புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_lcapபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_voting_barபெண்ருசி (குறுநாவல்) - Page 11 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:27 am

தான் மயங்கி விழுந்தது இப்படியொரு அனுபவத்துக்காகத்தானோ! வாழ்க்கையில் எது எப்போது எப்படி நடக்குமோ யார் கண்டது!

திடீரென அவனுள் அடிக்கடி சுழலும் முகங்களின் வட்டச்சுழல் எழும்பி அலையாடியது. மாறிமாறி எண்ணற்ற பெண்முகங்கள் அச்சுழலில் பிம்பங்களாய்ச் சுற்றிச் சுழன்றன. கடைசியில் அந்தச்சுழல் நிதானத்துக்கு வந்து நிலைத்தது. கடைசியாய் அச்சுழலில் மிஞ்சிநின்றது தட்ஷிணியின் முகம்!

எத்தனை ரம்மியமானது அம்முகம்! அதனுடன்தானே அவன் சற்றுமுன் இருண்மையின் ஆழத்தில் நின்று உறவாடினான். அவன் மயக்கத்தின் இருளில் மூழ்கியிருந்த கணங்களில் கனவாய் அவனை ஆக்ரமித்து அவனிடம் சல்லாபம் செய்தது தட்ஷிணியின் முகம்தானே! தட்ஷிணியின் அந்த அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத அளவான கூந்தல் கன்னங்கரேலென ஈரமாய் வழவழப்பாய் அவன் மார்பில் படிந்து அவன் முகத்தை மூழ்கடித்ததே! அவளது அணைப்பின் உக்கிரம் தாங்காமல் அவனுக்கு மூச்சுத்திணறிற்றே!

தட்ஷிணியின் அந்த நிழல் விடாமல் முனைந்து அவனை தன்னுள் முற்றும் முழுசாய் நுழைத்துக் கொண்டதே! இத்தனை நேரமும் கனவாய், நிஜமாய், மாயமாய் சூட்சுமமாய் ஆக்ரமித்து அவனை மயக்கத்திலாழ்த்தியது அவள்தானே! அட! இப்படியெல்லாம் நடக்குமா என்ன! இந்த உறவைப்பற்றி எப்படிச் சொல்வது! யாரிடம் இதைப்போய்ச் சொல்வது! சொன்னால்தான் யாராவது நம்புவார்களா என்ன!

என் முகத்தில் எதைக்கண்டு என்னை அப்படி என்னை விழுங்குவதுபோல் பார்த்தாள் சுசீலா! பெண்கள் மாயாவிகள்! அவர்களுக்கு ஓர் ஆணின் மனசில் உள்ளதெல்லாம் அப்பட்டமாகத் தெரியும் என்று அவன் எங்கோ படித்திருந்தது இப்போது அவனுக்குச் சட்டென ஞாபகத்துக்கு வந்தது.முதலில் தட்ஷிணியோடு சூட்சுமக் கலப்பு, பிறகு சுசீலாவோடு கண்கலப்பு! ரெண்டுபேரும் இங்கு ஒரே புள்ளியில் இணைந்துவிட்டார்கள். ரெண்டுபேரும் ஒன்றாகி ஒன்று கலந்துவிட்டார்கள் அவனுள்! இரு கலப்பையும் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. இரண்டுமே கனமானவைதான். இரண்டுமே அவனுக்கு அதிசயம்தான்! அபூர்வம்தான்!

மெதுவாய் மண்தரையில் விரிக்கப்பட்டு ஜில்லென்றிருந்த கோரைப்பாயிலிருந்து எழுந்து தட்டிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் மூர்த்தி. அவன் உடல் லேசாகி பஞ்சுபோல் ஆகியிருந்தது. கால்கள் மரத்துப் போனதுபோலிருந்தன. தலையில் சுள்ளென்று படிந்த உச்சிவெயில் அவனுக்கு உணக்கையாய் இன்பமாய் இருந்தது. முன்புறத் திண்னையில் சேகரின் கால்கள் தையல் மெஷினின் பெடலை ஒரு லயத்தோடு இயக்கிக்கொண்டிருந்தன. அவன் பின்னே சுசீலா உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

மூர்த்தி மீண்டும் சுசீலாவைப் பார்த்தபடி சேகருக்கருகில் சென்றான்.

"இப்பிடி உக்காரு மூர்த்தி" என்ற சேகர், "நீ மயக்கத்துலே கெடந்தப்போ ஒன்னோட வாயி என்னவெல்லாம் ஒளறுச்சு தெரியுமா? ஏதோ ஒரு பொண்ணோட பேரெ அடிக்கடி சொல்லிக்கிட்டேருந்தே தெரியுமா?"

"என்ன பேரு சேகர்?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:27 am

"ஏதோ புதுப்பேரா இருந்துச்சு! ஒம்மேலே ஏதோ பேய்பிசாசு பூந்துருச்சோன்னு கவலையாய்டுச்சு மூர்த்தி!"

"பேயில்லெ சேகர்! அது தட்ஷிணி!"

"அப்பிடீன்னா?"

"அப்படீன்னா... அவ என் ·ப்ரெண்டு! காலேஜ்லெ ஏங்கூடப் படிக்கிறா!"

"·ரெண்டா, லவ்வா! அவபேரச் சொல்லிக்கிட்டு இப்பிடிப் பொலம்புறே!"

"சாரி சேகர்! ஓங்கிட்டே சொல்லாமெ மறைச்சுட்டேன்! அவளெ நான்..."

"லவ் பண்றீங்க! அதானே மூர்த்தி?" என்றாள் சுசீலா.

"ஆமா!"

"அவதாம்ப்பா உன்னைத் தடுத்திருக்கா! இல்லாட்டி இந்நேரம் சவுக்குத்தோப்புலெ போயி அங்கையர்க்கண்ணியோட வலைக்குள்ளே விழுந்து சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே சேகர்! நா எதுலேயும் அப்படியொண்ணும் சிக்கிக்க மாட்டேன்!"

"நீ உண்மையிலேயே பெரிய ஆளுதாம்ப்பா மூர்த்தி! எல்லா அனுபவமும் உனக்கு வேணும்னு நெனைக்கிறே! அதானே?"

"ஆமாப்பா! எனக்கு இப்போ சவுக்கத்தோப்புக்கு போகத் தோணலே! ஆனா, அங்கையர்க்கண்ணியெ பாக்கணும்போலருக்கு!"

"அதெதுக்கு மூர்த்தி! அதெல்லாம் மறந்துருங்க இனி! அதான் நீங்க அந்த தச்சிணியெ லவ் பண்றீங்களே!" என்றாள் சுசீலா.

"அதுக்கில்லே! சும்மா...சும்மாதான்! சும்மா அவளைப் பாக்கணும்போலருக்கு!" என்று இழுத்தபடி சேகருக்கருகில் கிடந்த மரஸ்டூலில் அமர்ந்தான் மூர்த்தி.

தைத்துக்கொண்டிருக்கும் துணியைப் பார்த்தபடி தையல் மெஷினை இசைபோல் இயக்கிக்கொண்டிருந்த சேகர், "எதுக்குடி மூர்த்தியோட ஆசையெக் கெடுக்கணும்! நாளைக்கி அவளெ கடைக்கிக் கூட்டிட்டு வா!" என்றான்.

"சரி" என்ற சுசீலா குனிந்தபடி துணி தைத்த சேகரின் முதுகுப்புறத்தில் தெரிந்த மூர்த்தியின் முகத்தையே உறுத்துப் பார்த்தப்டியிருந்தாள். அவளது கருவிழிகள் அவனது கருவிழிகளோடு புதையுண்டு மூழ்கி நீர்கசிந்து உருகின.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:27 am

“க்ருஷ்ணா! இந்த மூர்த்திப் பையன் எப்பத்தான் வருவானோ!” மொட்டை மாடியின் கம்பிக் கொடியில், கீழே கிணற்றடியில் புவனா துவைத்துக் கொடுத்த துணிமணிகளைக் காயப் போட்டபடி தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தாள் மாமி, "இன்னியோட லீவு முடிஞ்சுடுத்து.இன்னிக்கு வந்தாத்தானே நைட்டு ரெஸ்ட் எடுத்துட்டு நாளக்கி காலேஜ் போக சரியாயிருக்கும்! ஒருவேளை நேரா ஹாஸ்டலுக்கே போயிட்டானோ?"

நந்தினி ரெண்டு நாள் லீவுபோட்டுவிட்டு புதுக்குடிக்குப் போய்விட்டாள். அவளிடம் எப்போதும் மூர்த்தியைப் பற்றியே பேசியதில் ரொம்பத்தான் நொந்துபோனாள் நந்தினி. அது மாமிக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. படிப்படியாக நந்தினி மாமியிடமிருந்து விலகிக்கொள்ள ஆரம்பித்தாள். அதையும் உணர்ந்து கொண்டாள் மாமி. ஒரு கட்டத்தில் மாமியின் நச்சரிப்புத் தாங்காமல் மூர்த்திக்கும் தனக்கும் உள்ள உடல்ரீதியான உறவை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள் நந்தினி. அதன்பின் மாமிக்கு அவள்மேல் இருந்த கருணை மாறி பொறாமையாக உருமாற ஆரம்பித்தது.

நந்தினி மேல் எரிந்து எரிந்து விழுந்தாள் மாமி. ஆனாலும் மூர்த்தி மெஸ்ஸ¤க்குத் திரும்பும் வரை நந்தினியைத் துரத்திவிட முடியாது! அவள்தான் மாமிக்கு மூர்த்தியைப் பிடிப்பதற்கான தூண்டில்!

மாமியின் நெடிய கூந்தல் வெயில்பட்டு சூடு கண்டிருந்தது. வெக்கையும் புழுக்கமும் உடல் முழுக்க வேர்வையாய் வழிந்தோடியது. வரவர சூரியன் உக்கிரமாகிக் கொண்டே போனான். சூரியனின் கொடிய ஆக்ரமிப்பில் சூடேறித் தகித்தன அவள் கண்களும் மேனியும்.

இந்த மூர்த்தி மீது எனக்கு ஏன் இத்தனை ப்ரீதி? அவனைப் பார்க்கும்போதும் அவனை நினைக்கும் போதும் ஏன் இப்படி பாகா உருகுது மனசு? அவனிடம் அப்படி என்னதான் இருக்கு!

அய்யர்கூட "மூர்த்த ¢கூட நீ இப்பிடி ஒட்டி உசாவுறது நன்னால்லேடி! நேக்குத் தெரியும் உங்களுக்குள்ளே ஒண்ணுமில்லேன்னு, ஆனா ஊருக்குத் தெரியுமோ! இப்பவே நா தெருவுலே நடந்து போறச்சே என் காது பட கிசுகிசுக்க ஆரம்பிச்சுட்டாடி! புவனாவுக்கும் மூர்த்திக்கும் தொடர்பாம்! அவனைக் கவுத்து அவளை அவன் தலையிலே கட்டப் பாக்குறோமாம்!" இப்பிடிச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் இப்போ சொல்றதையே விட்டுவிட்டார். அவருக்கு நன்னாவே தெரிஞ்சுடுத்து, நான் இப்டி மூர்த்தி மூர்த்தின்னு பைத்யம் பிடிச்சு அலையிறது! இனி காலம் போன காலத்துலே அவாளாலெ என்னைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு அவாளுக்கும் நன்னாத் தெரிஞ்சுடுத்து.

சொல்லப்போனா அவர் இதை ஆமோதிக்கவும் ஆரம்பிச்சிட்டார். மூர்த்தி லீவுக்கு ஊருக்குப் போனதிலேர்ந்து நான் இப்பிடி தத்துப்பித்துன்னு பொலம்பிண்டே இருக்குறதைப் பார்த்துட்டு ஜாடைமாடையா கேக்க ஆரம்பிச்சிட்டார், "ஏண்டி! நோக்கு நான் பேசறது கேக்கிறதோ! இப்பிடி தலைவிரி கோலமா பித்துப் பிடிச்சாப்லே உட்கார்ந்திருந்தா உடம்பு என்னத்துக்குடி ஆகும்! நீ இனி உன்னிஷ்டத்துக்கு இருந்துக்கோன்னு எத்தனை தடவெ சொல்லிருக்கேன்! என்ன, இந்த ஊர்வாயே அடைக்கிறதுதான் ரொம்பச் சிரமம்! பரவால்லே! போயிட்டுப் போறது! நமக்கு ரோஷம் மானம் ஏதாவது இருந்தாத்தானே அதெப்பத்தி கவலைப்படணும்! மூர்த்தி இங்கே இனி வரப்பிடாதுன்னு நா சொல்ல மாட்டேன், சொல்லவே மாட்டேன்! இது சத்தியம்! போதுமா! அவன் பேஷா வரட்டும், போகட்டும்! இங்கியே தங்கிக்கட்டும்! அதுக்காக அவன் லீவுக்குக்கூட ஊருக்குப் போகப்பிடாதுன்னா எப்பிடிடீ? அதான் லீவு முடிஞ்சு வந்துருவானே! அதுக்குள்ளே சேலையக் கிழிச்சிண்டு தெருவோட போயிருவே போலருக்கேடி! புவனாவும் மூர்த்திக்குத்தான் வக்காலத்து! அவளுக்கும் அவனைப் பாக்கணும்போலெ இருக்காம்! பெத்த அப்பங்கிட்டேயெ வாய்கூசாமச் சொல்றா! அப்பிடி என்னதாண்டி அவன் உங்களுக்கு சொக்குப்பொடி போட்டான்! ம்ஹ்ம்ம்!! காலம் கலிகாலம்! எதுவேணா நடக்கும்!"

மூர்த்தி போனதிலேர்ந்து தூக்கமே வர்றதில்லே! ஹால் மத்திலே கெடந்த கோரைப் பாயிலே உருண்டு உருண்டு படுத்துப் பாப்பா. ம்ஹ¤ம்! தூக்கம் வருவேனாங்கும்! சுத்திச் சுத்தி பூதமும் பேயுமா வந்து தூக்கத்தக் கெடுக்கும். விடிகாலெ நாலுமணிவரைக்கும் அப்பிடியே படுத்து உருண்டுக்கிட்டே கெடப்பா. மூளையிலே ஈ மொச்சாப்பிலே கிர்ர்னு சத்தம் கேட்டுட்டே இருக்கும் விடியவிடிய. தாங்க முடியாம, நாலு மணிக்கே எழுந்து கோலம்போட ஆரம்பிப்பா.. இந்த சமாச்சாரமெல்லாம் பக்கத்துலே படுத்து உருண்டு கெடக்குற புவனாவுக்கு நல்லாவே தெரியும்! அவளும் இவளோட சேர்ந்து கொட்டக் கொட்ட முழிச்சிக் கெடக்க ஆரம்பிச்சா! அப்றமா, நடுநிசிலே தூங்கிப்போவா புவனா. அவளைப் பார்த்தா பரிதாபமா இருக்கும்! மாசா மாசம் வயித்துவலி வயித்துவலின்னு அவ துடிக்கிறதெ நெனைச்சா யாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கும். அவளுக்கும் இந்த மூர்த்திதான் ஆறுதல். அப்படி என்னதான் மருந்து வச்சிருக்கானோ இந்தப் பையன்!

அவனைப் பார்க்கும்போதும் அவனிடம் பேசும்போதும் புவனாவின் கண்களில் பொறி தெறிப்பதை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறாள். ஆனா, ரொம்ப நிதானமா அவள் பார்வையை ஏற்றுக் கொள்வான் மூர்த்தி. புவனாவின் பார்வை அவனை ஈர்க்கவில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் மாமி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:28 am

ஆனால் என்னையும் என் கண்களையும் பார்ப்பதில் அந்த சின்னப் பையனுக்கு எத்தனை ஆனந்தம்! என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்களில் தெறித்துப்பொங்கும் அமிழ்தம்தான் எவ்ளோ ருசி! அது என் ஆத்மாவுக்கு திரும்பத் திரும்ப அடிக்கடி வேணும் போலருக்கே! அதுக்கு நான் என்ன செய்யட்டும்! எனக்குள்ளே கசியிற ஏதோ ஒரு அபூர்வப்பொருளை நானே சாப்ட்டு ருசிக்க முடியாதுங்கறதாலே அது மூர்த்தியோட கண்ணுவழியாப் போயி திரும்பவும் என்னோட உயிருக்குள்ளேயே கலக்கும் மாயத்தை என்னாலே எப்பிடி இழக்கமுடியும்? அந்த மாயம்தானே இத்தனை தவிப்புக்கும் புலப்பத்துக்கும் பித்துக்கும் காரணம்! என்னை எனக்கே காட்டிக் கொடுத்த பையன் இந்த மூர்த்திதானே!

அதுதானே இந்தப்பெறவிலே எனக்குக் கெடைச்ச பாக்கியம்! அதைவிட என்ன வேண்டும் எனக்கு! அப்படியொரு அதிஆழமான அப்படியே உயிரையே தொளைச்சிண்டு உள் ஆழத்துலே பாயிற அந்தப் பார்வையையும் ரசிப்பையும் என்னால் இனி எந்தப் பிறவிலே பார்க்க முடியும்! போகட்டும்! உங்கள் சட்டங்களையெல்லாம் நீங்களே வச்சுண்டு மாரடிங்க. எனக்கு மூர்த்தி வேணும்! என்னை ஆமோதிக்கும் மூர்த்தி எனக்கு அவசியம் வேணும்! என்னை அப்படியே முழுசா தன்னோட கூரிய பார்வையால் ஆராதிக்கும் மூர்த்தி எனக்கு கட்டாயம் வேணும்! அப்படி ஒருவேளை மூர்த்தி இங்கே வரலைன்னா நான் பைத்தியமாகி வீதிவீதியா பேயாகிப் பிசாசாகி அலைஞ்சே செத்துப்போவேன்!

அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள் மாமி. பதினோரு மணிச் சூரியன் அவள் கண்ணிலும் முகத்திலும் அறைந்து சுட்டுப் பொசுக்கினான். முகத்தைச் சட்டெனத் திருப்பிக்கொண்டாள் மாமி. சட்டென அவள் கண்களில் நீரூறி வழிந்தது. அந்த நீரினூடே அவள் மூர்த்தியையும் அவனது சிரிப்பையும் கண்டாள். அவளுக்கு மேலும்மேலும் அழுகைமுட்டி கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தைக் குளிப்பாட்டிற்று. இந்தச் சூரியன் போல்தான் மூர்த்தியும்! அவன் கண்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் அவள் ஆழத்தில் பாய்ந்து அவள் ஆன்மாவை ஒளிரச் செய்வதை எப்படி யாரிடம் சொல்வாள் அவள்!

படிகளில் தன்னையறியாமல் இறங்கின மாமியின் கால்கள். கீழிருந்து அவளைக் கவனித்த புவனா, அவளிடம் ஏதும்பேசாமல் திரும்பிப் போய்விட்டாள். புவனா தன்னை உறுத்துப் பார்த்துவிட்டுப் போவதைக்கூட கவனிக்காமல் மாடிப்படிகளில் மெதுமெதுவாய் இறங்கினாள் மாமி.அவளுக்கு கண்கள் இருண்டு மயக்கமாய் வந்தது.

ஹாலுக்கு வந்து "அப்பப்பா என்ன வெயிலு! தலையே எரிஞ்சிடும் போலன்னா இருக்கு!" என்றபடி பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்தாள் மாமி. பக்கத்தில் பிளாஸ்டிக் நாற்காலியில் கண்களை மூடி உர்கார்ந்திருந்த புவனா, மாமியின் அழுதுவடிந்த கண்களை நேராய்ப் பார்த்து கண்டபடி திட்ட ஆரம்பித்தாள், "அம்மா! ஒனக்கென்ன சுத்தமா கழண்டுபோச்சா! ஏம்மா இப்பிடி கிறுக்குத்தனமா நடந்துக்கிறே? சின்னப்பொண்ணு நான்! உனக்கு அட்வைஸ் பண்ணா நன்னாவாயிருக்கும்?"

"என்னடி! ரொம்பத்தான் பேசிண்டே போறே! நா நல்லாத்தானே இருக்கேன்!"

"என்னத்தே நல்லாருக்கே! மூர்த்தி போனதிலேர்ந்து பித்துப்பிடிச்சு அலையிறே! சேலையைக் கிழிச்சிக்காதது ஒண்ணுதான் கொறை! "

"எதும் ஏங்கையிலே இல்லடி புவனா! நானா இப்பிடி நடந்துக்கிறேன்! என்னோட பூர்வ வாசனை இப்பிடியெல்லாம் ஆகுது! எதுவுமே நம்ப கையிலே இல்லடி புவனா! அதை மொதல்லே புரிஞ்சுக்கோ!"

"ஓம் ·பிரண்டு மூர்த்திதான் தான் கட்டாயம் திரும்பி வர்ரேன்னுட்டு போயிருக்காரே! அதுக்குள்ளே என்ன அவசரம்? நாளைக்கோ நாளன்னைக்கோ வந்துடப்போறார் அவர்! சும்மா சும்மா பொலம்பிண்டேருந்தா வந்துருவாரா?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:28 am

அப்போது மெஸ் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டது. புவனா எழுந்துபோய் வாசல்பக்கம் எட்டிப்பார்த்தாள். வாசலில் பொன்னென உருகிக்கிடந்த வெயிலில் வேர்க்க விறுவிறுக்க கையில் ஒரு சூட்கேஸ¤டன் வேகமாய் வந்து கொண்டிருந்தான் மூர்த்தி.

ஒரு நிமிஷம் தன் கண்களையே நம்பமுடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த புவனா, "வாங்க மூர்த்தி! உங்களுக்கு ஆயுசு நூறு! இப்பத்தான் உங்களைப்பத்தி அம்மாகிட்டே பேசிண்டிருந்தேன்! நீங்க இன்னிக்கு எப்பிடியும் வந்துருவீங்கன்னு தெரியும்!" என்றபடி ஹாலுக்குத் திரும்பி நடந்தாள் புவனா.

அவள் பின்னாலேயே நடந்தான் மூர்த்தி. ஹாலில் மின்விசிறிக் காற்றில் அங்குமிங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருந்த கூந்தலுடன் சக்தியற்று உட்கார்ந்திருந்த மாமியையும் அவள் கோலத்தையும் பார்த்து ஒருகணம் திகைத்துப்போனான் மூர்த்தி. எப்படியிருந்தவள் எப்படியாகிவிட்டாள்!

"என்னாச்சு புவனா! மாமி ஏன் இப்பிடி பாதியா ஒடஞ்சு போயிட்டாங்க? அப்படியே பேயறஞ்சாப்பிலேல்லெ இருக்காங்க!" என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

"அதெ அம்மாகிட்டயே கேட்டுக்கோங்க!" என்ற புவனா, "ஒரே ஒரு ரெக்கோஸ்ட் மூர்த்தி ஸார்! நீங்க தயவுபண்ணி இந்த மெஸ்ஸவிட்டு மட்டும் போயிடாதீங்க, ப்ளீஸ்! அப்புறம் அம்மா நிச்சயமாச் செத்துப்போவா!" புவனா சொன்னதை அவனால் ஒருகணம் நம்ப முடியவில்லை! அவளது இந்தக் கோலத்துக்கு நான்தான் காரணமா!

"க்ருஷ்ணா! மூர்த்தி! வந்துட்டியா கண்ணூ! வாடாம்பீ! எத்தனை நாளாச்சு! ஒரு கடுதாசி போட்டா கொறைஞ்சா போயிடுவே?" என்று கூவியபடி கட்டிலைவிட்டெழுந்து ஓடிவந்து அவனது இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டாள் மாமி. அவள் கைகளின் வழி அதீதமாய்ப் பொங்கிப்பெருகும் ஒருவித தீரா அன்பின் கதகதப்பான தித்திப்பு அவன் ஆன்மாவின் உள்ளாழத்துள் சூட்சுமமாய் இறங்கி நிரம்பி வழிவதை அவனால் நன்றாக உணரமுடிந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:29 am

ஸ்டோர் ரூமின் இருட்டு மூலையில் சுவரில் சாய்ந்து மூர்த்தியையும் மாமியையும் கவனித்தபடியிருந்தாள் புவனா. மூர்த்தி மாமியைக் கண்கொட்டாமல் பார்த்தபடி அவள் பேச்சுக்குத் தலையாட்டிக்கொண்டும் அவ்வப்போது சிரித்துக்கொண்டுமிருந்தான். ரெண்டுபேரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் புவனாவுக்கு வெகு துல்லியமாய்க் கேட்டது. மூர்த்தியிடம் பேசுவதிலும் அவனைப் பார்ப்பதிலும் அவன் பேசுவதைக் கேட்பதிலும் லயிப்பும் ருசிப்பும் கொண்டிருந்தாள் அம்மா. ஆனால் மூர்த்தி பேசுவது மிகச் சொற்பம்தான். அம்மாவின் குரலையும் அதில் ஊடாடி வழிந்தோடும் பெண்மையின் இசையையும் மூர்த்தியின் செவிப்புலன் ஆழ்ந்து கேட்டு ருசித்ததோடு அவனது ஈட்டிக் கண்களின் கூர்ப்பார்வை அம்மாவின் மீது முழுசாய் இடைவெளியற்றுத் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்ததையும் அறிந்தாள் அவள்.

விடுமுறையாலுண்டான சிறு பிரிவு இருவருக்குள்ளும் ஒருவித வெறுமையை உண்டாக்கியிருக்கத்தான் வேண்டும். மூர்த்தியினுள் கொஞ்ச நாட்களாய் காய்ந்து வறண்டுகிடந்த நிலம் இப்போது அம்மாவின் கண் பார்வையிலும் பேச்சிலும் அசைவுகளிலும் வளமாகிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றாள் புவனேஸ்வரி.. அம்மாவிடமிருந்து ஏதோவோர் அபூர்வ வஸ்துவைஇடையறாது பெற்றுக்கொண்டிருந்த மூர்த்தி, தன்னுள் புதைந்துகிடக்கும் ஏதோவொன்றை அவளுக்கும் வாரிவழங்கினான். தன் ஆழப்பார்வையால் அம்மாவின் வதங்கிக்கிடந்த தோட்டத்துக்கு நீர் வார்த்தபடியிருந்தன மூர்த்தியின் கரிய விழிகள். அம்மாவின் முகத்தில் இப்படிப்பட்ட ஒளிர்வை புவனா எப்போதுமே பார்த்திருக்கவில்லை. அப்படியே வெல்லப்பாகென உருகித் துவண்டாள் அம்மா. அவள் கொஞ்சங்கொஞ்சமாயும் திடமாயும் உயிர்த்தெழ ஆரம்பித்ததைக் கண்கூடாகக் கண்டு ஆச்சர்யமுற்றாள் புவனா.

அம்மாவின் முகப்பரப்பு கொங்சங்கொஞ்சமாய் ஒளியேறித் துலங்க ஆரம்பித்தது. அவள் கண்களிலிருந்து அழகின் தீப்பொறி அங்குமிங்குமாய் பறந்து அந்த ஹாலில் ஆனந்தத்தைக் குடியேற வைத்தது. இப்போது மூர்த்தி பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவுக்குள் அவன் கொஞ்சநாள் முன்பு பார்த்த உற்சாகமான அம்மாவை வெகு லகுவாய் மீட்டெடுத்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.

புவனா திறந்துகிடந்த கொல்லைப்புற வாசல்வழி பார்வையைச் செலுத்தினாள். அங்கு தெரிந்த கொய்யாமரக் கிளையில் இரண்டு பச்சைக்கிளிகள் அமர்ந்து லேசாய்ப் பழுத்துச் சிவந்த ஒரு கொய்யாக்கனியைக் கொத்திக்கொண்டிருந்தன. அவற்றின் சிவந்து வளைந்த அலகுகள் ஏனோ அவளுக்கு ஹாலில் பேசிக்கொண்டிருக்கும் மூர்த்தியையும் அம்மாவையும் ஞாபகப் படுத்தின. நந்தினி புதுக்குடிக்கு போயிருக்கும் விஷயத்தை அம்மா இன்னும் அவனிடம் சொல்லவில்லை. உண்மையில் அதைச் சொல்லும்படியான அவசியம் அவளுக்கு வரவில்லைபோல. அவனும் நந்தினியைப் பற்றி ஏதும் விசாரித்ததாய்த் தெரியவில்லை.

தன்னைப் பற்றி ஏதும் கேட்கிறானா என்பதையும் கவனித்தாள் புவனா. ம்ஹ¤ம்...இதுவரை அவன் ஏதும் கேட்கவில்லை. அது அவளுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. மூர்த்தியின் கவனம் சிந்தாமல் சிதறாமல் அம்மாவின் மீதே மையம் கொண்டிருப்பதை ப்ரத்யட்ஷணமாக உணர்ந்தாள் புவனா. அது அவளுள் விவரிக்க இயலாததொரு பொறாமையையும் வயிற்றெரிச்சலையும் முளைக்கச் செய்தது.

மூர்த்தி சின்னப்பையன் என்றபோதும் அவன் உள்மனதில் வலுமிக்கதொரு ஆண்மையும் எதற்கும் அடிபணியா அச்சமின்மையும் நிறைந்திருப்பதையும், அவன் தனக்குப் பிடித்த எதையும் தன்போக்கில் செய்துகொண்டே போக வல்லவன் என்பதையும் புவனா நன்றாகவே உணர்ந்திருந்தாள். இப்படியொரு குணாதிசயத்தை புவனா இதுநாள்வரை வேறுயாரிடமும் கண்டதில்லை. மெஸ்ஸ¤க்கு வந்துபோகும் எத்தனையோ ஆண்களில் எத்தனை சதவீதம் உண்மையான ஆண்கள் என்ற சந்தேகம் புவனாவுக்கு வர ஆரம்பித்தது. அவளுக்கு இதற்குமுன் மெஸ்ஸ¤க்கு வந்துபோன சில பையன்களின் முகங்கள் ஞாபகத்துக்கு வந்தன. ம்ஹ¤ம்... ஒன்றைக்கூட மூர்த்தியின் தீட்சண்யமான ஆண்மையோடு ஒப்பிட முடியவில்லை. அபூர்வமாய் எங்காவது காட்டில் முளைத்து புதிரான மணத்தைப் பொழிந்து சூழலை பரிமளிக்கச் செய்யும் அனைத்து குணமும் மூர்த்தியிடம் பூரணமாய் இருப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டாள் புவனா. அதேநேரம் தன்னால் அவனை ஈர்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவளுள் அடிநாதமாய் ஓடாமலில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:29 am

மூர்த்தியின் ஒளிர்வுமிக்க பார்வை வட்டத்துள் தன் அகங்காரம் அனைத்தையும் சுத்தமாய் வடித்துவிட்டு ஒரு சின்னஞ்சிறு தேவதைப் பெண்ணாகி வானில் பறந்துகொண்டிருந்தாள் அம்மா. மூர்த்தியைப் பார்த்த அதே க்ஷணத்தில் அம்மாவின் முகம் தேஜஸ¤டன் ஒளிர ஆரம்பித்துவிட்டதை மூர்த்தி ஹாலுக்குள் நுழைந்த முதல் நொடியிலேயே உணர்ந்து கொண்டாள் புவனா. அதற்கு முன்புவரை அம்மா செத்த சவமாய் துவண்டு கிடந்த பயங்கரம் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தாள் புவனா. மூர்த்தியை எப்படியாவது மெஸ்ஸிலேயே தங்கச் செய்ய தன்னால் முடிந்த வித்தைகளைச் செய்துதான் ஆகணும் என மனசுக்குள் சபதம் செய்துகொண்டாள் புவனா! அதில் அவளுக்கும் ஒரு சுயநலம் இருந்தது: மூர்த்தியின் பார்வை தன்னுள்ளும் ஒருவித விவரிக்க இயலாத மருந்தாயிருப்பதை அவளால் எப்படி மறுதலிக்க முடியும்? ஆனாலும் இந்த அம்மா சுத்த மோசம்! தனக்குக் கிடைத்த அமிர்தத்தை தட்டிப்பறித்ததுபோல் பண்ணிவிட்டாள் அவள். ஏதோ மூர்த்தியைச் சந்திக்கத்தான் தனக்கு இந்தப்பிறவி என்றுதான் அவள் நினைத்துக்கொள்வாள் போல!

அம்மாவின் முகத்தில் இப்போது முகிழ்த்து முளைவிட்டெழுவது இதுவரை அவள் அடியாழத்தில் சரியாகத் தீண்டப்படாமல் முடங்கிச் சுருண்டுகிடந்த காமம்தானோ எனவும் சந்தேகங்கொள்ள ஆரம்பித்தாள் புவனா. அவள் அடிக்கடி இதுபற்றி தன் மனசுக்குள் விசாரித்துக் கொள்வதுண்டு. இதையெல்லாம் யாரிடமும் விவாதிக்க முடியாது.

மூர்த்தியை அம்மா முதன்முதலாய் பார்த்தபோது அப்படியொன்றும் பெரிதாய் அவர்களுக்குள் நெருக்கம் உண்டானதாய்த் தெரியவில்லை. கொஞ்சநாள் கழித்துதான் எல்லாம் தானே நடந்துவிட்டிருந்தது. அவனுக்கு அம்மா மட்டும் தனிமையில் சாதம் பரிமாறப் போனபோது ஏதோவோர் க்ஷணத்தில் அவர்கள் பார்வைமூலம் ஒன்றுகலந்து ஒட்டிக்கொண்டார்கள். அப்படிப்பட்ட கலப்பை புவனாவும் முயற்சிக்காமலில்லை. ஆனால் அது அவளுக்குச் சுத்தமாய் லயிக்கவில்லை. ஆனால் மூர்த்தியின் வருகைக்குப் பிறகுதான் புவனாவின் வயிற்று வலி கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வந்தது.

ஆனால், அம்மாவுக்குள் தூங்கிக் கிடந்த கருநாகம் இப்படி ஆக்ரோஷமாய் விழித்தெழுந்து ஆடிக்களிக்கும் வாய்ப்பை அவள் இப்போதுதான் கனமாக உணர்கிறாள். அம்மாவின் பார்வையும் மூர்த்தியின் பார்வையும் ஒன்றுகலந்து கொஞ்சங் கொஞ்சமாய் இருவரும் ஒன்றாகி சூட்சுமமாய்ப் புணர்ந்து நெளியும் அதிசயம் புவனாவுக்கு உச்சியில் புல்லரித்து பயங்கரமாய் உள்ளிறங்கிற்று. அந்த அதீதப் புணர்வின் கதிர்வீச்சு சன்னமாய் அவளையும் ஆட்கொண்டது. ஸ்டோர் ரூமின் இருட்டு மூலை அவளுக்கு ரொம்ப வசதியாகிவிட்டது. அங்கிருந்து பார்க்கையில் புவனாவின் கண்களுக்கு மூர்த்தி தெளிவாகத் தெரிந்தான். அவனது மெலிந்த உருவம்... மேலுதட்டை அடர்த்தியாய் மேவியிருந்த கருகருவென்ற மீசை, மையிட்டது போன்ற சதா சுறுசுறுப்பாய்ச் சுழன்றுகொண்டிருக்கும் கருவிழிகள், பட்டையான வளைந்து மேலேறிய புருவம், விவரிக்க இயலாத கவர்ச்சி பொங்கும் முகம், முடியடர்ந்து கம்பீரமாய்த் தோன்றும் முழங்கைகள், சற்றே விலகியிருந்த வேஷ்டிக்கு இடையில் அடர்முடியுடன் வெளித்தெரியும் முழங்கால்கள், அழுக்கேதுமற்று பளிச்சென்று துலங்கித் தெரியும் பாதங்கள்... மனசாலும் புத்தியாலும் மூர்த்தியை அப்படியே சூட்சுமமாய் ஈர்த்துத் தன்னருகே கொண்டுவந்தாள் புவனா. அவள் நாபிக் குழிக்குள் சுருண்டுகிடந்த நாகம் இப்போது மெதுமெதுவாய்த் தலைநீட்டி மூர்த்தியின் சூட்சுமத்தோடிணைந்து புணர்ந்தாட ஆரம்பித்தது. அவளுக்கு ஏனோ ஆண்பாதி பெண்பாதியாய் ஆலகால ஆட்டமிடும் சிவநடனம் தன்னுள் அரங்கேறிக் கொண்டிருப்பதாப்பட்டது. ஒருவேளை இதுதான் சிதம்பர ரகசியமோ!

தன்னுள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நாகப்புணர்வில் கிளர்ந்து நெளிந்தாள் புவனா. அவள் உடலெங்கும் ஒரு ஆழமான புல்லரிப்பு ஓடி அவள் மேனிப்பரப்பின் அத்தனை மயிர்க்கால்களையும் நிமிர்ந்தெழச் செய்தது. இதெல்லாம் க்ஷணத்தில் தன்னுள் நிகழ்வதை அவளால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்கமுடிந்தது. எதையும் தன் புத்தியைக் கொண்டு தடுக்க இயலவில்லை. அம்மா சொன்னதுகூட சரிதான்போல: “எல்லாம் அதுவா நடக்குதுடி புவனா! எல்லாம் பூர்வஜன்ம வாசனை... அதை நம்ம நெனைச்சாப்பிலே தடுத்து நிறுத்திட முடியாது!”

அதேநேரம் ஹாலில் அம்மாவின் சகலமும் ஆவியாகி மூர்த்தியின் ஆவியோடு ஒன்று கலந்து காற்றில் புகையாகிச் சுழல்வதையும் அவள் தரிசித்தாள்.புவனாவின் கண்கள் பரவசத்தில் மேலேறிச் சொருகின. அவளின் உயிர் மையம் இப்போது சக்தியுடன் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் புவனா. ஸ்டோர் ரூமின் இருட்டின் தரையில் தன் உடலைக் கிடத்தினாள் புவனா. மூர்த்தியின் சூட்சுமம் இப்போது அவளது சூட்சும உடலோடு ஆக்ரோஷமாய்ப் பின்னிப் புணர்ந்தது. ஆடிக்களித்து ஸ்வர்க்கத்தின் அமிழ்தை ருசித்துவிட்டு பின் கொஞ்சங் கொஞ்சமாய் அடங்கிப் போனது புவனாவின் உடல்.

இந்தப் புணர்ச்சி அவளுக்கு ஒரு புத்தம்புது அனுபவம்தான். இது இனி ஒருபோதும் தடைபடப் போவதில்லை. இந்த நடனத்துக்கு இனி மூர்த்திகூட வேண்டியதில்லை. அவனைப் பற்றிய நினைப்பே போதும்! இதில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:30 am

இந்த விளையாட்டின் ருசிதான் அம்மாவையும் ஆக்ரமித்துவிட்டது போல! அம்மாவுக்கு மட்டுமல்ல, இப்போது தனக்கும் அது ஒரு சீரியஸான விளையாட்டாய் ஆகிவிட்டிருந்தது. ஏதோவொரு க்ஷணத்தில் அம்மாவும் அந்த விளையாட்டுக்குள் தன்னைத் தாரைவார்த்திருந்தாள். அப்போது அம்மாவுக்குப் பிடித்த பித்துதான் இப்போது தனக்கும் பிடித்துக்கொண்டது! இனி என்று, எப்படித் தெளியுமோ இது! யாருக்குத் தெரியும்!

மனசு ஆழங்காண முடியாத கடல் என்பதெல்லாம் சரிதானோ! பிறரால் ஆழங்காண முடியாவிட்டால் அதனால் எந்தப் பாதிப்பும் யாருக்கும் இல்லை. தனக்குத்தானே ஆழம் பார்க்க முடியாமல் போனால்?! தனக்குத்தானே புதிராகிப் போன மனசை என்ன செய்வது! இது பற்றி யாரிடம் கேட்பது! மனசில் இந்தப் பித்துக்காக யாரைக் குறைசொல்வது?!

ஒருவேளை நான் குற்றவாளியோ? நான் குற்றவாளியென்றால், நான் விதியை மீறுபவள் என்றால், என்னுள்ளே ஆழத்தில், இருளில் ஒளிந்துகொண்டு விஸ்ஸென்று சீறிக்கிடக்கும் அந்த நாகத்துக்கு யார் தண்டனை வழங்குவது? நான் இப்பவே இதை விட்டுவிடத் தயார்! ஆனால், அப்படியெல்லாம் செய்வதால் என்னுள் சதாகாலமும் புஸ்ஸ்ஸெனச் சீறி என்னை அலைக்களிக்கும் அந்த விஷ நாகத்தை நான் ஒரேயடியாய் அழித்துவிட முடியுமா!

ச்சே! எனக்கு இப்ப என்னாச்சு? எதுக்கு இப்பிடி தத்துவ விசாரமா மனசுக்குள்ளே ஓடுது? அம்மாவின் எதிரே உட்கார்த்து சகல நாடகத்தையும் சப்தமில்லாமல் நடத்தி வைக்கிறானே, இந்த மூர்த்தி அவனால் தன்னை இப்படித் தத்துவ விசாரணைக்கும் அழைத்துச்செல்ல முடிகிறதோ!

என்னென்னவெல்லாம் செய்கிறது அவன் பார்வை! தனக்குள்ளும் அம்மாவுக்குள்ளும் எப்படியெல்லாம் ஆழஆழப் பாய்ந்து எங்கள் மனப்பரப்பில் ஒளியாகி வீசுது அந்தக் கண்கள்? இந்த மூர்த்தி யார்! யார் இந்த மூர்த்தி! நான் யார்? இந்த உடம்பும் சதையும்தான் நானா! அப்படியானால் உள்ளே நடனம் பண்ணும் அந்தப் பாம்புக்கு என்ன பேர்? அந்தப் பாம்பு எங்கிருந்து வந்தது? இதுநாள் வரைக்கும் அது எங்கே ஒளிஞ்சு கிடந்தது?


கொஞ்சங்கொஞ்சமாய் இப்போது அம்மாவைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள் புவனா. அவள் கவனத்துக்கு எட்டியவரை, தன் பார்வையைத் தவிர, வேறெந்த ஆயுதத்தையும் அம்மாவின்மீது பிரயோகிக்கவில்லை மூர்த்தி! பிரயோகிக்க முனையவும் இல்லை. பார்வைப் புலன் வழியாகவே அவன் முழுத்திருப்தியுற்றுவிடுகிறான் என்றே தோணிற்று. அது அவனுக்கு தன்னைப் பார்க்கும்போது சுத்தமாய் லபிக்கவில்லை என்பதையும் இத்தனை நாளைக்குப் பிறகு படுதெளிவாய் உணர்ந்துகொண்டாள் புவனா. அதன்பிறகுதான் அவள் மூர்த்தியைத் தொந்தரவு செய்வதில்லை எனச் சபதமேற்றுக் கொண்டாள். ஆனாலும் மூர்த்த்யின் சூட்சும உடல் ஒன்றே போது அவனுடன் சதா புணர்ந்திருக்க!

மூர்த்தி மெஸ்ஸைவிட்டுப் போனால் புவனாவுந்தான் வருத்தப்படுவாள். அவன் அருகிலேயே இருப்பதுதான் ஆனந்தத்துக்கான வழி! வலிமிக்க சவசவத்துப்போன இந்த வாழ்க்கையில் மூர்த்தி அவளுக்கும் அதிகமாகவே வேண்டியிருந்தாள்.

எத்தனை காலம் தொடருமோ தெரியலை. மூர்த்தி அதிகபட்சம் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்குதான் இருப்பான். அதில் ஏதும் சந்தேகம் இருப்பதாய்த் தெரியலை. மூர்த்தி பாதியில் போய்விட்டாலோ அவனுக்கு படிப்பு முடிந்துபோனாலோ என்ன ஆகும்! அப்போது எங்கள் கதி என்ன! நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.

வெகுநேரம் கழித்து மெதுவாய் எழுந்து கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு கிணற்றடிக்குப் போனாள் புவனா. வெயில் முற்றிலும் தணிந்து சூரியன் வலுவிழக்க ஆரம்பித்திருந்தான். இந்தச் சூரியன் எப்போதும் இப்படித்தான். யுகயுகமாய் ஒரே மாதிரி உதிப்பதும் மறைவதுமாய்...

கருப்பாய் சுருண்டுகிடந்த ரப்பர் கயிறில் கட்டியிருந்த வாளியைக் கிணற்றில் போட்டு நீரிறைக்க ஆரம்பித்தாள் புவனா. தேங்காயெண்ணை போட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டதால் கீச்கீச்சென்று ஆழ்ந்த இசையெழுப்பிற்று கிணற்றின் சகடை. மீண்டும் மீண்டும் நீரிறைத்து உச்சந்தலையில் ஊற்றிக்கொண்டேயிருந்தாள் புவனா. அது அவள் உடலெங்கும் அமிழ்தாய் இறங்கி அவளைக் குளிரச்செய்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:30 am

அறைக்கதவு தட்டப்பட தூக்கம் கலைந்து கட்டிலைவிட்டெழுந்தாள் தட்ஷிணி. அறையில் லேசான இருள் படிந்திருந்தது. ஸ்விட்சைப் போட்டு ட்யூப்லைட்டை எரியவிட்டவள் சாவதானமாய் நடந்துபோய்க் கதவைத் திறந்தாள்.

“என்னடி கதவெத் தொறக்க இவ்ளோ நேரம்?” என்றபடி கையில் ஒரு சூட்கேஸ¤டன் நின்றிருந்தாள் வனஜா. கிராமத்துக்குப்போய் நிறைய விவசாய வேலைகள் செய்திருப்பாள்போல, கருத்தும் மெலிந்தும் போயிருந்தாள்.

“மதுரையிலேர்ந்து எப்படீ வந்தே?” வனஜா கேட்டாள், அவசரமாய்ச் சேலையைக் களைந்தபடி, “அப்பப்பா பஸ்லே ஒரே கூட்டம். காத்தே வராமே பயங்கரப் புழுக்கம். நின்னுக்கிட்டே வந்தேன். ஒரு கெழவன்வேறே தடிமாடுகணக்கா மேலெ இடிச்சுக்கிட்டே நிக்கான்!”

“அப்டியா! நீ இருட்டுறதுக்குள்ளே வந்துருக்கணும்! நான் மத்தியானமே வந்துட்டேன்,” ஆவென்று கொட்டாவி விட்டாள் தட்ஷிணி.

“அப்றம்! என்ன பண்ணே ஊர்லே?” நைட்டிக்கு மாறியிருந்தாள் வனஜா.

“அதயேண்டி கேக்குறே! எல்லாம் ஒரே சோகம்தான்! ஊருக்குப் போனதிலேர்ந்து சரியாவே தூங்கலெ!” கட்டிலில் மீண்டும் படுத்துக்கொண்டாள் தட்ஷிணி.

“ஏண்டீ! மூர்த்தியெப் பாக்காமெ தூக்கம் வரலையாக்கும்!”

“ச்சீப் போ! அதில்லெடீ! சத்யான்னு என்னோட ஸ்கூல்மேட்”

“ஆமா! அவளைப் பத்தித்தான் சொல்லிருக்கியே! குருன்னு அவளோட மொறைப்பையனே லவ் பண்ணிட்டிருக்கான்னு.”

“இப்போ அவ பரலோகம் போயிட்டா!”

“என்னடி சொல்றே?” கட்டிலில் ஓய்வாக அமர்ந்தவள் துள்ளியெழுந்து தட்ஷிணியருகே வந்தாள்.

“ஆமாடீ! பெட்ரோல் ஊத்திக் கொளுத்திக்கிட்டா!”

“அடிப்பாவி! ஏண்டி? என்னாச்சுங்கிறேன்லெ?” வனஜா முகத்தில் அதீத சோகம்.

“அவங்கப்பா முன்னாடி குருவுக்கு கட்டிக்குடுக்குறதா ஒத்துக்கிட்டு அப்றம் வேறெடத்துலே மாப்ளே பாத்துருக்கார்! சத்யாவும் எவ்ளோ சொல்லிப்பாத்துருக்கா! யாரும் கேக்கலெ! கொளுத்திக்கிட்டா.”

“ச்சே! இப்பிடியா இருப்பாங்கெ பெத்த அப்பன்மாருங்க! சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணா! இவங்களையெல்லாம் பாம் வெச்சுத்தான் கொல்லணும்!”

“அத விடுடி! இப்ப ஏங்கதி என்னாகப் போகுதோ தெரியலையே! நானும் சத்யா மாதிரி...”

“ந்தா! இப்பிடிப் பேச்செ இத்தோட விட்டுடு! ஒனக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்! அடிப்பாவி! அப்டியா பண்ணிக்கிட்டா சத்யா?” வாய்ப்பாறிப்போனாள் வனஜா.

“என்னமோ போ! சத்யா செத்ததுலேர்ந்து எனக்கு சுத்தமா நிம்மதியே போச்சு!”

“நீ ஏண்டி அநாவசியமா பயப்படுறே! உனக்குத்தான் இன்னம் ரெண்டுவருஷம் இருக்கே!”

“அதுக்குள்ளே எதாவது ஆயிட்டா!”

“எதாவதுன்னா?”

“சத்யாவுக்கு மாதிரி...”

“படிச்சு முடிக்கிற வரைக்கும் உங்கப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ எதையும் சொல்லிறாதே! தப்பித்தவறிக்கூட எதையும் உளறிறாதே!”

“நான் அதெச் சொல்லலடீ! சத்யா சாகும்போது கர்ப்பமாயிருந்தா! காலேஜ் போற சாக்குலெ குருகூட ஜாலியா இருந்துருக்கா சத்யா!”

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:31 am

“இப்ப என்ன சொல்ல வர்றே? மூர்த்திகூட அதே மாதிரி உல்லாசமா இருக்கணுங்கிறியா?”

“ச்சீ! போடி!”

“என்னமோ நெனைச்சேன்! நீ பயங்கரமான ஆளுதான் தச்சீ!”

“ஏய்! நீயா எதையாவது நெனைச்சிக்காதே! நான் அதைச் சொல்லலே!”

“ஓம் மூஞ்சியெப் பாத்தாலே தெரியுது! நீ முத்திப்போயிட்டே வரவர! அவ்வளவுதான் சொல்லமுடியும் என்னாலே!”

“நான் எப்பிடியாவது போறேன்! திருநெல்வேலிக் காட்டுலே போயி நீ என்னதான்டீ பண்ணிட்டிருந்தே இத்தனை நாளா?”

“ம்! உனக்குத்தான் லவ் வருமா! எனக்கும் வரும்டீ! அங்க ஒரு ஜொள்ளுப் பார்ட்டி மாட்டுனான்! பொழுது ஜாலியாப் போச்சு!”

“அப்படி என்னதாண்டி பண்ணீங்க?”

“சும்மா பாத்துக்கிட்டே இருந்தோம்! அம்புட்டுத்தான்!”

“அம்புட்டுத்தானா? வேறொண்ணும் பண்ணலியா?”

“ம்ஹ¤ம்! பேச்சே கெடையாது! வெறும் பார்வைதான்!”

“அடிப்பாவி! பாத்துப்பாத்தே எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டீங்களாக்கும்!”

“எல்லாத்தையும்னா? அப்பிடி என்னென்னெல்லாம் செய்யலாம்! சொல்லு! உனக்குத்தான் முன் அனுபவம் இருக்கே?”

“ச்சீப்போ! முன் அனுபவம் அது இதுன்னுக்கிட்டு! சும்மா நெனைப்புலேயே...”

“நெனப்புலேயே?”

“நெனச்செ ஒடனே மூர்த்தி வந்து கண்முன்னாலே நிக்கிறாண்டீ! அப்றம் ஏங்கதி அதோகதிதான்!”

“அடிப்பாவி! எனக்கும் அப்பிடித்தாண்டி ஆயிட்டிருக்கு! எங்காளோட நெனைப்பு வந்தாப் போதும் அப்பிடியே கண்ணெ மூடிக்கிட்டு படுத்துருவேன்!”

“அப்றம் என்ன நடக்கும், அதெச்சொல்லு!”

“என்ன நடக்கும்னா? எல்லாமே நடக்கும்!”

“ஏண்டி நாயே! என்னச் சொல்லிட்டு நீயும் பயங்கரமா முத்திட்டேடீ! நான் கவுந்ததும் மூர்த்தியோட பார்வையாலேயும் கண்ணாலேயும்தான்!”

“அப்பிடி என்னத்தடீ பாத்தான்? சாதாரணமாத்தானே பாத்திட்டிருப்பான்!”

“சாதாரணமாப் பாக்குறது உன்னையே! எனக்கெல்லாம் ஸ்பெஷல் பார்வை!”

“அப்ப அதே போதும்கிறே, ரெண்டு வருஷத்துக்கு?”

“ம்!அதே போதும்னு நெனைக்கிறேன்!”

“அப்ப நான் என்னடி பண்றது? அடிக்கடி ஊருக்கா போயிட்டு வரமுடியும்?”

“ஏன் ஊருக்குப் போகணும்? அதான் கனவுலேயே வர்றான்னியே! அதெவிடு, உங்காளு பேரென்ன? அதெச்சொல்லு மொதல்லே”

“ம்ஹ¤ம்!அது வேணாம்!”

“என்னடி வேணாம்! எனக்கு வேணும்! சொல்லிடு! சொல்லாட்டி ஓம் மண்டை வெடிச்சிடும்! மரியாதையாச் சொல்லிடு!”

“ஏம்மண்டெ வெடிக்காது! ஒனக்குத்தான் மண்டை வெடிச்சிடும்! அதெல்லாம் அப்றம் சொல்றேன்! இப்போதைக்கு எக்ஸ¤ன்னு வச்சுக்கோ!”

“சரி! மிஸ்டர் எக்ஸ் எப்பிடியிருப்பார்?”

“சூப்பரா இருப்பார்! சாயல்கூட...”

“நம்ம மனோகராட்டம் இருப்பார்!”

“அய்யே! வ்வே! மனோகராட்டமா? அவன் சரியான தத்தியாச்சேடீ? சரி! என்ன வேலெ பாக்குறான்?”

“ரெண்டும் பண்ணலே! வெட்டி ஆபீஸர்!”

“வேலையாவது ஒழுங்காத் தேடிட்டிருக்கானா?”

Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக