ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

+2
ராஜா
இரா.பகவதி
6 posters

Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by இரா.பகவதி Thu 16 Feb 2012 - 16:19




கோவை : மாணவர்களுடன் நட்புடனும், பாசத்துடன் பழகி, இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்துள்ளார் ஆசிரியர். அவரது சேவையை மறக்க முடியாத மாணவர்கள், அவருக்கு ஏற்பட்ட இதய கோளாறு சிகிச்சையின் முழு செலவையும் ஏற்க முன்வந்தும், அவர் மறுத்துவிட்டார். இந்த நெகழ்ச்சியான சம்பவம் கோவையில் நடந்துள்ளது. மாணவருடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆசிரியர் வெங்கட்ராமன்(70). தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர். கடந்த 10 நாள் முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய கோளாறை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூற, வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். அவரிடம் 10ம் வகுப்பு படித்துவரும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தான் அளித்துவரும் பயிற்சி தடைபடக்கூடாதே என்பதே இதற்கு காரணம். அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க நிராகரிக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இலவசமாக கற்றுக்கொடுத்தவர்: வணிகவியல் பட்டப்படிப்பை 1960ல் முடித்த வெங்கட்ராமன் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். 1964ல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் என்பதை தாண்டி மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்ட துவங்கினார். வகுப்பு முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார்.

இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரே ஆண்டில் பெட்டி படுக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் சென்றவரை மாணவர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்க போனீங்கன்னா எங்களோட எதிர்காலமே பாழாயிடும்’ என கதற அவரது கண்கள் பனித்தன. மேட்டுப்பாளையத்திலேயே ரெயின்போ கல்வியகம் என்ற தனி பயிற்சி பள்ளியை துவக்கினார். சமூக அக்கறை உள்ளவர்களின் உதவியுடன் இலவசமாக கல்வியை கற்றுக்கொடுத்தார். குடும்பம் உருவான பின்னர்தான் கட்டணம் வாங்கினார். அதுவும் ஏழை மாணவர்களுக்கு கிடையாது.

தற்போது அவரை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள். பலர் இவரது மையத்தில் படித்து பட்டம் பெற்று 25 ஆண்டுக்கு மேல் அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மின்வாரிய மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகநாதன் கூறுகையில், ‘‘நான் உயர காரணமே சார்தான். காசு கொடுத்து படிக்கவேண்டிய பல படிப்புகளை இலவசமாக சொல்லி கொடுத்ததால் அஞ்சல் வழியிலேயே பட்டப்படிப்பு முடித்தேன்‘‘ என்றார்.

மின்வாரிய ஊழியர் சந்திரன், ‘‘எஸ்எஸ்எல்சி படிக்கறப்ப நான் ரொம்ப சுமாரான மாணவன். சாதாரண கணக்குகூட போட தெரியாமல் இருந்த என்னை இன்று அக்கவுண்டன்டாக மாத்துனது சார்தான்‘‘ என்றார் நெகிழ்ச்சியுடன். வேளாண்மை பல்கலைகழக சட்ட ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய வக்கீல் சுந்தரம், 3 முதுகலை பட்டங்களை பெற்றவர். ‘‘என்னோட வழிகாட்டி வெங்கட்ராமன் சார்தான்.

அவரது மாணவன் என்பதே எனக்கு பெருமை‘‘ என்கிறார். டேனியல் ஜெயராஜ் என்பவர், ஆசிரியர் வீட்டிலேயே தங்கி பட்டப்படிப்பு வரை படித்து தற்போது மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 40 ஆண்டுகளில் சிறுக, சிறுக சேர்த்த தொகை முழுவதும் இழந்தபோதும் வைராக்கியம் மட்டும் ஆசிரியரிடம் மாறவில்லை. முன்னாள் மாணவர்கள் பலர் மருத்துவ சிகிச்சையை முழுமையாக ஏற்க முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார்.

உயிர் உள்ளவரை கையில் சாக்பீஸ் இருக்கும்

மருத்துவமனையில் இருந்த வெங்கட்ராமனை சந்தித்தபோது, ‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.


தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by ராஜா Thu 16 Feb 2012 - 16:36

இரா.பகவதி wrote:‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.
உங்களை பார்க்கும் போது ஆசிரியர் தொழில் மேல் ஒரு மரியாதை வருகிறது ஐயா , :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by பிளேடு பக்கிரி Thu 16 Feb 2012 - 16:41

வெங்கட்ராமன் அய்யா போன்று நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி



கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by ஜாஹீதாபானு Thu 16 Feb 2012 - 16:49

நல்ல ஆசிரியர் மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by உதயசுதா Thu 16 Feb 2012 - 17:45

இவரை பத்தி படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது.
இவர் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்


கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Uகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Dகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Aகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Yகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Aகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Sகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Uகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Dகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Hகோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by sshanthi Thu 16 Feb 2012 - 18:42

இவருக்கு நல்லசிரியர் விருது கிடைக்குமா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள் Empty Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
» தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்
» கோழி குஞ்சு உயிருக்காக போராடிய மனிதநேய சிறுவன்..! வைரலாக பரவும் நெகிழ்ச்சி சம்பவம்
» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
» கல்வி பிச்சை கேட்டு மாணவர்கள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum