ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்

3 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.
avatar
Guest
Guest


Back to top Go down


கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:49 am

நண்பர்களே! கடந்த வாரம் தனது காமத்துப்பாலின் விளக்கத்திற்கு முகவுரையாகக் கவிஞர் அளித்திருந்த ஒரு சிறிய கதையைக் கொடுத்திருந்தேன்.

எங்கே அதை மீண்டும் உங்கள் மனதில் அசை போட்டுக் கொள்ளுங்கள் பார்க்கலாம்!

என்ன, அந்தக் காட்சி நினைவிற்கு வந்து விட்டதா? இரண்டடிக் கவியில் ஒரு பொருள் சொல்லும் வித்தகர் திருவள்ளுவரின் குறளையும், அதற்கு எமது கவியரசர் கண்ணதாசனின் அற்புத விளக்கத்தையும் பார்ப்போமா!

குறள் 1

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு .................................................................... 1081

விளக்கம்:

தெள்ளு தமிழ் வடிவெடுத்துத்
தண்ணீர்க்குடம் சுமந்து,
கொள்ளையழகோடு நிற்கும் இவள் யார்?
தேவர் உலகத்து தேவதைக் குலமோ?
தோகை விரித்தாடும் சுந்தர மயிலோ?
அழகிய காதுகளில் குழை ஊசலாட
அன்னமென நிற்கின்ற மானிடப் பெண்ணோ?
மயங்குகிறதே என் நெஞ்சம்.


இரண்டே அடிகளில் வள்ளுவனார் இயம்பியதை, எளிமையான தமிழில் அர்த்தமெனும் அருஞ்சுவையூட்டி, அள்ளித் தெளிக்கிறார் எம் கவியரசர்.

குறள் 2

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து ............................................................ 1082

விளக்கம்:

ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள்,
எதிர்த்துப் பார்க்கிறான் அவன்,
அந்தப் பார்வையே ஒரு தாக்குத் தாக்குகிறது.
அது மட்டுமா?
ஒரு படையையும் அல்லவா கூட்டி வந்து தாக்குகிறது.


ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தையும் அந்தச் சம்பவத்தின் தொடராக இணைப்பதன் மூலம் குறளின் விளக்கத்தை இனிமையாக ரசிக்கச் செய்து, குறளின்பால் ஈடுபாடு கொள்ள வைக்கிறார்.

குறள் 3

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு .................................................................. 1083

விளக்கம்:

"உயிர் வாங்கும் எமன்" என்று
ஊரார்கள் சொல்லுவார்கள்.
அறியேனே முன்பு, புரிகிறதே இன்று!
அந்த எமன் ஒரு ஆண் மகனல்லன்
ஆடும் கொடி போன்ற பெண்மையுடையவன்;
அகல விரிந்த கண்ணையுடையவன்.


படித்த உடனே நெஞ்சிலொரு காதல் உணர்வைத் தோற்றுவிக்கவல்ல தமிழூற்றெடுக்கும் விளக்கமன்றோ!

குறள் 4

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண் .......................................................................... 1084

விளக்கம்:

பெண்மையும், மென்மையும்
பின்னி விளையாடும் இந்தப் பேதைக்குக்
கண்டவர் உயிரைக் கவர்ந்திழுக்கும் கண்கள்
ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்கின்றன.


நண்பர்களே! இங்கொரு கண்ணதாசனை வித்தியாசமான கோணத்திலே பார்த்து நிற்கின்றோம். காவியம் தான் கண்ணதாசன். அவரை அந்தக் காவியக் கோணத்திலே காட்டுவது தான் நான் மேற்கொள்ளும் முயற்சி.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:50 am

கண்ணதாசன் எனும் கவிஞன்
காதல் கொண்டு திரை கானமும்
காதலினால் விழைந்த ஞானமும்
காமத்துப் பாலெனும் மோனமும்
கலந்தளித்தான் நாம் மகிழவே!

மனதிலே விழைந்த சிந்தை கவியாகக் கொஞ்சம் விளைந்தது. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல, என் சிந்தையில் கவியரசு ஏற்படுத்திய தாக்கங்களை! எனது மனதிலே என்னை நானே கேள்விக் கணைகளால் தாக்கிக் கொள்ள ஒரு வில்லாக வளைந்தது கவியரசரின் கருத்துக்களே.

அவர் கூறிய கருத்துக்கள் வேறு எவராலுமே, எக்காலத்திலுமே கூறப்படாதது என்பதல்ல எனது வாதம். என் போன்ற எளிமை மனம் கொண்டவர்களாலும் புரிந்து கொள்ளப்படக்கூடிய வகையிலே அதைக் கூறியதுதான் அவற்றின் சிறப்புக்குக் காரணம்.

கடந்த வாரம் நாம் எடுத்துப் பார்த்த காமத்துப் பால் குறள் விளக்கத்தின் வரிசையிலே மேலும் நான்கு குறள்களை இவ்வாரம் பார்ப்போம்.

குறள் 1

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரால்
நோக்கமிம் மூன்றும் உடைத்து .................................... 1085

விளக்கம்:

இது எமன் தானா? இல்லைக் கண் தானா?
ஒன்றை நினைத்தால் இன்னொன்று தோன்றுகிறதே?
மூன்றையும் ஒன்றாகப் படைத்த
மோகனப் பார்வையல்லவா இது?

குறள் 2

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண் ................................................... 1086

விளக்கம்:

ஐயோ! இவள் புருவங்கள்
வளைந்திருப்பதால் தானே இவ்வளவு துயரம்?
அவை நேராக இருந்து
அந்தக் கண்களை மறைக்குமானால்
என்னெஞ்சு இவ்வளவு நடுங்காதே;
துடிக்காதே; துயரங்கொள்ளாதே!
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:51 am

குறள் 3

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் ..................................................... 1087

விளக்கம்:

நேராக நிமிர்ந்து நிற்கும் அழகான கொங்கை
தளிர் போன்ற மங்கையின் சாயாத கொங்கை
அந்தக் கொங்கையை மூடிக்கிடக்கிறது
ஒரு கோலச் சிற்றாடை.
மதம் பிடித்த ஆண் யானைக்கு
முகத்திலே போடும் திரைபோல
மத மதவென்றிருக்கும்
அந்த இளம் கொங்கையின் மீது
இவள் கச்சுக் கட்டியிருக்கிறாள்.

குறள் 4

ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு ................................................. 1088

விளக்கம்:

நான் களங்கள்(போர்க்களம்) பல கண்டவன்
பகைவர்களை வென்றவன்
தோள்வலிமை கொண்டவன்
வாள் வீச்சில் வல்லவன்
எல்லாம் இந்த மெல்லியலாளின்
நெற்றியைக் கண்டு வெற்றியை இழந்து விட்டன
நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.

தன் நீண்டநாள் கனவினை இதைக் கொண்டு நிறைவேற்றியுள்ளார் கவியரசர். இந்தத் தேனமுதை நான் பருகியதைப் போல நீங்களும் பருகியிருப்பீர்கள் என்பது எனது அதீத நம்பிக்கை.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:52 am

கவியரசர் கண்ணதாசனின் படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு அவரது சுயசரிதமாகும். முதலில் "வனவாசம்", அதைத் தொடர்ந்து "மனவாசம்" என்றும் அவர் படைத்த அந்த அற்புதப் படைப்புகளில் பல தருணங்களில் என்னை நான் தொலைத்திருக்கின்றேன்.

அதன் காரணம் என்னவென்று என்னையே நான் வினவிய கணங்கள் பல. அவரது சுயசரிதத்தில் இருக்கும் தன்னைத்தானே விமர்சிக்கும் தன்மை, தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை, தனது தவறான நடத்தைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உண்மைகளின் அடித்தளத்தில் இருந்து தன்னை அலசிய பண்பு, அந்தப் படைப்புகளின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் நாமனைவருமே எத்தனையோ தவறுகளை தெரிந்தோ, தெரியாமலோ இழைத்திருக்கிறோம். அதே போல போகக்கூடாத பாதை, தவறான நடத்தை என்னும் நிகழ்வுகளுக்கூடாகப் பயணித்திருக்கின்றோம்..

கவியரசரின் சுயசரிதத்தினூடாகப் பயணிக்கும் போது எமது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் நிழல்களாகப் பிரதிபலிக்கின்றன. அதை நாம் அசை போட அந்தத் தருணங்கள் உதவுகின்றன.

அவரது மனவாசத்தில் என்னைத் தொட்ட சில பகுதிகளைப் பார்க்கின்றேன். உங்களது விழிகளும் அங்கே பதியும் என்றே எண்ணுகிறேன்.

கவிஞரின் வார்த்தைகளில்

“நிர்ப்பந்தமான உறவுகள். அவற்றில் விளைந்த தவிர்க்க முடியாத பந்தங்கள் - அவற்றில் விளைந்த பெருத்த ஏமாற்றங்கள் - சேர்க்கையால் விளைந்த அரசியல் போக்குகள் - அவற்றால் வந்த காலக்கேடுகள், பண விரயங்கள், எழுத்திலே முரண்பாடுகள் - இத்தனைக்கும் இடையிலே பேனா ஒன்றுதான் நிமிர்ந்து நின்றது.

மனதின் ஆதங்கங்களை எழுதித் தீர்த்துக் கொண்டேன். ஒருநாள் உற்சாகமாக இருக்கும் போது இதல்லவா வாழ்க்கை என்றெழுதுவேன், மறுநாள் புலம்புவேன்.

போற்றியவர்களைத் தூற்றுவேன், தூற்றியவர்களைப் போற்றுவேன். நிலையான புத்தியோ, நிரந்தரமான நியாயமோ இல்லாது போயிற்று.

மேலே குறிப்பிட்ட கவிஞரின் கூற்று, அவரது சுயசரிதத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. எத்தனை ஆழமாக தன்னைத் தானே கீறிப்பார்த்துள்ளார் என்று உணரக்கூடியதாக உள்ளது. அந்த ஆழமான கீறல்கள் கொடுத்த ரணத்தின் வடுக்களே அவரது திரைகானங்களாய் பிறந்தன.

இதோ மற்றுமொரு கருத்துக் கலசம்,

“நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன்.

யார் யார் என் வாழ்வைச் சீரழித்தார்களோ அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஓய்வாக உட்காரும் போதெல்லாம் அவர்களே என் நினைவிற்கு வருகிறார்கள்.

என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பின்பு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.”


நண்பர்களே, இந்தச் சந்தியில் நம்மில் எத்தனை பேர் இவருடைய இந்தக் கருத்துடன் எம்மையும் இணைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம்? ஆனால் அத்தனை பேரும் இப்படித் துணிந்து நம்மை விமர்சித்துக் கொள்ள முன்வருவோமா?

இங்கேதான் கவியரசரின் தனித்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. கண்ணதாசன் ஒரு காவியம் என்பதற்கு இதுவே சாட்சியமாகிறது.

எங்கே இன்னுமொரு முத்தைத் துலக்கிப் பார்த்து விட்டு ஓய்வெடுப்போம் வாருங்கள்!

“உண்மையில் சில விஷயங்களை நான் மறைத்திருக்கிறேன். மனிதன் மானம், வெட்கத்திற்கு அஞ்சி மறைத்தே தீர வேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா?

உண்மைகள் நிர்வாணமானவை. ஆனால் மனிதன் எப்போது நிர்வாணமாக இருக்கலாமோ அப்போதுதான் நிர்வாணமாக இருக்கலாம். சந்நியாசியின் நிர்வாணத்தில் கூட குறைந்த பட்சம் ஒரு கோவணம் உண்டு. அதுவும் இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

கவியரசர் கண்ணதாசனின் பலமுகங்களில் ஒருமுகம், ‘தன்’முகம். அதனை இங்கு பார்த்தோம். இவை அந்தத் தனிப்பெரும் ஆழியில் சில துளிகளே!
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:53 am

பலரைப் பல நேரங்களில் பலவிதமான கோணங்களில் பார்த்ததன் பலனே ஒரு கவியின் மனதில் எழும் கவிதைச் சுனை. அந்தக் கவிச்சுனையில் நீராடி மகிழாத உள்ளங்கள் இல்லையென்றே கூறலாம்.

இங்கே இந்தக் காவியக் கவிஞன் கண்ணதாசனைக் கண்ணோட்டமிட நான் எடுத்துக் கொள்ளும் ஒரு காட்சியும் அதற்குக் கவிஞரின் உள்ளத்து ஊற்றில் ஊறிய தமிழ் வெள்ளமும் இதோ உங்கள் முன்னே.

வாழ்க்கையில் துன்பத்தைத் தவிர எதையுமே கண்டிராத பெண்ணவள். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள். சோகத்திற்கு மேல் சோகமெனச் சுமந்த இவள் நகரவில்லை, அப்படியே நசிந்து விட்டாள்.

இளவயது நங்கை, அவள் வயதொத்த அனைத்துப் பெண்களின் மனதில் ஓடும் இளமை உணர்ச்சிகளுக்கு அவள் மட்டும் விதி விலக்கா என்ன? காதல் என்னும் அந்தக் கரும்பின் சுவையறிய அவள் மனமும் துடிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

ஏனோ தெரியவில்லை, காலமகள் என்று காலத்தைக் கூட ஒரு பெண்ணாகத்தான் உருவகப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அவள் ஏனோ பெண்களின் வாழ்வில் தான் சூறாவளிகளை அள்ளி வீசுகிறாள். பெண்ணின் மனதைப் பெண் அறிவாள் என்பார்கள், ஆனால் இங்கே அதற்கு எதிர்மாறாக இருக்கிறதே! துன்பத்தைத் தானே கட்டுக்கடங்காமல் வாரி வழங்குகிறாள் காலமகள்.

ஓ என்ன? அங்கே யார் வருவது? காட்சிகள் மாறுகின்றனவா?

அழகான வாலிபன். அமைதியாக அந்தப் பெண்ணிடம் என்ன சொல்கிறான்? சொல்லவில்லை, அதையே கீதமாக இசைத்து விடுகிறான். மேட்டுக்குப் பின் பள்ளம், வெய்யிலில் வாடியவளுக்கு ஒரு நிழல் தரும் ஆலமரம்.

அவன் அவளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றானா? இல்லை அவளது அதிர்ஷ்டமின்மைக்கப்பால் மிளிரும் அந்த உண்மை உள்ளத்து அழகில் தன்னைப் பறிகொடுத்து விட்டானா?

என்னவென்று தன் உள்ளத்துக் கிடக்கையை வெளிப்படுத்துகிறான்?
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:53 am

"அவள் அப்படித்தான்" எனும் திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன் குரலில் இளையராஜாவின் இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் வடித்திருந்த ஒரு இனிமையான பாடல் தான் அது.

உறவுகள் தொடர்கதை ... உணர்வுகள் சிறுகதை ..
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன்னெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய்த் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் .. வெறும்பனி விலகலாம் ..
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்


வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாணம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல் .. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது


என் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான பாடல்களில் ஒன்று. ஒரு பெண்ணிடம் அவளின் புறத்தோற்றங்களைக் கடந்து ஒரு ஆண் பார்க்க வேண்டியது, அவள் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, வாழ்வின் அனர்த்தங்களைப் போக்க உறுதி பூணுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தக் காவியக் கவிஞனின் கற்பனைத் திறனுக்கு விளக்கம் கொடுக்கத் தமிழில் வார்த்தைகளுக்கே பஞ்சம் வந்ததோ?
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:55 am

"நான் காவியத்தாயின் இளையமகன், காதல் பெண்களின் பெரும் தலைவன்"....
"நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்".... "எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"


நண்பர்களே! இவையெல்லாம் இந்த யுகம் கண்ட உன்னதக் கவிஞனின் உள்ளத்திலிருந்து உதித்தவை.

என்னுடைய துரதிர்ஷ்டம் கவிஞர் வாழும் போது அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் இன்று கவிஞரோடு நெருங்கிப் பழகியவர்களோடு கொண்ட பா¢ச்சயத்தினால் கவியரசரின் அபூர்வத் திறமையை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

கவிஞரின் நெருங்கிய நண்பர் வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு ஐயா அவர்களுடன் பேசும் போது, கவிஞரின் உள்ளத்திலிருந்து தமிழ்ப் பூக்களாக உதிர்ந்த பல நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இப்படி ஒரு காலக் கவிஞனா என்று வியக்குமளவிற்கு காட்சிக்குக் காட்சி, காலத்திற்குக் காலம் அவர் கொடுத்த கவிகள், திரைகானங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் அவர் ஒரு காவியக்கவிஞன் என்பதற்கு சாட்சிகளாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்


என்றான் வள்ளுவன். சொல்லும் சொற்களில் மற்றவர்க்குப் பயனுடைய சொற்களையே சொல்ல வேண்டும் என்பதை வள்ளுவன் இத்துணை அழகாகக் கூறினான். இதே வழியில் எமது கவியரசரும் தான் கூறவந்த அனைத்திலும் ஒரு பொருள் பொதித்துக் கூறினார். அது மட்டுமல்ல, அவர் சொல்லும் பொருளை எந்தவொரு சாதாரணமானவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆதங்கத்தில் மிகவும் எளிமையாகக் கூறினார்.

இங்கே கவியரசரின் எளிமையான வார்த்தைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பின்வரும் கவியரசரின் வார்த்தைகள், புதுவை தந்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசனைப் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில் கவிஞர் பேசியபோது சொன்னவை. கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "கவியரசர் சொல் கேளீர்" எனும் நாகை தருமனின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

எங்கே இரக்கம் அதிகமாக இருக்கின்றதோ, அங்கேதான் கவிதை பிறக்கின்றது.

எங்கே ஈரம் அதிகமாக இருக்கின்றதோ அங்கேதான் பயிர் விளைகின்றது.

இரக்கம் இருக்கின்ற இடத்தில் கவிதை பிறப்பதைப் போல், அன்பு காட்டப்படும் இடத்திலே கவிஞன் ஓடிப்போய்ச் சேருகின்றான்.

அன்பு காட்டப்படும் இடங்களிலே --

அன்பு காட்டி அரவணைக்கும் கரங்களைப் பார்க்கும் போது --

அந்தக் கரங்களைக்கூடத் தான் ஏற்கனவே புண்படுத்தியிருக்கிறோமே என்று எண்ணும் போது அவன் மனம் நெகிழ்ந்து போகிறான்.

எந்த ஒரு இடத்திலேயும் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்வதன் மூலம் தனது பேச்சுக்கு வலுவேற்படுத்திக் கொள்வது உணரக்கூடியதாக உள்ளது.

மனிதனின் குணாம்சத்தை எளிமையாக, ஆனால் தத்ரூபமாகக் கவிஞரைப் போல விவரிக்கக்கூடியவர் யாருளர்? இதோ ஒரு திரைகானத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்:

இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி மனிதனானதடா - அதில்
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா


எவ்வளவு சுவை! இதுதான் மறைந்து இத்தனை காலமாகியும் மங்காது அவர் புகழ் ஒளிரக் காரணம். உண்மையைச் சொல்லத் தயங்க மாட்டார். சொல்லும் அந்த உண்மை தனக்கு அவப்பெயர் ஏற்படுத்துமே என்று அஞ்ச மாட்டார். மனதில் எழுந்த உணர்ச்சிகளைத் தாளில் வடித்தார். அது சாதாரண மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன யதார்த்தங்களாக அமைந்ததால், அவர் அவனின் இதயத்திலே குடியேறினார்.

கண்ணதாசன் எனும் இந்தக் காவியத்தின் பெருமையை எண்ண எண்ண நெஞ்சம் நெகிழ்கிறது, இதயம் பெருமிதத்தால் விம்முகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:56 am

கவியரசரின் குணாதிசயம் தனித்துவம் வாய்ந்தது. காதல், வீரம், விவேகம், சோகம் என அனைத்து உணர்வுகளின் உச்சத்தையும் தொட்டுக் காட்டக்கூடிய திரைகானங்கள், கவிதைகள், கட்டுரைகள் படைக்கும் அறிவுத்திறன் கொண்டிருந்த அதே நேரத்தில் குழந்தையுள்ளம் படைத்தவராயுமிருந்தார்.

தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தேனொழுகப் பேசியபோது தன்னை மறந்து அவர்களை முற்று முழுதாக நம்பினார். பின்னர் அவர்களே, அவரின் முதுக்குப் பின்னால் குழிபறித்து அவரைத் தள்ளிவிட முயன்றபோது, தனது நம்பிக்கையின் சிதறலினால் மனமுடைந்து வெதும்பினார்.

அந்த வெதும்பல்களின் விசும்பல் ஒலிகளில் இருந்து பூத்த பாடல்கள் ஆயிரம். கேட்கிறவர்களுக்கு அது சுகமாக இருந்தாலும் அந்தப் படைப்பின் பின்னாலுள்ள வேதனைகளின் வெளிச்சம் கவிஞருக்கு மட்டுமே விளங்கும். துன்பங்களை எதிர்நோக்கும் போது, அதன் சுழற்சியிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ளுவதே பெரும்பாடாக இருக்கும். ஆனால் அவையனைத்தையும் கோர்வையாக தமிழ் எனும் நாரினால் தொடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக்கும் கலை அரும் பெரும் கலையாகும்.

உள்ளத்தில் அரியணை அமைத்து
உட்கார்ந்திருக்கும் கவிமகனே
உன்னை நானறிவேன் அதிலூறிய
உணர்வுகளின் கீறல்களையும் அறிவேன்

கண்ணான தாசனே உனது இதயம்
கண்ணாடி போல் நொறுங்கியதும்
காயங்கள் தாம்பட்ட துன்பங்கள் தனைக்
கவியாகக் கூறியதும் மனதிலாடுகின்றன

அன்னமிட்ட கைகளதை அறியாமலோ
அரிந்திட்ட சொந்தங்கள் உனை மட்டுமல்ல
அடியேனைச் சுற்றியும் தான் கண்டேன்
ஆண்டவனறிவான் ஆயிரம் கதைகளய்யா

உன் பெருமை சொல்லும் போது, புரியுது
உன்னெஞ்சம் பட்ட துயரங்கள்
உலகத்தில் அழும் உள்ளங்களை ஆற்றுது
உன் மனமுதித்த அமுதான பாடல்கள்


(சத்தி சக்திதாசன்)

ஆமாம் கவிஞர் தான் பட்ட துயரங்களுக்கூடாக எமை அழைத்துச் செல்லும் போது, எம் எல்லோருடைய மனங்களையும் ஏதாவது ஒரு இடத்தில் தட்டி எழுப்பி விட்டுத்தான் செல்லுகிறார்.

கண்களில் கண்ணீர் ஊறும்போது இந்தக் காவியக் கவிஞனின் "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?" எனும் வரிகள் கன்னத்திலே மிருதுவான விரல்கள் கொண்டு அந்தக் கண்ணீரைத் துடைத்து விடுகின்றன.

வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து விரக்திக்குத் தள்ளப்பட்டவனின் மனதின் வலிக்கு வாஞ்சையாக

"வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்,
வாசல்தேடி உலகம்
உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்"


என்னும் சவால் வார்த்தைகள் தன்மானத்தை தட்டி எழுப்பி விரக்தியில் உள்ளவனுக்கு வீரத்துடனான வேகத்தைக் கொடுக்கின்றன.

சுற்றியுள்ளவர்களின் விவேகமற்ற செயல்களைக் கண்டு மனம் வெதும்புகிறோம். சே! என்ன உலகமடா என்று அலுத்துக் கொள்ளுகிறோம். அந்த நேரம் கொடுக்கும் ஒரு அயர்ச்சியிலிருந்து

பிறக்கும் போதும் அழுகின்றாய்,
இறக்கும் போதும் அழுகின்றாய்,
ஒருநாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!"


எனும் வார்த்தைகள் மீள வைக்கின்றன.

தத்தித் தத்தி ஓடி வரும் குழந்தையைப் பார்க்கிறோம். அந்த அழகிலே எம்மையே மறந்து லயித்து விடுகிறோம். அந்தக் கள்ளமில்லாச் சிரிப்புக் கொடுக்கும் தெய்வீக உணர்வு இதயத்தில் கற்பூரமாகக் கொழுந்து விட்டெரிகிறது.

"குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று,
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று"


எனும் தத்ரூபமான வார்த்தைகள் மனதை அமைதி ஊஞ்சலில் வைத்துத் தாலாட்டி விடுகின்றன.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:56 am

காதல் வயப்படும் வஞ்சி. அவள் மனம் அவளை விரகதாபத்தில் போட்டு வஞ்சிக்கிறது. தன்னை ஆட்கொண்டவனை, ஆழச்சிந்தித்தவளின் மனதிலுள்ள காதல் உணர்ச்சிகளை தோழிக்குக் கூறும், "அத்தான், அவர் என்னைத்தான், அதை எப்படிச் சொல்வேனடி" எனும் கனிவான வார்த்தைகளால் காதல் பயிருக்கு நீரூற்றினார் இந்தக் காவியக் கவி.

கவியரசர் கண்ணதாசன் ஒரு இலக்கியச் சுனை. அந்தச் சுனையிலிருந்து வற்றாமல் தமிழ் எனும் இலக்கிய ஊற்று ஊறிக்கொண்டேயிருந்தது. அவரின் மறைவுக்குப் பின்னாலும் அந்த ஊற்று அவர் பெயரால் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

கவிஞரின் தமிழின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் இரண்டு உதாரணங்களைப் பார்க்க விழைகின்றேன்.

அழகிய தமிழ்க் கட்டுரைத் தொகுப்புக்கள் இரண்டு "புஷ்பமாலிகா", " ஞானமாலிகா" என்னும் பெயரில் கவிஞர் வெளியிட்டிருந்தார்.

அவற்றிலே, புஷ்பமாலிகாவில் ஒரு இடத்திலே,

"இளநீரைப் பார்க்கிறேன்; மேலே பளபளப்பு!
அடுத்துச் சிக்கல் நிறைந்த நார்கள்
அடுத்து உறுதியான ஓடு; உள்ளே சுவையான தேங்காய்
பளபளப்பைக் கண்டு மயங்காதே உள்ளே சிக்கல்
இருக்கிறது, அதன் உள்ளே அறிவுப்பசியைத் தீர்க்க
விருந்திருக்கிறது"


என்று குறிப்பிட்டுள்ளார். என்னே அழகான உவமை, எத்துணை அருமையான விளக்கம், என்ன திறமையான சொற்களின் ஆளுகை. இதை அணுஅணுவாக ரசித்தவன் என்னும் அடிப்படையில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உதித்த ஆனந்ததின் மையத்தில் இதை எழுதுகின்றேன்.

அடுத்து ஞானமாலிகாவில் ஒரு அழகிய "கவிஞனின் உரைநடையை" பார்ப்போம், கவித்துவத்துடன் கலந்த ஒரு வசன நடையைக் கவிஞரின் ஆளுகையில் பார்க்கும்போது அவரின் இலக்கியச் செறிவும், தமிழின் வளமும் உங்களுக்குப் புரியும்.

"நெற்றியிலே சிறு குங்குமப் பொட்டு.... அது காதல் ராஜாங்கத்தின் சிறிய வாசல்! மெளனம் தெய்வத்தின் பாஷை, அந்தப் பாஷையை தெய்வம் அவளிடமிருந்தே கற்றுக்கொண்டது. மனிதக் கொடிகளும் புஷ்பிக்கின்றன. ஆம்; அது அவள் புன்சிரிப்பு"

ஆகா! எத்தனை அழகாகக் கவிஞர் வருணிக்கின்றார்!

இதோ மற்றுமொரு உதாரணம், அதே ஞானமாலிகாவில் "ஆத்மா பேசுகிறது" எனும் கட்டுரையில் ஒரு பகுதியில்,

"முத்துக்களாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட
பளிங்கு மாளிகை. சலவைக்கல்லால் எழுப்பப்பட்ட
அழகிய தூண்கள்.

பொன் வேய்ந்த கூரை. கண்ணாடி பதிக்கப்பெற்ற
சுவர்கள். குளிர்ச்சி நிறைந்த சோபன அறை நடுவே
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சம்..... "


இதுதான் கவியரசர் மாபெருங் காவியமாவதற்குக் காரணமாகிறது. இந்த இலக்கியக் கடலில் மூச்சிறைக்கும் வரை நீச்சலடித்து மகிழ்ந்து விட்டு, சற்றே இளைப்பாறுவதற்காகக் கரையேறுகின்றேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Guest Wed Jan 21, 2009 1:57 am

கவியரசர் கண்ணதாசன் மெளனமாக நடத்திய யுத்தங்கள் எத்தனையோ. இலக்கியத்தின் பால் தான் கொண்ட ஈடுபாட்டாலும், தமிழின் மீது கொண்ட அளவு கடந்த காதலினாலும், மனதில் தோன்றும் எதையும் ஒளிவு மறைவின்றிக் கூறிவிடும் தனித்தன்மை கொண்டிருந்ததாலும் கவிஞரைத் தேடி வந்த யுத்தங்கள் அதிகம்.

இவரின் இத்தகைய தமிழார்வமும், பேச்சுத்திறனும், கவிவல்லமையும் பல அரசியல் தலைவர்களின் பார்வையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடிய வல்லமை கொண்டிருந்தன.

கவிஞர் நடத்திய பத்திரிக்கைகளிலே "தென்றல்" அவர் மனதிலும் சரி, தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் சரி, வகித்த இடம் மகத்தானது. இந்தப் பத்திரிக்கையின் தொடக்கம் பற்றி அவரே 22/04/54 - ல் வெளிவந்த முதலாவது "தென்றல்" இதழின் தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"நான் புதுப் பத்திரிக்கை ஆரம்பிக்கின்றேன் என்றதும் ‘என்ன பைத்தியக்காரத்தனம் ஏன் இப்போது பத்திரிக்கை?’ என்றார் ஒரு நண்பர். ‘பத்திரிக்கைத் தொழில் லாபகரமானதல்ல, இந்தக்காலத்தில்’ என்றார் இன்னுமொரு வட்டிக்கடை நிபுணரான நண்பர். ஆதரித்தோர் சிலர், எதிர்த்தோர் பலர், ஆனால் எல்லாமே நட்பின் காரணத்தால். கடைசியிலே நண்பர் சம்பத்தைக் கேட்டேன். 'ஆரம்பிக்கலாம். ஆனால் இடையிலே துவளவும் கூடாது, கடைசியில் கவிழவும் கூடாது' என்றார். எண்ணிப்பார்த்தேன், துவளவும் மாட்டேன், கவிழவும் மாட்டேன் எனும் துணிச்சலோடு இறங்கி விட்டேன்"

ஆமாம், கவியரசரின் இந்தச் சத்தமில்லாத யுத்தங்களிலே அவரிடமிருந்த முக்கியமான ஆயுதம் அவரது இந்த அசாத்திய துணிச்சல் என்றுதான் கூற வேண்டும்.

பத்திரிக்கா தர்மம் என்பது, உண்மைகள் அப்படியே உண்மைகளாகக் கூறப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் எமக்குத் தெரியும் உண்மைக்குப் பின்னால் வேறு கதைகள் இருக்கக்கூடும். அப்படியான நிலையில் அவை ஆதாரபூர்வமாக மற்றவர்களால் எடுத்துக் காட்டப்படும்போது அதைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் பண்பு வேண்டும்.

"போற்றுவார் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்"

என்பதையே தனது தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தவர் கவியரசர் கண்ணதாசன். தனது பத்திரிக்கையின் தரத்தைக் காக்க வேண்டும் என்று பேரவாக் கொண்டு அதை நடத்தியவர் கவியரசர். அதை ஓரிடத்தில் எவ்வாறு கூறுகிறார் என்று பாருங்கள்:

"பத்திரிக்கையின் இந்தத் தரத்தை இடைவிடாது கடைபிடிக்குமாறு ஏஜெண்டுத் தோழர்கள் கோருகிறார்கள், கடைபிடிப்போம். சாவிலும் தமிழ்கூறிச் சாக வேண்டும். நம் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும். இது நமது வற்றாத ஆசை. தென்றல் தரம் குறையாது."

கவியரசருடைய ஆழ்ந்த தமிழறிவைப் பற்றி அறிந்து கொள்வதானால் அவருடைய பத்திரிக்கைகளில் வெளிவந்த கேள்வி பதில் பகுதிகளைப் படிக்க வேண்டும். இங்கே நண்பர்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தென்றல் பத்திரிக்கை நடத்திய காலத்தில் கவிஞர் தி.மு.க.வின் அங்கத்தினராக இருந்தார். நாத்திகக் கொள்கைகளின் அரவணைப்பில் தன்னை அடக்கிக் கொண்ட காலமது.
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 8 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum