ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 3:49

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:39

"எப்பிடி..எப்பிடித் தெரியும்?"

"கழுதெ கெட்டா குட்டிச் சொவரு!"

"அப்போ என்னைக் கழுதேங்கிறியா!"

"அதிலென்ன சந்தேகம்! நீ கழுதைதான்! இல்லாட்டி இப்பிடி நடந்துப்பியா?"

"எப்டி நடந்துக்கிட்டேன்!"

"உள்ளே ஆசையெ வச்சுக்கிட்டு வெளியே எதையும் காட்டிக்காமே?"

"யார் சொன்னது உன் மேலே எனக்கு 'லவ்'னு?"

"இதோ! இப்ப நீ சொல்லிட்டியே!"

"சீ! போ! உன்னையே ஒண்ணும் நாங்க வரச்சொல்லலையே! ஏன் வந்து கழுத்தறுக்கிறே?"

"வரச்சொல்லாட்டியும் வருவேன்! அதான் மூர்த்தி!"

"ரொம்பத்தான் பீத்திக்காதே! மண்டை வெடிச்சிறப்போவுது!"

"அய்யாவுக்கு கொஞ்சம் ஹெட்வெய்ட் ஜாஸ்திதான்! ஆனாலும் இதுக்குமேலெ பொறுக்கமுடியலெ! அதான் ஓடியாந்துட்டேன்!" என்று சொல்லிவிட்டு அவளருகில் புல்தரையில் அமர்ந்து கொண்டான் மூர்த்தி.

"உன்னை யாரும் வரச் சொல்லலேங்கிறேனே!"

"இல்லையே! எனக்கு 'டெலிபதி' வந்துச்சேடி! 'போடா நாயே! அங்கே தட்ஸ் தனியாக் கெடந்து அல்லாடிட்டிருக்கா, போ, போய்ச் சொல்லிக்குடு' அப்பிடீன்னு வந்துச்சு!"

"நீ எனக்கு சொல்லித்தர்றதா! நான் 'பெய்ல்' ஆனாலும் பரவால்லே! நீயொன்னும் எனக்கு சொல்லித் தரவேணாம்!"

"நா சொல்லித் தர்றேன்னது வெறும் பாடத்தை மட்டுமில்லெ! அதுக்கும் மேலே!"

"இப்போ நீ போறியா இல்லையா மூர்த்தி?! என்னைப் படிக்கவிடு, தனியா!"

அப்போது, "ஏய்.. நிறுத்துடி! நீ ரொம்பத்தான் அலட்டிக்கிறே தட்ஷிணி! இப்ப நீ படிக்கமுடியாமெத் தவிக்கிறது எனக்குத்தான் தெரியும்! பேசாமெ மூர்த்திகூட சேர்ந்து படி! நான் அந்த ஸ்லாப்லே போய் உக்காந்து படிக்கிறேன். மூர்த்தி, நீ சொல்லிக்குடு மூர்த்தி! அவ கெடக்குறா நாயி! நேத்து நா அறை வாங்கினது எனக்குல்லெ தெரியும்!" என்று சற்று கோபமான த்வனியில் பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டாள் வனஜா.

"ஏய் வனஜ்! பேசாமெப் போறியா! சும்மா.." என்று அவளைத் திட்டமுனைந்தாள் தட்ஷிணி.

மூர்த்தி தட்ஷிணியின் சோர்ந்த கண்களையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். அவள் கண்கள் வழி அவளுக்குள் புகுந்து அவள் உள்ளக் கிடக்கையை, அவள் ஆழ்மனதை அறிந்து கொள்ளத் துடித்தான். அவனுக்கு அவளைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எதுவோ சுரந்தது: 'இவளை விட்டுப் போக எப்படி மனசுவந்தது எனக்கு!'

இப்போது தட்ஷிணியின் முகம் அஷ்டகோணலாய் மாறி அழும் நிலைக்கு வந்தது. சட்டெனச் சுதாரித்துக் கொண்ட தட்ஷிணி, தன் அதிமெல்லிய வெள்ளைக் கைக்குட்டையை தன் கைப்பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். நிலைமையை ஊகித்துக்கொண்ட மூர்த்தி, ஏதுவாக எழுந்து வனஜாவிடம் போனான். சற்று நேரத்தில் தன்நிலைக்கு வந்து, தன்னை மீட்டுக்கொண்ட தட்ஷிணி,வனஜாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் மூர்த்தியை நோக்கினாள்.அதேகணத்தில் மூர்த்தியும் திரும்பிப் பார்த்து அவளைநோக்கி மெதுவாக நடந்து வந்தான். தட்ஷிணிக்கு அந்த கோயில் காளை கனவைப் பற்றி மூர்த்தியிடம் இப்போதே சொல்லவேணும்போல் தோணியது. அதை எப்படி ஆரம்பிப்பது என்று தன்னுள் ஒரு அவசர ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தாள் தட்ஷிணி.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:39

கொல்லங்காளி கோயில் அருகருகே நின்று காளியை தரிசித்துக்கொண்டிருந்தார்கள் மூர்த்தியும் தட்ஷிணியும். அவர்கள் கையில் தேர்வுக்குக்கான குறிப்பேடுகள்.கோயிலில் மாணவர்கள் சிலரும் நாலைந்து விடுதிப்பெண்களும் பிரகாரத்தில் நின்று அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள். மூர்த்திக்கு நெஞ்சுக்குள் திக் திக்கென்றிருந்தது. இன்னும் ஒரு மணிநேரத்தில் தேர்வு. அவன் பார்க்கும் எல்லா மாணவ, மாணவியரும் தெம்பாகத்தான் தென்பட்டார்கள். நன்கு படித்திருப்பார்களாயிருக்கும். மூர்த்தியையும் தட்ஷிணியையும் மட்டும் தேர்வு ஜுரம் பற்றிக்கொண்டு வாட்டியது. மிகவும் பயபக்தியுடம் காளியிடம்,

"எப்படியாவது பாஸ் பண்ண வச்சுடு தாயே" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டான் மூர்த்தி. எதிர்வரிசையில் ஒரு மாணவன் நெற்றி முழுக்க திருநீற்றுப் பட்டையுடன் கண்மூடி பக்தி சிரத்தையுடன் காளிமுன்நின்று,

'இடங்கொண்டு விம்மி இமைகொண்டு இளகி
இளகிமுத்து தடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட..'
என்று அபிராபி அந்தாதி வரிகளை உரக்கப்பாடிக்கொண்டிருந்தான்.

'அபிராமி இல்லாமல் அகிலமில்லை! அவளே மாயை! அவளே சக்தி! அவளே அழகின் ஊற்றுக்கண்! அவளது சக்தியுள் கட்டுண்டுதான் ஆடுது அனைத்தும்.இந்தப் பிரபஞ்ச இயக்கம் அவளின் ஒரு விரல் சொடுக்கில் நடக்கும் ஒரு சிறு செயலே! இந்த அண்டசராசரத்தை ஆட்டுவிப்பவள் இந்த அம்பிகையே’ இப்படி எங்கோ படித்தது மூர்த்திக்கு ஞாபகம் வந்தது.



எதிரே மெஸ் மாமியின் சாயலில் ஒரு பெண் மங்களகரமாய் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவளது நடையும் அசைவும் அவனுள் ஏதோ சலனத்தை ஏற்படுத்திற்று. சட்டெனத் திரும்பி தட்ஷிணியைப் பார்த்தான், கண்களை மூடி காளியிடம் ஏதோ சீரியஸாக வேண்டிக் கொண்டிருந்தாள் தட்ஷிணி. அவளது அருகாமை அவனுள் ஏதோ இனம்புரியாத இன்பத்தை நல்கிற்று. அவளிடமிருந்து ஏதோ மெல்லிய வாசம் அவன் நாசியுள் புகுந்து அவனை மிதக்கச் செய்தது. பிஸ்கட் நிற சுடிதாரில் ‘கச்சிதமாக’ இருந்தாள் தட்ஷிணி. வடிவாக வாரப்பட்டு படிந்தும் படியாமலும் இருக்கும் அவளது அளவான கூந்தலில் அவளது சிவந்த தளிர்போன்ற காது மடல்கள் அழகாகப் பொருந்தியிருந்தன. அவள் மாட்டியிருந்த தங்க ஜிமிக்கி லேசாய் அசைந்து அவன் கண்களுள் மெலிதாய் மினுமினுத்தது. கோவிலில் விழுந்திருந்த காலைவெயிலின் ஒளி அவனுள் இறங்கி அவன் உயிரை ஒளியுறச்செய்தது.

காளியிடம் இவள் எதை வேண்டுகிறாள்? அதிகபட்சம் காளியிடம் எதைக் கேட்டுவிட முடியும்? 'அம்மா தாயே, என்னை எப்படியாவது இப்ப எழுதப்போற பேப்பர்லே பாஸ் பண்ண வச்சுடு'- இப்படித்தான் வேண்டிக் கொண்டிருக்கிறாளோ! அவளைப் பார்க்கையில் அவனுள் லேசாய் ஒரு எள்ளல் முகிழ்த்தது, அடக்கிக்கொண்டான்!

'மோசமானவள் இந்த தட்ஷிணி! சிடுமூஞ்சி! வெடுக் வெடுக்கெனக் கோபம் கொள்பவள்! நான் எதையாவது உளறப்போய் அவள் ஏதாவது நினைத்துக்கொண்டால்!'

ஒரு அசப்பில் தட்ஷிணிக்கு மாமியின் முகவெட்டு இருப்பதறிந்து ஒருகணம் திகைத்தான் மூர்த்தி. ஒருவேளை சின்ன வயசில் மாமி இவளைப் போல்தான் இருந்திருப்பாளோ!

அய்யர், காளி விக்ரகத்துக்கு ஆராதனை காட்டினார், காளியின் கன்னங்கரிய எண்ணெய் முகம் தீப ஒளியில் பளபளத்தது. மிகவும் நேர்த்தியாக இந்த காளியை வடித்தெடுத்த அந்த சிற்பி யாரோ! கல்லுக்குள் உயிரையும் அழகையும் உறைய வைத்து அப்படியே தைத்திருக்கிறானே!

மீண்டும் தட்ஷிணியை நோக்கினான் மூர்த்தி. அவள் இன்னும் கண்திறக்கவில்லை! பக்தி அவளுக்கு முத்திவிட்டதுபோல!

அப்போது கோயிலுக்குள் நுழைந்த ஸ்ரீ£தர், மூர்த்தியும் தட்ஷிணியும் ஒன்றாகச் சாமி கும்பிடுவதைப் பார்த்து லேசாய் முகம் கறுத்தான். அவன் கன்னச்சதை நுண்மையாகச் சுருங்கி விரிவதை மூர்த்தியால் எளிதில் அனுமானிக்க முடிந்தது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக, அவளின் கடைக்கண் பார்வைக்காக- வெளியில் காட்டிக்கொள்ளாமல் - ஏங்கித் திரியும் அவன் வகுப்புத்தோழர்களையும், கிராமத்து நண்பர்களையும் அவன் அறிவான். அவன் கிராம நண்பர் சிலர், விவசாயக் கூலிவேலைக்கு வரும் பெண்களை வளைக்கப் பார்ப்பதும், அதற்காகத் தம் சக்தி முழுவதையும் செலவு செய்து ராப்பகலாய் அலைவதையும் அவன் அறிவான். எல்லாம் வேடிக்கையாயும் மாயமாயும் கனவாயும் பட்டது அவனுக்கு.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:40

மூர்த்தி ஸ்ரீ£தரைத் தேடினான். அவன் அதற்குள் எங்கோ போய்விட்டான். ஒருவேளை நான் தட்ஷிணியுடன் நிற்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லையோ! அவனுக்கு ஏனோ அவன் கிராமத்தில் அடிக்கடி பார்க்கும் நாய்ச் சண்டை ஞாபகத்துக்கு வந்துதொலைத்தது! ஒரு பெட்டை நாய்க்காக, இரண்டு மூன்று ஆண் நாய்கள் அடித்து, கடித்துக்கொள்ளும்! அப்போது ஜெயிப்பது ஒரு வல்லமை பொருந்திய நாயாக இருக்கும்!

ச்சே,கோயிலில் என்னென்ன நினைவெல்லாம் வருது! தட்ஷிணி கண் திறந்து பிரகாரத்தை சுற்றிவர ஆரம்பித்தாள். அவளைப் பின்தொடர்ந்தான் மூர்த்தி. அது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவர்களை பல கண்கள் உற்று நோக்குவதாய்ப்பட்டது.

"என்னடா மாப்ளே, பக்திசிரத்தையா கோயிலுக்கெல்லாம் வர்றே!" என்றபடி கோயிலுக்குள் நுழைந்தான் அறைத்தோழன் மனோகர், "பயங்கரமாப் படிக்கிறே போல! ‘ஹோல் நைட்’ அடிச்சியா! கண்ணெல்லாம் செவந்து போய்க் கெடக்கு!"

"அதெல்லாம் இல்லேப்பா...சும்மா, தூக்கமே வரலே..அதான்.."

"எப்டி வரும் சொல்லு! அதான் உனக்கு வேறெவேறெ வேலையெல்லாம் இருக்கே!"

"ஏதாவது ஒளறாதே! அப்றம் நல்லாருக்காது!"

"என்னடா மாப்ளே, என்ன பண்ணுவே! ஸ்ரீ£தரை அடிச்சது மாதிரி அடிச்சிருவியோ?"

"டேய்..சும்மா வம்பிழுக்காதே! பேசாமப் போயிடு!” மூர்த்தியின் முகம் கடுகடுத்தது. தட்ஷிணி சிரத்தையாக ப்ரகாரத்தைச் சுற்றி அடுத்த பக்கத்துக்குப் போய்விட்டாள்.

மனோகர் மூர்த்தியின் கைகளைச் சட்டெனப் பிடித்துக்கொண்டான், "ஏய்..நா சொல்றேன்னு கோச்சுக்காதே மாப்ளே! இந்த காலேஜ்லேயே வாழ்க்கையெ அனுபவிக்கிறவன் ஒரே ஒருத்தந்தான் இருக்கான் மாப்ளே! அது யார்னு சொல்லு!"

மனோகரின் கேள்வியில் சற்று குழம்பிநின்றான் மூர்த்தி.

"தெர்யலே? உனக்கே தெரியலையா! சொல்லு பாக்கலாம்.." மீண்டும் பீடிகைபோட்டான் மனோகர்.

"தெர்லேடா..நீயே சொல்லிடு!"

"அது சாட்சாத் நீதாண்டா மாப்ளே!"

மனோகரின் முகம் குழந்தைத்தனமாக மாறியது.அவன் தொடர்ந்து பேசினான்:

"என்னாலேதான் காலேஜ் லை·பை அனுபவிக்க முடியலே, உன்னாலே அது முடியுது! என்ஜாய்.."

மூர்த்தி எதுவும் பேசாமல் அவன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"இப்போ உன்னையும் தட்ஷிணியையும் சேர்த்து பாக்கும்போது எனக்குக்கூட கொஞ்சம் வயித்தெரிச்சலாத்தாண்டா இருக்கு! அப்றம் அந்த ஸ்ரீ£தர் பய எரியமாட்டானா? அதனாலேதான் சொல்றேன் மாப்ளே! இப்பிடி கோயிலுக்கு சேர்ந்து வர்றதெல்லாம் அவாய்ட் பண்ணிடு மாப்ளே! எலாரும் உன்னைப் பாத்துப்பாத்து பொகையிறானுகப்பா!அதுக்கு மேல உன் இஷ்டம்!"

"பொகைஞ்சா பொகையட்டும்! அதுக்கு நான் என்னடா பண்றது!"

"அப்பிடியில்லே மூர்த்தி..நீயும் ஜாக்ரதையா இருந்துக்கோ..ஸ்ரீதர் மாதிரி வேறே எவனும் வம்புக்கு வந்துறக் கூடாதில்லெ? சரி, அதோ தட்ஷிணி உனக்காகக் காத்துக்கிட்டு நிக்கிது, போ!" சொல்லிவிட்டு கோயிலை விட்டுப் போய்விட்டான் மனோகர். அவன் சாமிகும்பிடக் கூட இல்லை என்பதை அப்போதுதான் கவனித்தான் மூர்த்தி. இதைச் சொல்வதற்காகவே அவன் கோயிலுக்குள் நுழைந்திருப்பான் போல!

மூர்த்தி முகத்தில் கவலை ரேகைகளுடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். கோயில் முகப்பில் தரையில் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருந்தாள் தட்ஷிணி.

"ஆண்டவா, என்னைக் காப்பாற்று" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் மூர்த்தி.

தரையில் மண்டியிட்டெழுந்த தட்ஷிணியின் முகத்தில் காளியின் முகவெட்டு அச்சு அசலாய் படிந்திருந்ததைக் கண்டு வெகுவாய் ஆச்சர்யமுற்றான் மூர்த்தி.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:40

வீட்டு ஹாலின் இரும்புக்கட்டிலில் மின்விசிறிக்குக்கீழ் உட்கார்ந்திருந்தாள் மாமி. அப்போதுதான் கொஞ்சநேரம் மதியத்தூக்கம்போட்டு எழுந்திருந்தாள். சுவர்¢ல் தொங்கிக்கொண்டிருந்த ரஸம்போன கண்ணாடியில் முகம் வாட்டமாய்,கலங்கலாய்த் தெரிந்தது. கட்டிலில் விரித்திருந்த கோரைப்பாய் அழுத்தி அவள் கன்னத்தில் குறுக்கும்நெடுக்குமாகக் கோடுகளை வரைந்திருந்தது.தன் விரல்களை அந்தக் கோடுகளின்வழி செலுத்தினாள்.கன்னம் தன் மென்மையிழந்து வரவரவென்றிருப்பதாய்ப்பட்டது.


புவனா தரையில் பெட்ஷீட் விரிப்பில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள்.அய்யர் ஜாமான் வாங்க டவுனுக்குப் போயிருந்தார்.


சுவர்க்கடிகாரத்தில் மணி ரெண்டு. மூர்த்தி இந்நேரம் பரீட்சை முடுஞ்சு திரும்பிவந்துண்டிருப்பான்! “பத்து மணியிலிருந்து ஒரு மணிவரைக்கும் பரீட்சை மாமீ..ஆனா சாப்பாட்டுக்கு வர ரெண்டு மணி ஆய்டும், ஒரு வேலையிருக்கு.. நீங்க தேடாதீங்க..” காலையில் அவளிடம் சொல்லிவிட்டுத்தான் போனான்.‘க்ருஷ்ணா! அவன் நன்னா பரீட்சை எழுதணும்! அப்பத்தான் நான் கஷ்டப்பட்டதுக்குப் பலன்!’


ராத்திரி அவள் சரியாத் தூங்கவில்லை. நடுஜாமம்வரை கண்முழுச்சுப் படிச்சான் மூர்த்தி. அவனுக்கு உதவியா மூணு தடவை கருப்பு டீ போட்டுக்குடுத்தாள் மாமி. “கருப்பு டீன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் மாமீ!பால் இல்லேன்னு கவலைப் படாதீங்க! கிராமத்லெ எப்பவும் கருப்பு டீதான்!” -ஒருநாள் டீ போட பாலுக்குத் தவித்தபோது இப்படிச் சொன்னான் மூர்த்தி.


அவளும் தூங்காமல் இருக்க கருப்பு டீ அருந்தினாள். நல்ல சக்ரா கோல்டு டாட்டா டீ! கமகமண்ணு

வாசமா இருந்தது! சொல்லப் போனா, டீ போட்டு அவ மொதல்லே ருசி பாத்துட்டுத்தான் மூர்த்திக்கே குடுப்பாள்! அவள் எச்சில்பட்ட டீயைத்தான் அவனும் குடித்தான்! “ஆஹா, ஓஹோ அருமையா இருக்கு மாமி டீ” என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவளுக்கு உச்சியில் சிலிர்க்கும்! அதுக்குத்தானே அவள் இதெல்லாம் செய்யறது! மூர்த்தி அவள் போட்ட டீயையோ, காபியையோ பாராட்டும்போது மனசுக்குள் ஒரு அளவில்லா இதம் பொங்குது! மூர்த்தி எது சொன்னாலும், என்னபேசினாலும் இப்பிடித்தான் பொங்குது! அவளே தடுக்க நெனைச்சாலும் அவளுக்கு முடியாது! அவளுக்கு என்னதான் ஆச்சு! ஏன் இப்பிடி அவனோட அருகாமைக்காகவும் அவன் பேச்சை சலிக்காமெ கேட்டுண்டிருக்கவும் ஏங்கியலையுது மனசு!


ஆனாலும், ரெண்டு நாளாவே அவளுக்கு மனசே சரியில்லை. மூர்த்தி ஏன் இப்படி இருக்கான்? அவனுக்கு நான் என்ன கொறை வச்சேன்! ஆண்டவா! அவன் மனசை மாத்து! அவனை மெஸ்சைவிட்டு போய்விடாமல் செய்!


ச்சை! என்ன பைத்தியக்காரத்தனம்! அவன்மேல் எனக்கு ஏனிந்தப் ப்ரீதி! அய்யர் கூட அரசல்புரசலாக சொல்லிவிட்டார்: “மூர்த்திக்கு நம்மாத்லெ அவ்வளவு எடம்குடுக்கறது நல்லால்லே பாத்துக்கோ! வயசுக்கு வந்த பொண்ணுவேற இருக்கா! நாமளும் ஜாக்ரதையா இருக்கணுமோல்லியோ!”
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:41

இந்த புவனா பொய் சொல்றாளோ! மொட்டை மாடிக்கு துணி உலர்த்த போனாளாம்! மூர்த்தி இருந்தானாம்! பேசிட்டிருந்தப்ப, சொன்னானாம், ஹாஸ்டலுக்கே திரும்பிப் போப்போறேன்னு! எப்பிடி!


இந்தப் புவனாக்குட்டீ! அவளுமா பைத்யம் மாதிரி ஆவா! அவளும் ரெண்டுநாளா தூங்காமெ பொரண்டுபொரண்டு படுக்குறா! ஒரு பொண்ணப் பத்தி இன்னொரு பொண்ணுக்குத் தெரியாதா! ச்சை! நானென்ன பொண்ணா! நாப்பது வயசைத் தாண்டினவளுக்கு ஏன் இப்படியெல்லாம் வர்றது கிறுக்கு!


“க்ருஷ்ணா!” என்று பெருமூச்சிட்டாள் மாமி. தன் முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.·பேன் காற்று சூடாக வந்து அவள் கூந்தலைக் கிளறி பிசிறு முடிகளை ஆடவைத்தது.எழுந்து கண்ணாடியை சுவர் ஆணியிலிருந்து கழற்றி தன் முகத்தையும் கூந்தலையும் உற்றுப்பார்த்தாள் மாமி. அட, இந்த முடி ஏந்தான் இப்படி சாட்டையாய் வளந்துகெடக்குதோ! புவனாவுக்குக்கூட அவ்வளவு முடி ஏது! எங்காவது நல்லது கெட்டதுக்குப் போனால், என் முடியையே எல்லாப் பொம்மணாட்டிங்களும் உத்துஉத்துப் பாக்குறாளுக! அது ஏன்? நெறையப் பொம்பளைக்களுக்கு எனக்கு இவ்ளோ அடர்த்தியா, நீளமா, இன்னும் நரைக்காமெ முடி இருக்குறதை ஜீரணிக்க முடியல்லை! அதான் உண்மை!


கூந்தலை அவிழ்த்து கைகளில் அள்ளிச்சுழற்றி கொண்டைபோட்டுக்கொண்டாள் மாமி.அவள் ஒருமுறை மூர்த்திக்கு எதிரே இப்படிக் கொண்டைபோட்டபோது மூர்த்தி அவளை வைத்த கண்வாங்காமல் பார்த்தபடியிருந்தான்! என்ன துணிச்சல் அவனுக்கு!அவன் கண்களில் ஏன் இத்தனை காந்தம்! இந்த வயசில் எத்தனை ஆண்களைப் பார்த்திருக்கிறேன்.இவன் பார்வை மட்டும் ஏன் என்னை இப்படி இம்சிக்குது!அவன் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் பார்வை எவ்வித பிசிறுமின்றி என் அங்கங்களில் மெலிதாகப் படர்றதையும் அப்போ அவன் முகம் ஒருவித பரவசமா மலர்ந்து பூவாப் பூக்குறதையும் எத்தனைமுறை அனுபவிச்சு ஆச்சர்யமா பார்த்திருக்கேன்! அதுக்குத்தானே இப்பிடி தவியாத் தவிக்குது மனசு!


ஆனால் அவன்.. அவனுக்கு என்னைவிட்டுப்போக அவனுக்கு எப்படி மனசு வரும்! பரீட்சை லீவுக்கு அவன் ‘பத்துநாள் ஊருக்குப்போயிருவேன் மாமீ’ என்று சொன்னபோதே அவள் எப்படித் துடித்துப்போனாள். இப்பிடி திடுதிப்னு அவன் ஹாஸ்டலுக்கே திரும்பிப் போறேன்னு போயிட்டான்னா என்ன செய்றது நான்!


அவளுக்கு மூளை சூடாகிக்கொண்டே வந்தது. தனக்கு பைத்யம் பிடித்துவிடுமோ என்று பயந்தாள். ரெண்டுநாளா நிம்மதியே போச்சு! அவள் மனசை மூர்த்தியின் பிம்பமும் அதன் அசைவுகளும் அதன் பேச்சும் அதன் இதமும் அதன் புதுமையும் அதன் அழகும் வலுவாய் ஆக்ரமித்திருந்தன.எல்லாக் கணத்திலும் அவளை முழுசாய் ஆக்ரமித்து தன்னுள்ளும் தன் பிம்பத்துள்ளும் மூழ்கடித்திருந்தான் மூர்த்தி!


எங்காவது முட்டிக்கொள்ளலாம்போல் வந்தது மாமிக்கு.அவள் மனசு எப்படியாவது மூர்த்தியை ஹாஸ்டலுக்குப் போகவிடாமல் செய்வதற்கான தந்திரங்களைக் கற்பனை செய்தது.என்ன செய்யலாம்?!


புவனா இன்னும் எழவில்லை. .நீலக்கலர் பாவாடை தாவணியில் குழந்தைபோல் படுக்கையில் உருண்டுகிடந்தாள் புவனேஸ்வரி.அய்யருக்கு எப்போதும் புவனா நினைப்புதான்! என்னை அவர் கண்டுகொள்வதே இல்லை! எப்போதாவது கொஞ்சநேரம் நான் தேவைப்படும்போது தேடுவார்.அப்புறம் அருகில்கூட வருவதில்லை! அவர் என்னசெய்வார் பாவம்! வயசாகிப் போச்சு! பத்துவருசத்துக்கு முந்தி அவள் அய்யரிடம் வந்தபோது அவருக்கு கொஞ்சம் தெம்பு இருந்தது உண்மைதான். எனக்காக எதெதுவோ தின்பண்டங்கள் வாங்கிவருவார்! எல்லாம் ஆரம்பகால ருசிதான்! அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதைதான்!


பெருமூச்சு விட்டபடி எழுந்து கொல்லைப்புறத்து நடந்தாள். மாலை வெயில் அவள் கன்னத்தில் சுள்ளிட்டது. கிணற்றடியிலிருந்த சிமெண்ட்டுத் தொட்டியிலிருந்து நீர் அள்ளி முகம், கைகால்களை அலம்பிக்கொண்டு திரும்பினாள். வீட்டுக்குள் யாரோ நுழையும் அரவம் கேட்டது.மூர்த்திதான் இந்நேரம் பரீட்சை முடிந்து திரும்பியிருப்பான். அவன் வருவான் என்றுதான் வீட்டைத் திறந்தே போட்டிருந்தாள்.அவள் மனசு படபடவென அடித்துக்கொண்டது. ‘க்ருஷ்ணா!’ என்று வாய்விட்டு கூவியபடி ஓட்டமாய் வீட்டினுள் நுழைந்தாள் மாமி.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:41

மூர்த்தி மெஸ்ஸில் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். தாமதமாகச் சாப்பிடுவதால் சோறு உள்ளே இறங்க மறுத்தது.மணி இப்போது மூன்றாகியிருந்தது.தேர்வு எழுதிவிட்டு வந்து மாமியிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குப் போய் வினாத்தாளை கொஞ்சநேரம் புரட்டிப்பார்த்துவிட்டு இப்போதுதான் சாப்பிட வந்தான். மாமி அவனுக்கு சாதம் பரிமாறிவிட்டு உடனே உள்ளே போய்விட்டாள். எப்போதும் எதிர் பெஞ்சில் உட்கார்ந்து அவன் சாப்பிடுவதை வைத்தகண் வாங்காமல் கவனித்துக்கொண்டிருப்பாள். இதுதான் முதல்தடவை அவள் அவனுக்குப் பரிமாறிவிட்டு அவன் முகத்தை ஏறெடுத்துப்பார்க்காமல் உள்ளே போனது..

அவன் கண்கள் அலைபாய்ந்தன.. நெஞ்சாங்குழி எரிச்சல்கண்டு வலிப்பதுபோல் இருந்தது. ஏன் இப்படி மாறிவிட்டாள் மாமி? என்னாயிற்று அவளுக்கு.

சாம்பார் நல்ல உறைப்பு! வயிறு கபகபவென எரிந்தது. வாழைக்காய்ப் பொரியலும் நல்லாயில்லை. ஏற்கனவே மாமி இலையில் வைத்திருந்த எலுமிச்சை ஊறுகாய் குமட்டியது. இது மாமியின் சமையல்போல் இல்லையே! நிச்சயமாய் இது அவள் கைப்பாகமாய் இருக்க வாய்ப்பில்லை.

ஹாஸ்டல் சாப்பாடும் அவனுக்கு ஒத்துவரவில்லை. வயிற்றில் அல்சர் இருக்குமோ என்று பயந்தான். சரியாக சாப்பிட முடியாமல் போவதற்கு அல்சர்தான் காரணமோ! ப்ளஸ் டூ வரை கிராமத்தில் பழைய சோறு சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. புதிய டி•பன் பழக்கத்துக்கு மாறுவது பெரும்பாடாகிவிட்டது.

பாதிசாதத்தை இலையோரம் ஒதுக்கிவிட்டு அருகிலிருந்த அன்னப்பாத்திரத்திலிருந்து கரண்டியில் கொஞ்சமாய் சாதத்தை இடக்கையால் எடுத்துப்போட்டு, ரசம் விட்டுக்கொண்டான். அவனுக்கு ‘ச்சை’ என்றாகிவிட்டது. இந்த மாமி எங்கே போய்த்தொலைந்தாள்!

அப்படியே இலையில் சாதத்தை விட்டுவிட்டு ஹாலுக்குப்போனான். மாமி அங்கு கட்டிலில் குப்புற உருண்டுகிடந்தாள். சேலை முழங்காலுக்கு மேலேறி வாழைபோல் வழவழப்பான அவளது முழங்கால்களும், அகண்ட பின்தொடையின் அடிப்பாகமும் அவன் கண்களை நிறைத்தன. அவன் கால்கள் அவளருகில் போய் சட்டென நின்றன. அவள் முதுகுப்புறமும் பின்கழுத்தும் அதில் சுருண்டுகிடந்த கொசுறு முடிகளும் அவனை திக்குமுக்காடச்செய்தன. அவனுக்கு பசி மறந்தது. தான் இன்னும் கைகழுவவில்லை என்பதை மறந்து மாமியின் தோள்பட்டையில் கைவைத்து

"என்ன மாமி? உடம்புக்கேதும் முடியலையா?" என்று கேட்டான்.அவன் குரல் நடுங்கிற்று. கைவிரல்கள் படபடத்து ஆடின.

மாமி அவனுக்குப் பதில்தரவில்லை. அவளிடமிருந்து எந்த அசைவும் வராததால், கட்டிலின் மறுபக்கமாய்ப் போய் அவள் முகத்தைப் பார்த்தான். மாமியின் கண்களில் சாரைசாரையாய் கண்ணீர் பாயில் உருண்டோடியது.

தரையில் உறங்கிக்கொண்டிருந்த புவனா புரண்டு சுவர்ப்பக்கமாய்த் திரும்பிப்படுத்தாள். மூர்த்திக்கு ஆச்சர்யம் தாளவில்லை:இன்னுமா தூங்குகிறாள் இந்தப் புவனா! தூங்குகிறாளா, தூங்குவதுபோல் நடிக்கிறாளா!

மெதுவாக எழுந்து உட்கார்ந்த மாமி, கண்களை தன் இருகைகளாலும் அழுந்தத் துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சினாள். அவள் எதுவும் பேசாமல் இப்படி அழுவது அவனுக்கு ஆச்சர்யமாயும் புதிராயும் இருந்தது.

மாமி மெதுவான குரலில், "சாப்பாடு நன்னாருந்துச்சாடாம்பீ..நன்னாச் சாப்டியோன்னோ?" என்று கேட்டாள். மாமியின் முகம் வெளிறிப்போயிருந்தது.

"ஒடம்புக்கு என்னாச்சு மாமி? ரொம்ப சோர்ந்தாப்லெ இருக்கீங்க?" என்று கேட்டான் மூர்த்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்லடாம்பீ.. எல்லாம் மனசுக்குத்தான் நோவு! சாப்பாடு நன்னாருந்துச்சான்னு சொல்லு.."

"சாப்பாடு ப்ரமாதம் மாமீ.. நீங்க சொல்லுங்க, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?"
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:41

"பொய்! பொய் சொல்றேடாம்பீ! இது என்னோட கைப்பாகமேயில்லே! எனக்கு என்னாச்சுன்னே தெரியலடாம்பீ! திடீர்னு மனசுலே பீதி கெளம்பிடுச்சு! பைத்யம் புடுச்சுருமோன்னு பயமாருக்குடாம்பீ! ரெண்டுநாளா தூங்கவேயில்லடா, ஒரே கனவு! மனசெல்லாம் சொழண்டுண்டே இருக்கு! எப்டி சாதம் வெச்சேன், எப்டி சாம்பார் ரசம்லாம் பண்ணேன்னு நேக்கே தெரியலடாம்பீ!" சொல்லிவிட்டு ஒரு ‘உஸ்ஸ்..’என்று பெருமூச்சுவிட்டவள், தன் வாடாமல்லி நிறச் சேலையின் மாராப்பை சரிசெய்துகொண்டாள். அவனெதிரிலேயே கூந்தலை ஆற அமர அவிழ்த்து மெதுவாக கொண்டைபோட்டாள். கைகளைத் தலைக்கு உயர்த்தியபோது அவளது இடைப்பாகத்தில் இருந்த இரண்டு அளவான மடிப்புகள் வியர்வையில் மின்னின. மாராப்பு விலகி மார்பகத்தின் ஓரப்பாகம் ரோஸ்நிறச் சோளியில் விம்மித்தெரிந்தது.

அவனுக்கு பயங்கரமாய் வியர்த்தது. அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தான். மின்விசிறி சுழலாமல் அமைதியாய் நின்றுகொண்டிருந்தது.

"ஏம் மாமீ? எதாவது காரணமில்லாமெ இப்டி ஆகாதே!"

மாமி அவனையே சற்று நேரம் உற்றுப்பார்த்துவிட்டு, உறுதியான குரலில் "ஏண்டாம்பீ, நான் வைக்கிற சாப்பாடு ப்ரமாதம், காபி ப்ரமாதம், கவனிப்பு ப்ரமாதம்னு வாய்க்குவாய் சொன்னே! அப்றம் ஏண்டாம்பீ திரும்பவும் ஹாஸ்டலுக்கு திரும்பிப்போறதா சொன்னே?"

"யார்மாமி சொன்னது?"

"புவனா சொன்னா..அவகிட்டே நேத்திக்குச் சொன்னியாமேடா!" மாமி முகம் சுருங்கிச்சூம்பி மீண்டும் அழும்நிலைக்குப்போனது.

"நேத்திக்கு காலம்பற மொட்டைமாடிலே துணி உலத்த வந்தாளாம். அப்போ நீ சொன்னியாம்..வேகவேகமா வந்து, "மூர்த்தி திரும்பவும் ஹாஸ்டலுக்குப் போப்போறாராம்"னா..உண்மைதானா, சொல்லு!"” மாமியின் குரலில் அழுத்தம்.

"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாமி..திரும்பவும் ஹாஸ்டலுக்குப் போற ஐடியாவே இல்லே.."

"இல்லேடாம்பீ..உம்மனசுலே ஏதோ உதிக்காமெ அப்டிச் சொல்லிருக்கமாட்டே! அப்டியே போறதுன்னா முன்னாடியே சொல்லிடு.. திடுதிப்னு இப்டிச் சொன்னியானா.." மாமியின் கண்கள் சட்டெனக் குளமாயின. அழுகையை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாள். அவள் முகம் கோணி, நெகிழ்ந்து கூம்பிற்று.

அழும்போதும் என்னமாய் இருக்கிறாள் மாமி! இவளுக்குள் ஏன் இப்படி கொட்டிக்கிடக்குது பெண்மை! நாற்பதைத் தாண்டியும் எப்படி மனசாலும் உடலாலும் இப்படி அதீத இளமையோடும் புதிராயும் கவர்ச்சியாயும் இருக்கமுடிகிறது!

திடீரென மாமி முகத்தில் தட்ஷிணியின் சாயல் நிழலடித்தது! அவன் ஒருகணம் தன் கண்களை தானே நம்பாமல் மீண்டும் மாமியின் முகத்தை ஏறிட்டான்: தட்ஷிணியின் சாயலே தான்! அதில் சந்தேகமே இல்லை! அவன் காலையில் தட்ஷிணியின் முகத்தில் மாமியின் முகம் நிழலாடுவதை உணர்ந்தது உண்மைதானோ! வயதைத் தவிர, இவளுக்கும் தட்ஷிணிக்கும் என்ன வித்யாசம்! இந்த முகம், இந்த ப்ரியம், இந்த உரிமை, இந்தப் பாசம்..அப்படியே தட்ஷிணியை உரித்தல்லவா வைத்திருக்கிறது! இதை ஏன் அவன் இத்தனைநாள் கவனிக்கத் தவறினான்!

"உனக்கு இங்கே என்னடா கொறைச்சல்!" கண்களை முந்தானையால் துடைத்தபடியே கேட்டாள்: "உனக்கு நான் என்ன கொறை வச்சேன்! உங்க சொந்தக்காரி நந்தினியைக்கூட இங்கே வேலைக்குச் சேத்துவிடுன்னு சொன்னேனேடா! அவளைப் பேசாமே மொட்டைமாடி குடிசைலேயே தங்கவச்சுக்கலாம்..சரியா.. ஏதும் இங்கே பிரச்சனைன்னா எல்லாத்தையும் எங்கிட்டே ஒளிவுமறைவில்லாமெ சொல்லிடு! அதை விட்டுட்டு திடீர்னு ரூமைக் காலி பண்றேன்னு சொன்னியானா..!" மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் மாமி.. முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமி..நா இங்கேதான் தங்கப்போறேன்..! எக்காரணங்கொண்டும் திரும்பவும் ஹாஸ்டலுக்குப் போமாட்டேன்..சரியா!"

"முழுமனசோட சொல்றியா, இல்லை, பேருக்கு தப்பிக்கிறதுக்காகப் பேசுறியா"

"இது உங்கமேலே சத்தியம்!" கண்களைத் துடைத்தபடியிருந்த அவளது சிவந்த வலக்கையை இழுத்து அவள் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தான் மூர்த்தி.

"இந்த வார்த்தை தப்பிப்போனா நா அப்றம் செத்துடுவேண்டாம்பீ!"

"ஏம் மாமீ இப்பிடியெல்லாம் பேசுறீங்க? நாந்தான் போமாட்டேனுட்டேனே!" சொல்லிவிட்டு மெஸ் அறைக்குத் திரும்பினான். அங்கு அவன் சற்றுமுன் பிசைந்துவைத்த ரசம் சாதம் அவனுக்காகக் காத்திருந்தது.

அவன் பின்னால் மாமி மெதுவாக எழுந்துவருவது கேட்டது.

இலைக்குமுன் அமர்ந்து மீண்டும் ரசம் சாதத்தை சாப்பிட ஆரம்பித்தான். மாமி முகத்தில் ஒரு முறுவலுடன் வந்து அவனெதிரே மரப்பெஞ்சில் அமர்ந்தாள். ரசம்சாதத்தை ஒருபிடி எடுத்து வாயில் வைத்தான். அது அவன் நாவில் தேவார்மிதமாய் ருசித்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:42

கொல்லப்புற கிணற்றடி புளியமரத்தடியில் மல்லாக்கப்படுத்திருந்தாள் நந்தினி. மரம் பூப்பூக்க ஆரம்பித்திருந்தது. சின்னச்சின்ன மஞ்சள் பூக்களில் இடையிடையே செவ்வரிகள் ஓடி புளியம்பூக்கள் அழகாயிருந்தன.சில பூக்கள் பச்சைநிறத்தில் பிஞ்சாகி குட்டிகுட்டி புளியம்பிஞ்சுகள் எல்லாக் கிளையிலும், நெளிநெளியாய்த் தொங்கின. கிளைகளுக்கு ஊடே காத்திரமான ஏறுவெயில் புகுந்து பூக்களும் பிஞ்சுகளும் சூடாக ஆரம்பித்திருந்தன. வேலியோரம் நின்ற வேப்பமரத்தில் காகம் ஒன்று ஒற்றைக்குரலில் விட்டுவிட்டுக் கரைந்து கொண்டிருந்தது.

காக்கா கத்துனா விருந்தாடி வருவாகளாம்! அப்ப, மூர்த்தி இன்னிக்கு வந்துரும்! எம் மூர்த்தி என்னை ஏமாத்திராது! அது இன்னிக்கு எப்பிடியாவது வந்துரும்! அதுக்கு பரிச்சையெல்லாம் இந்நேரம் முடிஞ்சிருக்கும்.

நந்தினி புளியமரக் கிளைகளிலூடே கண்களை அலையவிட்டாள். ஒரு கிளையில் ஒரு சின்னூந்து தேன்சிட்டு தாவித்தாவி புளியம்பூக்களில் தேனுறிஞ்சிக்கிட்டிருந்தது.

மூர்த்தியும் இப்படித்தான். அதும் இப்படித்தான் ஏங்கிட்டெ தேனெடுக்கும்! ஏழெட்டு நாள் ஆச்சு. அது வர்ற பாதையெ பாத்துப்பாத்து கண் பூத்துப்போச்சு! வரவர பசிக்கவே மாட்டேனுது! எப்பப்பாத்தாலும் அது நெனப்பாவே இருக்கு! மனசு முச்சூடும் அதுதான் நெறைஞ்சிருக்கு! எப்ப வரும் மூர்த்தி, இந்தச் சிட்டு மாதிரி ஏங்கிட்டெ தேனுறிஞ்ச?

இந்தப் புளியம்பிஞ்சுகள்ளாம் முத்தி பழமாக ரொம்பநாள் ஆவும். பழம் நல்ல இனிப்பாயிருக்கும். அதனாலெதான் இந்த மரத்தை எல்லாரும் இனிப்புக்காச்சி அப்பிடிம்பாக! இது அம்மா வெச்ச புளியமரம். பாவி மக! அவ வச்சுட்டுப்போன புளியமரம் இருக்கு, அவபோய்ச் சேந்துட்டா, இப்பிடி என்னெப் பசியும் பட்டினியுமா தவிக்கவிட்டுட்டு!

மூர்த்தி வந்த உடனே அதுக்கு ஒரு புளியம்பிஞ்சப் பறிச்சு ஊட்டிவிடணும்! அதுக்கு புளிப்பு தாங்காது! பல்லெல்லாம் கூசும்! அப்ப அதோட கண்ணு மொகமெல்லாம் அப்டியே கோணும்! நான் அப்ப அதெப் பாத்து ரசிக்கணும்!

'ரெண்டு நாளில் திரும்பிவந்து உனக்கு ஒரு வேலைக்கு வழி சொல்லிட்டுப்போறேன்..' னு சொல்லிட்டுப்போன மூர்த்தி எங்கே போய்த் தொலைஞ்சுச்சோ! அதுக்கு வேறெ எவளும் வலை போட்டாளோ! எங்காவது எவகிட்டயாவது வசமா சிக்கிக்கிச்சோ!

நந்தினிக்கு அழுகை முட்டியது.காலையிலிருந்து. இப்ப மணி பதினொண்ணு இருக்கும் காலையிலேர்ந்து அவ இன்னும் முகத்தைக்கூடக் கழுவலே! ஏன்னா அவ விடியக்காலம் ஒரு கனவு கண்டிருந்தா!
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:43

அந்தக் கனவில் மூர்த்தி வந்துச்சு! மூர்த்தி அப்பிடியே வானத்துலே பறந்து அந்த தேன்சிட்டாட்டம் எம்மேலே வந்து ஒட்டிக்கிச்சு! அப்டியே நெஜம்போலவே இருந்துச்சு! அப்பிடியே அணுஅணுவா-துளித்துளியா அது எங்கிட்டே தேன் குடிச்சுட்டு சட்டுனு பறந்து போயிடுச்சு!

நந்தினிக்கு அந்த நினைப்பில் உடம்பு முழுக்கக் கூசியது. அவள் மணல்தரையில் புரண்டு குப்புறப்படுத்தாள்.கால்களை உயர்த்தி ஆட்டியபடி, மண்தரையில் கோலம் போட்டாள். அந்தக் கோலம் தாமரைப்பூக் கோலம்! மலர்ந்திருக்கும் தாமரைப்பூ! அது அவளுக்கு எப்பவுமே ரொம்பப்பிடிக்கும்! மார்கழி மாசமான அந்தக்கோலத்தைத்தான் அவள் எல்லா நாட்களிலும் வாசலில் சாணம் தெளித்துவிட்டுப் போடுவாள்.

அவள் காதுகளில் இப்போது டகடகவென்று குதிரைகளின் கனைப்புச்சத்தம் கேட்டது! கூடவே குதிரைகளின் குளம்போசைகள் அவளை நெருங்கிவந்தன.ஒரு வெள்ளைக்குதிரை அவளைநோக்கி வருது. அதிலெ மூர்த்தி ராசாபோல உக்காந்து சிரிச்சிட்டிருக்கு! அப்பிடியே பகீர்ங்குது அவளுக்கு.அவ்ளொ பெரிய குதிரையிலே மூர்த்தி விழுந்துட்டா?

அவ வாரிச்சுருட்டிக்கிட்டு எழறா! மூர்த்தி வாவான்னு கைகாட்டுது! அது ராஜாவேதான்! அதோட சிரிப்பு ஏன் அடிவயித்தெ கரையவெக்குது!

திடுக்குனு எழுந்துரிச்சா நந்தினி. காலையிலிருந்து எதுமே சாப்பிடலை. தலை கிறுகிறுத்து மயக்கமாய் வருது.. மெதுவா எழுந்துரிச்சு சுத்துமுத்தும் பாக்குறா. குதிரைகளைக் காணும்! மூர்த்தியெயுங் காணும்!

எழுந்து வீட்டைச் சுத்திக்கிட்டு முன்புறமா வர்றா.. வெயில் அவள் உச்சியிலெ பட்டுனு அடிக்குது! அவளுக்கு ரொம்பத் தலையெச் சுத்திக்கிட்டு வருது! அந்தப் பழைய ஓட்டு வீட்டுத் திண்ணையிலே அப்பிடியே பொத்துன்னு விழுந்துட்டா! அவளுக்கு எல்லாமே கனவாத் தெரியுது! ஆமா, இப்ப அவ கனவு காணாமெ இருக்கமுடியாது..அதுக்காகவே அவ தூங்கித் தூங்கிக் கெடக்குறா! அவ கனவுபூராவும் மூர்த்தி விதவிதமா வருது! என்னென்னவோ பண்ணுது!அதான் எப்பவும் கனவுலெயே கெடக்குறா அவ!

அவளுக்கு நல்லாப் பசிக்குது! அதான் அவ கனவுலே மூர்த்தியே அணுஅணுவா பிச்சுபிச்சு சாப்டுறா! பசி! பசி! பயங்கரப் பசி!

அப்டியே அவ வயிறு பூரா தீ! பசித் தீ! கபகபன்னு பத்தியெரியுது வயிறு! அந்தத் தீயெ மூர்த்திதான் அணைச்சு வக்கிது, அதும் கனவுலெ வந்து! நேரா எப்பவருமோ தெரியாது.. எப்ப வருமோ.. எப்பவருமோ..

நான் சாகத்தான்போறேன்! செத்துறணும்! மூர்த்தி வராட்ட செத்துத்தான் போகணும்..!

"அக்கா.." என்று ஒரு குரல். அந்தக் குரல் திண்ணையில் கண்மூடிக்கிடந்த அவளை தோளில் தட்டி எழிப்பிற்று.. வள்ளி.. வேதவள்ளி.."அக்கா..அக்கா..ஏங்க்கா நீ சாகணும்! ஏங்க்கா எப்பப்பாத்தாலும் இப்பிடி பொலம்பிக்கிட்டே கெடக்குறீங்க?"

மெதுவா கண்திறந்து பார்த்தாள் நந்தினி.. வள்ளி சோகமா மூஞ்சி சுருங்கி நிக்கிறா! இவ மட்டுந்தான் இப்ப அவளுக்குத் துணை. நந்து மெதுவா எழுந்து உட்கார்றா.. வள்ளி கையில் ஒரு சில்வர் டப்பா. நந்தினியும் எதிர்பாத்ததுதான். நந்தினிக்கு இப்போது உயிர் குடுக்குறது வள்ளிதான்.. அவள் தெனந்தெனம் நந்தினிக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவந்துர்றா!

மெதுவாக கையூன்றி எழுந்து உட்கார்ந்துகொண்டு, "இப்பிடி உக்காரு.." என்று அவள் பக்கத்தில் கைகாட்டினாள் நந்தினி. வள்ளியும் அவளை ஒட்டி உட்கார்ந்துகொண்டாள்.

"அம்மா கொலுக்கட்டை சுட்டுச்சுக்கா.. உனக்கு நாலு கொண்டுவந்தேன்.. மணி பதினொன்னாச்சு..ந £ சாப்டாமெக் கெடப்பேன்னு அவசரமா ஓடியாந்தேன்.. மூச்சு எறைக்கிது பாறேன்!"

ஒண்ணும் பேசாமெ அவள் நீட்டிய டப்பாவை வாங்கித் திறந்க்க முயன்றாள் நந்து. அவளுக்குக் கையில் வலுவில்லை.

"ரொம்ப கெறங்கிப் போயிட்டேக்கா." என்ற வள்ளி,டப்பாவை வாங்கி ஒரு நொடியில் திறந்துகொடுத்தாள். வள்ளிக்கு அவள் பசி தெரியும். அவள் வலி தெரியும். அவள் மனசு தெரியும். நந்தக்கா மனசு முழுக்க மூர்த்திதான். அவள் எப்பப்பாத்தாலும் மூர்த்தி மூர்த்தின்னு மூர்த்திப் பைத்யமா ஆயிட்டா!
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Guest Wed 21 Jan 2009 - 4:43

அவளோடு ராத்ரிநேரத்தில் படுத்துத் தூங்கும்போது நந்தக்கா "மூர்த்தீ..மூர்த்தீ.."ன்னு வாய்விட்டுப் பொலம்புறா! ஒருநா நடு ஜாமத்தில் திடுக்கெனெ எழுந்து உட்கார்ந்து "வள்ளீ..வள்ளீ.." என்று அவளை உலுக்கி எழுப்பி, "மூர்த்தி வந்துச்சா வள்ளி..அதோட காலடிச் சத்தம் வாசல்லெ கேட்டுச்சு இப்ப.." என்றாள். வள்ளிக்கு தூக்கக் கலக்கத்தில் ஒருநிமிசம் எதுவும் புரியலை.

"கனவுலயாவது உம் மூர்த்தி வருதே..அதுலேயே சந்தோஷப்படு!" என்று தூக்கக் கலக்கத்தில் சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினாள் வள்ளி. திடீரென வாய்விட்டு ஒப்பரிவைத்து அழ ஆரம்பித்தாள் நந்தினி!

"ஏங்க்கா..ஏங்க்கா இப்பிடி அழுவுறே?!" எழுந்து உட்கார்ந்து அவளது தோளில் கை வைத்துக் கேட்டாள் வள்ளி.

அதுக்கு நந்தினி, "இனி இப்டியெல்லாம் பேசுனா இங்கே படுக்கவராதே! நான் தனியாக் கெடந்து எக்கேடுகெட்டோ போறேன்..அன்னிக்கே நா ரயில்லே போயிருக்கணும்.. இந்த மூர்த்தி வந்து.." அன்று விடியவிடிய அழுது கொண்டேயிருந்தாள் நந்தினி. விடிந்தபின்னும் வள்ளியிடம் அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை. வயசில் சின்னவளாக இருந்தாலும் நந்தினியை நன்றாகப் புரிந்து கொண்டாள் வள்ளி "நந்தக்கா என்ன வேணாலும் என்னைத் திட்டிக்க! ஏங்கிட்டத்தானே நீ கோவிச்சுக்க முடியும்!" என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டாள் வள்ளி.

அப்படி வள்ளி சொன்னதுvமுதல் அவளிடம் எரிந்துவிழுவதை கொஞ்சம் குறைத்துக்vகொண்டாள் நந்து. இரவில் இருவரும் ஒரே பாயில் படுத்துக் கொண்டார்கள்.. வள்ளி பேய் பிசாசுகளுக்கு அதிகம் பயந்தாள். அதுவும் பொழுது இருட்டிவிட்டால் அவளுக்கு கிலி பிடித்துவிடும். அவளால் வேறெங்கும் வெளியே போகத் தோணாது.

ஆனால்.. இந்த நந்தக்கா எப்பிடி அம்பூட்டு அமாவசை இருட்டுலெ தண்டவாளத்துக்குப் போச்சு! எவ்ளோ தைரியம் அதுக்கு!

சிலநாள் ராத்திரி தூக்கத்தில் நந்தக்கா வள்ளியை பயங்கரமாகக் கட்டிப் பிடித்து அணைத்துக்கொள்வாள்! அப்பவெல்லாம் அவளுக்கு மூச்சுத் திணறும். ஆனாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டாள் வள்ளி. பாவம் நந்தக்கா..ஏதாவது பயங்கரக் கனவு கண்டிருக்கும்..அதான் இப்பிடி என்று நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவாள்..எல்லாம் இந்த மூர்த்தி அவள் வாழ்வில் பூந்தபிறகு நடக்கிறதுதான்! அதுக்கு முந்தி இப்பிடில்லாம் நடந்துக்காது நந்தக்கா.

நினைக்கும்போது வள்ளிக்கு கூச்சமாயிருந்தது. அவளுக்கும் வரவர தூங்கும் போது கெட்டகெட்ட கனவெல்லாம் வர ஆரம்பித்திருந்தது.அடிக்கடி பூப்பூவாய் பூத்துக்கிடக்கும் தோட்டம் கனவில் வந்தது.

நந்தக்காவையும் அவளுடன் ராப்பொழுதுகளில் ஒன்றாய்ப்படுத்து அவளுக்குத் துணையாய்த் தூங்குவதையும் நந்தக்கா மீதுள்ள பிரியத்தாலெதான் செஞ்சா வள்ளி. பாவம் நந்தக்கா..திரும்பவும் தண்டாவாளத்துக்கு தலையெக் குடுக்க ஓட மாட்டாங்கிறது என்ன நிச்சயம்!
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ருசி (குறுநாவல்) - Page 8 Empty Re: பெண்ருசி (குறுநாவல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum