ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by இளமாறன் Sat Feb 18, 2012 2:55 pm

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பினார்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

புதுடெல்லி, பிப்.18-

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

மாநிலங்களில் அதிரடி சோதனை

இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.

நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.

ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.

இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பிரதமருக்கு கடிதம்

இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் 7 முதல்-மந்திரிகள்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.

நவீன் பட்நாயக் கருத்து

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.

நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.

நரேந்திர மோடி

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.

நெருக்கடி

எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by சிவா Sat Feb 18, 2012 5:24 pm

நல்ல திட்டம் தானே! அமல்படுத்தினால் இவர்களுக்கு ஆப்பு வந்துவிடும் எனப் பயப்படுகிறார்களோ?

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by பிரசன்னா Sat Feb 18, 2012 5:35 pm

சிவா wrote:நல்ல திட்டம் தானே! அமல்படுத்தினால் இவர்களுக்கு ஆப்பு வந்துவிடும் எனப் பயப்படுகிறார்களோ?

சரியாக பயன்படுத்தினால் நாட்டிற்கு நல்ல திட்டம் தான் ஆனால் இவர்கள் இதை அவர்களின் (மத்திய அரசின் [காங்கிரஸ்] ) நலனுக்காக தானே அதிகம் பயன் பாடுதுவர்...

அது தானே பிரச்சனை...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by சிவா Sat Feb 18, 2012 5:38 pm

ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by பிரசன்னா Sat Feb 18, 2012 5:40 pm

சிவா wrote:ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!

உங்களுக்கு நகைசுவை உணர்வு நிறயாவே உண்டு என்று எமக்கு தெரியும் ஆனா இது tooooooo muchஆ இருக்கே...

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by சிவா Sat Feb 18, 2012 5:42 pm

எச்சூஸ்மி, கேட்டதுக்கு பதில சொல்லாம இப்படி சிரிச்சு மழுப்பினால் விட்டுவிடுவோமா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by பிரசன்னா Sat Feb 18, 2012 5:45 pm

சிவா wrote:எச்சூஸ்மி, கேட்டதுக்கு பதில சொல்லாம இப்படி சிரிச்சு மழுப்பினால் விட்டுவிடுவோமா என்ன? உடுட்டுக்கட்டை அடி வ

கேட்டதுக்கு பதில்:

ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!

ஆம் your honour.... யாருக்கு தெரியும் அம்மா கூட தமிழன் தலைமை பொறுப்பு ஏர்க்கட்டும் என்று ஆதரவு கரம் நீட்டலாம்.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by இளமாறன் Sat Feb 18, 2012 6:03 pm

அரசியலில் enna விளையாட்டு ... தடா சட்டம் உள்ளே வரும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by சிவா Sat Feb 18, 2012 6:05 pm

நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!

அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by இளமாறன் Sat Feb 18, 2012 6:07 pm

சிவா wrote:நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!

அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.

இது விரைவில் வரும் ஆனால் வருடத்திற்கு ஒரு முறை வாக்கெடுப்பு வைக்க முடியாது ... செலவு அதிகம் ஆகும் புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி Empty Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
»  பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum