காஞ்சி. வானம் போல வரையாது வறியவர்க்கு வழங்குதல் என்பது செல்வர்களுக்கான அறமாகும்.

கலைஞர்களைக் காக்கும் அறம்

பாணர், பாடினியர், புலவர்,கூத்தர், கலைஞர்களின் சுற்றத்தார், இரவலர் போன்ற பலரும் சமுதாய அடுக்கில் தமக்கான பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களைக் காக்கும்படி தேர்களை யானைகளுடன் பொருளுடன் வழங்கிக் காக்கும் முறைமை மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளது. இவர்கள் அரசனுக்கு செவியறிவுறுக்கும் நிலையில் நன்மையானக் கருத்துகளை அவ்வப்போது மென்மையாக எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் இருந்துள்ளனர்.

பெண்களுக்கான அறங்கள்

பெண்களுக்கான பல அறங்களும் மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளன. செல்வ மகளிர், குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற மகளிர், ஊடல் கொண்ட மகளிர் போன்ற பல பெண்களை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலப் பெண்கள் பற்றிய சமுக மதிப்பீட்டை இந்நூல் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.

செல்வப் பெண்கள் தங்கள் செல்வ நிலைக்கு ஏற்ப திருவிழாக்களை மகிழ்வுடன் கண்டுள்ளனர். செல்வர்கள் திருவிழாக்களைத் தம் வாழ்க்கையாகக் கொண்டிருக்க அவற்றைக் காண்பதை செல்வப் பெண்களின் நிலையாகக் காட்டுகின்றது மதுரைக்காஞ்சி.

குலமகளிர் "நாணுக்கொள ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ் தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து வீழ் துணை தழீஇ'' என்ற நிலையில் குலமகளிருடன் அறத்துடன் நிற்க விழைகின்றது மதுரைக்காஞ்சி. நாணம் என்ற அணியுடன், யாழ் மீட்டி, இனிமையான குரலில் பாடி தன் துணையுடன் வாழ்கின்ற வாழ்க்கை அறவாழ்க்கை என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.

வரைவு பெறாத மகளிர் வரைவில் மகளிர் எனப்படுகின்றனர். இவர்கள் செல்வர்களின் வளத்தை தம் பக்கத்தில் பறித்துக் கொள்ளும் இயல்பினர் ஆவர். இதன் காரணமாக இவர்களைக் கொண்டி மகளீர் என்று மதுரைக் காஞ்சி அழைக்கின்றனது. மணிமேகலையிலும் கொண்டி மகளீர் என்ற சொல் இம்மகளிருக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

சூல் பெற்ற மகளிர் தேவராட்டி என்ற கடவுளை வணங்கும் வழிபாட்டுப் பெண்ணுடன் கூடி தெய்வங்களுக்கு இனிமையான பொருட்களைப் படைப்பர். கணவன் உவப்ப புதல்வரைப் பெற்ற மகளிர் பால் ஊறும் தனங்களுடன் சுற்றத்தினருடன் குளத்தில் முழ்கி நீராடும் இயல்பினை உடையவர்களாக இருந்தனர்.

மேற்கண்ட குறிப்புகள் வழியாக பெண்கள் அறந்தலைப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அறத்தைச் செய்யும் பொருள்வளம் மிக்கவர்களாக ஆண்கள் இருக்க, அறத்தைப் பொருளற்ற வகையில் செயல் நிலையில் செய்யக் கூடியவர்களாகப் பெண்கள் விளங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

சமுதாயத்தின் படிநிலையில் நிற்கும் மாந்தர்களின் அறத்தைப் பற்றி விவரித்த மதுரைக்காஞ்சி அறம் தவறாமல் இருக்க பல மன்றங்கள் இருந்தமையையும் சுட்டிச் செல்கின்றது.

அற மன்றங்கள்

அறத்தை நிறுத்தும் வல்லமை அரசனிடம் சங்ககாலத்தில் இருந்துள்ளது. அவனை அறம் தலைப்படுத்த புலவர் பாணர் முதலியோர் இருந்துள்ளனர். பொதுவான அறத்தை நிலைநிறுத்த அற மன்றங்களும், மத மன்றங்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன.

அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்

என்ற பகுதி அறங்கூறு அவையத்தின் சிறப்பினைக் காட்டுவதாக உள்ளது. அறங்கூறு அவையத்தில் இருந்தோர் அச்சமில்லாதவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம் மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில் நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது. சினம்,உவகை காட்டாது அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம் இன்றி இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள் அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.

காவிதிப் பட்டம் பெற்றோர்

காவிதிப் பட்டம் சிலருக்கு மன்னனால் வழங்கப் பெற்றுள்ளது. இவர்கள் காவிதிப் பட்டத்திற்கு உரிய தலைப்பாகையை அணிந்திருப்பர்.

நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்

என்று இவர்களின் அறத்தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டுகின்றது. பழிக்கு அஞ்சும் தன்மை இவர்களிடத்தில் காணப்படும் மிக்க நல்ல தன்மையாகும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty Re: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by சிவா Sat Feb 18, 2012 11:56 pm

நாற்பெரும் குழு

நாற்பெரும் குழு என்பது அறத்தை நிலை நிறுத்த நன்மொழிகளைக் கூறும் அமைப்பாக இருந்துள்ளது. இது செய்திகளைக் காரண காரிய இயல்புடன் அரசனுக்கு எடுத்துரைக்கும் போக்கினதாகும்.

இம்முன்று குழுக்களும் அறத்தை நிலை நிறுத்தும் பொது அமைப்புகள் ஆகும். இம்மன்றங்கள் அரசன் முதல் அனைத்துச் சமுதாய படிநிலையாரையும் ஒன்றுபோலவே கருதியுள்ளது.

மத மன்றங்கள்

பல்வேறு மத மன்றங்கள் அவ்அவ் மதங்களின் அறங்களை நிலை நிறுத்த மதுரைக் காஞ்சி காலத்தில் இயங்கியுள்ளன. குறிப்பாக பௌத்தபள்ளி, அமண் பள்ளி, அந்தணர் பள்ளி இவை குறிக்கத்தக்கன.

பௌத்த பள்ளி என்பது குழந்தைகளையும், பெண்களையும், ஆடவர்களையும் வழிநடத்தும் பள்ளியாக இருந்துள்ளது. சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியாக அது விளங்கியுள்ளது. அந்தணர் பள்ளி வேதங்களின் முழக்கங்களைச் செய்து, வேள்வியாற்றி அறம் தலை நின்றுள்ளது. சமணப்பள்ளி கற்றறிந்த அறிஞர் பலரைக் கொண்டிருந்தது.

இவ்வாறு மத மன்றங்கள் மக்கள் அறவழியில் செல்ல உதவியுள்ளன.

அறத்தை மறந்தவர்கள்

அறத்தை மறந்தவர்களாக பேய், அணங்கு, கள்வர் ஆகியோரை மதுரைக் காஞ்சி காட்டுகின்றது. குறிப்பாக கள்வர் கூர்மையான வாள், செருப்பணிந்த கால்கள்,உடைவாள், நூல் ஏணி ஆகியவற்றைக் கொண்டு கலன் நசைஇ கொட்கும் இயல்பினராக இருந்தனர். பொன் அணிகலன்களைக் கவரும் பான்மையில் கள்வர் செயல்பட்டனர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.

அறம் காக்கும் காவலர்கள்

மற்றவர் பொருளைக் கவரும் கள்வர், மற்றவரை மயக்கும் அச்சுறுத்தும் பேய், அணங்கு போன்றவற்றில் இருந்து மக்களைக் காக்கும் காவலர்கள், ஒற்றர்கள் மன்னனால் சங்ககாலத்தில் நியமிக்கப் பெற்றுள்ளனர். இவர்கள் தவறுகள் புரிந்துத் தப்ப நினைப்போரை ஊக்குவிக்காத அம்பினை உடையோர் ஆவார். இதுவே இவர்களின் அறம்.

இவ்வாறு அறச் சூழல் மிக்கதாகவும், அறந்தலைப்பட்டதாகவும் மதுரைக்காஞ்சி படைக்கப் பெற்று ள்ளது.

முடிவுகள்

மதுரைக் காஞ்சி மறப்போர் ஆற்றுவதில் ஆர்வம் காட்டிய மன்னனை மடைமாற்றி அறத்தின் பக்கம் சேர்க்கும் நிலைமைத்ததாகப் படைக்கப் பெற்றுள்ளது.

மதுரைக் காஞ்சியில் அறம் என்பதை முன்னோர் மொழியும் நன்மை மொழிகள் என்பதாகக் கொள்கின்றது. இதனடிப்படையில் காணுகையில் அறம் என்பது நிரந்தரத் தன்மை உடையது அன்று என்பதும், அவ்வவ்போது மாறும் போக்கினதாக இருக்கும் என்பதும் தெரியவருகிறது.

தொல்காப்பிய நடைமுறையில் அமைந்த நால்வகை வருணத்தாருக்கும் ஏற்ற அறங்கள் மதுரைக்காஞ்சியில் சுட்டப் பெறுகின்றன. அரசன் என்பவன் தலைமை நிலையில் நின்று அறத்தைக் காப்பவனாக மதுரைக்காஞ்சியின் சூழல் காட்டுகின்றது. அந்தணர்கள் வேதநெறிப்படி வாழ்பவர்கள். விண்ணுலகு செல்ல மண்ணுலகில் ஏற்ற நிகழ்வுகளை நடத்துதல் என்பது அவர்களுக்குரிய அறமாகும். வணிகர்கள் தனக்கான அறத்தின்படி வணிகம் புரிவர். வேளாளர்கள் இருவகைத் தொழில்நிலையில் நின்று அறம் விளங்க வாழ்பவர்கள்.

போர் எழுகின்றபோது இந்நால்வரும் போர் ஆற்றுவதற்குரிய முதன்மை நிலையிலும், தூது போதல் என்ற துணை நிலையிலும் இருந்து மன்னனுக்கு உதவிபுரிந்துள்ளனர். புறங்கொடுக்கும் பகைவர்கள் மீது படைதொடுக்காத அறம் இங்கு நிலைநாட்டப் பெற்றுள்ளது.

பாணர், பாடினி,புலவோர் போன்றவர்கள் அரசனுக்கு செவுயறிவுறூஉ என்ற நிலையில் இனிமையாக நல்ல கருத்துக்ளை வழங்குபவர்களாக விளங்கியுள்ளனர்.

செல்வந்தர்களுக்கான அறங்களாக வான்போல் கொடுத்தல், விழாக்கள் எடுத்தல் என்பது காட்டப் பெற்றுள்ளது.

பெண்களுக்கான அறங்கள் குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற பெண்கள், புதல்வர் பயந்த பெண்கள் போன்ற பல நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. குலமகளிர் கணவனைச் சார்ந்து வாழும் தன்மை உடையவர்கள் ஆவர். வரைவில் மகளிர் பொருளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆவர். சூலுற்ற மகளிர் இறையைத் தொழும் பாங்கினர். புதல்வரைப் பெற்ற மகளிர் குளத்தில் நீராடித் தூய்மைத் தன்மை பெற்றுள்ளனர். மகளிர்க்கு உரிய அறம் என்பது செய்கைகளை முன்வைத்து அமைக்கப் பெற்றுள்ளது. ஆண்களின் அறம் பொருளைத் தருதல் என்பதை அடிப்படையாக வைத்துச் செய்யப் பெற்றுள்ளது.

சமுதாயம் என்ற ஒட்டு மொத்த அமைப்பில் அறம் நிறுத்தப்பட காவிதி மாக்கள், அறங்கூறு அவையம், நாற்பெருங்குழு என்ற பொதுஅற மன்றங்களும், பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்நணப்பள்ளி போன்ற மத அற மன்றங்களும் மதுரைக்காஞ்சிக் காலத்தில் இருந்துள்ளன. இவற்றின் முலம் அறம் நிலை நிறுத்தப் பெற்றுள்ளது.

அறத்தைக் குலைப்பவர்களாக கள்வர்,அணங்கு, பேய் போன்றன விளங்கியுள்ளன. இவர்களின் இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர், காவலர் பற்றியும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை எடுத்துரைக்கும் பனுவலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பது முடிந்த முடிபாகும்.

முனைவர் மு. பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும் Empty Re: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum