புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 10 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:21 am

"நான் இப்போ நான் மட்டும் இல்லே!"

"அப்டீன்னா?" உண்மையிலேயே அதிர்ந்துபோய்க்கேட்டாள்.

"என் குட்டிச்செல்லம் இப்போ என் வயத்துலே!"

"ஏய்! உண்மையாவா சொல்றே?"

"அதுக்குள்ளெ எப்டிடி...?"

"ம்ம்! அதெல்லாம் எல்லாம் முடிஞ்சுபோச்சு! ஆனா அது இல்லே இப்ப பிரச்சனை!"

"வேறென்ன ப்ராப்ளம்?"

"அப்பா என்னெ குருவுக்கு கட்டிக்குடுக்க மாட்டாராம்!"

"அவன் உன் மாமா பையந்தானே! சின்ன வயசிலேர்ந்து உனக்கு அவன், அவனுக்கு நீன்னுதானே இருந்தீங்க! அதுக்கு உங்க அப்பாவும்தானே சம்மதிச்சிருந்தாரு!"

"இப்போ எங்க தாய்மாமா அப்பாவெ மதிக்கலையாம்! குருவுக்கும் உருப்படியா ஒரு வேலை இல்லையாம்! தனியார் கம்பெனி வேலையாம்!"

"அதுக்கு?"

"அதெ ஏண்டி கேக்குறே! அப்பா ரொம்ப கூறுகெட்டுப்போயி எனக்கு ஒரு மாப்ளே வேறெ பாத்து வச்சிருக்கார்!"

"சீரியஸாவா சொல்றே?"

"இது ஒண்ணும் காக்காக் கதெ இல்லடி! நடப்பு! வீடே நரகமாயிடுச்சுடி! என்ன நடக்கப்போகுதோ தெரியலே"

சத்யாவின் கண்களில் நீர்ப்பெருக்கு! தட்ஷிணி அவள் கண்களைத் துடைத்துவிட்டாள். அன்றுதான் அவள் சத்யாவை கடைசியாய்ப்பார்த்தது.

அப்புறம் என்னாயிற்றோ தெரியவில்லை. தினமும் அவளைத் தவறாமல் பார்க்கவரும் சத்யா அதுக்குப்பிறகு வரவேயில்லை. சத்யாவின் இந்த முடிவுக்கு அவள் அப்பாவே எமனாகிவிட்டார்!

அன்று கடைசியாகப் போகும்பொழுது "தட்ஷி என்ன எப்பவும் மறந்துறாதடீ!" என்றாள் சத்யா. அப்போதும்கூட அவள் இப்படி தன்னைத்தானே எரித்துக்கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை தட்ஷிணி.

எங்கோ போய்விட்டு வந்து அறையை எட்டிப்பார்த்தார் தட்ஷிணியின் அப்பா.

"தட்ஷிணீ! ரூமுக்குள்ளேயே அடஞ்சுகெடக்காமே வெளியவந்து அம்மாகூடச் சேர்ந்து ஏதாவது வேலையெப் பாரு. அப்பத்தான் மனசு ஆறும் உனக்கு..." என்றார் அப்பா. இப்போதும் அவரது வலக்கை அவரது கடாமீசையைத் தடவிக்கொண்டிருந்தது. ஆனால்... இப்போது அவர் மீசைக்குள்ளும் கண்களுக்குள்ளும் ஏதோ ஆவி புகுந்துகொண்டதுபோல் தோணியது. அதில் சத்யாவின் அப்பா முகம் பிரதிபலித்தது.

மீண்டும் அழுகையில் வெடித்தாள் தட்ஷிணி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:22 am

"இந்த நைண்ட்டீன் எய்ட்டி எய்ட்லே, நீ ஒருத்தன்தான் மூர்த்தி நம்ம செட்லே இன்ஜினியருக்குப் படிக்கிறவன்! மத்தவன்லாம் அஞ்சாங்கிளாஸ்லேயும் ஆறாங்கிளாஸ்லேயும் கோட் அடிச்சுட்டு தானுண்டு தன் மாடுண்டுன்னு மாடு மேச்சுக்கிட்டு உழுதுக்கிட்டு வயக்காடே கதின்னு கெடக்குறானுங்க! உனக்கடுத்து நாமட்டுந்தான் டெய்லரா நெழல்லே உக்காந்து பொழப்பு நடத்திக்கிட்டிருக்கேன். அந்த அய்யாச்சாமி வாத்யார் மட்டும் எனக்கு இங்கிலீஸ் சுட்டு போட்டாலும் வராதுன்னு சொல்லி கம்பாலே வெளுவெளுன்னு வெளுக்கலைன்னா, எட்டாங்கிளாஸெ பாதிலே விட்டுட்டு வந்திருக்கமாட்டேன்! இந்நேரம் ஓங்கூட காலேஜ்லே படிச்சிக்கிட்டிருப்பேன்!" தையல் மெஷினை ஓட்டியபடி மூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தான் சேகர்.

ஒரு சட்டை தைப்பதற்காக ‘ஜாய்ஸ் டெய்லர்ஸ்’ என்று பெயரிடப்பட்ட சேகரின் தையல்கடைக்கு வந்து சேகருக்குப் பக்கத்தில் ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. கிராமத்தின் மையமான அந்த சிறு கடைத் தெருவில் இரண்டு டீக்கடைகளும், இரண்டு மூன்று பெட்டிக் கடைகளும் ஒரு மளிகைக் கடையும் இருந்தன. ஆற்றங்கரையை மையமாகக் கொண்டு ஆற்றின் இருபுறமும் பெரும்பாலும் தென்னங்கீற்று வீடுகளைக்கொண்ட தெருக்கள் நீண்டுகிடந்தன. அக்கரைக்கும் இக்கரைக்கும் ஒரு பழைய சிதிலமான இணைப்பு ப்பாலம் இருந்தது. தஞ்சாவூர் ஒரத்தநாட்டுக்குப்போகும் மக்கள் எப்போதாவது வரும் டவுண் பஸ்ஸ¤க்காகவும் ரூட் பஸ்ஸ¤க்காவும் கடைத்தெரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். ஆண்களும் பெண்களுமாய் கடைத்தெருவுக்கு ஏதாவது ஜாமான் வாங்க வந்துபோனார்கள். அவனுக்குத் தெரிந்த சிலர் அவனைப் பார்த்துப் புன்னகைத்து நலம் விசாரித்துப் போனார்கள்.

மெயின் கடைத்தெருவிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கூரைவீட்டில் தையல்கடை வைத்திருந்தான் சேகர்.

பனிரெண்டுமணி வெயில் கடைத்தெரு தார்ச்சாலையைப் பளபளக்கச்செய்தது.

சேகர் பேசுவதைக் கேட்டபடி கடைத் தெருவை வேடிக்கைபார்த்த மூர்த்தி, "அதெ விடு! நம்ம கிளாஸ்மேட் இந்திரா இப்ப உங்கூடப் பேசுவாளா?" என்றான் ஆவல் தொனிக்க.

"அட! அதெல்லாம் இன்னம் ஞாபகம் வச்சிருக்கியா? அதெ ஏம்ப்பா கேக்குறே! கல்யாணம் பண்ணி ஒரத்தநாடு தாண்டி அவ புருஷன் வீட்டுக்குப் போனப்புறமும் அடிக்கடி ஊருக்கு வந்து என்னெத் தொந்தரவு பண்ணிட்டிருந்தாப்பா! அது அவ புருஷனுக்குத் தெரிஞ்சு பெரிய ப்ராப்ளம் ஆயிடுச்சு!"

"ப்ராப்ளம்னா?"

"ப்ரப்ளம்னா அடிதடிதான். ஒருநாள் அவளை வீட்டுக்குள்ள வச்சு பின்னுபின்னுன்னு பின்னிட்டானாம்! அவ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுலெ வந்து கெடக்குறா!"

"அப்ப ஒன்னெ இப்பப் பாக்குறதில்லே?"

"நீ ஒரு மண்டு இவனே! அவ புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்ததே எங்கூட இருக்கத்தானே!"

"அடப்பாவி! அவ அம்மா வீட்டுலெ ஒண்ணும் சொல்லலையா சேகர்?"

"இங்கெ பாரு! என்னெ ரொம்ப நோண்டி நோண்டிக் கேக்காதே! அப்புறம் நா வாயை விட்டுருவேன்!"

"ஏய்...சொல்லுப்பா! நா யார்ட்டப் போய் சொல்லப்போறேன்"

"சொன்னாத்தான் என்னப்பா! சொல்றதுன்னாலும் சொல்லிக்க! அதெப்பத்தி நான் கவலைப்படலெ! ஊருக்கே தெரியும் எங்க விஷயம்!"

"அப்பறென்ன! சொல்லு!"

"அவ அம்மாவே என்னையெ வீட்டுக்குள்ளெ உட்டுட்டு வாசல்லெ உக்காந்து காவல் காத்துப்பா! த்தூ! பொம்பளையா அவ!"

"ஏம்ப்பா! உனக்கு நல்லது செய்றவங்களெ இப்பிடி அநியாயத்துக்கு திட்றே?"

"அவளா நல்லது செய்றா! அவளோட சின்ன மகளெ நான் கட்டிக்கணுமாம்! அதுக்காக கட்டிக் குடுத்த மூத்த மகளையும் தானம் பண்றா”

"அந்த இந்திராவும் நீயும் ஒண்ணாங் கிளாஸ்லேர்ந்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாத்தானே வருவீங்க, போவீங்க? அது உனக்கு பக்கத்துவீடுதானே? அவளைத்தானே நீ லவ் பண்ணே?"

"லவ்வாவது, மண்ணாவது! அதெல்லாம் ஒரு மண்ணுமில்லப்பா! நீ படிச்சவன், உனக்குத்தெரியாதா! எல்லாம் அரிப்புப்பா, உடம்பு அரிப்பு எல்லாம்! வேறொண்ணுமில்லே இதுலே!"

"அப்பிடியெல்லாம் சொல்லாதே சேகர்! அப்ப உண்மையான லவ்வுன்னு ஒண்ணுமே கெடையாதுங்கிறியா?"

"ஆமாப்பா! நீ போகப் போகத் தெரிஞ்சுக்குவே! எல்லாத்துக்கும் உடம்புப் பசிதான் காரணம்! உடம்பு கேக்குது குடுகுடுன்னு! அதான் நா இப்பிடி நாயா அலையிறேன், இந்திராவையும் அவ தங்கச்சியையும் தேடி"

"அடப்பாவி! அவ தங்கச்சியையும் விட்டுவைக்கலையா நீ?"

"இதெல்லாம் ஒண்ணுமே இல்லே மூர்த்தி! நீதான் ரொம்ப அப்பாவியா இருக்கே! இதுவரைக்கும் நீ எதுமே பண்ணதில்லையா?"

"ம்ஹ¤ம்!"

"எனக்கும் உன் வயசுதான்! நா இதுவரைக்கும் எத்தனை பேரைப் பாத்திருக்கேன் தெரியுமா!"

"எத்தன பேரு?"

“ஏம்ப்பா இப்டி வாயெப் பொளக்குறே!”

"அதெப்படிப்பா?! இந்திரா...அவ தங்கச்சி, அவ பேரென்ன..ம்ம்...மல்லிகா... அவ...அதுபோக அப்றம் யாரெல்லாம்..."

"சாரிப்பா. நீ படிச்சிட்டிருக்கிறவன்! நான் ஓங்கூடப் படிச்சுட்டு எட்டாங்கிளாஸைப் பாதியில் விட்டவன்! கண்டதெல்லாம் சொல்லி ஒம் மனசைக் கெடுக்க விரும்பலே. நீ ஒழுங்காப் படிக்கிற வேலையெப்பாரு! உன்னெப்படிக்க வைக்க உங்கப்பாவும் அம்மாவும் தம்பியும் வயக்காட்டுலெ என்ன பாடு படுறாங்க தெரியுமா?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:22 am

"ஏய்..! அதெல்லாம் எனக்குத் தெரியும்ப்பா! நான்லாம் நல்லாப்படிச்சுப் பாஸ் பண்ணிருவேன்! நீ சொல்லு, சும்மா தெரிஞ்சு வச்சுக்கிறேன்!"

"விடுப்பா! இப்ப அதெல்லாம் தெரிஞ்சு என்னாகப் போகுது உனக்கு?"

"ஒண்ணும் ஆகாது! நீ சும்மா சொல்லு!"

"அதெல்லாம் கணக்கு வழக்கில்லப்பா...எப்டியும் பத்துப் பதினஞ்சு தேறும்!"

"அடப்பாவி! பத்துப் பதினஞ்சா! அதுக்குள்ளேயா? ஒடம்பு என்னத்துக்குய்யா ஆகும்? உண்மைதானா, சும்மா கப்சா விடுறியா?"

"அதுக்குத்தான் இதெல்லாம் சொல்லமாட்டேன்னேன்! விட்டியா நீ! நான் செஞ்சதெ சொல்லிட்டேன். சரி, அதெ விடு, காலேஜ்லெ நீ ஏதாவது..?"

"சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா."

"அப்ப காஞ்சுபோய் கெடக்குறேனு சொல்லு."

"ஆமாப்பா"

"அப்ப ஏங்கூட சவுக்குத்தோப்புக்கு வர்ரியா?"

"ஏன் அங்கேபோய் பேய் பிசாசெ காட்டப்போறியா?"

"நம்ம டாவு ஒண்ணு நாளைக்கி அங்க வர்ரேன்னுருக்கு"

"நெஜமாவா?"

"அப்றம்! சொன்னா சொன்னபடி ‘டாண்ணு’ வந்து நிக்கும்! நாளைக்கி மத்தியானம் ஒருமணிக்கு வரச் சொல்லிருக்கேன். நீயும் வர்ரதுன்னா சொல்லு"

"ஒருமணிக்கா! உச்சி வெயில்லே பேய் பிசாசு...?"

"எல்லாம் என்னெமாதிரி ஆளுங்க கெளப்பி விட்டதுதான்! அப்பத்தானேப்பா நாங்கல்லாம் அங்க போயி ஜாலியா இருக்கலாம்! கிராமத்லெ டவுன்லெ மாதிரி இதுக்கெல்லாம் லாட்ஜா இருக்கு?"

"ஏம்ப்பா, இருந்திருந்தும் ஒனக்கு சவுக்குத் தோப்புதானா கெடச்சது?"

"அட! அதாம்ப்பா ஊரெவிட்டு ஒதுக்குப்புறமாவும் விஸ்சுன்னு எப்பவும் ம்யூசிக் மாதிரி காத்து வீசிக்கிட்டு சூப்பரா இருக்கும்! கீழெ மணல் வேறெ கும்பல் கும்பலாக் கெடக்குதா, சும்மா மெத்தைமாதிரி ஜம்ஜம்னு இருக்கும்ப்பா! சவுக்குத் தோப்புதான் நம்ப சொர்க்காபுரின்னு வச்சுக்கோயேன்!"

மூர்த்தி யோசித்தான்.

"என்ன யோசிக்கிறே? ஒரு நாளைக்கு வந்துதான் பாறேன்!"

"என்னத்தப் பாக்குறது?"

"உனக்கு ஒண்ணு தனியா வரச்சொல்லிர்றேன்.. எங்க ஆளோட ·ப்ரெண்டே இருக்கா ஒருத்தி!"

"காசு குடுக்கவேணாம்?"

"ச்சேச்சே! இங்கேயெல்லாம் டவுன்மாதிரி கெடையாதுப்பா. சும்மா ஜாலிக்காகத்தாம்ப்பா எல்லாம்! இப்டி திருட்டுத்தனமா பண்றதுலே ஒரு த்ரில் இருக்குப்பா... அப்றம் அததும் எவனையாவது கட்டிக்கிட்டு ஏதாவது பத்து ஊர் தள்ளி போயிடுவாளுக!"

"மாட்டிக்கிட்டா?"

"ஏன் மாட்டிக்கிறோம்! நாம சும்மா வயக்காட்டுக்குப் போறோம்! அதுங்க வெறகு பொறுக்க சவுக்குத்தோப்புக்கு வருதுங்க! யாராவது வந்துட்டா அதுங்க உடனே வெறகு பொறுக்க ஆரம்பிச்சிடுங்க!"

"சரி! யாருப்பா அங்கெ வர்ரேன்னு சொல்லிருக்கிறது?"

"அது சஸ்பென்ஸ்! ஆனா ஒண்ணு, எல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்! நம்ம எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அது நம்ம ஸ்கூல்லே ஏழாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தது."

"யாரு காவேரியா"

"இல்லே"

"ரேணு?"

"அதுவும் இல்லே"

"சுசீலா?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:23 am

"அட! கண்டுபிடிச்சிட்டியே! அவளேதாம்ப்பா! ஆனா, அவ வர்ரது என்னெப்பாக்க! அவ ·ப்ரெண்டு ஒருத்தி பக்கத்து கிராமத்துலேர்ந்து அவ வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்கா! அவதான் உனக்குத் தோது!"

"அது எப்பிடிப்பா! அவ ஒத்துக்கணுமே!"

"அட நீ ஒண்ணு! அவ அவளும் ஆள் கெடைக்காமே அலைஞ்சிக்கிட்டிருக்கா! மண்ணு திங்கிற உடம்ப மனுஷன் திங்கட்டுமேங்கிறதுதான் அவளவளுக்கு! புரியிதா! அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்! நீ ரெடியா இரு! வாழ்க்கையிலே இப்டியே சுத்தபத்தமா இருந்து சாகும்போது என்னத்தப்பா கட்டிக்கிட்டு போப்போறே? சும்மா வா! அவளுக என்ன உன்னையெ கட்டிக்கவா சொல்லப் போறாளுக? சும்மா ஜாலிக்குத்தான் வர்ராளுக! நீ ஒண்ணும் கவலைப்படாதே!"

"ம்ம்...? அப்டீங்குறே...? சரி பாக்கலாம்!"

"என்ன பாக்கலாம்! வர்ரே நாளைக்கி!"

"சரி"

"நாளக்கி உன்னையெ கண்டிப்பா எதிர்பார்ப்பேன்!"

"வேறேதும் ப்ராப்ளம்...?"

"ஏய்! மொதல்லெ ஆம்பளையா லெட்சணமா இருப்பா! அவனவன் மொளைச்சு மூணு எலை வுடுறதுக்குள்ளே தைர்யமா என்னென்னமோ பண்றான்! நீ என்னடான்னா..."

"சரி சேகர்! கட்டாயம் வர்ரேன்! நீதான் ப்ராப்ளம் வராமெப் பாத்துக்கணும்! ஆமா, இந்த பொம்பளெ சீக்கு ஏதும் தொத்திக்காதே?"

"அதா! இப்ப என்னென்னமோ சொல்றானுங்க! எய்ட்ஸ் அது இதுன்னு! ஆனா அதெல்லாம் டவுண்லேதாம்ப்பா வரும்! இதுங்கல்லாம் தொழில் செய்யிற ஆளுங்க இல்லப்பா! ஏதோ ஜாலிக்காக வர்றவளுங்க! சீக்குங்குற பேச்சுக்கே எடமில்லே இங்கே!"

சேகரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.அவன் பார்வை சேகருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கணும். அதனால்தான் அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.

"இந்தாப்பா மூர்த்தி! வேணுன்னா வா, வேணாட்டி விட்டுரு! எதுவும் கட்டாயமில்லெ, புரியிதா?"

"இல்லே சேகர், நாளைக்கி கட்டாயம் வர்றேன்! எனக்கு சவுக்குத்தோப்ப பாக்கணும்போலருக்கு!"

"ஓக்கே! அப்ப வந்துரு!"

சேகரிடமிருந்து விடைபெற்று கடையைவிட்டு வெளியே வந்தான் மூர்த்தி. சற்று தள்ளி எப்போதும்போல மசமசப்பாய் உச்சிவெயிலில் காய்ந்துகிடந்தது கடைத்தெரு. மெதுவாக ஊரை விட்டொதுங்கியிருக்கும் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் தலையில் சுள்ளென அறைந்தது வெயில். மனசு முழுக்க நாளைக்குப் பார்க்கப்போகும் சவுக்குத்தோப்பும் அது தரப்போகும் அனுபவமும் அவனுள் சூடாய் நிறைந்து வழிந்தோடிற்று.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:23 am

“என்னப்பா மூர்த்தீ! டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு அதுக்குள்ளியும் வந்துட்டே! மணி ஒம்பதுதான் ஆகுது! நானே இப்பத்தாம்ப்பா கடையெவே தொறந்தேன்” என்று ஆச்சர்யப்பட்டான் சேகர்.

"ராத்திரி விடியவிடியத் தூக்கமே வரலே சேகர்! நீ வேறெ நல்லாக் கெளப்பி விட்டுட்டியா..." சோகமாய் புலம்பினான் மூர்த்தி.

"நா என்னத்தெ கெளப்பி விட்டேன்! இதெல்லாம் வயசுக் கோளாறுப்பா! இருபதுலே வராமே எழுபதுலேயா வரும்?"

"அத விடு! சுசீலா ·ப்ரெண்டு ஒத்துப்பாளாப்பா?"

"அதெல்லாம் பேசிக்கிறேம்ப்பா! இப்ப சுசீலா இங்கே வருவா! அப்ப நீயே அவகிட்டே பேசிக்கெ!"

"அய்யய்யோ! நான் பேசுறதா! அதெல்லாம் சரிப்படாதுப்பா!"

"உனக்குன்னு சொன்னா ஒத்துப்பாளுங்க மூர்த்தி! அவளும் ப்ளஸ் ட்டூ வரைக்கும் படிச்சிருக்கா போலருக்கு! எனக்கே அவ மேலெ ஒரு கண்ணிருக்கு! அவ பேருகூட..."

"என்னப்பா அவ பேரு?"

"வாய்க்குள்லேயே இருக்குது! வரமாட்டேங்குது! இரு யோசிச்சு சொல்றேன்!"

சேகர் யோசித்தபடி கத்திரிக்கோலால் ஒரு துணியை வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது சேகரை நோக்கி கையில் ஒரு மஞ்சள் பையுடன் சுசீலா வந்தாள்.

"அங்கே பாருப்பா! எப்டி தழுக் புழுக்குன்னு வர்ரான்னு! இப்பிடி நடந்துவந்தா எவம்ப்பா சும்மா விடுவான்?"

"ஏய்! சும்மாருப்பா! ஒன்னோட ஆளப்பத்தி நீயே இப்டி கமெண்ட் அடிச்சா அடுத்தவன் சும்மாருப்பானா!"

"இதெல்லாம் பாத்தா முடியுமா? வேண்ணா நீயும் சைட் அடிச்சுக்கோப்பா! காசா, பணமா!"

அதற்குள் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி நெருங்கி வந்துவிட்ட சுசீலா உண்மையிலேயெ தழுக் புழுக்கென்று சதைப்பற்றுடன்தானிருந்தாள்! மாநிறம்தான் என்றாலும் முகக் களையானவள்தான் சுசீலா! படிக்கும்போதே ஒரு கால்சட்டை விடலை வட்டம் அவளைச் சுற்றிச்சுற்றி வந்ததை மூர்த்தியும் அறிவான். அவனுக்கும் அவ்வப்போது ராத்திரி கனாக்களில் வந்து இன்பமூட்டியவள்தான் இந்த சுசீலா. ஒரு வகுப்பு குறைவாகப் படித்தாலும் அப்போதே நல்ல வாட்டசாட்டமாய் நல்ல பாவாடை சட்டையில் வலம்வருவாள் சுசி! மானசீகமாக அவளிடமும் உறவு கொண்டிருக்கிறான் மூர்த்தி! யாருக்கு மச்சமோ அவனுக்குத்தானே அழகிகள் கிடைப்பார்கள்?

பத்தியும் பத்தாமலும் உடம்பை ஒட்டி அவள் கட்டியிருந்த வெளிர்நீலப் பூப்போட்ட சேலையும் கையை அழுத்தி சிறு சதைமேட்டை அவள் கைகளில் உருவாக்கியிருந்த டைட்டான ஜாக்கெட்டும் அவள் உடம்பின் வளத்தை எடுப்பாக்கிக்காட்டின. நாலைந்து மாசத்துக்கு முந்தி எங்கோ தெருவில் பார்த்தபோது இருந்ததைவிட இப்போது ஒரு சுற்று பெருத்திருந்தாள் சுசீலா.

மூர்த்தி ‘ஆ’ என்று வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்ட சுசீலா கூச்சத்தில் லேசாய் நெளிந்து பின் சுதாரித்து "எப்ப வந்தீங்க?" என்று மூர்த்தியின் கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள்.

"ம்ம்! நாளைஞ்சு நாளாச்சு! எக்சாம் லீவுக்கு வந்திருக்கேன்!" என்றான் மூர்த்தி சன்னமான குரலில்.

"நல்லாச் சத்தமாப் பேசுங்க! ஏன் இப்டி வெக்கப்படுறீங்க! நாங்கதான் படிக்காமெ களை பறிச்சுக்கிட்டு நாத்துநட்டுக்கிட்டு திரியிறோம்! நீங்களாவது படிச்சு பெரிய்ய இன்ஜினீயரா வந்து இந்த ஊருக்கு ஆத்தைக் கடக்க ஒரு நல்ல பாலமா கட்டிக்குடுங்க!"

"நான் சிவில் கெடையாது! மெக்கானிக்கல்!"

"எனக்கு என்ன ஒங்க படிப்புபத்தி தெரியும்! மரமண்டு நானு. நீங்கதானே இந்த சுத்துப்பட்டு பதினெட்டுக் கிராமத்துலேயும் ரொம்ப மார்க்காம்!"

சிரித்துக்கொண்டான் மூர்த்தி.

"ஏண்டி! நீ உண்மையாவே மரமண்டுதாண்டி! மூர்த்தி சுத்துப்பட்டுக் கிராமத்துலே பர்ஸ்ட் ரேங்க் இல்லடி! மாவட்டத்துக்கே அவன்தான் ·பர்ஸ்ட்! ஆமா...! உன்னையெ எப்போ வரச்சொன்னேன்! இப்பத்தான் வர்றே! ஏழுமணிக்கு வீட்டுக்கு வாடின்னா கடையெத் தொறந்தபிறகு எதுக்குடி வந்தே?" என்று அவளை செல்லமாய்க் கடிந்துகொண்டான் சேகர்.

சுசீலா எதுவும் பதில் சொல்லவில்லை.அவள் ஏதோ சொல்ல வாயெடுத்து மூர்த்தி இருப்பதால் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:24 am

மூர்த்திக்கு ஒரு மாதிரி கூச்சமாயிருந்தது. ஆற்றங்கரைப்பக்கம் திரும்பி அங்கிருந்த தூர் பெருத்த புளியமரத்தைப் பார்த்தான். அதன் அடர்ந்த பசிய கிளைகளில் குட்டிப் பாம்புகளைப் போல புளியம்ப்¢ஞ்சுகள் நெளிநெள்¢யாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. அவன் மனக்கண்ணில் இப்போது நந்தினி வந்தாள். ஒரு புளியம்பிஞ்சை அவன் வாயில் திணித்துவிட்டு அவன் மடியில் ஒரு செல்ல நாய்க் குட்டியைப்போல படுத்துக்கொண்டாள்.

தன் தலையை உதறிக்கொண்டான் மூர்த்தி. அவன் காதுகளில் நந்தினியின் மயக்கமொழிகள் மெதுவாய் ஒவ்வொன்றாய் விழுந்து அவனுள் ஒரு கிளுகிளுப்பை உண்டுபண்ணின.

மூர்த்திக்கு முதுகைக் காட்டியபடி சுசீலா பக்கம் திரும்பி அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் சேகர். அவன் அவளிடம் சொன்ன சில வார்த்தைகள் சங்கேதமாய் இருந்ததால் மூர்த்திக்குப் புரியவில்லை. மத்தியானம்தானே வரச்சொல்லியிருப்பதாகச் சொன்னான் சேகர். இப்படி காலையிலேயே இப்போ எதுக்கு வந்தாள் இந்த சுசீலா?

"சரி ஓம் ·பிரண்டு பேரு என்ன சொன்னே? வாய்க்குள்ளேயே இருக்கு வரமாட்டேங்குது!" என்று சுசீலாவின் இடையில் கிள்ளியபடி கேட்டான் சேகர்.

"ஆ!” என்று செல்லமாய் கத்திவிட்டு, சேகரின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியபடி, “அவ பேரு அங்கையர்க்கண்ணி", என்றாள் சுசீலா.

"இவ்ளோ பெரிய பேரெ அவளுக்கு எவண்டி வச்சேன்? வாய்க்குள்ளேயே நுழையாத பேரா இருக்கு?!"

"ம்ம்! உங்கப்பா வச்சிருப்பார்! என்ன கேள்வி இது! அவளைப் பெத்தவங்கதான் வச்சிருப்பாங்க!"

இப்போது சேகரின் விரல்கள் சுசீலாவின் பின்புறத்தைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது.

"ஆ..! வலிக்குது...மெதுவாக் கிள்ள மாட்டியா! தடிமாடு!" என்று சேகரின் தலையில் ஒரு குட்டு வைத்தாள் சுசி.

"மத்யானம் அங்கயர்க்கண்ணியெ மறக்காமெக் கூட்டிக்கிட்டு வந்துரு.." அவனை உரசியபடி இழைந்துநின்ற சுசீலாவின் காதுகளில் முணுமுணுத்தான் சேகர்.

"அவ எதுக்கு?" என்று கிசுகிசுப்பாய் கேட்டாள் சுசீலா.

"அதெ அப்பறம் சொல்லுறேன்! நீ கூட்டிக்கிட்டு வா."

"ஏன் இந்த மொகரைக்கு நா மட்டும் பத்தலையாக்கும்?"

“எனக்கில்லேடி! நம்ம மூர்த்திக்கு! ரொம்ப காஞ்சு கெடக்கிறாப்பிலே, பாவம்!”

சுசீலா மூர்த்தியைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு பரிவின் ரேகை இழையோடிற்று.

பிறகு சேகர் பக்கம் திரும்பி, "சரி! மத்யானம் கட்டாயம் கூட்டிக்கிட்டு வந்திர்றேன்! அவளுக்கும் அவங்க ஊர்லே யாரும் கெடைக்காமத்தான் இங்கே வந்திருக்கா! மூர்த்தின்னா அவளும் ஒத்துப்பா!” என்றாள் சுசீலா.

"அடி செருப்பாலே! அப்போ நான்னா ஒத்துக்க மாட்டாளோ?"

"ஆமா! நீயும் ஓம் மொகரக்கட்டையும்! ஒனக்கு ஒரு நாளைக்கு நானே ரெண்டுமூணு தரம் வேணும்! இதிலே அவ வேறெயா! என்னை விட்டுட்டு அவகிட்டே ஏதாவது வச்சுக்கிட்டே, அருவாமணையெ எடுத்து தலையெச்சீவி கையிலே குடுத்துருவேன், ஆமா!"

மூர்த்திக்கு திக்கென்றிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:24 am

மூர்த்தியின் முகத்தை திரும்பிப்பார்த்த சேகர், "மூர்த்தி! என்ன பயந்துட்டியா! இவ அப்பிடித்தாம்ப்பா எங்கிட்டே வம்பிழுப்பா! அவ அப்பிடிப் பேசினா, இப்பவே வாடான்னு அர்த்தம்!” என்றவன் "கொஞ்சம் கடையெப் பாத்துக்க, யாராவது துணி கொண்டு வந்தா வாங்கி வையி..." என்று சொல்லிவிட்டு கடையின் பின்புறமிருந்த கீற்று வீட்டுக்குள் அவசரமாய்ச் சென்று மறைந்தான்.

தலைகுனிந்தபடி அவனை பின்தொடர்ந்துபோனா சுசீலா. அவள் முகம் நிறம் மாறி சிவந்துபோயிருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தான் மூர்த்தி. அப்போது சுசீலா வெகு அழகாய்த் தெரிந்தாள்.

புளியமரத்தைப் பார்த்தபடி வெகுநேரம் உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்காவது போகலாம் என்றால் சேகர் கடையை வேறு பார்த்துக்கணும்!

அப்போது அங்கு இந்திரா வந்தாள். சேகர் கடையில் இல்லாததைப் பார்த்து, "எங்க போச்சு இது?" என்று மூர்த்தியிடம் கேட்டவள், மூர்த்தியை அடையாளம் கண்டுகொண்டு, "அட மூர்த்தீ! நீங்க எப்ப வந்தீங்க?" என்று கண்ணகலக் கேட்டாள்.

"லீவுக்கு வந்தேன்! நாலைஞ்சு நாள் ஆச்சு"

"உங்களை உக்கார வச்சுட்டு இவரு எங்க போனாரு?"

மூர்த்தி தவித்தான். அவளுக்கு எப்படிப் பதில் சொல்வது? மூர்த்தி நெளிவதைப் பார்த்த இந்திரா, "நீங்கதான் படிச்சு உருப்படியா வந்திருக்கீங்க! இந்த சேகரைப் பாருங்க! என்னையெ ஏமாத்திட்டு கண்டவளோட சுத்திக்கிட்டிருக்கு! நான் அதுக்கு அலுத்துப்போயிட்டேனாம்! அதோட விடல்லே! ஏம் தங்கச்சியையும் வளைச்சுப்போட்டு அவளக் கட்டிக்கிறேன்னு சத்தியமெல்லாம் பண்ணிட்டு இப்ப அவளையும் விட்டுருச்சு! ஆம்பளை இல்லாத வீடா எங்களுது... அதான் உங்களுக்குத் தெரியுமே, எங்கப்பா செத்து பத்துவருஷத்துக்கு மேலாச்சே, அதுனாலே இதெத்தான் நல்லது கெட்டதுக்கு அம்மா வச்சிருந்தது. இப்ப எங்களெ சுத்தமா தலைமுழுகிட்டு இந்த இவ இருக்காளே - சுசீலா - அவகூட சுத்திட்டிருக்கு!"

மூர்த்திக்கு தலை சுற்றியது. அவன் இந்திராவின் கண்களைப் பார்த்தான். அதில் கண்ணீர் சாரையாய்க் கொட்டி வழிந்தது.

மூர்த்தி பதறினான். இந்த நிலையில் யாரவது அவனைப் பார்த்துவிட்டால் தப்பாய்ப் போய்விடுமே!

"சரி! நான் போறேன்! சேகர் இப்போ எங்கே இருக்கும்னு எனக்குத் தெரியும்! சுசீலாவத்தான் பாக்கப் போயிருக்கும்! நீங்கவேறெ பாவம்! உங்களைக் கடைக்கிக் காவலாப் போட்டுட்டு போயிருச்சு! அப்ப வரட்டுமா..." மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் இந்திரா. முன்பு பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் உடம்பு இளைத்து சற்று வயசானவள்போல் தெரிந்தாள் இந்திரா. அவள் சீக்கிரமே முற்றிப்போனவள் என்பது மூர்த்திக்கு மட்டுமில்லை, கிராமத்துக்கே தெரியும்!

இந்திரா திரும்பிப் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவள் கால்கள் ஒன்றோடொன்று பின்னித் தடுமாறின. அவளிடம் பெண்மையின் நளினமோ வசியமோ கொஞ்சங்கூட மிஞ்சியிருக்கவில்லை. வறண்டு காய்ந்து வற்றலாகிப் போயிருந்தது அவள் பெண்மை.

மூர்த்தியின் மார்புப் பகுதியில் ஏதோ சில் உடைந்து கலகலத்தது. மனசுக்குள் ஒரு கூரான வலி வேர்விட்டு வேர்விட்டு வளர்ந்து அவன் கண்களுள் நீராய்த் ததும்பி வழிந்தது. சேகரும் சுசீலாவும் மூடப்பட்ட கீற்றுக் குடிலுக்குள்ளிருந்து இன்னும் வரவில்லை. இடக்கை மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தில் மணி பார்த்தான்.மணி பத்தரை.

ஏறுவெயில் தக்தகத்து ஆற்றங்கரை புளியமரக் கிளைகளில் மின்னி மிளிர்ந்தது.புளியமரத்தை உற்றுப்பார்த்தான் மூர்த்தி. அங்கு தொங்கிக்கொண்டிருந்த புளியம்பிஞ்சுகள் பாம்புகளாய் மாறி அவனைப்பார்த்துச் சீறின. அவன் திகிலுற்றான். கண்கள் கட்டி உலகம் இருண்டு போனதுபோலிருந்தது. எங்கும் ஒளியில்லை. கைகளும் உடம்பும் மரத்து சக்தியற்றுப்போவதை உணர்ந்தான் மூர்த்தி.

உட்கார்ந்திருந்த மர ஸ்டூலிலிருந்து தொப்பென்று தரையில் வீழ்ந்தான் மூர்த்தி. சத்தம் கேட்டு கீற்றுக்குடிசைக்குள்ளிருந்து சேகரும் சுசீலாவும் ஓடிவரும் காலடியோசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்பதுபோலிருந்தது மூர்த்திக்கு.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:25 am

" விட்டத்தில் சுழலும் ·பேனைப் பார்த்தபடி மல்லாக்கப் படுத்துக்கிடந்தாள் தட்ஷிணி. சத்யா இறந்து ஏழெட்டு நாள் ஆகியும் கரிந்து போன அவள் முகம் இன்னும் தட்ஷிணியின் மனசைவிட்டு அகலவில்லை. சுழலும் ·பேனின் வட்டக் கோடுகளூடே சத்யாவின் சிதைந்து போன முகம் குழந்தை கிறுக்கிவைத்த கருப்பு மை ஓவியம்போல் சுழன்று கொண்டிருந்தது. முற்றிலும் எரிந்து சிதைந்திருந்த சத்யாவின் முகத்தைப் பார்த்தது தப்பாகிவிட்டது. போலீஸ் வருவதற்குள் கூட்டத்தோடு கூட்டமாய் தட்ஷிணியும் எட்டிப் பார்த்துவிட்டாள். அவள் முக்கியமாகப் பார்த்தது சத்யாவின் வயிற்றுப் பகுதியைத்தான்! அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்த அதிரகஸ்யம்-அந்தப் பிஞ்சுக் கரு-எரிந்து உருத்தெரியாமல் சிதைந்துபோயிருந்த கொடுமை இன்னும் தட்ஷிணியைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாமல் காற்றோடு கரைந்துபோன அடையாளம் தெரியாத ஒரு தூரத்துப் பறவையின் கூக்குரலாய் மறைந்துபோனது சத்யாவுக்குள் வளர்ந்த அந்தத் தளிர்.

"தட்ஷி! உனக்கு மட்டும்தாண்டி சொல்லிருக்கேன், எனக்குள்ளே கரு வளர்றதெ! குரு ஊருக்குப் போயிட்டார்! அவருக்கே இன்னம் தெரியாது!"

இப்படியா கொடூரமாய் முடிவெடுப்பாள் இந்த சத்யா! நினைத்து நினைத்து அழுதழுது காய்ந்துபோன கண்களில் இனி அழ ஏதுமில்லை. வேகமாய்க் கலைந்து கரையும் காலப் புதைமணலின் ஆழத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் மறைய ஆரம்பித்தாள் சத்யா. அவள் முகமும் குரலும் அசைவுகளும் வரவர தட்ஷிணியின் மனசில் நிறம்மாறி மங்கிவருவதை தட்ஷிணி உணர்ந்தாள். அவளுக்குள் இந்த வாழ்க்கை பற்றியும் இதன் நிலைத்தன்மை பற்றியுமான கேள்வி முளைவிட்டு வளர ஆரம்பித்தது.

சத்யாவின் முடிவு சத்யாவுக்கு மட்டுமான முடிவுபோல் தெரியாமல், தட்ஷிணிக்கும் இதில் ஏதோவொரு நூலிழைத் தொடர்பிருப்பதாய்ப்பட்டது தட்ஷிணிக்கு வியப்பாயும் பயமாயும் இருந்தது. அப்படிப்பட்ட தொடர்பை, அதேபோன்றதொரு எதிர்கால நிகழ்வை தன் வாழ்விலும் நினைத்துப்பார்த்து மீண்டும் மீண்டும் பயந்தாள் தட்ஷிணி. அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி கிலியுறச்செய்யும் அந்த நினைவிலிருந்து மீழ ஏதாவது உடனடியாய் செய்தாக வேண்டும். அதுவும் இப்போதே செய்தாகணும்! இல்லாவிட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி!

சத்யாவின் அப்பாபோல் தன் அப்பாவும் ஆகிவிட்டால்!? மூர்த்தியை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டால்! என்னிடமிருந்து என் மூர்த்தியை அநியாயமாய் என்னிடமிருந்து பிரித்துவிட்டால்!

மெதுவாய் எழுந்து பாத்ரூமுக்குப் போய் மேலுடைகளைக் களைந்துவிட்டு ஷவரைத் திருகிவிட்டாள் தட்ஷிணி. அழுதழுது வறண்டு பகபகவென எரிந்துகொண்டிருந்த கண்களிலிருந்து சூடான ஆவி வெளியானது. அதேநேரம், ஷவரின் நீர்த்திவலைகளூடே ஒரு குளிரான விருட்சத்தின் நிழல்போல் வந்துநின்றது மூர்த்தியின் உருவம்!

இத்தனை நாளா கிராமத்தில் என்ன பண்ணிட்டிருக்காரோ மூர்த்தி! அட! மூர்த்தியை அவர் இவர் என்று அழைக்கும் எண்ணம் எப்போது வந்தது எனக்கு?

"மூர்த்தி! எப்ப வருவீங்க மூர்த்தி! லீவு முடிஞ்சு எப்படா வருவே? சொல்லுடா!" நீர்த்திவலைகளூடே அவளது நிர்வாணத்தின் பேரழகைப் பார்த்து இம்மி இம்மியாய் ரசித்துக்கொண்டிருந்த மூர்த்தியின் நிழலிடம் வாய்விட்டுப் பேசினாள் தட்ஷிணி. சட்டென சுயத்துக்குத் திரும்பியவள், தான் இப்போது பேசியதை அம்மாவோ அப்பாவோ பாத்ரூமுக்கு வெளியிலிருந்து ஒட்டுக் கேட்டிருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் மீது பொழிந்த ஷவர்ப் பூக்கள் அவள் கூந்தலையும் தோள்பட்டையையும் மெலிதாய் வருடி வழிந்தன. அவை அவளுக்கு மூர்த்தியின் கைவிரல் வருடல்களாகவே தோணின.

சத்யா பற்றிய ரணகளமான நினைவுகளிலிருந்து இப்போது அவளைக் காப்பாற்றிக் கரையேற்றுவது இந்த மூர்த்தியின் இந்த நிழல்தான்! அவள் சற்றுமுன் உடனடியாகத் தேடிய அருமருந்து இதுதான்போல! மூர்த்தி பற்றிய நினைப்புக்கும் அவன் பிம்பத்துக்கும் இத்தனை வலிவா! இத்தனை ஆற்றலா! இத்தனை அழகா! இத்தனை இனிமையா! தலைமீது கொட்டிக்கொண்டிருந்த அருவி மூர்த்தியேதான்!

குளித்தாள். குளித்தாள்...குளித்துக்கொண்டேயிருந்தாள்! எவ்வளவு நேரமாச்சோ தெரியவில்லை! அம்மா கதவைத் தட்டி "எத்தனை நேரம்மா பாத்ரூமுக்குள்ளேயே அடஞ்சு கெடப்பே?" என்று உரக்கக் கேடபோதுதான் அவள் ஷவரை நிறுத்தினாள். அதற்குள் அவள் முற்றும் முழுசாய் மூர்த்திக்குள் குளித்திருந்தாள். அதற்குள் மானசீகமாய், மாயமாய், சூட்சுமமாய் தன்னை மூர்த்தியிடம் அணுஅணுவாய் ஒப்புக் கொடுத்து விட்டிருந்தாள் தட்ஷிணி!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:25 am

"இந்தா வர்ரேம்மா! துணி துவைச்சேம்மா!" அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு அவசரமாய் சுவரோர ஸ்டாண்டிலிருந்து சந்தன சோப்பை எடுத்து தன் மேனியெங்கும் பூசிக்கொண்டாள். சோப்பின் மெல்லிய சந்தன வாசம் அவளுக்கு மீண்டும் மூர்த்தியை உயிர்ப்பித்து அவளருகே கொண்டுவந்தது. மூர்த்தியின் வலிய விரல்கள் சோப்புநுரைக்குள் மறைந்து அவளின் மேனிப்பரப்பை வருடின. அவள் துடித்துத் துடித்துத் துடித்தாள். அவளது ஈர உடல் துள்ளித் தடுமாறித் துவண்டு தரையில் வீழ்ந்தது...அப்படியே சுவரோரமாய் சாய்ந்து மல்லாந்து படுத்துக்கொண்டாள்... துடித்துக்கொண்டிருந்த அவளது உடல் மெதுவாய் மெதுமெதுவாய் அடங்கிற்று. ஆனாலும் அந்த மயக்கத்திலிருந்து அவள் தன்னிலைக்குத் திரும்ப வெகுநேரமாயிற்று! ஷவரின் அருவி இன்னும் அவள்மீது மெலிதாய்ப் பூத்தூவிக்கொண்டிருந்தது. அப்படியே அதேநிலையில் அசையாமல் கண்மூடி மயக்கத்தில் கிடந்தாள் தட்ஷிணி.

"தச்சீ! தச்சீ! என்னம்மா பண்றே இன்னம்?" மீண்டும் அம்மாவின் குரல். மயக்கம் தெளிந்து மெதுவாய் சுய நினைவுக்கு வந்தவள் அவசரமாய் பூத்துவாலையை எடுத்து துவட்டிக்கொண்டு குளியலறை வாசலைத் திறந்து அம்மாவை எட்டிப்பார்த்தாள். அப்போது அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவள் முகத்தில் குழப்பத்தின் ஆழமான ரேகை வேர்விட்டுப் படர்ந்த்திருந்தது.

"தச்சீ! உடம்புக்கு ஒண்ணுமில்லையே உனக்கு? என்னதான் சத்யா ஓம் ·ப்ரெண்டா இருந்தாலும் அதுக்காக இப்பிடியா?! எங்களுக்கு மட்டும் வருத்தம் இல்லேன்னு நினைச்சியா! என்னடீ பண்றது! எல்லாம் விதி! பொண்ணாப் பொறந்தா எல்லாம்தான் நடக்கும்!" அம்மாவில் குரலில் சுரத்தில்லை.

"அம்மா! இப்போ ஏம்மா இப்பிடி பொலம்புறே? இப்பத்தான் ஒருவாரங்களிச்சு நார்மல் கண்டிஷனுக்கு வந்துருக்கேன்! நீ என்னடாண்ணா திரும்பவும் ஆரம்பிக்கிறே!" அம்மாவிடம் சூடாகப் பேசிவிட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டாள் தட்ஷிணி.

அம்மா ஒரு அப்பாவி.அவளுக்கு எதை எப்போ எப்படிப் பேசணுங்கிறதெல்லாம் ஏதும் தெரியாது! அவ்வப்போது எதுக்காவது எதையாவது உளறிவைப்பாள். அதற்காக அப்பாவிடம் அவள் கடுமையாகத் திட்டுவாங்கிய தருணங்கள் பல. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான சண்டை சச்சரவுகள் மிகவும் சகஜமாகிப்போன சமாச்சாரம்தான்!

குளியலறை ஹேங்கரில் தொங்கிய நைட்டிக்கு மாறி வெளிவந்தாள் தட்ஷிணி. அம்மாவிம் புலம்பல் இன்னும் விடாமல் கேட்டது, "மணி பத்தரைக்கு மேல் ஆச்சு! இன்னம் காலை சாப்பாடு சாப்பிடாமல் குளிக்கிறாளாம்! இப்பிடியா மணிக்கணக்கா குளிப்பா ஒரு வயசுப் பொண்ணு!"

தட்ஷிணிக்கு தலை சூடாகிக் கொண்டே வந்தது. அம்மாவை அப்படியே கடித்துக் குதறிவிடலாம் போல் கோபம் வந்தது. அவளை ஒரு முறை முறைத்துவிட்டு கோபத்தை அடக்கிக்கொண்டாள்.

"சாப்பிட சீக்கிரம் வாடி! வயிறு காஞ்சுடும்! லீவுக்கு வந்ததிலேர்ந்து இப்டி தெனம் தெனம் பட்டினிதான் கெடக்குறே! உனக்கு என்னதான் ஆச்சோ தெரியலே!" பொரிந்தபடியே கிச்சனுக்குப் போய் தோசை வார்க்க ஆரம்பித்தாள் அம்மா.

இப்போதுதான் தட்ஷிணிக்கு பயங்கரமாய்ப் பசியெடுப்பது தெரிந்தது. அவசரமாய் தலையைத் துவட்டி உலர்த்தியபடி சாப்பாட்டு மேஜைக்கு ஓடினாள். அம்மா வார்த்திருந்த முதல் தோசை சட்னி சாம்பார் ஊற்றப்பட்டு அவளுக்காகத் தட்டில் காத்திருந்தது. அதை வேகவேகமாய் விண்டு விழுங்க ஆரம்பித்தாள் தட்ஷிணி. அதில் மூர்த்தியின் வாசமும் சுவையும் நிரம்பிப்பெருகி அவளது அதீதப் பசியைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் தீர்க்க ஆரம்பித்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:26 am

மயக்கத்திலிருந்து விடுபட்டபோது மூர்த்திக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. மெதுவாய் இமைகளைத் திறந்து தலைசாய்த்துப் பார்த்தான். அவனருகில் கவலைதோய நின்றிருந்தார்கள் சேகரும் சுசீலாவும்.

"அப்பாடா! என்ன மூர்த்தி இப்படி கொஞ்ச நேரத்துலே கதிகலங்க வச்சுட்டெ! அடிக்கடி ஒனக்கு இப்பிடி மயக்கம் வருமா?" என்று கவலைதோயக் கேட்டான் சேகர்.

"எப்பவாவது லேசா தலை சுத்தும்.ஆனா இப்பிடி அன்கான்ஷியஸ் ஆனதில்லே" என்றான் மூர்த்தி. குரல் கம்மி பிசிறு தட்டியது.

"நீங்க தொபுக்கடீர்னு ஸ்டூல்லேர்ந்து விழுந்ததைப் பாத்தா ஒங்களுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னுதான் நெனைச்சோம்! ரெண்டுபேரும் வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடியாந்து பாத்தா, நீங்க மண்ணுலே விழுந்து கெடக்குறீங்க! நல்லவேளை, கீழே மணல் போட்டிருந்ததாலே அடியேதும்படலெ! இவரு ஒங்க மூக்குலெகூட விரலெ வச்சுப் பாத்தாரு! மூச்சு இருந்தது. அப்பறம்தான் எங்களுக்கு உசுரே வந்துச்சு!" அங்கலாய்த்துப் புலம்பினாள் சுசீலா.

"நீ கீழே விழுந்ததுமே சுசியும் நானும் காலையும் தலையும் பிடிச்சு அலாக்காத் தூக்கி வீட்டுக்குள்ளே கொண்டாந்துட்டோம்ப்பா! நீ மயக்கமாக் கெடக்குறதெ யாராவது பாத்துட்டா தப்பாப் போயிருமில்லையா! சும்மாவே ஊர்லெ நமக்கு பெத்தபேரா இருக்கு! கண்ணுலெ வெளக்கெண்ணெயே ஊத்திக்கிட்டு என்னையெ நோட்டம் வுட்டிட்டிருக்காங்கே!" என்றான் சேகர்.

"ஆமா இவ்ரு யோக்கியரு! தெனம் ஒருத்தி கூட சுத்திக்கிட்டு அலஞ்சா ஊரு பாக்காமெ என்ன பண்ணும்! கோயில் கட்டி சாமியா கும்புடும்!" என்றாள் சுசீலா.

"சீ போடி...நீ வேறே ஆரம்பிச்சுறாதே! அப்றம் நிறுத்தவே மாட்டே! நா திரும்ப ஏதாவது பண்ணணும் அப்றம்!" என்று அவளை அதட்டினான் சேகர்.

அப்போதுதான் மூர்த்திக்கு உறைத்தது, தான் படுத்திருப்பது சுசியும் சேகரும் சற்றுமுன் படுத்திருந்த பாயில்தான் என்பது! சட்டெனெ எழுந்து உட்கார்ந்த மூர்த்தியிடம் "ஏய்! பாத்துப்பா! ஏம்ப்பா இப்பிடி வேகமா ஏந்திரிக்குறே! திருப்பி ஒனக்கு மயக்கம் வந்துச்சுன்னா ஏங்கதி அதோகதிதான்! பேசாமெ கொஞ்சநேரம் படுத்திருந்துட்டு மயக்கம் தெளிஞ்சவொடனே ஏந்திருச்சு வா! எனக்குக் கொஞ்சம் தைக்கிற வேலையிருக்கு" என்று சொல்லிவிட்டு கீற்று வீட்டை விட்டு வெளியேறினான் சேகர்.

"கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு மேலெ இப்பிடியே மயக்கத்துலே கெடக்குறீங்க மூர்த்தி! உங்க கண்ணுவேறே சுத்திச்சுத்தி சொழண்டுகிட்டே இருந்துச்சு! நானும் சேகரும் ரொம்பப் பயந்துட்டோம்!" என்றாள் சுசீலா, மூர்த்தியின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி.

"என்னாச்சுன்னே தெரியலை சுசீலா! திடீர்னு யாரோ என்னெக் கூப்புடறாப்லெ இருந்துச்சு! அதும் ஒரு தெரிஞ்ச பொண்ணோட குரல் மாதிரி இருந்துச்சு! அப்றம் அப்டியே விழுந்ததுதான் தெரியும்!"

"எப்டியோ நல்லதுதான் நடந்துருக்கு மூர்த்தி ஒங்களுக்கு! இல்லாட்டி இவரு மாதிரி நீங்களும் ஆய்டுவீங்க! இவர்தான் பொம்பலெ பித்துப்பிடிச்சு அலையிறாரு ஊரூரா, காடுகாடா!" என்ற சுசீலா விடாமல் அவன் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதை தையல் மெஷினுக்கு அருகிலிருந்து கேட்ட சேகர், "சக்கழுதே! இந்தப்பக்கம் வாடி! மூர்த்தி ரெஸ்ட் எடுக்கட்டும்! நானா அலையிறேன்! சும்மா இருந்தா எங்கடி வுடுறீங்க? எல்லா நாய்ங்களும் அரிப்பெடுத்து அலைவீங்க! அப்றம் பழியெ எங்க மேலெ போட்டுட்டுப் போயிடுவீங்க! உங்களையெல்லாம் நம்புறம்பாரு, என்னையெ நானே செருப்பாலெ அடிச்சிக்கணும்டி!" என்று பொரிந்துகொண்டிருந்தான்.

சுசீலா மூர்த்தியையே ஒரு கணம் ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது அகலமான, மை அப்பிய கருவிழிகள் அவனிடம் எதையோ சொல்ல வந்தன. அவனும் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான். எல்லாம் க்ஷண நேரம்தான்! அதற்குள் சேலையைத் தூக்கிப் பிடித்தபடி கோலமயிலெனத் தாவி வெளியேறிவிட்டாள் சுசி!

போதும். இது போதும். சேகருக்குக்கூட இந்த அபூர்வப் பார்வை கிட்டியிருக்குமா என்று தெரியவில்லை. கள்ளங்கபடமற்று சிரத்தையேதுமற்று வெளிப்படையாக உள்நுழைந்த தீபார்வையல்லவா இது! இதைவிடத் தித்திப்பு எந்த உறவில் இருக்கும்! இப்படியொரு க்ஷணக்கலப்புக்கு என்னதான் பேர்?

கீற்றுக்கூரையின் முகட்டைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் மனசில் சொல்லமுடியாத அமைதியொன்று குடிகொண்டது. எத்தனை காலம் உறவு என்பதா முக்கியம்! ஒரு க்ஷணம் எனினும் உறவின் கச்சிதம்தானே கணக்கு!

மூர்த்திக்கு சாப விமோசனம் கிட்டியது போலாயிற்று. போன ஜன்மத்து விட்டகுறை தொட்டகுறையை நிவர்த்திக்கவே அவனுக்கு இப்பிறவி கிட்டிற்றோ! வாழ்க்கை எவ்வளவு அழகானது! அதில் இந்த சுசீலாக்களின் பார்வைக்குத்தான் எத்தனை காந்தி! எத்தனை ஈர்ப்பு! எத்தனை வசீகரம்!

அவன் மூக்கில் நசுங்கிய மல்லிகை வாசம் கமகமத்தது. கோரைப்பாயின் ஓரமாய் ஒரு மல்லிகை மொட்டு உதிர்ந்து கிடந்தது. அதை வலதுகையால் எடுத்து முகர்ந்து பார்த்தான். இந்த சுசீலாதான் எப்படி மணக்கிறாள்!

Sponsored content

PostSponsored content



Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக